#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் #அம்பலப்புழா_கிருஷ்ணன்_கோவில் #தென்னகத்து_துவாரகை முன்னொரு சமயம் அம்பலப்புழையை ஆண்டு வந்த அரசனுக்கு சதுரங்கத்தில் மிகுந்த ஆர்வம் மட்டுமல்லாமல் தன்னை யாரும் வெல்ல முடியாது என்ற கர்வமும் இருந்தது. ஒரு நாள், வயதான துறவி ஒருவர் அவனது அரசவைக்கு வந்திருந்தார். அவரை
வரவேற்று விருந்தளித்த அரசனிடம் இப்போது நாமிருவரும் சேர்ந்து சதுரங்கம் விளையாடலாமா என்று கேட்டார். அரசனும் அதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதித்தான். அரசன் முனிவரிடம், சவாலில் நான்தான் ஜயிப்பேன், ஒரு வேளை நீர் ஜயித்தால் பரிசாக என்ன வேண்டும் என்பதை நீரே முடிவு செய்யும் என்று சொன்னான்.
முனிவர், “என்னைப் போன்ற முனிவர்களுக்கு அரிசிதான் தேவை. ஆனால் நான் சொல்லும் முறையில் அரிசியைத் தர வேண்டும். முதல் கட்டத்தில் 1 அரிசி, இரண்டாவது கட்டத்தில் 2 அரிசி, மூன்றாவது கட்டத்தில் 4 அரிசி, நான்காவது கட்டத்தில் 16 அரிசி என்ற ரீதியில் அரிசியைத் தர வேண்டும்” என்று சொன்னார்.
அரசனும் இவ்வளவு பெரிய ராஜ்ஜியத்தில் வெறும் அரிசியைக் கேட்கிறீர்களே, வேறு ஏதாவது கேளுங்கள் என்று சொல்ல முனிவர் வேறு எதுவும் வேண்டாம் என்று மறுத்து விட்டார். அரசனுக்கு அந்தக் கோரிக்கையில் வருத்தம் இருப்பினும், அரிசிதானே என்று சந்தோஷமாக ஆடத் துவங்கினான்.
சதுரங்க விளையாட்டு
துவங்கியது. முனிவர் வேடத்தில் வந்தது கண்ணனாயிற்றே! கண்ணனை ஜெயிக்க முடியுமா? அரசன் ஆட்டமிழந்தான். சொன்னபடி முனிவருக்குப் பரிசு தரும் நேரம் வந்தது. கட்டத்தில் முனிவர் சொன்னபடி அரிசியை வைக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அரசனுக்குத் தன் தவறு புரிந்து விட்டது. முனிவரின் உண்மையான
கோரிக்கையை உணர்ந்தான். 21வது கட்டம் வரும்போது அரிசி அளவு 10 லட்சமாக (மில்லியன்) உயர்ந்தது. 40-வது கட்டத்தில் ஒரு மில்லியன் மில்லியனாக ஆயிற்று.
இவ்வாறு ஒரு பெருக்குத் தொடர்ச்சியின் (geometric progression) வளர்ச்சியாக வளர்ந்துகொண்டே போனது. களஞ்சியத்தில் இருந்த அரிசி, நெல்
அனைத்தும் தீர்ந்து, பக்கத்து ராஜ்ஜியங்களில் இருந்த நெற்குவியலையும், அரிசியையும் கொட்டியாயிற்று. அரசன் முனிவரின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என உணர்ந்தான். 64 கட்டங்கள் கொண்ட சதுரங்கத்தில் நிரப்ப ((2 ^ 64) – 1) அதாவது 18.446.744.073.709.551.615 டிரில்லியன் டன் கணக்கில் அரிசி
தேவைப்பட்டது. அரசன் கலங்கினான். என்ன செய்வது என்று புரியவில்லை. அரசனின் சங்கடத்தைக் கண்ட முனிவர், கிருஷ்ணர் வடிவில் அரசன் முன் தோன்றினார். மன்னா நீ அரிசியை உடனடியாகக் கொடுக்க வேண்டாம், கடன் தீரும்வரை #அம்பலப்புழை_கிருஷ்ணன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அரிசியில் செய்யப்பட்ட பால்
பாயஸம் செய்து கொடு என்று கூறினார். அரசனும் கர்வத்தை ஒழித்து, தனது சொத்துக்கள் அனைத்தையும் கோவிலுக்கே கொடுத்தான். இன்றளவும் அம்பலப்புழை கிருஷ்ணன் கோயிலில் அரிசியால் செய்யப்பட்ட பால் பாயஸம் கிருஷ்ணனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு, வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப் படுகிறது.
