#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆழ்வார்களிலே, நான்காமவரான திருமழிசைப் பிரான், திருமாலின் அவதாரங்களுக்குள் அழகுப் போட்டி ஒன்றை வைத்தாராம். 1) மத்ஸ்ய 2) கூர்ம 3) வராஹ 4) நரசிம்ம 5) வாமன 6) பரசுராம 7) ஸ்ரீராம 8) பலராம 9) கிருஷ்ண 10) கல்கி
அவதாரங்களை வரவழைத்தார். முதல் சுற்றில் மத்ஸ்ய, கூர்ம,
வராஹ மூன்று அவதாரங்களும் முறையே மீன், ஆமை, பன்றி ஆகிய மிருக வடிவங்களில் இருந்தமையால், அழகுப் போட்டியில் அவர்கள் பங்கேற்க இயலாது எனக் கூறி, நிராகரித்து விட்டார். நரசிம்மருக்குத் தலை சிங்கம் போல இருந்தாலும், உடல் மனித வடிவில் இருந்ததால், அவரை நிராகரிக்கவில்லை. நரசிம்மர் முதல் கல்க
வரை உள்ள ஏழு அவதாரங்களும் இரண்டாவது சுற்றுக்குச் சென்றார்கள். இரண்டாவது சுற்றில், வாமன மூர்த்தி முதலில் வந்தார். மகாபலியிடம் சிறிய காலைக் காட்டி, மூவடி நிலம் கேட்டு, பின் பெரிய காலால், மூவுலகையும் அளந்தவர் நீங்கள். அதுபோல போட்டியிலும் நீங்கள் உருவத்தைத் திடீரென மாற்றிக் கொள்ள
வாய்ப்புண்டு. எனவே உங்களை நிராகரிக்கிறேன் என்றார் திருமழிசைப் பிரான். பரசுராமர் எப்போதும் கையில் மழுவுடனும், கோபம் நிறைந்த முகத்துடனும் இருப்பதால், அவரையும் நிராகரித்தார். பலராமன், கண்ணன் இருவரையும் பார்த்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் போட்டியில் பங்கேற்கக் கூடாது. யாராவது
ஒருவர் மட்டும் இருங்கள் என்று கூறினார். தம்பிக்காக பலராமன் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். கல்கி பகவான் இன்னும் அவதாரமே எடுக்காததால், நீங்கள் அவதரித்த பின் அடுத்த போட்டியில் வந்து பங்கேற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லி அவரையும் நிராகரித்துவிட்டார். நரசிம்மன், ராமன், கண்ணன்,
மூவரும் இறுதிச் சுற்றுக்குச் சென்றார்கள். மூவரையும் பரீட்சித்துப் பார்த்த திருமழிசைப் பிரான், #நரசிம்மர்_தான்_அழகு என்று தீர்ப்பளித்தார். ராமன் அனைத்து நற்பண்புகளும் நிறைந்த பரிபூர்ணமான மனிதனாக வாழ்ந்து காட்டினான் என்பதில் சந்தேகமில்லை. கண்ணன் கோபிகைகளை எல்லாம் மயக்கிய அழகன்
என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால், ஆபத்தில் யார் நமக்கு உதவி செய்கிறார்களோ, அவர்கள் தான் மிகவும் அழகாக நம் கண்களுக்குத் தெரிவார்கள். பெருமாள் திருமேனியில் உள்ள அனைத்து அங்கங்களும் அழகாக இருந்தாலும், அவரது திருவடிகளையே நாம் கொண்டாடுகிறோம். ஏனெனில் நமக்குத் துன்பங்கள் நேரும்போது அவன்
திருவடிகளைத் தான் நினைத்துக் கொள்கிறோம். பிரகலாதன் போன்ற பக்தர்கள் ஆபத்தில் தவிக்கும் போது, உடனே ஓடோடி வந்து காக்கக்கூடிய பெருமாள், நரசிம்மர். எனவே அவர்தான் அழகு என்று கூறினார். இருவரும் ராகவ யாதவ சிம்ஹம் என்ற பெயர்களையே சூட்டிக் கொண்டாலும், செயலாலே நரஸிம்ஹனே வென்றான். ஏனெனில்,
நமக்குத் துன்பங்கள் நேரும்போது நரஸிம்ஹன் திருவடிகளைத் தான் நினைத்துக் கொள்கிறோம். துயரறு சுடரடியான அந்தத் திருவடிகள்தான் ஆபத்திலிருந்து நம்மைக் காக்கின்றன!எனவே அவைதான் மிகவும் அழகு. அவ்வாறே, ஆபத்தில் ஓடோடி வந்து காப்பவரான நரசிம்மர்தான் அவதாரங்களுக்குள் அழகானவர். இந்தக் கருத்தைத்
திருமழிசைப் பிரான் தாம் இயற்றிய, #நான்முகன்_திருவந்தாதி என்ற நூலின் 22வது பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார்.
அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் – குழவியாய்த்
தான் ஏழுலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீனாய் உயிரளிக்கும் வித்து.
– என்ற பாசுரத்தில் அரி எனப்படும் சிங்க
வடிவில் வந்த நரசிம்மரே அழகானவர் என்று காட்டுகிறார். அதனால்தான் அழகிய ராமன், அழகிய கண்ணன் முதலிய பெயர்களை நாம் கேள்விப்பட்டதில்லை. ஆனால், நரசிம்மர் மட்டும் #அழகியசிங்கர் என்று அழைக்கப் படுகிறார். அத்தகைய அழகனாக விளங்குவதால், நரசிம்மருக்கு #ஸ்ரீமான் என்ற திருநாமமும் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீமான் என்றால் அழகானவன் என்று பொருள். மற்ற அனைத்துப் பெருமாள்களுக்கும் மகாலட்சுமி திருமார்பில் அமர்ந்திருக்க, நரசிம்மருக்கு மட்டும் ஏன் மடியில் அமர்ந்திருக்கிறாள்? ஸ்ரீமானான நரசிம்மரின் அழகிய முகத்தைக் கண்டுகளிக்க வேண்டுமெனில் திருமார்பில் இருந்தபடி காணமுடியாது. மடியில்
அமர்ந்தால் தானே காண முடியும்? அதனால் தான் ஸ்ரீமானின் மடியில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறாள்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
இந்த லட்சுமி நரசிம்மர் மந்திரத்தை தினமும் தொடர்ந்து சொல்லி வழிபாடு செய்து வந்தால் தீராத கஷ்டங்கள் தீரும்.
#மகாபெரியவா
பல வருஷங்களுக்கு முன் காஞ்சி மஹா ஸ்வாமிகள் மயிலாடுதுறைக்கு அருகில் இருந்த ஆனந்ததாண்டவ புரத்தில் எழுந்தருளி இருந்தார். அப்போது ஆந்திராவைச் சேர்ந்த பண்டிதர் ஒருவர் மஹானை தரிசிக்க அங்கே சென்றிருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்திருந்த சிறுவர்களிடம் நோட்டுப் புத்தகங்களைக்
கொடுத்து, அதில் ராம நாமம் எழுதிக் கொண்டு மாலையில் வரும்படி சொல்லி அனுப்பினார் மகாபெரியவா.
