#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்#வினாயகசதுர்த்தி#ஸ்பெஷல்#HappyGaneshChaturthi
ஒரு சமயத்தில் சௌனகாதி முனிவர்கள் ஒன்று கூடி தாங்கள் செய்கிற எல்லா நற்செயல்களும் சரிவர நடக்காமலும் பூர்த்தி அடையாமலும் போய் விடுவதை எண்ணிக் குழப்பம் அடைந்தனர். இதற்குத் தீர்வு காண பரமேஸ்வரனிடம் முறையிட்டனர்.
பரமன் தனது தர்ம பத்தினியாம் பார்வதி தேவியை ஞானக் கண்ணால் உற்று நோக்கினார். அந்த சமயத்தில் அதிசயிக்கும் வகையில், மோகன வடிவத்தில், எல்லோரையும் கவர்ந்திழுக்கும் அழகோடு பிள்ளை ஒருவன் தோன்றினான். மற்றவர்களது கண் படாமல் இருக்கப் பார்வதி தேவி பிறரை மயங்கச் செய்யும் அழகான வடிவத்தை மாற்றி
பருமனான தொந்தியும் யானைத் தலையும் ஏற்பாய் என்று சொல்லி புது உருவத்தை தந்தாள். பரமன் தன் பிள்ளையை அழைத்து, விநாயகன் என்று பெயர் சூட்டிக் கனங்களுக்கு எல்லாம் தலைவனாக நியமனம் செய்தார். இனிமேல் எந்தக் காரியம் செய்தாலும் அவரை வைத்தே தொடங்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் அதற்குத்
தடைகள் ஏற்படும் என்றும் அறிவித்தார். அன்றைய நாள் முதல் இந்நாள் வரை பிள்ளையாரை முதலில் வழிபடும் முறை வழக்கத்திற்கு வந்தது.
32 விநாயகர் மூர்த்தங்கள் 1. பால கணபதி 2. தருண கணபதி 3. பக்தி கணபதி 4. வீர கணபதி 5. சக்தி கணபதி 6. துவிஜ கணபதி 7. சித்தி கணபதி 8. உச்சிட்ட கணபதி 9. விக்ன கணபதி
கணபதி 26. துண்டி கணபதி 27. துவிமுக கணபதி 28. மும்முக கணபதி 29. சிங்க கணபதி 30. யோக கணபதி 31. துர்க்கா கணபதி 32. சங்கடஹர கணபதி
விநாயகர் உருவத் தத்துவம்
தத்துவங்கள் தோன்றும் முறையில் முதற்கண் சுத்தமாயையில் இருந்து `ஓம்` என்ற பிரணவ நாதமே தோன்றியது. பிள்ளையார் பிரணவ வடிவினர் ஆதலால்
#பிரணவன் என்றும் அறியப் படுகின்றார். பிரணவத்தை முற்றறிந்தவர் என்பதால் பிரணவன், பிரணவநாதன். #ஓம் என்ற பிரணவ மந்திர ரூபியான அவர் ஞானமே வடிவானவர். #விநாயகசதுர்த்தி_வாழ்த்துகள்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாபெரியவா#நற்சிந்தனை
உத்தமமான குரு தன் சிஷ்யர்களை மட்டுமில்லை, சாமான்யமாக அவர்களுடைய திருஷ்டியில் படும், வஸ்துக்கள் அனைத்தையும் தன் பார்வையால் கடாக்ஷிப்பர். அந்த கடாக்ஷத்தை உள்வாங்கிக் கொள்ளும் பக்குவம் நமக்கு இருக்கிறதோ இல்லையோ, அந்த கடாக்ஷமே தன் வேலையை செய்ய தொடங்கி விடும்.