இங்கு தினமும் கிருஷ்ணன் நேரில் வந்து பால் பாயச நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்கிறார் என்பது ஐதீகம். குருவாயூருக்கு அடுத்து புகழ்பெற்று விளங்குகிறது அம்பலப்புழா கிருஷ்ணர் கோவில். திப்பு சுல்தான் படையெடுப்பின் போது குருவாயூர் கோவிலிலிருந்து கிருஷ்ணன் விக்கரகம் இந்த கோவிலில் தான்
பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்தது. #தல_வரலாறு அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில் செம்பகஸ்ஸேரி பூராடம் திருநாள் தேவநாராயணன் தம்புரானால் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்குள்ள விக்ரகம் பார்த்தசாரதி பெருமாள் போல் வலது கையில் சாட்டையும் இடது கையில் சங்குடன் உள்ளதாகும். வில்வமங்களம்
சுவாமிகளும் அந்தப் பகுதியை ஆண்ட அரசன் செம்பகச்சேரியும் ஒரு படகில் ஆற்றைக் கடந்து கொண்டிருந்தனர். ஆற்றின் கரையை நெருங்கிய போது, அவர்களுக்கு இனிய புல்லாங்குழல் ஓசை கேட்டது. இனிய இசையில் மயங்கிய இருவரும் ஓசை எங்கிருந்து வருகிறது என்று சுற்றிலும் பார்த்தனர். வில்வமங்களம்
சுவாமிகளுக்கு மட்டும் ஆற்றின் கரையிலிருந்த ஆலமரம் ஒன்றில், அமர்ந்த நிலையில் கிருஷ்ணன் புல்லாங்குழலை வாசித்துக் கொண்டிருந்த காட்சி தெரிந்தது. உடனே அவர் அங்கிருந்த கிருஷ்ணனைப் பார்த்து வணங்கினார். அரசனுக்கு எதுவும் தெரியாததால், ‘சுவாமி! கரையிலிருக்கும் ஆலமரத்தைப் பார்த்து
வணங்குகிறீர்களே! அந்த ஆலமரத்தில் என்ன இருக்கிறது?’ என்று கேட்டான். ‘மரத்தில் கிருஷ்ணன் அமர்ந்து புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருப்பது, உமக்குத் தெரியவில்லையா?’ என்று அரசனைப் பார்த்து கேட்டார் வில்வமங்களம் சுவாமிகள். உடனே அரசன், இறைவா! சுவாமிகளுக்குக் காண்பித்த தங்களின்
திருவுருவை எனக்கும் காட்டி அருளுங்கள் என்று வேண்டினான். அவனின் வேண்டுதலைக் கேட்ட இறைவன் அரசனுக்கும் தன் திருக்காட்சியை காட்டியருளினார். புல்லாங்குழல் இசைத்தபடி அம்மரத்தில் அமர்ந்திருந்த இறைவனின் அழகிய தோற்றத்தைக் கண்டு மனம் மகிழ்ந்த அரசன், அந்த இடத்தில் இறைவன் கோவில் கொண்டருள
வேண்டும் என்று வேண்டினான். இறைவனும் அவனுடைய வேண்டுதலுக்காக அங்கே கோவில் கொள்வதாகச் சொன்னார். அரசன் செம்பகச்சேரி, வில்வமங்களம் சுவாமிகளின் ஆலோசனையுடன் ஆலமரம் இருந்த ஆற்றங்கரைப் பகுதியில் கிருஷ்ணருக்கு ஒரு கோவிலைக் கட்டினான். ஆற்றங்கரையில் கட்டப்பட்டதால் அந்த இடம் அம்பலப்புழை
அம்பலம் - கோவில், புழை -ஆறு என்று பெயர் பெற்றது. அம்பலப்புழை என்பதே பின்னர் அம்பலப்புழா என்று மாற்றமடைந்து விட்டது. அம்பலப்புழா என்று பெயர் வந்ததற்கு அது காரணமில்லை, அதற்கு வேறு ஒரு காரணம் உள்ளது என்கின்றனர் சிலர். கோவில் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்த செம்பகச்சேரி, அந்தக் கோவில்