அதே போல மாலையில் அச்சிறுவர்கள் ராம நாமம் எழுதி வந்து அவரிடம் தந்தனர். அங்கிருந்த சிறுவர்களில் ஒருவனைப் பார்த்து ராம நாமம் சொல்லுமாறு பணித்தார் மஹான். பக்கத்தில் இருந்தவர்கள் தயங்கியவாறு,
அவனால் பேசமுடியாது ஸ்வாமி என்றனர். அவர்களைக் கையமர்த்தித் தடுத்த மஹான், மீண்டும் அந்தச் சிறுவனைப் பார்த்து, "ம் நீ ராம நாமம் சொல்லு!" என்று பணித்தார். என்ன ஆச்சரியம்! வாய் பேச இயலாத அந்தச் சிறுவன் முதலில் சற்று திணறிவிட்டு, பின்பு படிப்படியாக தெளிவான உச்சரிப்பில் ராம நாமம் சொல்ல
#நற்சிந்தனை விச்வரதன் என்ற மன்னரின் மகன் க்ஷத்திர பந்து. அவன் சிறு வயது முதலே தீய சகவாசத்தால் எந்த நற்குணமும் இல்லாதவனாகவும், பிறரைத் துன்புறுத்துவதையே தொழிலாக கொண்டவனாகவும் வாழ்ந்து வந்தான். அவனது இம்சைகளால் வேதனைப்பட்ட நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரண்மனைக்குச் சென்று,
அந்த இம்சை இளவரசனான க்ஷத்திரபந்துவை நாட்டை விட்டு வெளியேற்றும்படி மன்னரிடம் வேண்டினார்கள். தன் மகனைத் திருத்த மன்னரும் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் அவன் திருந்தாததால், க்ஷத்திரபந்துவைக் காட்டுக்கு அனுப்புவது எனத் தீர்மானித்தார். அனுப்பியும் வைத்தார். நாடு நிம்மதியானது. ஆனால்,
காட்டுக்குச் சென்ற பின்னும் க்ஷத்திரபந்து திருந்துவதாகத் தெரியவில்லை. காட்டில் வாழும் மிருகங்களுக்கும், தவம் புரியக் காட்டில் வசிக்கும் துறவிகளுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அந்தக் காட்டில் வாழ்ந்த முனிவர் ஒருவர் அங்கிருந்த ஒரு குளத்தில் நீராட சென்றார். அப்போது ஈரமாக இருந்த
#ஸ்ரீமன்நாராயணீயம் நூறு தசகங்களை கொண்டது. ஒவ்வொரு தசகத்திலும் தோராயமாக பத்துப் பாடல்கள் இருக்கும். இதை இயற்றியவர் #நாராயண_பட்டத்திரி அவர் தன் குருவின் வியாதியை தான் வாங்கிக் கொண்டு தன்ஆச்சாரயனுக்கு அந்நோயிலிருந்து விடுதலை கொடுத்து, மற்ற மாணாக்கர்களுக்கு அவர் தொடர்ந்து பாடம்
எடுக்கும்படி உதவினார். ஆனால் அவர் ஏற்றுக் கொண்ட வாத நோய் அவரை மிகவும் வருத்தியது. அவர் பணக்கார வீட்டுப் பிள்ளை. அவர் வீட்டு வேலையாள் அவரின் துன்பத்தைக் காண பொறுக்காமல் ஒரு ஜோசியரிடம் சென்று பரிகாரம் வேண்டினார். அவர், நாக்கில் மீனை வைத்துக் கொண்டு குருவாயூரப்பன் கோவிலில் அவரை பாட
சொல்லு என்றார். இதை வந்து பட்டத்திரியிடம் வேலையாள் சொன்னார். முதலில் அதிர்ச்சி அடைந்தார், பின் புரிந்து கொண்டார். மகா விஷ்ணுவும் மச்சாவதாரத்தில் இருந்து பாட ஆரம்பித்தார். தினம் அவரை தூக்கிக் கொண்டு கோவிலில் ஓரிடத்தில் உட்கார வைத்துவிட்டுப் போய் விடுவார்கள். மாலை வந்து திரும்பவும்
#மகாபெரியவா
என் மனைவிக்கு எப்போதும் உடம்பு சரியில்லை. தலைவலி என்று படுத்துக் கொண்டே கிடக்கிறாள். சமையல் செய்வதில்லை. குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதில்லை சொல்லிக் கொண்டே போனார் நடுத்தர வயது பக்தர். கொஞ்ச நேரத்துக்குப் பின் பெரியவா சொன்னார்கள், "இதையே உன் சிநேகிதர்களிடம் சொல்லி
பார், சம்சாரத்தை டைவர்ஸ் பண்ணுன்னு உபதேசம் பண்ணுவா. உன் பந்துக்களிடம் சொல்லு, அவள் கிடக்கிறாள் கழிசடை, பிறந்தகத்துக்கு அனுப்பிவிட்டு, வேற நல்ல பெண்ணாப் பாத்துக் கல்யாணம் பண்ணிக்கோ என்பார்கள். ஜோஸ்யரிடம் போய்க் கேட்டுப் பார், ராகு தசை,கேது தசை பரிகாரம் பண்ணணும் என்பார்.
