விநாயகரை பற்றி தெரிந்து கொள்வோம். #வினாயகசதுர்த்தி#GaneshChathurthi#மகாபெரியவா
“விநாயக மூர்த்தியிலுள்ள ஒவ்வொரு சின்ன சமாசாரத்தைக் கவனித்தாலும் அதில் நிறையத் தத்துவங்கள் இருக்கின்றன. பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது எதற்காக? விக்நேசுவரர், தம் அப்பாவான ஈசுவரனைப் பார்த்து “உன்
சிரசையே எனக்குப் பலி கொடு” என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால்தான் மகா கணபதிக்குப் பிரீதி ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், ஈசுவரனைப் போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச்
சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் அநுக்கிரகித்திருக்கிறார். சிதறு தேங்காய் என்று உடைக்கிற வழக்கம் தமிழ் தேசத்துக்கு மட்டுமே உரியது. இப்படிச் சிதறிய துண்டங்கள் யாருக்கு உரிமை என்றால் குழந்தைகளுக்குத்தான். இந்த உண்மை ஒரு குழந்தை மூலமாகத்தான்
எனக்கே தெரிந்தது. அப்போது (1941) நான் நாகைப்பட்டினத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அநுஷ்டித்து வந்தேன். அங்கே கோயிலில் பிள்ளையாருக்கு நிறையச் சிதறுகாய் போடுவது வழக்கம். காயை உடைக்கவே இடம் கொடுக்காத அளவுக்குக் குழந்தைகள் ஒரே நெரிசலாகச் சேர்ந்துவிடும். திபுதிபு என்று அவை ஓடி வருவதில்
என்மேல் விழுந்துவிடப் போகின்றனவே என்று என்கூட வந்தவர்களுக்குப் பயம். அவர்கள் குழந்தைகளிடம் “இப்படிக் கூட்டம் போடாதீர்கள், விலகிப் போங்கள்” என்று கண்டித்தார்கள். அப்போது ஒரு பையன் ‘டாண்’ என்று, “பிள்ளையாருக்குத் தேங்காய் போட்டுவிட்டு, அப்புறம் எங்களை இங்கே வராதீர்கள் என்று சொல்ல
உங்களுக்கு என்ன பாத்தியதை இருக்கிறது? சிதறுகாய் போட்டால் அது எங்கள் பாத்தியதைதான். அதை எடுத்துக் கொள்ள நாங்கள் வரத்தான் செய்வோம்” என்றான். அவன் பேசிய ஜோர், அதிலிருந்த உறுதியைப் பார்த்தபோதுதான் எனக்கே, ‘வாஸ்தவம்தான், குழந்தை ஸ்வாமியின் பிரஸாதத்தில் குழந்தைகளுக்குத்தான் முழு
பாத்தியதையும்’ என்று தெரிந்தது. அகங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே அமிருத ரஸமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறுகாய் உணர்த்துகிறது.
கணபதியைக் காட்டிலும் சரீரத்தில் பருமனான ஸ்வாமி வேறு யாரும் இல்லை. சிரசு யானையின் தலை. பெரிய வயிறு. பெரிய உடம்பு. அவருக்கு ‘ஸ்தூல காயர்’ என்றே ஒரு பெயர்
மலைபோல் இருக்கிறார். ஆனாலும் அவர் சின்னக் குழந்தை! சரி, குழந்தைக்கு எது அழகு? குழந்தை என்றால் அந்தப் பருவத்தில் நிறையச் சாப்பிட வேண்டும். உடம்பு கொஞ்சம்கூட இளைக்கக்கூடாது. ஒரு சந்நியாசி நிறையச் சாப்பிட்டுக் கொண்டு பெரிய சரீரியாக இருந்தால் அது அவருக்கு அழகல்ல. வயசாகிவிட்டால்