கருவறையில் நிறுவுவதற்காகக் கண்ணன் சிலை ஒன்றைச் செய்யச் சொன்னான். அரசன் சொன்னபடி கண்ணன் சிலை உருவாக்கப்பட்டது. சிலையை கருவறையில் பிரதிஷ்டை செய்வதற்கான நாளும் குறிக்கப் பட்டது. பிரதிஷ்டை செய்யும் நாளுக்கு முன்பாக, கண்ணனின் சிலையைப் பார்த்த அர்ச்சகர், அந்தச் சிலையில் குறைபாடு
இருப்பதாகவும், அதை கோவில் கருவறையில் நிறுவ வேண்டாம் என்றும் சொல்லிவிட்டார். அதைக் கேட்ட அரசன், ‘சிலையில் என்ன குறைபாடு இருக்கிறது?’ என்றான். உடனே அர்ச்சகர், சிலையில் ஒரு கையில் தனது விரலால் லேசாகத் தொட்டார். அவ்வளவுதான், சிலையின் கை உடைந்து கீழே விழுந்து விட்டது. அதைக் கண்டு
அதிர்ச்சியடைந்த மன்னன், கோவிலில் தான் திட்டமிட்ட நாளில் சிலையை நிறுவ முடியாமல் போய்விட்டதே என்று வருந்தினான். அங்கிருந்தவர்களில் சிலர், ‘குறிச்சி என்ற பகுதியில் சிலைகளை செய்யும் பணி நடக்கிறது. அங்கிருந்து நல்ல தொரு கண்ணன் சிலையை வாங்கி வரலாம்’ என்று மன்னனிடம் ஆலோசனை தெரிவித்தனர்.
ஆனால் அரசன் செம்பகச்சேரிக்கும், குறிச்சிப் பகுதியை ஆண்ட அரசனுக்கும் பகை இருந்தது. அதனால் அங்கிருந்து சிலையை வாங்குவதில் மன்னன் தயக்கம் காட்டினான். இந்த நிலையில் மன்னனின் பணியாள் ஒருவர், குறிச்சி பகுதிக்குச் சென்று ஒரு சிலையைக் கடத்தி வந்துவிட்டார். ஆனால் அந்த சிலை கண்ணன் சிலையாக
இல்லாமல், பார்த்தசாரதி சிலையாக இருந்தது. கண்ணனின் சித்தம் அதுதான் என்பதால், பார்த்தசாரதி உருவையே கோவிலில் நிறுவ முடிவு செய்தனர். அதுவரை அதை மறைத்து வைத்தனர். குறிப்பிட்ட நாளில் சிலையை பிரதிஷ்டை செய்ய கோவிலுக்குக் கொண்டு சென்றனர். கருவறை பீடத்தில் சிலையை வைத்தபோது, அது சமநிலை
இல்லாமல் ஒரு பக்கமாக சாய்ந்தது. அப்போது அங்கு வந்த வில்வமங்களம் சுவாமிகள், ஒரு வெற்றிலையை எடுத்து சிலையின் கீழ் பகுதியில் வைத்தார். சிலை அசையாமல் அப்படியே சம நிலையில் நின்றது. இதனால் இந்தக் கோவிலுக்கு ‘தாம்பூலப்புழா’ என்ற பெயர் வந்தது. இதுவே நாளடைவில் மருவி, ‘அம்பலப்புழா’ என்று
மாறிப்போனதாக சொல்கிறார்கள். இந்தக் கோவிலில் மூலவராக இருக்கும் பார்த்தசாரதி ஒரு கையில் சாட்டையுடனும், மறு கையில் சங்குடனும் ருத்ர நிலையில் காட்சி தருகிறார். விஷ்ணு கோவில்களில் உள்ள அனைத்துத் தோற்றங்களும் சங்கு ஏந்திய கோலத்தில் காணப்பட்டாலும், சாட்டையுடன் இருக்கும் விஷ்ணுவை
இக்கோவிலில் மட்டுமே பார்க்க முடியும். மேலும் இங்கு பிரார்த்தனை செய்தால் கடன் தொல்லையில் இதுந்து விடுபடலாம் என்கிற நம்பிக்கை உள்ளது. (ஆலப்புழா அரசன் கண்ணனுக்குப் பட்ட கடனை இன்றும் பால் பாயசம் மூலம் அடைத்து வருவதால்.)

