#ஶ்ரீசக்ரம் ஸ்ரீ சக்கரம் என்பது ஆதிபராசக்தியின் சூட்சும ரூபமாகும். ஸ்ரீ சக்கரத்தின் நடுவில் உள்ள பிந்துவில் அவள் சூட்ஷம வடிவில், ஸ்தூல ரூபமாக அமர்ந்திருக்க, அவளை காரண வடிவத்தினால் அதாவது மந்திர ஒலியினால் பூஜிக்க வேண்டும். பொதுவாக ஸ்ரீ சக்கரம் என்பது  பரமேஸ்வரனும், பார்வதி
தேவியும் இணைந்து அமர்ந்து உள்ள இடமாகும்.  நவசக்கரம் என்ற அழைக்கப்படுவதும் ஸ்ரீசக்கரமே. இதில் 64 கோடி தேவதைகள் வசிக்கிறார்கள். ஸ்ரீசக்கரம் வெறும் கோடுகளால் ஆனவை என்று எண்ணி விடக் கூடாது. உயர் அட்சரக் கணிதம், சேஷாத்திரக் கணிதம், விஞ்ஞான அறிவு பூர்வமாக பெற்றவர்கள், மற்றும் இந்தத்
துறைகளில் ஆழ்ந்த அனுபவம் உள்ளவர்களால் தான் இந்த ஸ்ரீ சக்கரத்தை வரைய முடியும். ஸ்ரீசக்கரம் என்பது வரைபடம். #மகாமேரு என்பது அதன் உருவம். ஸ்ரீசக்ரத்தை உயரமாகவும், பெரிய வடிவமாகவும் (3D) செய்தால் அது ஸ்ரீமகாமேரு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. மேரு மலையின் மீது இருந்த ஸ்ரீ புஷ்பதந்தர்
எனும் மாபெரும் சித்த கணமே இந்த சக்கர வழிபாட்டை வரை கலையாக எழுதி வைத்தார் எனவும், விநாயகப் பெருமான் அதற்கு வடிவம் கொடுத்தார் என்றும், அதையே ஆதிசங்கரரின் குருவான #கௌடபாதர் (பதஞ்சலி முனிவரின் சீடர்) மனதில் கிரஹித்து ஸ்ரீ ஆதிசங்கரருக்கு அதை உபதேசித் தருளினார் என்று  புராணச் செய்தி
குறிப்பிடுகிறது. ஸ்ரீ புஷ்பதந்தர் தெய்வீக கணங்களின் சக்தியை கொண்டவர், சிறந்த சிவ பக்தர். #ஶ்ரீஆதிசங்கரர் காஷ்மீரில் தங்கி இருந்தபோதுதான் தான் ஸ்ரீ சக்கரத்தை வடிவமைத்து சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை இயற்றினார். ஒன்பது கட்டுகள் கொண்ட இந்த ஸ்ரீ சக்கரம் தான் அம்பாள் உறையும் இடம். சாதாரண
கோடுகளும் முக்கோணங்களும் தான் நம் கண்களுக்கு தெரியும். ஆனால் இதில் தான் அனைத்து சக்திகளும் அடங்கியிருக்கின்றன. ஸ்ரீ சக்கரத்தில் ஆவரணங்கள் என்று சொல்லக் கூடிய ஒன்பது சுற்றுக்கள் இருக்கின்றன. இவற்றின் நடுவில் திரிகோணத்தின் மத்தியில் தான் ஸ்ரீ சக்கர நாயகி பிந்து என்கிற புள்ளியாகக்
காட்சித் தருகிறாள். சப்தத்திற்கும் ஓர் உருவம் உண்டு. ஒலிக்கும் ஒலிகள் அனைத்தையும் முறையாக ஒழுங்குப் படுத்தி சீராக்கி - வடிவமாக ஓம் என்பது தான் ஸ்ரீ சக்கரமானது. சக்தி வழிபாட்டின் மிக முக்கியமான பரிகார தேவதைகள் 64 (அறுபத்து நான்கு யோகினிகள்). இது அன்னையிடம் இருந்து தோன்றிய அபரிதமான
சக்திகளாகும். சஷ்டி என்றால் 6 சதுர் என்றால் 4 இவ்வாறாக 64 கோடி யோகினியரால் பூஜிக்கப்படுபவள் என்பதே உண்மை. இந்த எண்ணிக்கை அறுபத்து நான்கை மையப்படுத்தி ஸ்ரீசக்கரத்தை வடிவமைத்தார் பூஜ்ய ஸ்ரீஆதிசங்கரர். ஸ்ரீசக்கரத்தின் மறுபெயரே, ஸ்ரீசக்கரராஜம் என்ற சிறப்பு பெயராக விளங்குகிறது.
