டொரட் சின்ட்ரோமுக்கும் #பட்டாம்பூச்சி படத்திற்கும் என்ன சம்பந்தம் ?
யாராவது தன்னை அறியாமல் கெட்ட வார்த்தை பேசுவார்களா!?
ஒருவரின் கட்டுப்பாட்டை மீறி அவருடைய வாய் அவர் நினைக்காத ஒன்றை பேச முடியுமா!?
ஒருவருடைய உடல் அவர் கட்டுப்பாட்டை மீறி அசைய முடியுமா!?
(1/n)
இவை அனைத்திற்குமான பதில் ""ஆம் முடியும்""
அதெப்படி முடியும்னு கேட்டா "டொரட் சின்ட்ரோம்" உள்ள ஒருவருக்கு இவையெல்லாம் நடக்கும்.
சமீபத்தில் வெளியான ஜெய் மற்றும் சுந்தர். C நடித்த பட்டாம்பூச்சி திரைப்படம் பலரும் பார்த்திருக்க வாய்ப்பிருக்கு.
(2/n)
அதில் சைக்கோ கில்லரான ஜெய் கதாபாத்திரத்திற்கு இந்த "டொரட் சின்ட்ரோம்" நோய் இருக்கும்.
உடனே ஐய்யோ அப்போ இந்த நோய் இருந்தா கொலை செய்வார்களான்னு கேட்க வேண்டாம், அந்த படத்தில் இருந்து இந்த "டொரட் சின்ட்ரோம்" என்ற நோயை மட்டும் நாம் எடுத்துக் கொள்வோம்,
(3/n)
மற்ற சைக்கோ செயல்பாடுகளுக்கும் இந்த நோய்க்கு எந்த சம்பந்தமும் இல்லை.
சரி அப்போ "டொரட் சின்ட்ரோம்" என்றால் என்ன!?
இது ஒரு விதமான நரம்பு ரசாயன கோளாறு, இந்த சின்ட்ரோம் சிறுவயது குழந்தைகளுக்கு அதிகமாக ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
(4/n)
இது எதனால் ஏற்படுகிறது என்று தீர்க்கமாக கண்டறிவது தான் கொஞ்சம் சிரமமான காரியமாக உள்ளது.
1885 ஆம் ஆண்டில், கில்லெஸ் டி லா டொரட் (Gilles de la Tourette) எனும் ஃப்ரெஞ்ச் நரம்பியல் நிபுணர், 9 நோயாளிகள் தன்னிச்சையான உடல் இயக்கங்கள் மற்றும்
(5/n)
விசித்திரமான கட்டுப்படுத்த முடியாத ஒலிகளை எழுப்புதல் போன்ற ஒரு கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தார். அவர் எழுதிய கட்டுரையில் இந்த கோளாறு பற்றிய சில அடிப்படையான விளக்கங்களையும் வழங்கினார். அதன் அடிப்படையில் பல ஆராய்ச்சிகள் நடந்தது...
(6/n)
இன்று இந்த நோய் குறித்த ஆழமான ஆராய்ச்சிகள் மற்றும் இதை எப்படி கையாளுவது என தகவல்கள் கிடைத்து, நோயின் அறிகுறிகளை கட்டுப்படுத்த பல மருத்துவ முன்னேற்றங்கள் நடந்துள்ளது,
ஆனால் அவற்றிற்கான விதையை போட்டது கில்லஸ் டி லா டொரட் என்பதால் அந்த நோய்க்கு அவரது பெயர் வைக்கப்பட்டது.
(7/n)
சரி குழந்தைகள் எப்போதும் சத்தம் போட்டும் துறு துறுவெனவும் இருக்கும் வழக்கம் கொண்டவர்கள், அதில் எப்படி அவர்கள் இந்த சின்ட்ரோமால் பாதிக்கப்பட்டு தான் கட்டுப்பாட்டை இழந்து செயல்படுகிறார்கள் என்பதை அறிய முடியும்.!?
(8/n)
இந்த நோய்க்கான அறிகுறியின் இரண்டு முக்கிய அறிகுறிகள் மோட்டார் டிக்ஸ் மற்றும் வாய்மொழி டிக்ஸ் ஆகும். அவை
தேவையில்லாத நேரங்களில்
கண் சிமிட்டல், முகம் சுளித்தல்
திடீர் தாடை இயக்கங்கள், விருப்பமில்லாத தலையாட்டல், குதித்தல், தோள்பட்டைகளை குலுக்குதல்,
(9/n)
திடீரென வாய் திறத்தல், விருப்பமில்லாமல் கையை ஆட்டல், கீறீச்சிடும் சப்தம், கத்துதல், உறுமல், சில நேரங்களில் அவர்களை அறியாமல் கெட்ட வார்த்தை பேசுதல் போன்ற செயல்பாடுகள்.
(10/n)
இவை 1 வருடத்திற்கு மேல் தொடர்ந்து உங்கள் குழந்தைகளில் காண நேரிட்டால், ஒரு மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது இந்த நோய் உள்ளதா அல்லது வேறு ஏதும் கோளாறா அல்லது இயல்பாக தான் குழந்தை உள்ளதா என கண்டறியலாம். சிறுவயதிலேயே இதை கண்டறிந்தால் சிகிச்சையளித்து இதை சரி செய்வது எளிது.
