#அர்த்தமுள்ளஇந்துமதம் #கவியரசர்_கண்ணதாசன் #அஷ்டமியும்_நவமியும்
அஷ்டமியன்றும், நவமி அன்றும் கிளம்பும் ரயில்கள் என்ன நடுவழியிலா நிற்கிறது? அதே நாளில் கிளம்பும் விமானங்கள் கடலில் விழுந்துவிடுகிறதா? பகுத்தறிவு வியாதிகள் கேட்பார்கள். நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல. நம் முன்னோர்கள்
அஷ்டமி அன்றும் நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை? அதற்குக் என்ன காரணம்? அதில் தான் விஞ்ஞானம் இருக்கிறது. நம் முன்னோர்களின் வானியல் அறிவு அதில் பளிச்சிடுகிறது. கிருஷ்ண பரமாத்மா அஷ்டமி அன்று பிறந்ததால் ஒரு மிகப்பெரிய போரை நடத்த வேண்டி இருந்தது. ஸ்ரீ ராமன் நவமி அன்று
பிறந்ததால் அவரது வாழ்வில் 14 வருடம் காட்டில் கழிக்க வேண்டி இருந்தது. இதுதான் காரணமா? இல்லை. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்வதை ஒரு நாள் என்று சொல்கிறோம். அதே பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனை சுற்றி வருவதை ஒரு வருடம் என்கிறோம். நிலவு தன்னைத் தானே சுற்றிக் கொண்டு பூமியை
சுற்றி வருவதை ஒரு மாதம் என்கிறோம். அதனால் தான் மாதத்திற்கு திங்கள் என்ற பெயர் உண்டு. (திங்கள் என்றால் சந்திரன்) நிலவு தன்னைத் தானே சுற்றிக் கொண்டு பூமியை சுற்றி வரும் போது ஒரு பாதி சுற்று (15 நாட்கள் அமாவாசையாகவும்) அடுத்த 15 நாட்கள் பௌர்ணமி என்றும் சொல்கிறோம். அமாவாசைக்கும்,
பௌர்ணமிக்கு இடைப்பட்ட எட்டாவது நாளை அஷ்டமி என்று சொல்கிறோம். ஒரு மாதத்திற்கு இரண்டு அஷ்டமி வரும். தேய்பிறை அஷ்டமி என்றும் வளர்பிறை அஷ்டமி என்றும் சொல்கிறோம். சரியாக அஷ்டமி தினத்தன்று நாம் வாழும் பூமியானது சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் வருகிறது. அவ்வேளையில் சூரியனின்
சக்தியும், சந்திரனின் சக்தியும் பூமியை தங்கள் பக்கம் இழுப்பதால் ஒருவித Vibration ஏற்படுகிறது. அந்த Vibration பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் எதிரொலிக்கும். பேருந்தில் நாம் பயணம் செய்யும்போது நம்மால் சரியாக எழுத முடிவதில்லை அல்லவா, அதைப்போன்று. அதன் காரணமாக எந்த
ஜீவராசியாலும் ஒரு நிலையான முடிவை எடுக்க முடியாது. அவ்வேளைகளில் நாம் எடுக்கும் முடிவும் நிலையற்றதாக இருக்கும். நவமி கழிந்த பிறகே பூமி தனது இயல்பு நிலைக்கு திரும்பும். அப்போது தான் மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகள் மனமும் நிலை பெரும். அதனால் அஷ்டமி அன்றும், நவமி நவநாழிகை வரை எந்த
முடிவையும் எடுக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் முடிவெடுத்தார்கள்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#MahaPeriyava
It was a hot summer season. Severe water scarcity prevailed in the villages. The rivers and ponds had all dried up. In many homes, even their wells went dry. Whatever water was available, the villagers shared it amongst themselves.
On the request of devotees of a
village where there was severe water scarcity, Sri Maha Periyava had come to the village and was giving darshan. Everyone in the village came for darshan. A very old person had come. The others who were there gave him way, out of respect, to have Periyava's darshan. It was
evident that he was an important person in the village.
He paid his obeisance, and stood up.
Periyava asked him "What is your age?"
