#ஸ்ரீமகாலட்சுமிகோவில்#ரத்லாம்#மத்தியபிரதேசம்
இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து இந்து ஆலயங்களிலும் தரிசனத்திற்கு வருகின்ற பக்தர்களுக்கு திருநீறு, குங்குமம், மஞ்சள், சந்தனம், மலர்கள், துளசி, வில்வம், தீர்த்தம், புற்று மண், இவை தவிர பொங்கல், லட்டு, புளியோதரை ஆகியவை பிரசாதமாக
வழங்கப்படுகின்றன. பக்தர்களும் இறைவனை வணங்கி வழிபட்டு இந்தப் பிரசாதங்களை பெற்று ஆலயத்திலேயே தாங்கள் தரித்துக் கொள்வதுடன் பயபக்தியோடு தத்தம் இல்லங்களுக்கும் எடுத்துச் செல்கின்றனர். ஆனால், இந்தியாவில் ஒரே ஒரு ஆலயத்தில் மட்டும் தீபாவளி நாளன்று தரிசனம் செய்ய வருகின்ற பக்தர்களில்
திருமணமான பெண்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், ஆபரணங்கள் பிரசாதமாகக் கொடுக்கும் நடைமுறை உள்ளது. மத்திய பிரதேசம் மாந்லத்டின் வட மேற்கு பகுதியில் இருக்கிறது ரத்லாம் என அழைக்கப்படும் ரத்ன புரி நகரம். தங்கத்திற்கும் நவரத்தினங்களுக்கும் பிரபலமாக இருக்கும் இந்நகரம் ரத்தினபுரி
என்று அழைக்கப்பட்டு, பின்னர், முகலாய கொடுங்கோல் மன்னன் ஔரங்கசீப்புடன் போரிட்டு உயிர் நீத்த ரத்தன் சிங் நினைவாக ரத்லாம் என்ற பெயர் பெற்றது. இந்த ரத்லாம் நகரின் லக்ஷ்மண் புரா பகுதியில், மானக் சௌக் என்ற இடத்தில் ஸ்ரீமகாலக்ஷ்மி ஆலயம் அமைந்து உள்ளது. கருவறையில் நடுநாயகமாக
ஶ்ரீ மஹாலட்சுமி, இடப்புறம் ஸ்ரீ சரஸ்வதி தேவி, வலப்புறம் ஸ்ரீ விநாயகர் ஆகியோர் எழுந்தருளி இருக்கின்றனர். இந்த ஆலயம் சிறிதாக இருப்பினும், இந்தியத் திருநாட்டில் தீபாவளித் திருநாளன்று பக்தர்களுக்கு தங்கத்தைப் பிரசாதமாக அளிக்கும் ஒரே ஆலயம் என்ற சிறப்பு பெற்ற அரிய ஆலயமாக திகழ்கிறது.
இந்த கோவிலுக்கு வந்து மகாலட்சுமி தேவியை வழிபட்டு செல்லும் பக்தர்கள், தங்களின் கோரிக்கை நிறைவேறினால், நேர்த்திக் கடனாகப் பணம் அல்லது பொருளுக்கு பதிலாக தங்கம் அல்லது வெள்ளியை காணிக்கையாக வழங்குகின்றனர். இப்படி பக்தர்கள் வழங்கும் தங்கம் மற்றும் வெள்ளி மலை போல் கோவிலில் குவிந்து
கிடக்கிறது. ஆண்டு முழுவதும் காண்க்கையாக சேரும் தங்கம், வெள்ளி ஆகியவற்றை அனைத்து கோவில்களிலும் கோவில் திருப்பணிக்காக பயன்படுத்துவது வழக்கம். ஆனால் இந்த கோவிலில் ஆண்டு தோறும் தீபாவளி அன்று இந்த கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களில் திருமணம் ஆன பெண்களுக்கு இவை பிரசாதம் வழங்கப்படுகிறது.