ஆலயம் தினமும் அதிகாலை 3.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை வழிபாட்டுக்காகத் திறந்திருக்கும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Aug 7
#நற்சிந்தனை
விஷ்ணு பக்தரான நாரதர் கண்ணனை தரிசிக்க துவாரகைக்கு வந்தார்.
கண்ணனைக் கண்டு மகிழ்ந்த பிறகு, துவாரகை முழுவதும் உற்சாகமாக வலம் வந்தார். அல்லி மலர்கள் பூத்திருந்த பொய்கைக் கரை ஒன்றில் சூரிய பகவானுக்கு நீர்க்கடன் செலுத்தி மாலை வழிபாடு செய்தார் நாரதர். நாராயண நாராயண என்றவாறே Image
வழிபாட்டை முடித்துக் கொண்டு பொய்கையின் படிக்கட்டுகள் வழியாக அவர் மேலேறி வந்தபோது யாரோ ஒருவன் அவரையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். "ஏனப்பா என்னையே உற்றுப் பார்க்கிறாய்? யார் நீ?” என்று வினவினார்.
"நான் யார் என்றா கேட்கிறீர்கள்? என்னைத் தெரியாதவர்களும் உண்டா என்ன? துவாரகையின்
புகழ்பெற்ற ஓவியன் நான். உங்கள் தோற்றம் வித்தியாசமாக இருக்கவே தொழில் முறையில் அதை உற்றுப் பார்த்து மனத்தில் வாங்கிக் கொண்டேன். நாளை இதே இடத்திற்கு வாருங்கள். உங்களைப் போலவே ஓர் ஓவியத்தை இன்றிரவுக்குள் வரைந்து உங்களுக்குத் தருகிறேன். என் ஓவிய ஆற்றலுக்கு இணையான ஆற்றல் படைத்த
Read 19 tweets
Aug 7
#MahaPeriyava
It was during the height of summer. Some devotees arrived sweating in the sweltering heat, for Periyava’s darshan. Their eagerness to receive Periyaval’s darshan did not let them mind the fact that they were very thirsty. Periyaval told an attendant to give them the Image
juice of the vilva fruits that had come from Kashi. The devotees were delighted beyond measure. Periyaval’s compassion cooled their hearts. At once Periyaval called His attendant who was fanning Him and instructed that he do the same for the visitors. The visitors were shocked.
This is sacrilegious. The fan that is used for Periyava should not be used for us, they said in one voice. We are ordinary folk.
Periyaval said, “It is the Lord who is the soul in every body. As far as the fan is concerned, one body is the same as another.”The devotees were
Read 9 tweets
Aug 7
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் கைலாயத்திலிருந்த மால்யவான், புஷ்பதந்தன் என்ற இரண்டு சிவ கணங்கள், சிவன் தந்த சாபத்தால்
திருவானைக்காவில் சிலந்தியாகவும் யானையாகவும் பிறந்தார்கள். சிலந்தியாகப் பிறந்த மால்யவான்
தனது மறுபிறவியில் கோச்செங்கட் சோழ நாயன்மாராகப் பிறந்தான். கோச்செங்கட் சோழன் எழுபது Image
சிவன் கோயில்கள் கட்டியபின் எழுபத்தொன்றாவதாக நாச்சியார் கோயிலில் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு மணிமாடக் கோணில் கட்டி அவரைத் தொழுது அவரது அருளால் முக்தி அடைந்தான். யானையாகப் பிறந்தானே புஷ்பதந்தன், அவன்
யானை வடிவத்தோடே புஷ்பதந்தன் கைலாயத்தை அடைந்தான். மால்யவான் ஸ்ரீநிவாசப் பெருமாளைத் Image
தொழுது முக்தியடைந்ததைப் போலத் தானும் முக்தியடைய விரும்புவதாக
அவன் பார்வதி தேவியிடம் கூறினான்.