மீன், தன் குஞ்சுகளை பார்வையாலேயே ரக்ஷிப்பது போன்றது மஹான்களின் திருஷ்டி. அதனால்தான் நம் குழந்தைகளை மஹான்களின் சன்னிதானத்திற்கு அழைத்துப் போவது மிக அவசியம். அக்குழந்தைகளுக்கு மஹான்கள் யாரென்று கூட புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கிறதோ இல்லையோ, அவர்களின் மேல் சூழ்ந்துள்ள தோஷங்களை
நிவர்த்திக்கும் சக்தி அந்த திருஷ்டிக்கு உண்டு. காஞ்சி மகாபெரியவாளிடம் ஆழ்ந்த பக்தி கொண்ட ஒரு பெண் இருந்தாள். அவளுடைய கணவனுக்கோ, கடவுள், மஹான்கள், கோவில் எதிலுமே நம்பிக்கை இல்லை. அதிலும் மஹான்கள் எல்லோருமே நம்மை போல் சாதாரண மனிதர்கள் தான் என்ற ஒரு பேதைமையும் உண்டு. ஒருமுறை அந்த
#மகபெரியவா மிருதங்க வித்வான் ஒருவர் சிறு பையனாக இருந்தபோது பெரியவாளுடைய சந்நிதியில் நடந்த சங்கீத கச்சேரிக்கு தன் அப்பாவோடு போனார். அவருடைய அப்பாவும் மிருதங்க வித்வானானதால், அன்று மகனை மிருதங்கம் வாசிக்க அமர்த்தி விட்டார். இரவு எல்லாருக்கும் பிரஸாதம் வழங்கினார்கள். அப்போது
பெரியவா அந்தப் பையனை மட்டும் அழைத்து ஒரு சிவப்புப் பட்டு வழங்கி ஆசிர்வதித்தார். பல வருஷங்கள் கழித்து அந்தப் பையன் வானொலி நிலையத்தில் பணி புரிந்து வந்தார். அப்போது வானொலி நிலைய இயக்குநரோடு பெரியவாளை தரிசனம் பண்ணப் போனார். போகும் போது ஞாபகமாக அந்த சிவப்புப் பட்டையும் எடுத்துக்
கொண்டு போனார். பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு "இந்த பட்டு வஸ்த்ரம் பெரியவாதான் அனுக்ரகம் பண்ணிக் குடுத்தேள்” என்றதும், "ஆமா அப்போ ஒனக்கு ஒம்பது வயஸ்" என்று சொன்னதும், ஆடிப்போய் விட்டார் வித்வான்! 45 வருடங்களுக்கு முன்பு நடந்ததை, ஏதோ நேற்று நடந்த மாதிரி பெரியவா சொன்னார்.
#அறிவோம்_கோவில்கள்#ஸ்ரீவாஞ்சியம்
உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கு அரியவராக விளங்கும் பூலோக கைலாயம் என அழைக்கப்படும் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி திருக்கோவில். வாழ்வில் ஒருமுறையேனும் சென்று தரிசிக்க வேண்டிய ஸ்தலம். உலகிலேயே எம தர்ம ராஜனுக்காக தனிக்கோயில் அமைக்கப்பட்டு வழிபடும் ஸ்தலமாக என்ற
சிறப்பு பெற்றது ஸ்ரீ வாஞ்சியம். காசிக்கு ஒப்பான சிறப்புடையதாக ஆறு தலங்கள் போற்றப் படுகிறது.(திருவெண்காடு, திருவையாறு, சாயாவனம், மயிலாடுதுறை, திருவிடை மருதூர், ஸ்ரீவாஞ்சியம்). இந்த ஆறு தலங்களுள் அளப்பரிய மகிமை பொருந்திய தலமாகத் திகழ்வது திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அமைந்துள்ள
ஸ்ரீவாஞ்சியம். வியாசர் அருளிய ஸ்காந்த புராணம், பிரம்மாண்ட புராணம் ஆகியவற்றில் இந்தத் தலத்தின் பெருமை சொல்லப்பட்டிருக்கிறது, அதில் இருந்து கோயிலின் தொன்மையைப் புரிந்து கொள்ளலாம். பிரளய காலத்தில் உலகம் அழிந்த போது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில்
விநாயகரை பற்றி தெரிந்து கொள்வோம். #வினாயகசதுர்த்தி#GaneshChathurthi#மகாபெரியவா
“விநாயக மூர்த்தியிலுள்ள ஒவ்வொரு சின்ன சமாசாரத்தைக் கவனித்தாலும் அதில் நிறையத் தத்துவங்கள் இருக்கின்றன. பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது எதற்காக? விக்நேசுவரர், தம் அப்பாவான ஈசுவரனைப் பார்த்து “உன்
சிரசையே எனக்குப் பலி கொடு” என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால்தான் மகா கணபதிக்குப் பிரீதி ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், ஈசுவரனைப் போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச்
சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் அநுக்கிரகித்திருக்கிறார். சிதறு தேங்காய் என்று உடைக்கிற வழக்கம் தமிழ் தேசத்துக்கு மட்டுமே உரியது. இப்படிச் சிதறிய துண்டங்கள் யாருக்கு உரிமை என்றால் குழந்தைகளுக்குத்தான். இந்த உண்மை ஒரு குழந்தை மூலமாகத்தான்
#நற்சிந்தனை#மகாபெரியவா
வாழ்நாள் முழுக்க எதன் நினைப்பு ஒருத்தன் மனசில் ஜாஸ்தியாக இருக்கிறதோ, அதைப் பற்றிய சிந்தனைதான் அந்திமத்தில் வரும்.