சக்கரத்தின் கீழாக நோக்கிய முக்கோணங்கள் ஐந்தும் மேல் நோக்கிய முக்கோணங்கள் நான்கும் சிவாத்மகம் என்பர். ஸ்ரீசக்கர பூஜை செய்யும் உபாசகன், லௌகீக சுகானுபவங்களை அடைவதோடு ஞானத்தை கடைபிடிப்பதின் மூலம் விருப்பு, வெறுப்பு, புலன்கள் இவற்றை வென்று மோட்ச சாம்ராஜ்யத்தை அடைகிறான். சென்னையில்
உள்ள திருவேற்காட்டு கருமாரியம்மன், மாங்காடு காமாட்சியம்மன், தென் குன்றத்தூர் காத்யாயனி அம்மன் ஆகிய மூவரையும் பவுர்ணமி தினத்தன்று ஒரே நாளில் தரிசனம் செய்வது திரிசக்கர தரிசனம் என்று அழைக்கப்படும். ஆடி மாத பவுர்ணமியன்று இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. திருச்சிக்கு அருகே
திருவானைக்காவில் அருள் புரியும் அகிலாண்டேஸ்வரியின் காதுகளில் தாடங்க வடிவில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. உக்கிரமாக இருந்த அம்பாளுக்கு ஸ்ரீசக்கரம் அணிவித்து சாந்தமாக்கியவர் ஆதி சங்கரர்.
சௌந்தர்ய லஹரி, லலிதா சகஸ்ரநாமம், தேவி புஜங்கம், பவானி புஜங்கம், தேவிபாகவதம்,
திருமந்திரம் போன்ற நூல்கள் ஸ்ரீசக்கர வழிபாட்டை சிறப்பித்துக் கூறுகின்றன. மாங்காட்டில் ஆதிசங்கரர் தன்னுடைய கரத்தாலேயே அர்த்த மேருவை பிரதிஷ்டை செய்துள்ளார். அந்த மேருவானது அஷ்ட கந்தங்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் சந்தனம். அகில், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனம், சிவாஜித்,
ஜடாமாஞ்சில், கச்சோலம் ஆகிய எட்டு விதமான நறுமணப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. சென்னையின் முக்கியப்பகுதியாக விளங்கும் பாரிமுனையில் தம்புச் செட்டித் தெருவில் உள்ளது புகழ் பெற்ற காளிகாம்பாள் ஆலயம். குபேரன் வழிபட்ட தலம். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த அர்த்தமேரு
சக்கரம் இங்கும் உள்ளது. பொதுவாக மகாமேரு என்று சொன்னாலும் இதில் சில வேறுபாடுகள் உண்டு. மேருவின் அடிப் பாகத்தில் தாமரை பூவின் இதழ்கள் விரிந்த மாதிரி இருந்தால் பூரண மேரு என்று பெயர். இல்லறத்தில் இருப்பவர்கள், குடும்பம் வேண்டும் என்று நினைப்பவர்கள் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.
பிறவி வேண்டாம் முக்தி வேண்டும் என்று நினைப்பவர்கள் மகாமேருவை வைத்து வழிபாடு செய்யலாம். இல்லறத்தில் இருப்பவர்கள் வீட்டில் வைத்து முக்தி பெற வணங்கலாம்.
சாதுக்கள், சந்நியாசிகள், இல்லறம் இல்லாமல் பிரம்மசாரியாக இருப்பவர்கள் வழிபாடு செய்ய வேண்டியது அர்த்த மேரு.