"Me? I am quite old now - eighty two years", replied the old man.
"Sowkiama?" (Is all well with you?), asked Periyava.
"No, Saami. Where is the room
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் மைசூரில், மிகப்பெரிய மாளிகையில் பிறந்தவர் ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள். இவர், இறைவன் மேல் கொண்ட பக்தியின் காரணமாக தன் மாளிகையையும், சொத்துகளையும், பொதுமக்களுக்கு தானம் அளித்து விட்டு, ஊர் ஊராக சென்று இறைநாமத்தை பரப்பி, உபந்யாசங்கள் செய்து வந்தார்.
திருவிசநல்லூரில், வெங்கடேச ஐயாவாள் தங்கியிருந்த போது அவருடைய உபந்யாசங்களையும், நாம மகிமையையும் கேட்டு, மக்கள் ஆனந்தப்பட்டனர். அப்போது அந்த ஊரில் இருந்த சிலர், மிக ஆடம்பரமாக, கோகுலாஷ்டமி விழா கொண்டாடினர். கண்ணன் படத்தை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
ஊர்வலம், ஸ்ரீ ஐயாவாள் வசித்த, குடிசை
வீட்டை நெருங்கிய போது, கண்ணனை தரிசிக்கும் ஆவலில், வெகு வேகமாக வெளியே வந்தார் ஸ்ரீ ஐயாவாள். அவர் மீது பொறாமை கொண்ட ஊர்வலக்காரர்களோ, அய்யா பெரியவரே பக்தியில்லாத உங்கள் தீபாராதனைக்காக கண்ணன் ஒன்னும் காத்திருக்கவில்லை. இந்த இடம் விட்டு நகருங்கள். உங்கள் வீட்டில், தீபாராதனை எடுக்க
#நற்சிந்தனை தாயின் பணி தந்தையை சுட்டிக்காட்டுதல். தந்தையின் பணி குருவை சுட்டிக் காட்டுதல். குருவின் பணி தெய்வத்தை சுட்டிக் காட்டுதல் என்ற பொருளில் #மாதா_பிதா_குரு_தெய்வம் என்ற வாக்கியத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். ஒரு தாயின் கடமை குழந்தையை பெற்றெடுத்து பால் கொடுப்பது மட்டுமல்ல.
அந்த குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும் உதவும் பொருட்டு அவன் தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்து தந்தையிடம் அக்குழந்தையை ஒப்படைப்பது ஆகும். அது போல தந்தை தனது குழந்தைக்குப் புதிய விஷயங்களை கற்றுக் கொடுத்து காலப் போக்கில் ஒரு திறன் வாய்ந்த குருவிடம் மகனை ஒப்படைப்பதே. அந்த குருவானவர்
ஆன்மீக ஞானத்தின் வாயிலாக தெய்வத்தை அடைவதற்கான பாதையை சீடனுக்கு அறிவுறுத்துகிறார்.தாய் தந்தையரின் முக்கிய கடமை தங்கள் குழந்தைகளை மீண்டும் பிறக்காமல் செய்வதாகும். அதாவது குழந்தையின் வடிவில் உலகில் பிறந்துள்ள ஜீவன் மீண்டும் இந்த உலகில் பிறவி எடுக்காமல் இருப்பதற்கு என்னென்ன உதவிகளைச்
#நவராத்திரி_ஸ்பெஷல்
ஒரு தெரு முழுதும் கொலு பொம்மை தயாரிக்கும் வீடுகள் உள்ளன. ஆச்சரியமாக இருக்கிறதா? அஸ்தகிரி என்று அந்த வீதிக்கு பெயர். பொம்மை கார தெரு எனில் யாரும் சின்ன காஞ்சிபுரத்தில் வழி காட்டுவார்கள். குறுகலான வீதி. இரண்டு புறங்களிலும் வீதிகளில் வீட்டு வாசலில் எல்லா