(11/n)
டொரட் சின்ட்ரோம் குறித்த சில முக்கிய களஆய்வுகள்.
அமெரிக்காவில் 3-17 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு 333 (0.3%) குழந்தைகளில் ஒருவர் "டொரட் சின்ட்ரோம்" நோயறிதலைப் பெற்றுள்ளதாக பெற்றோர்-அறிக்கை தரவைப் பயன்படுத்தி CDC ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது;இது 2016-2019 இல் 174,000 குழந்தைகள்.
(12/n)
44% பேர் மிதமான அல்லது கடுமையான "டொரட் சின்ட்ரோம்" நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்கு இது வருவதற்கான வாய்ப்புகள் மூன்று மடங்கு அதிகம்.
இதையெல்லாம் கேட்டு பீதி அடைய வேண்டாம்.
(13/n)
இதற்கான சிகிச்சைகளும் வந்துவிட்டன.
சரியான மருத்துவ ஆலோசனை பெற்று, குழந்தைகளுடன் நேரம் செலவழித்து அவர்களுக்கு ஆதரவான சூழலை ஏற்படுத்துவதும் மிக முக்கியம்.
சில சந்தர்ப்பங்களில், இதனுடன் தொடர்புடைய மற்ற நோய்களின் அறிகுறிகளை கட்டுப்படுத்த மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம்.
(14/n)
நோயின் அறிகுறியை பற்றி குழந்தையின் நெருங்கிய வட்டமான பள்ளி மற்றும் குடும்பத்தார் அறிந்திருப்பது மிகவும் அவசியம். அது அந்த குழந்தையின் மனநலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்...
இந்த உலகில் எதை விடவும் குழந்தைகளின் உடல் மற்றும் உளநலவியல் மிக முக்கியமானது.
End ♥️
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கொலஸ்டிரால் எப்பவுமே கெட்ட விஷயம், அது தான் இதய நோய்களுக்கு காரணம், அது இருந்தா நம்ம உடல் கெட்டு போயிரும்னு எப்பவும் கொலஸ்டிரால் மேல எதிர்மறையான கருத்தை மட்டுமே நாம கேள்விப்பட்டிருக்கோம்.
உண்மையிலேயே கொலஸ்டிரால் கேட்டதை மட்டும் தான் செய்யுதான்னு கேட்டா இல்ல,
(2)
கொலஸ்ட்ராலை பற்றி முழுமையாக விரிவாக அறிந்துகொள்ளும் முன், அது நம் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் இன்றியமையாதது என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.
இரத்தத்தில் தான் கொலஸ்ட்ராலின் அளவை அளக்கிறோம், ஆனாலும் அது நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் காணப்படுகிறது.
(3)
சுமார் ஏழெட்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு "ஹோமினினே" என்கிற வகை வாலற்ற வானரங்கள் வாழ்ந்ததாகவும், பிறகு அவை தாங்கள் வாழ்ந்த இடம் அங்கு கிடைத்த உணவு ஆகிய சூழல் காரணமாக இரண்டு வகையாகப் பிரிந்து விட்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.
(2/n)
அப்படி பிரிந்ததில் ஒன்று கொரில்லா குரங்கு மற்றொன்று ஹோமினி என்கிற வகை மனித குரங்கு. இந்த ஹோமினி வகை குரங்கு கிட்டத்தட்ட நான்கு அல்லது ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மூன்று வகையாகப் பிரிந்தது முதல் வகை சிம்பான்சி இரண்டாம் வகை பொனோபோ மூன்றாம் வகை தான் மனிதன்.
எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய "குறுகுறுவானம்" புத்தகம்.
ஒரு கிராமத்து சிறுவனின் பால்யத்தை அவன் விவரிப்பதாக அமைகிறது இப்புத்தகம். சிறுவர்களின் உலகில் வளர்ந்த பெரியவர்கள் என்னவாக உள்ளனர், இந்த உலகம் என்னவாக உள்ளது என விவரிக்கிறது.
(1/n)
தனக்கு ஓட்டப்பல்லு என பட்டப்பெயர் வைக்கப்பட்டது எப்படி என சொல்லி ஆரம்பிக்கிறான் அச்சிறுவன்.
பொய், திருட்டு, பசி, விளையாட்டு, ரகசியம் அறியும் ஆர்வம் என அனைத்தை பற்றியும் அச்சிறுவனுக்கு இருக்கும் எண்ணங்களை பல கதைகள் மூலம் அவனே சொல்வதாக நகர்கிறது புத்தகம்.
(2/n)
அச்சிறுவன் சொல்லும் பல கதைகளை படிக்கும் போது, நமது பால்யகால நினைவுகள் நம் மனதில் வருவதை தவிர்க்க இயலாது.
சிறுவர்களின் உலகில் ஒரு சிறு சஞ்சார அனுபவம் கிடைக்க படித்துப் பாருங்கள் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் "கிறுகிறுவானம்"