பொதுவாக மேருவில்,
மூவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிமார்களும் அடக்கம் என்று சொல்லப்படுகிறது. நான்கு வாயில்களும் நான்கு வேதங்கள்.
ரிக், யசூர், சாம, அதர்வண வேதம். மேருவை பெண்கள் வழிபாடு செய்ய வேண்டும். நிறைந்த மாங்கல்ய பலத்திற்கும், நிம்மதி, மன மகிழ்ச்சி பெற மகாமேரு
வழிபாடு நல்லது.
மகாமேரு இருக்கும் இடத்தில் மகாலக்ஷ்மி குடி இருப்பாள். வாஸ்து குறைப்பாடு இருக்காது. வாழ்க்கையில் துயரம் இருக்காது. ஆனால் முறைப்படி ஒரு குருவின் மூலம் உபாசனை செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். அதில் பிறழாமல் இருக்க வேண்டும். இல்லையென்றால் துன்பம் தான் வந்து சேரும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Aug 5
#MahaPeriyava
This happened in the year 1975. Sri Lalgudi Jayaraman, the Indian Carnatic violinist, vocalist and composer and his wife went to Thenambakkam to have darshan of Kanchi Sri Maha Periyava. There was sadness in the air at that place that day. The reason being Periyava Image
was dissatisfied with the actions of a kainkarya person and hence decided to confine Himself in one of the rooms and was in Kashta Mounam. No water or bhiksha for Him. He did not interact with anybody. Lalgudi was disappointed that he could not have His darshan. But he was
determined to render some songs to Him before he left the place. Lalgudi started off with a song in Shyama raga, which was one of His favourite! Later he started to play on the violin 'Sabapathikku Veru Deivam Samanam Aguma' (can any God compare with Lord Sabapathi (Nataraja) of
Read 5 tweets
Aug 5
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் #அம்பலப்புழா_கிருஷ்ணன்_கோவில் #தென்னகத்து_துவாரகை முன்னொரு சமயம் அம்பலப்புழையை ஆண்டு வந்த அரசனுக்கு சதுரங்கத்தில் மிகுந்த ஆர்வம் மட்டுமல்லாமல் தன்னை யாரும் வெல்ல முடியாது என்ற கர்வமும் இருந்தது. ஒரு நாள், வயதான துறவி ஒருவர் அவனது அரசவைக்கு வந்திருந்தார். அவரை Image
வரவேற்று விருந்தளித்த அரசனிடம் இப்போது நாமிருவரும் சேர்ந்து சதுரங்கம் விளையாடலாமா என்று கேட்டார். அரசனும் அதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதித்தான். அரசன் முனிவரிடம், சவாலில் நான்தான் ஜயிப்பேன், ஒரு வேளை நீர் ஜயித்தால் பரிசாக என்ன வேண்டும் என்பதை நீரே முடிவு செய்யும் என்று சொன்னான்.
முனிவர், “என்னைப் போன்ற முனிவர்களுக்கு அரிசிதான் தேவை. ஆனால் நான் சொல்லும் முறையில் அரிசியைத் தர வேண்டும். முதல் கட்டத்தில் 1 அரிசி, இரண்டாவது கட்டத்தில் 2 அரிசி, மூன்றாவது கட்டத்தில் 4 அரிசி, நான்காவது கட்டத்தில் 16 அரிசி என்ற ரீதியில் அரிசியைத் தர வேண்டும்” என்று சொன்னார்.
Read 26 tweets
Aug 4
#MahaPeriyava
Nagasami Gurukkal brought two garlands that had decorated Sri Ekambaresvara and offered them to Periyaval as Siva-prasada. Periyava touched the garland to His eyes and put them back on the plate. Just then a newly married couple came and prostrated to Periyaval.
Periyava instructed that the couple be garlanded with the Siva-prasada. The young couple was ecstatic, wearing the garlands. They revelled in their divine, good fortune. Usually one garland, vibhuti and kumkum would be brought from the temples as prasada. It was unusual that two
garlands had come on that occasion. It was divine intention perhaps that the young couple be blessed with Siva-Guru-prasada. Over and above this the young couple had a delightful shock when Periyava showered these nectarine words “I do not have the power to bless you any further”
Read 5 tweets
Aug 4
#மாங்காடு #ஸ்ரீகாமாட்சிஅம்மன்
காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லி அருகில் மாங்காடு என்னும் ஊரில் உள்ளது காமாட்சி அம்மன் கோவில்.