ராத்திரி உபவாசம் இருப்பார்கள். குழந்தை அப்படி இருப்பது அழகா? குழந்தை என்றால் தொந்தியும் தொப்பையுமாகக் கொழு கொழுவென்று இருந்தால்தான் அழகு. நிறையச் சாப்பிடுவதுதான் அழகு. குழந்தைகள் நல்ல புஷ்டியாக இருக்க வேண்டும் என்பதை இந்தக் குழந்தைச்சாமியே காட்டிக் கொண்டிருக்கிறார், கையில்
மோதகத்தை வைத்துக்கொண்டு. இவரோ யானை மாதிரி இருக்கிறார். அதற்கு நேர் விரோதமான சின்னஞ்சிறு ஆகிருதி உடையது மூஞ்சூறு. இதை அவர் தம் வாகனமாக வைத்துக் கொண்டிருக்கிறார். மற்ற ஸ்வாமிகளுக்காவது ஒரு மாடு, ஒரு குதிரை, ஒரு பட்சி என்று வாகனம் இருக்கிறது. இவரோ தாம் எத்தனைக்கு எத்தனை பெரிய
ஸ்வாமியாக இருக்கிறாரோ, அத்தனைக்கு அத்தனை சின்ன வாகனமாக வைத்துக் கொண்டிருக்கிறார். சுவாமி எதை வாகனமாக வைத்துக் கொண்டாலும் வாகனத்தினால் சுவாமிக்குக் கௌரவம் இல்லை. சுவாமியால்தான் வாகனத்துக்கும் கௌரவம். வாகனத்துக்குக் கௌரவம் கொடுக்க, அதனுடைய சக்திக்கு ஏற்றபடி நெட்டிப் பிள்ளையார்
மாதிரியாகக் கனம் இல்லாமல் இருக்கிறார். அதற்குச் சிரமம் இல்லாமல், ஆனால் அதற்கு மரியாதை, கௌரவம் எல்லாம் உண்டாக்கும்படியாகத் தம் உடம்பை வைத்துக் கொண்டிருக்கிறார். ஸ்தூலகாயரான போதிலும், ‘பக்தர்கள் இருதயத்தில் கனக்காமல் லேசாக இருப்பேன்’ என்று காட்டுகிறார். ஒவ்வொரு பிராணிக்கும் ஒவ்வோர்
அங்கத்தில் அதிகக் கௌரவம் இருக்கும். சவுரிமான் (கவுரிமான்) என்று உண்டு. அதன் கௌரவம் வாலில். மயில் என்றால் அதற்குத் தோகை விசேஷம். தோகையை மயில் ஜாக்கிரதையாக ரட்சிக்கும். யானை எதை ரட்சிக்கும்? தன் தந்தத்தைத் தீட்டி வெள்ளை வெளேர் என்று வைத்திருக்கும். இந்தப் பிள்ளையார் என்கிற யானை
என்ன பண்ணுகிறது என்றால், அந்தக் கொம்பில் ஒன்றையே ஒடித்து, அதனால் மகாபாரதத்தை எழுதிற்று. தன் அழகு, கௌரவம், கர்வம் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிற ஒன்றைக் காட்டிலும், தர்மத்தைச் சொல்கிற ஒன்று தான் பெரிது என்பதை இவ்விதம் இந்த யானை காட்டியது. நியாயத்துக்காக, தர்மத்துக்காக,
விந்தைக்காக எதையும் தியாகம் பண்ண வேண்டும் என்பதைத்தானே தந்தத்தைத் தியாகம் பண்ணிக் காட்டியிருக்கிறது. ஸ்வாமிக்குக் கருவி என்று தனியாக ஒன்றும் வேண்டியதில்லை. எதையும் கருவியாக அவர் நினைத்தால் உபயோகித்துக் கொள்வார் என்பதற்கும் இது உதாரணம். ஒரு சமயம் தந்தத்தாலேயே அசுரனைக் கொன்றார்.
அப்போது அது ஆயுதம். பாரதம் எழுதும் இப்போது அதுவே பேனா.