இப்படி நமக்குக் கடைசியில் பகவத் ஸ்மரணம் வருமா என்று நிச்சயப் படுத்திக் கொள்வதற்கு ஒரு பரீட்சை வைத்துக் கொள்ளலாம். அதாவது அன்றன்றைக்கும் நாம்
தூங்குகிறோம் அல்லவா? இதையும் ஒரு சாவு மாதிரி என்று தான் சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது. தூங்குகிறபோது கட்டை போல ஒன்றும் தெரியாமல், ஞானமே இல்லாமல்தானே கிடக்கிறோம்? இதனால்தான் இப்படிச் சொல்லியிருக்கிறது. ‘நித்யப் பிரளயம்’ என்று தூக்கத்தைச் சொல்வார்கள். இப்படி தினமும் நாம் ‘சாகிற’
போது பகவானையே ஸ்மரித்துக் கொண்டு ‘சாக’ முடிகிறதா என்று அப்யாஸம் பண்ணிப் பார்க்கலாம். தூங்குகிறதற்கு முன்னால் நம் இஷ்ட தேவதையையே ஸ்மரித்துப் பார்க்க வேண்டும். அந்த நினைப்போடேயே தூக்கத்தில் ஆழ்ந்து விட வேண்டும். வேறே நினைப்பு வரக் கூடாது. சொல்லும்போது சுலபமாக இருக்கும். ஆனால்
#மணிமூர்த்தீஸ்வரம் #உச்சிஷ்டகணபதி#பிள்ளையார்சதுர்த்தி_ஸ்பெஷல்
தாமிரபரணி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ளது மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி ஆலயம். இக்கோயில், சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு விநாயகர் தன்னுடைய 32 திருத்தோற்றங்களில் 8வது வடிவமாக போற்றப் படுகின்ற உச்சிஷ்ட
கணபதியாக அவதரித்து அருள் பாலித்து வருகிறார். ஜீவநதியான தாமிரபரணி கரையில் 5 நிலை ராஜகோபுரத்துடன் எட்டு மண்டபங்கள், 3 பிராகாரங்கள், கொடிமரத்துடன் கூடிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் ஆசியாவிலேயே மிகப் பெரிய மூலவராக விநாயகர் எழுந்தருளியுள்ள தனித்திருக்கோயில் இது. இக் கோவிலுக்குள்
நுழைந்தால் பலி பீடம், கொடி மரம் தாண்டி விநாயகரின் மூஷிக வாகனம் இருக்கிறது. அதனை தாண்டி உள்ளே நுழைந்தால் நேராக கருவறை. கருவறையில் உச்சிஷ்ட கணபதியும் அவருக்கு அடுத்த தனி சன்னதியில் நெல்லையப்பரும் காட்சித் தருகிறார்கள். திருக்கோவில் உள் சுற்று பிரகாரத்தில் 32 விநாயகரின் சன்னதிகள்,