#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் மாந்தாதா என்ற சூரிய வம்சத்து ராஜா பிறந்த போது பால் கொடுப்பதற்கு அன்னை இல்லாததால் அழுது கொண்டு இருந்தார். இதனை கண்ட இந்திரன் மனமிரங்கி, நான் கொடுக்கிறேன் மாந்தாதா என்று சொல்லி குழந்தையின் கை கட்ட விரலை எடுத்து வாயினுள் வைத்தார். மனித சரீரத்தில் ஒவ்வொரு
அங்கத்திலும் ஒரு தேவதை வசிக்கிறது. அதில் கைக்குரிய தேவதை இந்திரன். தான் சாப்பிடும் அமிர்தத்தை கையின் கட்டை விரலின் மூலம் குழந்தையின் வாய்க்கு போகும்படி இந்திரன் அனுக்கிரஹம் செய்தார். அதனால்தான் அநேக குழந்தைகள் பசியின் போது வாயில் விரல் இட்டுக் கொள்கிறது. ஆனால் இங்கு ஸ்ரீகிருஷ்ணர்
வாயில் போட்டுக் கொண்டிருப்பது கை கட்டை விரல் அல்ல. கால் கட்டை விரலை! அவரது சரீரம் முழுவதும் அமிர்த மயமாக இருப்பதால், விஷ்ணு ஸஹஸ்ர நாமம் அவரை #அமிர்த_வபு என்கிறது.
இந்திராதி தேவர்கள் கையினால் செய்வதை, தாம் காலால் செய்ய முடியும் என்று காட்டுவதைப்போல கால் விரலை வாயில் போட்டு கொண்டு
இருக்கிறார். இடது கட்டை விரல் தான் அவர்வாயில் போட்டிருப்பது. நடராஜனது தூக்கிய திருவடியும் இடதுதான்! சந்திரன் அமிர்தத்தை பெருக்குகிறவன். யோக சாதனை செய்வதன் மூலம் உடலின் இடது பாகத்தில் உள்ள சந்திரநாடியில் அமிர்தம் பெருகும். அந்த சந்திர நாடியில் வெளிப்படும் அமிர்தத்தைப் பருகுவதற்காக
ஶ்ரீ கிருஷ்ணர் இடது கால் கட்டை விரலை ருசிக்கிறார். தாவரங்களில் ஆல மரம் சிறந்ததாக காணப் படுகிறது. இதனை வட விருட்சம் என்று அழைப்பார்கள். ஆலமரத்தின் கீழே தட்சிணா மூர்த்தி அமர்ந்து ஞானத்தை போதிக்கிறார். ஆல இலைக்கு ஜீவ சாரம் மிகவும் அதிகம்.
அதனால் தான் அது எத்தனை வாடினாலும் மற்ற
இலைகள் மாதிரி வற்றிப்போய் நொறுங்குவதில்லை! தண்ணீர் கொஞ்சம் தெளித்தால் போதும், மறுபடியும் பசுமை பெற்று விடும். ஸ்ரீகிருஷ்ணர் ஆலிலைமேல் பாலகிருஷ்ணனாக காட்சி தந்து, மார்க்கண்டேயருக்கு ஞானத்தை அளித்தார். சம்சார சாகரத்தில் அலையாய் அலைகின்ற நமக்கு ஆல் இலையை படகாகக் காட்டி நிலையான
#ஶ்ரீகுருஷ்ணன்கதைகள் ஆச்சார்யர் ஸ்ரீ ஆதிசங்கரரிடம், ஒரு மாணவன், குருவே! நல்லதை படைத்த இறைவன் தானே கெட்டதையும் படைத்துள்ளார். நல்லதை நம் மனம் அப்படியே ஏற்கிறது அல்லவா? நல்லதை மட்டும் ஏற்றுக்கொள்ளும் நம் மனம், எதற்காக கெட்டதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது என்று கேட்டான். ஸ்ரீ ஆதிசங்கரர்
சிறிய புன்னகையோடு, ‘அது அவரவர் இஷ்டம்’ என்று சொன்னார். இரவு உணவு அருந்தும் நேரம் வந்தது. ஸ்ரீ ஆதிசங்கரர் தன் சிஷ்யனுக்கு உணவாக ஒரு டம்ளரில் பாலையும், ஒரு தட்டில் சாணத்தையும் கொடுத்தார். இதைப் பார்த்த மாணவன் ஒரு நிமிடம் திகைத்துப் போனான்! குழம்பிய மாணவனிடம் ஸ்ரீ ஆதிசங்கரர்,