நமக்குப் பார்க்கப் பார்க்க அலுக்காத வஸ்துக்கள் சந்திரன், சமுத்திரம், யானை ஆகியன. இவற்றையெல்லாம் எத்தனை தடவை, எத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும், அலுப்புச் சலிப்பில்லாத ஆனந்தம் பொங்கும். அதனால்தான் குழந்தைஸ்வாமி தன்னைப்
பார்க்கிற ஜனங்களுக்கு எல்லாம், பார்க்கப் பார்க்க ஆனந்தம் எப்போதும் பொங்கிக் கொண்டிருக்கும்படியாக யானை உருவத்தோடு இருக்கிறார். அது ஆனந்த தத்துவம்; ஆறாத ஆசையின் தத்துவம். அவர் பிறந்ததே ஆனந்தத்தில். பண்டாசுரன் விக்ன மந்திரங்களைப் போட்டு அம்பாளின் படை தன்னை நோக்கி வரமுடியாதபடி செய்த
போது, பரமேசுவரன் அவளை ஆனந்தமாகப் பார்த்தப்போது , அவளும் ஆனந்தமாக இந்தப் பிள்ளையைப் பெற்றாள். அவர் விக்னயந்திரங்களை உடைத்து அம்மாவுக்கு சகாயம் செய்தார். அவர் பார்வதி பரமேஸ்வரர்களுக்குப் பிள்ளை. இந்த உலகத்துக்கே மூலத்திலிருந்து ஆவிர்ப் பவித்ததனால், அவரை நாம் “பிள்ளையார் பிள்ளையார்”
என்றே விசேஷித்து அழைக்கிறோம். எந்த ஸ்வாமியை உபாஸிப்பதானாலும் முதலில் விநாயகருடைய அநுக்கிரகத்தைப் பெற்றுக் கொண்டால்தான் அந்தக் காரியம் விக்கினம் இல்லாமல் நடைபெறும். அவரையே முழுமுதற் கடவுளாக, பிரதான மூர்த்தியாக வைத்து உபாசிக்கிற மதத்துக்கு காணபத்தியம் என்று பெயர்.
பிள்ளையாருக்கு
எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோமே, அதை நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் மஹாவிஷ்ணுதான் என்று ஒரு கதை இருக்கிறது. ஒரு சமயம் மஹாவிஷ்ணுவினுடைய சக்கரத்தை அவரது மருமகனான பிள்ளையார் விளையாட்டாகப் பிடுங்கிக் கொண்டு தம் வாயில் போட்டுக்கொண்டு விட்டாராம். பிள்ளையாரிடமிருந்து திரும்பப்
பிடுங்குவது முடியாது. அவர் மிகவும் பலம் உடையவர். அதட்டி மிரட்டி வாங்கவும் முடியாது. ஆனால், அவரைச் சிரிக்க வைத்துச் சந்தோஷத்தில் அவர் வாயிலிருந்து சக்கரம் கீழே விழுந்தால் எடுத்துக்கொண்டு விடலாம் என்று மஹாவிஷ்ணுவுக்குத் தோன்றியதாம். உடனே நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு
ஆடினாராம். விநாயகர் விழுந்து விழுந்து சிரித்தார். சக்கரம் கீழே விழுந்தது. விஷ்ணு எடுத்துக் கொண்டு விட்டார்.“தோர்பி: கர்ணம்” என்பதே தோப்புக்கரணம் என்று மாறியது. தோர்பி என்றால் கைகளினால் என்று அர்த்தம். கர்ணம் என்றால் காது. தோர்பி கர்ணம் என்றால் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது.
விக்நேசுவரருடைய அநுக்கிரகம் இருந்தால்தான் லோகத்தில் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். தடைகளை நீக்கிப் பூரண அநுக்கிரகம் செய்கிற அழகான குழந்தைத் தெய்வம் பிள்ளையார். அவரைப் பிரார்த்தித்து, பூஜை செய்து, நாம் விக்கினங்கள் இன்றி நல்வாழ்வு வாழ்வோமாக.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாபெரியவா#நற்சிந்தனை
உத்தமமான குரு தன் சிஷ்யர்களை மட்டுமில்லை, சாமான்யமாக அவர்களுடைய திருஷ்டியில் படும், வஸ்துக்கள் அனைத்தையும் தன் பார்வையால் கடாக்ஷிப்பர். அந்த கடாக்ஷத்தை உள்வாங்கிக் கொள்ளும் பக்குவம் நமக்கு இருக்கிறதோ இல்லையோ, அந்த கடாக்ஷமே தன் வேலையை செய்ய தொடங்கி விடும்.