பொம்மைகளும் மாதிரி காட்சிக்கு அடுக்கப்பட்டு இருக்கிறது. விசாரித்தால் உள்ளே போங்கள் எல்லா பொம்மையும் இருக்கிறது என அனுப்பி வைக்கிறார்கள். சில இல்லங்களில் வீட்டின் உள்ளே, சில இல்லங்களில் வீட்டின் மாடி அறையில், என அடுக்கப் பட்டிருக்கும் அட்டை பெட்டிகள் ஏராளம்! காணக் கிடைக்காத செட்
பொம்மைகள் எல்லாம் அங்கு கிடைக்கும். பேப்பர் மேஷே பொம்மைகள் அளவில் பெரியதாகவும் நல்ல பினிஷிங் உடனும் கிடைக்கின்றன. விலை மிக மிக சகாயம். எந்த செட் கேட்டாலும் இருந்தால் கொடுக்கிறார்கள், இல்லையென்றால் இருக்கும் வீட்டிற்கு சரியாக வழி காட்டுகிறார்கள். இந்த தெரு நூறாண்டுகளுக்கு மேலாக
#மகாபெரியவா
திருக்கோவிலூரைச் சேர்ந்த பெரியவரின் பக்தரான மணி, தன் மனைவியுடன் காஞ்சிபுரம் வந்திருந்தார். பெரியவரின் ஜென்ம நட்சத்திரமான அனுஷத்தன்று தவறாமல் விரதமிருந்து பூஜை செய்வது அவரது வழக்கம். முடிந்தால் அனுஷத்தன்று காஞ்சிப் பெரியவரை தரிசிக்கவும் செய்வார். மணிக்கு இரு குழந்தைகள்
மூத்தவள் பெண். இளையவன் பையன். பெண்ணுக்குத் திருமணம் முடிந்து பிரசவத்திற்காக தாய் வீடு வந்திருந்தாள். பையன் படிப்பை முடித்து விட்டு, வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தான். இந்நிலையில் தான், மணி தம்பதி பெரியவரைத் தரிசிக்க வந்திருந்தனர். அன்று அனுஷம் என்பதால் மடத்தில் ரொம்ப
கூட்டம். வீட்டில் நிறைமாத கர்ப்பிணி தனியாக இருக்கிறாளே என்ற எண்ணம் அடி மனதில் ஓடிக் கொண்டிருந்தது. என்ன ஆச்சரியம்!
காஞ்சிப் பெரியவர் சீடர்களிடம் வரிசையில் நிற்கும் திருக்கோவிலூர் மணி தம்பதியை அருகில் அழைத்து வர உத்தரவிட்டார். மணி அருகில் வந்ததும் பெரியவர், “உன் குடும்பத்தில் வம்ச
#ஶ்ரீராமானுஜர் தன் பெண்டாட்டி பொன்னாச்சியே கதியாக இருந்த மனிதர், இப்போ உடையவரின் சம்பந்தம் பெற்றதும், மகான்கள் போற்றும் உத்தமராக உறங்காவல்லி தாசராக மாறி விட்டார். எல்லாம் எதிராஜன் அருள்தான். பொன்னாச்சிக்கும், தானே கதி என்று கிடந்த தாசரை விட, ரங்கனுக்கு தாசனாகி விட்ட தாசரைத் தான்
பிடித்திருந்தது. அவர் பொன்னாச்சியை அழைத்ததும் நொடிகூட தாமதிக்காமல் அரக்கப்பரக்க ஓடி வந்தாள். அவளைக் கண்ட தாசர் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றார். காரணம் இல்லாமல் இல்லை. பொன்னாச்சியின் உடலில் ஒரு பாதியில் மட்டுமே ஆபரணங்கள் இருந்தது, மற்றொரு பாகத்தில் ஆபரணங்களைக் காணவில்லை.
வலது
பக்கத் தோடு இருந்தால், இடது தோடை காணவில்லை. வலது பக்க வளையல் இருந்தால் இடது பக்கத்து வளையலைக் காணவில்லை. ஒரு வேளை அரங்கனை எண்ணிய படியே ஆபரணங்கள் அணிந்து கொண்டதால் தன்னை மறந்து போய் இவ்வாறு செய்து கொண்டாளோ, தாசர் சிந்தித்தார். பிறகு மெல்ல நடப்புக்கு வந்தவர், “என்ன பொன்னாச்சி, ஒரு