“பசுவிடமிருந்து தான் பால் வருகிறது. சாணமும் அதே பசுவிடமிருந்து தான் வருகிறது. பாலை நேரடியாக ஏற்றுக் கொள்ளும் நாம், எதற்காக சாணத்தை மட்டும் ஏற்க மறுக்கிறோம்?” என்று கேட்டார். “பால் போன்று நன்மையைத் தரும் பொருட்களை நாம் நேரடியாக மகிழ்ச்சி என்று சொல்லி அனுபவிக்கிறோம். சாணத்தை
#மகாபெரியவா
1979-ல் வடதேசத்துக்கு பாதயாத்ரையாக பெரியவா கிளம்பியபோது, கர்நாடகாவில் ஒரு கிராமத்தில் முகாமிட்டிருந்தார். பெரியவாளுக்கு இயற்கை சூழலில் வசிக்க மிகவும் பிடிக்கும் என்பதால், அங்கிருந்த ஒரு குளக்கரையில் அமர்ந்து தரிசனம் தந்து கொண்டிருந்தார். மெட்ராசில் இருந்து ஒரு பெரிய
டாக்டர், தன் குடும்பத்துடன் பெரியவாளை தரிசனம் செய்ய வந்திருந்தார். அதே சமயம் இரண்டு பிராமண பையன்கள் உச்சி குடுமி பூணுல் தரித்து வந்திருந்தார்கள். அவர்கள் அணிந்திருந்த மேல் வஸ்திரமும் வேஷ்டியும் மகா அழுக்காக இருந்தது. களைத்த முகத்தோடும் இருந்த அவர்களை பார்த்த அந்த டாக்டர் முகம்
சுளித்தார். என்ன பஸங்க, பெரியவாளை பாக்க வரச்சே இப்டியா வரது? குறைந்த பட்சம் குளிச்சுட்டு சுத்தமா வரணும்கற சாதாரண அறிவு கூட இல்லியே! இருவரும் நேரே பெரியவாளிடம் போய், பெரியவாளை நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்ததும், அவர்கள் குளித்தார்களா அழுக்காக இருக்கிறார்களா என்பதெல்லாம் பெரியவா
#நற்சிந்தனை ஒரு முனிவர் மீது ஒருவர் உமிழ்ந்து விடுகிறார். கோபத்தில் அந்த முனிவர் அவரைப் பார்த்து, நீ பன்றியாக மாறிப் போவாய் என சபித்து விடுகிறார். சாபம் பெற்றவுடன் சந்நியாசியை உமிழ்ந்த மனிதருக்கு பயம் வந்து விட்டது. தன் மூத்த புதல்வனைப் பார்த்து, "மகனே! நான் செய்த ஒரு தவறினால்
பன்றியாக மாறும் சாபத்தை ஒரு முனிவர் எனக்கு அளித்து விட்டார். பன்றியானப் பிறகு நான் எப்படி வாழப்போகிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. அதனால் நான் பன்றியான உடனே எங்கே இருந்தாலும் நீ தேடி வந்து என்னைக் கொன்று விடு! அந்த உருவத்தில் என்னால் வாழ முடியாது" என்று கூறுகிறார். சில நாட்களில்
அவர் பன்றியாகி காட்டுக்குள் போய் விட்டார். தந்தையின் கோரிக்கையை நிறைவேற்ற மகன் தந்தையைத் தேடி காட்டுக்குள் செல்கிறான். குளம் குட்டைகளில், எங்கேயாவது கூட்டமாக பன்றிகளை பார்த்தால் அங்கு போய் அப்பா என்று அழைத்துத் தேடினான். இப்படியே 2 வருடங்கள் ஓடிவிட்டன. கடைசியாக ஒரு குளத்தங்கரை
#MahaPeriyava A college professor used to come every day for darshan. But he never sought to talk with or introduce himself to Periyava. Perhaps the darshan itself gave him limitless joy! After 4 -5 months, one day, looking at him, Periyava asked, "How come you came here now?"