மீன், தன் குஞ்சுகளை பார்வையாலேயே ரக்ஷிப்பது போன்றது மஹான்களின் திருஷ்டி. அதனால்தான் நம் குழந்தைகளை மஹான்களின் சன்னிதானத்திற்கு அழைத்துப் போவது மிக அவசியம். அக்குழந்தைகளுக்கு மஹான்கள் யாரென்று கூட புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கிறதோ இல்லையோ, அவர்களின் மேல் சூழ்ந்துள்ள தோஷங்களை
நிவர்த்திக்கும் சக்தி அந்த திருஷ்டிக்கு உண்டு. காஞ்சி மகாபெரியவாளிடம் ஆழ்ந்த பக்தி கொண்ட ஒரு பெண் இருந்தாள். அவளுடைய கணவனுக்கோ, கடவுள், மஹான்கள், கோவில் எதிலுமே நம்பிக்கை இல்லை. அதிலும் மஹான்கள் எல்லோருமே நம்மை போல் சாதாரண மனிதர்கள் தான் என்ற ஒரு பேதைமையும் உண்டு. ஒருமுறை அந்த
#மகபெரியவா மிருதங்க வித்வான் ஒருவர் சிறு பையனாக இருந்தபோது பெரியவாளுடைய சந்நிதியில் நடந்த சங்கீத கச்சேரிக்கு தன் அப்பாவோடு போனார். அவருடைய அப்பாவும் மிருதங்க வித்வானானதால், அன்று மகனை மிருதங்கம் வாசிக்க அமர்த்தி விட்டார். இரவு எல்லாருக்கும் பிரஸாதம் வழங்கினார்கள். அப்போது
பெரியவா அந்தப் பையனை மட்டும் அழைத்து ஒரு சிவப்புப் பட்டு வழங்கி ஆசிர்வதித்தார். பல வருஷங்கள் கழித்து அந்தப் பையன் வானொலி நிலையத்தில் பணி புரிந்து வந்தார். அப்போது வானொலி நிலைய இயக்குநரோடு பெரியவாளை தரிசனம் பண்ணப் போனார். போகும் போது ஞாபகமாக அந்த சிவப்புப் பட்டையும் எடுத்துக்
கொண்டு போனார். பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு "இந்த பட்டு வஸ்த்ரம் பெரியவாதான் அனுக்ரகம் பண்ணிக் குடுத்தேள்” என்றதும், "ஆமா அப்போ ஒனக்கு ஒம்பது வயஸ்" என்று சொன்னதும், ஆடிப்போய் விட்டார் வித்வான்! 45 வருடங்களுக்கு முன்பு நடந்ததை, ஏதோ நேற்று நடந்த மாதிரி பெரியவா சொன்னார்.
#அறிவோம்_கோவில்கள்#ஸ்ரீவாஞ்சியம்
உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கு அரியவராக விளங்கும் பூலோக கைலாயம் என அழைக்கப்படும் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி திருக்கோவில். வாழ்வில் ஒருமுறையேனும் சென்று தரிசிக்க வேண்டிய ஸ்தலம். உலகிலேயே எம தர்ம ராஜனுக்காக தனிக்கோயில் அமைக்கப்பட்டு வழிபடும் ஸ்தலமாக என்ற
சிறப்பு பெற்றது ஸ்ரீ வாஞ்சியம். காசிக்கு ஒப்பான சிறப்புடையதாக ஆறு தலங்கள் போற்றப் படுகிறது.(திருவெண்காடு, திருவையாறு, சாயாவனம், மயிலாடுதுறை, திருவிடை மருதூர், ஸ்ரீவாஞ்சியம்). இந்த ஆறு தலங்களுள் அளப்பரிய மகிமை பொருந்திய தலமாகத் திகழ்வது திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அமைந்துள்ள
ஸ்ரீவாஞ்சியம். வியாசர் அருளிய ஸ்காந்த புராணம், பிரம்மாண்ட புராணம் ஆகியவற்றில் இந்தத் தலத்தின் பெருமை சொல்லப்பட்டிருக்கிறது, அதில் இருந்து கோயிலின் தொன்மையைப் புரிந்து கொள்ளலாம். பிரளய காலத்தில் உலகம் அழிந்த போது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில்
#நற்சிந்தனை#மகாபெரியவா
வாழ்நாள் முழுக்க எதன் நினைப்பு ஒருத்தன் மனசில் ஜாஸ்தியாக இருக்கிறதோ, அதைப் பற்றிய சிந்தனைதான் அந்திமத்தில் வரும்.