இங்கு #ஆதிசங்கரர் மகா மேருவை பிரதிஷ்டை செய்திருக்கிறார். அன்னை பார்வதி தவம் இருந்து காஞ்சி ஏகாம்பரேஸ்வரரை திருமணம் செய்து கொண்ட இடம். காமா என்ற சொல்லுக்கு
அன்பு, ஈர்ப்பு, காந்தத்தன்மை என்று பொருள். காமாட்சி என்றால் வசீகர கண்களைக் கொண்டவள். மாங்காடு காமாட்சி அம்மன் தவசக்தியின் பெண்மை வடிவமாக போற்றப் படுகிறாள். சென்னையில் உள்ள அம்மன் தலங்களில் மிக பிரபலமான தலம் இது . ஆதி காமாட்சி, தவக்காமாட்சி, தபசு காமாட்சி என்ற திருப்பெயர்களும்
இங்கே அவளுக்கு உண்டு. மாமரங்கள் நிறைந்த மாமரக்காடாக விளங்கியதால் இத்தலம் மாங்காடு என்னும் காரணப் பெயர் பெற்றது. ஈசனை மணப்பதற்காக தேவி ஒற்றைக் காலில் நெருப்பின் மீது நின்று தவமிருந்த இடம் இது. ஐந்து குண்டங்களில் தீ வளர்த்து நடு குண்டத்தின் நடுவில் தன் இடது காலின் கட்டை விரலால்
Read 27 tweets
Aug 4
#RamanaMaharishi #BhagawanRamanar
#KrishnarajaWodeyar The Mysore maharaja came to Tiruvannamalai in 1937 for the specific purpose of having darshan of Bhagavan Ramana Maharshi. He came with a lot of offerings, specially made sweets etc. The Maharaja asked that his car be parked
at a distance. When told that the car could enter the ashram premises, the Maharaja said, "No, when we go to have darshan of the Maharshi we have to walk".
The car was parked about a furlong from the ashram near the Agni Teertham. Krishnaraja and his retinue walked to the ashram
He asked for a private audience with Bhagavan, which the latter never gave to anyone. Anyone could enter and sit in the Old Hall before Bhagavan. But, since the Maharaja insisted, Bhagavan agreed and said that the former could meet him in the bathroom which was the only place he
Read 6 tweets
Aug 4
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு சமயம் பகவான் ஸ்ரீமந் நாராயணன் சற்று ஓய்வாக தனது கிரீடம், சங்கு, சக்கரம் முதலியவற்றை அனந்தன் மேல் வைத்துவிட்டு, பாதரக்ஷைகளையும் தரையில் கழற்றி வைத்துவிட்டு சற்று அகன்றார். பகவானின் கிரீடம், சங்கு, சக்கரம் மூன்றும் கர்வத்துடன் பாதரக்ஷைகளை கண்டு நகைத்தன.
பார்த்தீர்களா! என்ன இருந்தாலும் மேல்மக்கள் மேல்மக்களே. எங்களை அனந்தன் மேல் வைத்தவர் உங்களை வைக்க வேண்டிய இடத்தில்தான் தரையில் விட்டுச் சென்றிருக்கிறார். இதிலிருந்தே நீங்கள் கீழ்மக்கள் எனத் தெரியவில்லையா? என்றும், எங்களைப் போல் நீங்கள் அரியாசனத்தில் அமர முடியாது என்று நகையாடின.
பகவான் திரும்பியதும் பாதரக்ஷைகள் அவரிடம் முறையிட்டன. அவர், “கவலை வேண்டாம். திரேதா யுகத்தில் ஸ்ரீராமனாக நான் அவதரிக்கும் போது உங்கள் துயர் தீர்ப்பேன். உங்களைக் கண்டு நகைத்தவர்களே உங்களுக்குச் சேவை செய்ய, தலைமேல் சுமக்கச் செய்வேன்” என்றார் கருணையுடன். சொன்னதை போல் இராமனாக
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(