Surprised he said, "I am coming here daily?"
PeriyavA asked him the same question again. The professor returned home in a state of understanding nothing of the question. As he entered his house, a letter that was lying on the floor came in his sight. He took it and read.
'Very urgent. Forthwith you go to such and such college in such and such place and start your work there.' How was the message of the letter known to Periyava beforehand? Whatever, the professor got ready for the relocation with his trunk and bed.
#மகாபெரியவா மகாபெரியவர் வடநாட்டுக்கு யாத்திரை செய்துவிட்டு, திரும்ப வந்து ஸ்ரீமடத்தில் அருள்பாலித்துக் கொண்டிருந்த நேரம் அது. பல ஆயிரம் மைல்கள் நடந்தே சென்று யாத்திரை செய்த களைப்பு கொஞ்சமும் முகத்தில் தெரியாமல் அன்றைக்கு மலர்ந்த பூப்போல அமர்ந்து பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கிக்
கொண்டிருந்தார் மகான். அந்தச் சமயத்தில் அவரைத் தரிசிக்க வந்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர், மகான் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். அப்படிக் கும்பிட்ட பிறகு எழுந்திருக்கவே முடியாமல் சிரமப்பட்டார்.
மிகவும் கஷ்டப்பட்டு எழுந்து கொண்டு பெருமூச்சு விட்டார். அவர் சிரமப்படுவதை
அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார், பெரியவா. வணங்கி விட்டு எழுந்தவர் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினார். "சுவாமி என் உடல் நிலை இப்படித்தான் அடிக்கடி சங்கடப் படுத்துகிறது. கொஞ்சம் வேகமாக நடந்தால் கூட மூச்சு வாங்குகிறது" என்றார்.
அவர் சொன்னதற்கு பதில் எதுவும்
(Thanks to Sri Ganapathysubramanian for the FB share)
காஞ்சீ க்ஷேத்ரத்தில் இருக்கும் பல திருக்கோயில்களில் சிற்பங்களாகக் காணப்படும் ஸ்ரீகாமாக்ஷி அம்பாளுடைய சிலா ரூபங்களையும் தவக்கோலத்தில் இருக்கும் ஸ்ரீசங்கராசார்யாளுடைய உருவத்தையும் கவனிக்கும் போதும் ஒரு பெரிய உண்மை வெளியாகிறது.
ஸ்ரீஏகாம்ரேச்வரர் ஆலயத்தில் ஸ்ரீகாமாக்ஷி அம்மையின் தவக்கோலம் சிலா ரூபத்திலே இருக்கிறது. இங்குள்ள அம்பாள் பஞ்சாக்னி மத்தியில், இடது காலையூன்றி, வலக் காலை மடித்து, இடது கரம் பக்கத்தில் இருக்க, வலக்கரத்தைத் தலைக்குமேல் உயர்த்தியிருக்கிற நிலையையே சிற்பம் காண்பிக்கிறது. காஞ்சி
ஸ்ரீகாமாக்ஷியின் ஆலயத்திலே உள்ள ஒரு தூணில், இரு பக்கங்களில் அம்பிகையின் தவக்கோலம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டிலும் ஸ்ரீஆசார்யாளுக்கு அளிக்கப்பட்டுள்ள அதே சிவ சின்னங்கள் இருப்பதைக் கவனிக்காமல் இருக்க முடியாது. ஏகாம்பரேச்வரர் ஆலயத்தில், நின்ற கோலத்தில் ஸந்யாஸ சின்னங்களுடன்