இப்படி நமக்குக் கடைசியில் பகவத் ஸ்மரணம் வருமா என்று நிச்சயப் படுத்திக் கொள்வதற்கு ஒரு பரீட்சை வைத்துக் கொள்ளலாம். அதாவது அன்றன்றைக்கும் நாம்
தூங்குகிறோம் அல்லவா? இதையும் ஒரு சாவு மாதிரி என்று தான் சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது. தூங்குகிறபோது கட்டை போல ஒன்றும் தெரியாமல், ஞானமே இல்லாமல்தானே கிடக்கிறோம்? இதனால்தான் இப்படிச் சொல்லியிருக்கிறது. ‘நித்யப் பிரளயம்’ என்று தூக்கத்தைச் சொல்வார்கள். இப்படி தினமும் நாம் ‘சாகிற’
போது பகவானையே ஸ்மரித்துக் கொண்டு ‘சாக’ முடிகிறதா என்று அப்யாஸம் பண்ணிப் பார்க்கலாம். தூங்குகிறதற்கு முன்னால் நம் இஷ்ட தேவதையையே ஸ்மரித்துப் பார்க்க வேண்டும். அந்த நினைப்போடேயே தூக்கத்தில் ஆழ்ந்து விட வேண்டும். வேறே நினைப்பு வரக் கூடாது. சொல்லும்போது சுலபமாக இருக்கும். ஆனால்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்#வினாயகசதுர்த்தி#ஸ்பெஷல்#HappyGaneshChaturthi
ஒரு சமயத்தில் சௌனகாதி முனிவர்கள் ஒன்று கூடி தாங்கள் செய்கிற எல்லா நற்செயல்களும் சரிவர நடக்காமலும் பூர்த்தி அடையாமலும் போய் விடுவதை எண்ணிக் குழப்பம் அடைந்தனர். இதற்குத் தீர்வு காண பரமேஸ்வரனிடம் முறையிட்டனர்.
பரமன் தனது தர்ம பத்தினியாம் பார்வதி தேவியை ஞானக் கண்ணால் உற்று நோக்கினார். அந்த சமயத்தில் அதிசயிக்கும் வகையில், மோகன வடிவத்தில், எல்லோரையும் கவர்ந்திழுக்கும் அழகோடு பிள்ளை ஒருவன் தோன்றினான். மற்றவர்களது கண் படாமல் இருக்கப் பார்வதி தேவி பிறரை மயங்கச் செய்யும் அழகான வடிவத்தை மாற்றி
பருமனான தொந்தியும் யானைத் தலையும் ஏற்பாய் என்று சொல்லி புது உருவத்தை தந்தாள். பரமன் தன் பிள்ளையை அழைத்து, விநாயகன் என்று பெயர் சூட்டிக் கனங்களுக்கு எல்லாம் தலைவனாக நியமனம் செய்தார். இனிமேல் எந்தக் காரியம் செய்தாலும் அவரை வைத்தே தொடங்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் அதற்குத்
#மணிமூர்த்தீஸ்வரம் #உச்சிஷ்டகணபதி#பிள்ளையார்சதுர்த்தி_ஸ்பெஷல்
தாமிரபரணி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ளது மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி ஆலயம். இக்கோயில், சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு விநாயகர் தன்னுடைய 32 திருத்தோற்றங்களில் 8வது வடிவமாக போற்றப் படுகின்ற உச்சிஷ்ட
கணபதியாக அவதரித்து அருள் பாலித்து வருகிறார். ஜீவநதியான தாமிரபரணி கரையில் 5 நிலை ராஜகோபுரத்துடன் எட்டு மண்டபங்கள், 3 பிராகாரங்கள், கொடிமரத்துடன் கூடிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் ஆசியாவிலேயே மிகப் பெரிய மூலவராக விநாயகர் எழுந்தருளியுள்ள தனித்திருக்கோயில் இது. இக் கோவிலுக்குள்
நுழைந்தால் பலி பீடம், கொடி மரம் தாண்டி விநாயகரின் மூஷிக வாகனம் இருக்கிறது. அதனை தாண்டி உள்ளே நுழைந்தால் நேராக கருவறை. கருவறையில் உச்சிஷ்ட கணபதியும் அவருக்கு அடுத்த தனி சன்னதியில் நெல்லையப்பரும் காட்சித் தருகிறார்கள். திருக்கோவில் உள் சுற்று பிரகாரத்தில் 32 விநாயகரின் சன்னதிகள்,