எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய "குறுகுறுவானம்" புத்தகம்.
ஒரு கிராமத்து சிறுவனின் பால்யத்தை அவன் விவரிப்பதாக அமைகிறது இப்புத்தகம். சிறுவர்களின் உலகில் வளர்ந்த பெரியவர்கள் என்னவாக உள்ளனர், இந்த உலகம் என்னவாக உள்ளது என விவரிக்கிறது.
(1/n)
தனக்கு ஓட்டப்பல்லு என பட்டப்பெயர் வைக்கப்பட்டது எப்படி என சொல்லி ஆரம்பிக்கிறான் அச்சிறுவன்.
பொய், திருட்டு, பசி, விளையாட்டு, ரகசியம் அறியும் ஆர்வம் என அனைத்தை பற்றியும் அச்சிறுவனுக்கு இருக்கும் எண்ணங்களை பல கதைகள் மூலம் அவனே சொல்வதாக நகர்கிறது புத்தகம்.
(2/n)
அச்சிறுவன் சொல்லும் பல கதைகளை படிக்கும் போது, நமது பால்யகால நினைவுகள் நம் மனதில் வருவதை தவிர்க்க இயலாது.
சிறுவர்களின் உலகில் ஒரு சிறு சஞ்சார அனுபவம் கிடைக்க படித்துப் பாருங்கள் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் "கிறுகிறுவானம்"
சுமார் ஏழெட்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு "ஹோமினினே" என்கிற வகை வாலற்ற வானரங்கள் வாழ்ந்ததாகவும், பிறகு அவை தாங்கள் வாழ்ந்த இடம் அங்கு கிடைத்த உணவு ஆகிய சூழல் காரணமாக இரண்டு வகையாகப் பிரிந்து விட்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.
(2/n)
அப்படி பிரிந்ததில் ஒன்று கொரில்லா குரங்கு மற்றொன்று ஹோமினி என்கிற வகை மனித குரங்கு. இந்த ஹோமினி வகை குரங்கு கிட்டத்தட்ட நான்கு அல்லது ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மூன்று வகையாகப் பிரிந்தது முதல் வகை சிம்பான்சி இரண்டாம் வகை பொனோபோ மூன்றாம் வகை தான் மனிதன்.
இந்து மதம் என்றும் இந்துக்கள் என்றும் நம்மைச் சொல்லிக் கொண்டு, இந்து மதம் சாஸ்திர புராண சம்பந்தமான விஷயங்களைத் தமிழர் தலையில் சுமத்துவதும், தமிழர்கள் அதற்குக் கட்டுப்படுவதும் நியாயமா?
(1/n)
இந்து மதப் புராணங்களில் ‘கற்பு'க்கு லட்சணம் ஒரு பெண் (நளாயினி), தனது புருஷன் குஷ்டரோகியாய் இருந்து கொண்டு தாசி வீட்டுக்குப் போக வேண்டுமென்று சொன்னாலும், அவனைக் கழுவி எடுத்துக் கூடையில் வைத்துத் தலையில் தூக்கிக் கொண்டு போய் தாசி வீட்டில் வைத்து,
(2/n)
விடிந்த பிறகு மறுபடியும் தாசி வீட்டிலிருந்து தன் வீட்டிற்குத் தூக்கிவர வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்து மதத்தை வலியுறுத்துகிற ஒருவன், தன் மகளுக்கு இப்படிப்பட்ட புருஷன் அமைந்து அவன் தன் பெண்ஜாதியை இப்படிச் செய்ய வேண்டுமென்று சொல்லுவானானால், ஒப்புக்கொள்ளுவானா?...
மனநல கோளாறு என்றதுமே பைத்தியமா என்று நினைப்பது தான் பொது புத்தியில் நிலைகொண்டுள்ள எண்ணம். மனநலம் சார்ந்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது தான் அதற்கு காரணம். ஜனரஞ்சகமாக மனநலம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மனநல மருத்துவர் Dr. ஷாலினி
(1/n)
அவர்களின் பங்களிப்பு யாராலும் மறுக்க முடியாத ஒன்று.
அவ்வகையில் மருத்துவர் ஷாலினி அவர்கள் எழுதிய "மனச்சிறையில் சில மர்மங்கள்" புத்தகம் நமக்கு தெரியாத அல்லது எளிதில் அடையாளம் காணப்படாத மனநல கோளாறுகள் குறித்து சுவாரசியமான கதைகளுடன் எடுத்துரைக்கிறது.
(2/n)
சிறு குழந்தைகள் முதல் 70 வயதை கடந்த முதியவர்கள் வரை சந்திக்கும் சில மனநலம் சார்ந்த பிரச்சனைகளையும், இது மனநல பிரச்சனை தானா என அறிந்து கொள்ள உதவும் சில அறிகுறிகளையும், அதற்கான அறிவியல் காரணத்தையும், மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டிய அவசியத்தையும் உணர்த்தும் புத்தகம் இது.
“நானே நால்வகை (பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என மக்களை நான்கு வகையினராகப் பிரித்தல்) வருண அமைப்பினை அவரவர்களுக்குள்ள செயல் வேறுபாடுகளுக்கு ஏற்றவாறு படைத்துள்ளேன். எனவே நானே இந்த சதுர்வருணங்களை உருவாக்கியவனாவேன்.” - (கீதை 4:13)
(1/n)
“ஒருவன் இன்னொரு வருணத்தானின் தொழிலைச் செய்வது எளிதாக இருப்பினும், ஒருவன் தன் வருணத்திற்குரிய தொழிலை மிகுந்த திறனோடு செய்ய முடியாத போதிலும் தன் வருணத்திற்குரிய தொழிலைச் செய்வதே மிகச் சிறந்தது.
(2/n)
ஒருவன் தன் வருணத்திற்குரிய தொழிலைச் செய்தால் மரணமே நேர்வதாக இருந்தாலும் தன் வருணத் தொழிலைச் செய்வதே இனியது: ஆனால் பிற வருணத்தாரின் தொழிலைச் செய்வது ஆபத்தானது.”
(கீதை 3:35)