இங்கு தரப்படும் பிரசாதத்தை யாரும் விற்பனை செய்வது இல்லை. அது இறைவனால் வழங்கப்பட்டதாக நினைத்து வைத்து பூஜிக்கின்றனர். தீபாவளிக்கு முன்பாக தன்தேராஸ் என்ற திரயோதசி நாளன்று எண்ணற்ற பக்தர்கள் தாங்கள் புதிதாக வாங்கிய தங்க வைர நகைகள், பாரம்பரியமான தங்களிடமுள்ள நகைகள் மற்றும் ரூபாய்
நோட்டுக் கட்டுகள் ஆகியவற்றை இந்த ஆலயத்திற்குக் கொண்டு வந்து கொடுத்து, தக்க ரசீதுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டபின் இந்த நகைகள், பணம் அனைத்தும் கருவறையில் ஸ்ரீமஹாலட்சுமியைச் சுற்றிலும் அழகாக அடுக்கி அலங்கரிக்கப்படுகின்றன. மீண்டும் இந்த நகைகள் பணத்தை உரிமையாளர்கள் தீபாவளி நாளன்று
திரும்பவும் பெற்றுச் செல்கின்றனர். தன்தேராஸ் (திரயோதசி திதி) நாளன்று அதிகாலை மூன்று மணிக்கே ஆலயம் திறக்கப்பட்டு விடுகிறது. ஆலயம் திறப்பதற்கு முன்பாகவே எண்ணற்ற பக்தர்கள் தங்கள் கரங்களில் ரூபாய் நோட்டுக் கட்டுக்கள், தங்க ஆபரணங்கள் போன்றவற்றை ஏந்தி வெளியே வரிசையில் நிற்கின்றனர்.
தீபாவளி அன்று சுமார் ரூ. 100 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி மற்றும் ரூபாய் நோட்டுகளால் ஶ்ரீ லட்சுமி தேவி அலங்கரிக்கப் படுகிறாள். இந்த திவ்ய அலங்காரத்தில் அருள் பாலிக்கும் தேவியின் அரிய காட்சியை பக்தர்கள் ஸ்ரீலட்சுமி தர்பார் என்றும், ஸ்ரீகுபேர தர்பார் என்றும் குறிப்பிடுகின்றனர்.
தன்தேராஸ் அன்று பெறப்படும் அனைத்து நகைகளையும், பணத்தையும் தீபாவளி வரை பாதுகாத்து, தீபாவளி அன்று மீண்டும் உரியவர்களிடம் சேர்ப்பிப்பது ஆலய நிர்வாகத்தின் மகத்தான பொறுப்பாக அமைகிறது. இதுவரை நகைகளோ, பணமோ காணாமல் போனதாகவோ, திருடு போனதாகவோ ஏதும் நடை பெறவில்லை என்று நிர்வாகத்தினர்
பெருமையோடு கூறுகின்றனர். இந்த அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீமஹாலட்சுமி மண்டல் சேவா கமிட்டி என்ற அமைப்பு சிறப்பாக செய்து வருகிறது. பக்தர்கள் நகைகளையும், பணத்தையும் சமர்ப்பிக்கும் நாள் முதல் திரும்ப அளிக்கும் வரை ஆலயத்திற்குள்ளும், வெளியேயும் மிக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்படுகின்றன. ஆலய வளாகம் முழுவதும் உள்ள சிசிடிவி கருவிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. அருகிலேயே மானக் சௌக் காவல் நிலையமும் உள்ளது. காவல்துறை அதிகாரிகளும் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு தங்கம் வெள்ளியை பிரசாதமாக வழங்குவததற்கான நோக்கம், ஏழை,
எளியோரின் வறுமையை போக்கும் விதமாக இந்த கோவிலில் தங்கம், வெள்ளி பிரசாதமாக வழங்கப் படுகிறது. இருப்பினும் இங்கு வழங்கப்படும் தங்கத்தை விற்பனை செய்யாமல் அதை அதிர்ஷ்டமாக பலரும் பாவிக்கின்றனர். மாவட்டத் தலைநகரான ரத்லாம் பேருந்து நிலையத்திலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் ஸ்ரீ மஹாலட்சுமி
ஆலயம் அமைந்துள்ளது. காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மீண்டும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கிறது. தீபாவளி நாட்களில் இரவு முழுவதும் ஆலயம் திறந்து வைக்கப்படுகிறது.