டாக்டரிடம்
போ. எக்ஸ்-ரே ரத்தப் பரிசோதனை இஸிஜி டெஸ்ட் எடுக்கச் சொல்லி, ஒரு பக்கம் நிறைய மருந்து எழுதிக் கொடுப்பார். சொந்தக்காரப் பாட்டியைக் கேள், உனக்குத் திருஷ்டி தோஷம், செய்வினை,ஆபிசாரம் இருக்கு. மந்திரவாதியிடம் போ என்பாள். சரி என்னிடம் வந்தே, என் சம்சாரத்துக்கு உடம்பு குணமாகணும்னு என்னை
#மகாபெரியவா#நற்சிந்தனை
உத்தமமான குரு தன் சிஷ்யர்களை மட்டுமில்லை, சாமான்யமாக அவர்களுடைய திருஷ்டியில் படும், வஸ்துக்கள் அனைத்தையும் தன் பார்வையால் கடாக்ஷிப்பர். அந்த கடாக்ஷத்தை உள்வாங்கிக் கொள்ளும் பக்குவம் நமக்கு இருக்கிறதோ இல்லையோ, அந்த கடாக்ஷமே தன் வேலையை செய்ய தொடங்கி விடும்.
மீன், தன் குஞ்சுகளை பார்வையாலேயே ரக்ஷிப்பது போன்றது மஹான்களின் திருஷ்டி. அதனால்தான் நம் குழந்தைகளை மஹான்களின் சன்னிதானத்திற்கு அழைத்துப் போவது மிக அவசியம். அக்குழந்தைகளுக்கு மஹான்கள் யாரென்று கூட புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கிறதோ இல்லையோ, அவர்களின் மேல் சூழ்ந்துள்ள தோஷங்களை
நிவர்த்திக்கும் சக்தி அந்த திருஷ்டிக்கு உண்டு. காஞ்சி மகாபெரியவாளிடம் ஆழ்ந்த பக்தி கொண்ட ஒரு பெண் இருந்தாள். அவளுடைய கணவனுக்கோ, கடவுள், மஹான்கள், கோவில் எதிலுமே நம்பிக்கை இல்லை. அதிலும் மஹான்கள் எல்லோருமே நம்மை போல் சாதாரண மனிதர்கள் தான் என்ற ஒரு பேதைமையும் உண்டு. ஒருமுறை அந்த
#மகபெரியவா மிருதங்க வித்வான் ஒருவர் சிறு பையனாக இருந்தபோது பெரியவாளுடைய சந்நிதியில் நடந்த சங்கீத கச்சேரிக்கு தன் அப்பாவோடு போனார். அவருடைய அப்பாவும் மிருதங்க வித்வானானதால், அன்று மகனை மிருதங்கம் வாசிக்க அமர்த்தி விட்டார். இரவு எல்லாருக்கும் பிரஸாதம் வழங்கினார்கள். அப்போது
பெரியவா அந்தப் பையனை மட்டும் அழைத்து ஒரு சிவப்புப் பட்டு வழங்கி ஆசிர்வதித்தார். பல வருஷங்கள் கழித்து அந்தப் பையன் வானொலி நிலையத்தில் பணி புரிந்து வந்தார். அப்போது வானொலி நிலைய இயக்குநரோடு பெரியவாளை தரிசனம் பண்ணப் போனார். போகும் போது ஞாபகமாக அந்த சிவப்புப் பட்டையும் எடுத்துக்
கொண்டு போனார். பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு "இந்த பட்டு வஸ்த்ரம் பெரியவாதான் அனுக்ரகம் பண்ணிக் குடுத்தேள்” என்றதும், "ஆமா அப்போ ஒனக்கு ஒம்பது வயஸ்" என்று சொன்னதும், ஆடிப்போய் விட்டார் வித்வான்! 45 வருடங்களுக்கு முன்பு நடந்ததை, ஏதோ நேற்று நடந்த மாதிரி பெரியவா சொன்னார்.