“அப்படியா? மிக்க மகிழ்ச்சி! நீயும் நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசனை வழிபட்டு முக்தியடைவாயாக!” என ஆசீர்வதித்தாள் பார்வதி. அங்கே தான் ஒரு சிறிய பிரச்னை என்றான் புஷ்பதந்தன். “என்ன?” என்று
Read 12 tweets
Aug 6
#ஸ்ரீமகாலட்சுமிகோவில் #ரத்லாம் #மத்தியபிரதேசம்
இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து இந்து ஆலயங்களிலும் தரிசனத்திற்கு வருகின்ற பக்தர்களுக்கு திருநீறு, குங்குமம், மஞ்சள், சந்தனம், மலர்கள், துளசி, வில்வம், தீர்த்தம், புற்று மண், இவை தவிர பொங்கல், லட்டு, புளியோதரை ஆகியவை பிரசாதமாக ImageImage
வழங்கப்படுகின்றன. பக்தர்களும் இறைவனை வணங்கி வழிபட்டு இந்தப் பிரசாதங்களை பெற்று ஆலயத்திலேயே தாங்கள் தரித்துக் கொள்வதுடன் பயபக்தியோடு தத்தம் இல்லங்களுக்கும் எடுத்துச் செல்கின்றனர். ஆனால், இந்தியாவில் ஒரே ஒரு ஆலயத்தில் மட்டும் தீபாவளி நாளன்று தரிசனம் செய்ய வருகின்ற பக்தர்களில் Image
திருமணமான பெண்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், ஆபரணங்கள் பிரசாதமாகக் கொடுக்கும் நடைமுறை உள்ளது. மத்திய பிரதேசம் மாந்லத்டின் வட மேற்கு பகுதியில் இருக்கிறது ரத்லாம் என அழைக்கப்படும் ரத்ன புரி நகரம். தங்கத்திற்கும் நவரத்தினங்களுக்கும் பிரபலமாக இருக்கும் இந்நகரம் ரத்தினபுரி Image
Read 17 tweets
Aug 5
#MahaPeriyava
This happened in the year 1975. Sri Lalgudi Jayaraman, the Indian Carnatic violinist, vocalist and composer and his wife went to Thenambakkam to have darshan of Kanchi Sri Maha Periyava. There was sadness in the air at that place that day. The reason being Periyava
was dissatisfied with the actions of a kainkarya person and hence decided to confine Himself in one of the rooms and was in Kashta Mounam. No water or bhiksha for Him. He did not interact with anybody. Lalgudi was disappointed that he could not have His darshan. But he was
determined to render some songs to Him before he left the place. Lalgudi started off with a song in Shyama raga, which was one of His favourite! Later he started to play on the violin 'Sabapathikku Veru Deivam Samanam Aguma' (can any God compare with Lord Sabapathi (Nataraja) of
Read 5 tweets
Aug 4
#ஶ்ரீசக்ரம் ஸ்ரீ சக்கரம் என்பது ஆதிபராசக்தியின் சூட்சும ரூபமாகும். ஸ்ரீ சக்கரத்தின் நடுவில் உள்ள பிந்துவில் அவள் சூட்ஷம வடிவில், ஸ்தூல ரூபமாக அமர்ந்திருக்க, அவளை காரண வடிவத்தினால் அதாவது மந்திர ஒலியினால் பூஜிக்க வேண்டும். பொதுவாக ஸ்ரீ சக்கரம் என்பது  பரமேஸ்வரனும், பார்வதி
தேவியும் இணைந்து அமர்ந்து உள்ள இடமாகும்.  நவசக்கரம் என்ற அழைக்கப்படுவதும் ஸ்ரீசக்கரமே. இதில் 64 கோடி தேவதைகள் வசிக்கிறார்கள். ஸ்ரீசக்கரம் வெறும் கோடுகளால் ஆனவை என்று எண்ணி விடக் கூடாது. உயர் அட்சரக் கணிதம், சேஷாத்திரக் கணிதம், விஞ்ஞான அறிவு பூர்வமாக பெற்றவர்கள், மற்றும் இந்தத்
துறைகளில் ஆழ்ந்த அனுபவம் உள்ளவர்களால் தான் இந்த ஸ்ரீ சக்கரத்தை வரைய முடியும். ஸ்ரீசக்கரம் என்பது வரைபடம். #மகாமேரு என்பது அதன் உருவம். ஸ்ரீசக்ரத்தை உயரமாகவும், பெரிய வடிவமாகவும் (3D) செய்தால் அது ஸ்ரீமகாமேரு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. மேரு மலையின் மீது இருந்த ஸ்ரீ புஷ்பதந்தர்
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(