ஆலய முகவரி: ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திர், மானக் சௌக் பிரதான சாலை, மானக் சௌக், லக்ஷ்மண்புரா,
ரத்லாம், மத்தியப் பிரதேசம் 457001. இந்த ஆலயத்திற்கு அருகில் பில்பாக் ஸ்ரீ விரூபாக்ஷ் மஹாதேவ் மந்திர், ஸ்ரீகாளிகா மாதா மந்திர்,ஸ்ரீ கேதாரேஷ்வரர் மந்திர் போன்ற ஆலயங்கள் உள்ளன. இது ஆன்மீக பூமி, ஆன்மீக மண். இந்த மகத்தான கோவில்கள் சான்றாக அமைகின்றன.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#நற்சிந்தனை
விஷ்ணு பக்தரான நாரதர் கண்ணனை தரிசிக்க துவாரகைக்கு வந்தார்.
கண்ணனைக் கண்டு மகிழ்ந்த பிறகு, துவாரகை முழுவதும் உற்சாகமாக வலம் வந்தார். அல்லி மலர்கள் பூத்திருந்த பொய்கைக் கரை ஒன்றில் சூரிய பகவானுக்கு நீர்க்கடன் செலுத்தி மாலை வழிபாடு செய்தார் நாரதர். நாராயண நாராயண என்றவாறே
வழிபாட்டை முடித்துக் கொண்டு பொய்கையின் படிக்கட்டுகள் வழியாக அவர் மேலேறி வந்தபோது யாரோ ஒருவன் அவரையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். "ஏனப்பா என்னையே உற்றுப் பார்க்கிறாய்? யார் நீ?” என்று வினவினார்.
"நான் யார் என்றா கேட்கிறீர்கள்? என்னைத் தெரியாதவர்களும் உண்டா என்ன? துவாரகையின்
புகழ்பெற்ற ஓவியன் நான். உங்கள் தோற்றம் வித்தியாசமாக இருக்கவே தொழில் முறையில் அதை உற்றுப் பார்த்து மனத்தில் வாங்கிக் கொண்டேன். நாளை இதே இடத்திற்கு வாருங்கள். உங்களைப் போலவே ஓர் ஓவியத்தை இன்றிரவுக்குள் வரைந்து உங்களுக்குத் தருகிறேன். என் ஓவிய ஆற்றலுக்கு இணையான ஆற்றல் படைத்த
#MahaPeriyava
It was during the height of summer. Some devotees arrived sweating in the sweltering heat, for Periyava’s darshan. Their eagerness to receive Periyaval’s darshan did not let them mind the fact that they were very thirsty. Periyaval told an attendant to give them the
juice of the vilva fruits that had come from Kashi. The devotees were delighted beyond measure. Periyaval’s compassion cooled their hearts. At once Periyaval called His attendant who was fanning Him and instructed that he do the same for the visitors. The visitors were shocked.
This is sacrilegious. The fan that is used for Periyava should not be used for us, they said in one voice. We are ordinary folk.
Periyaval said, “It is the Lord who is the soul in every body. As far as the fan is concerned, one body is the same as another.”The devotees were
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் கைலாயத்திலிருந்த மால்யவான், புஷ்பதந்தன் என்ற இரண்டு சிவ கணங்கள், சிவன் தந்த சாபத்தால்
திருவானைக்காவில் சிலந்தியாகவும் யானையாகவும் பிறந்தார்கள். சிலந்தியாகப் பிறந்த மால்யவான்
தனது மறுபிறவியில் கோச்செங்கட் சோழ நாயன்மாராகப் பிறந்தான். கோச்செங்கட் சோழன் எழுபது
சிவன் கோயில்கள் கட்டியபின் எழுபத்தொன்றாவதாக நாச்சியார் கோயிலில் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு மணிமாடக் கோணில் கட்டி அவரைத் தொழுது அவரது அருளால் முக்தி அடைந்தான். யானையாகப் பிறந்தானே புஷ்பதந்தன், அவன்
யானை வடிவத்தோடே புஷ்பதந்தன் கைலாயத்தை அடைந்தான். மால்யவான் ஸ்ரீநிவாசப் பெருமாளைத்
தொழுது முக்தியடைந்ததைப் போலத் தானும் முக்தியடைய விரும்புவதாக
அவன் பார்வதி தேவியிடம் கூறினான்.
“அப்படியா? மிக்க மகிழ்ச்சி! நீயும் நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசனை வழிபட்டு முக்தியடைவாயாக!” என ஆசீர்வதித்தாள் பார்வதி. அங்கே தான் ஒரு சிறிய பிரச்னை என்றான் புஷ்பதந்தன். “என்ன?” என்று
#MahaPeriyava
This happened in the year 1975. Sri Lalgudi Jayaraman, the Indian Carnatic violinist, vocalist and composer and his wife went to Thenambakkam to have darshan of Kanchi Sri Maha Periyava. There was sadness in the air at that place that day. The reason being Periyava
was dissatisfied with the actions of a kainkarya person and hence decided to confine Himself in one of the rooms and was in Kashta Mounam. No water or bhiksha for Him. He did not interact with anybody. Lalgudi was disappointed that he could not have His darshan. But he was
determined to render some songs to Him before he left the place. Lalgudi started off with a song in Shyama raga, which was one of His favourite! Later he started to play on the violin 'Sabapathikku Veru Deivam Samanam Aguma' (can any God compare with Lord Sabapathi (Nataraja) of
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்#அம்பலப்புழா_கிருஷ்ணன்_கோவில்#தென்னகத்து_துவாரகை முன்னொரு சமயம் அம்பலப்புழையை ஆண்டு வந்த அரசனுக்கு சதுரங்கத்தில் மிகுந்த ஆர்வம் மட்டுமல்லாமல் தன்னை யாரும் வெல்ல முடியாது என்ற கர்வமும் இருந்தது. ஒரு நாள், வயதான துறவி ஒருவர் அவனது அரசவைக்கு வந்திருந்தார். அவரை
வரவேற்று விருந்தளித்த அரசனிடம் இப்போது நாமிருவரும் சேர்ந்து சதுரங்கம் விளையாடலாமா என்று கேட்டார். அரசனும் அதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதித்தான். அரசன் முனிவரிடம், சவாலில் நான்தான் ஜயிப்பேன், ஒரு வேளை நீர் ஜயித்தால் பரிசாக என்ன வேண்டும் என்பதை நீரே முடிவு செய்யும் என்று சொன்னான்.
முனிவர், “என்னைப் போன்ற முனிவர்களுக்கு அரிசிதான் தேவை. ஆனால் நான் சொல்லும் முறையில் அரிசியைத் தர வேண்டும். முதல் கட்டத்தில் 1 அரிசி, இரண்டாவது கட்டத்தில் 2 அரிசி, மூன்றாவது கட்டத்தில் 4 அரிசி, நான்காவது கட்டத்தில் 16 அரிசி என்ற ரீதியில் அரிசியைத் தர வேண்டும்” என்று சொன்னார்.
#ஶ்ரீசக்ரம் ஸ்ரீ சக்கரம் என்பது ஆதிபராசக்தியின் சூட்சும ரூபமாகும். ஸ்ரீ சக்கரத்தின் நடுவில் உள்ள பிந்துவில் அவள் சூட்ஷம வடிவில், ஸ்தூல ரூபமாக அமர்ந்திருக்க, அவளை காரண வடிவத்தினால் அதாவது மந்திர ஒலியினால் பூஜிக்க வேண்டும். பொதுவாக ஸ்ரீ சக்கரம் என்பது பரமேஸ்வரனும், பார்வதி
தேவியும் இணைந்து அமர்ந்து உள்ள இடமாகும். நவசக்கரம் என்ற அழைக்கப்படுவதும் ஸ்ரீசக்கரமே. இதில் 64 கோடி தேவதைகள் வசிக்கிறார்கள். ஸ்ரீசக்கரம் வெறும் கோடுகளால் ஆனவை என்று எண்ணி விடக் கூடாது. உயர் அட்சரக் கணிதம், சேஷாத்திரக் கணிதம், விஞ்ஞான அறிவு பூர்வமாக பெற்றவர்கள், மற்றும் இந்தத்
துறைகளில் ஆழ்ந்த அனுபவம் உள்ளவர்களால் தான் இந்த ஸ்ரீ சக்கரத்தை வரைய முடியும். ஸ்ரீசக்கரம் என்பது வரைபடம். #மகாமேரு என்பது அதன் உருவம். ஸ்ரீசக்ரத்தை உயரமாகவும், பெரிய வடிவமாகவும் (3D) செய்தால் அது ஸ்ரீமகாமேரு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. மேரு மலையின் மீது இருந்த ஸ்ரீ புஷ்பதந்தர்