சுவாமிமலை அருகே 23 அடி உயரத்தில் பிரமாண்ட ஆனந்த #நடராஜர்_விக்ரகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே திம்மக்குடி கிராமத்தில் உள்ள ஒரு சிற்பக்கூடத்தை நடத்தி வருபவர் வரதராஜன். இவர், கடந்த 2003-ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவா நகரில் உள்ள அணு ஆராய்ச்சி
மையத்திற்கு சோழர் காலத்து சிற்ப சிலைகளைபோல 11 அடி உயரம் கொண்ட நடராஜர் சிலையை வடிவமைத்து வழங்கி உள்ளார். இதன் தொடர்ச்சியாக ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜரை 23 அடி உயரத்தில், உலகின் மிகப் பெரிய சிலையாக வடிவமைக்க முடிவு செய்தார். இதற்கான பணிகள் 2010-ம் ஆண்டு தொடங்கியது. 23 அடி நடராஜர்
ஐம்பொன் விக்ரகம் ஒற்றை வார்ப்பு முறையில் உருவாக்கப்பட்டது. பின்னர் போதிய நிதி இல்லாததால் இந்த பணியில் தொய்வு ஏற்பட்டது. பிறகு 2012-ம் ஆண்டு வேலூர் நாராயண சக்தி பீடம் ஒத்துழைப்போடு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு 23 அடி உயரம், 17 அடி அகலம் மற்றும் 15 ஆயிரம் கிலோ எடை கொண்ட உலகின்
மிகப்பெரிய ஆனந்த தாண்டவ நடராஜர் சிலை உருவானது. இந்த சிலை 51 சிவ அட்சரத்தை குறிக்கும் வகையில் 51 தீச்சுடர்கள், திருவாச்சியில் 52 சிம்மங்களையும், 56 பூதகணங்களையும், 102 தாமரை மலர்களையும், 2 மகர பறவைகளையும், 34 நாகங்களின் உருவங்களையும் கொண்டுள்ளது. ரூ.4 கோடியில் வடிவமைக்கப்பட்ட இந்த
பிரமாண்ட சிலைக்கு 12ஆம் தேதி மாலை திம்மக்குடியில் அபிஷேகம் நடந்தது. ஓதுவார்கள் பாடலை பாட, வாத்தியங்கள் முழங்க நடராஜருக்கு அபிஷேகம் நடந்தது. இதில் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு நடராஜர் சிலையை பயபக்தியுடன் வணங்கினார். பின்னர் அந்த
விக்ரகத்தை நாராயணி பீடத்தின் டிரஸ்டி சுரேசிடம் ஒப்படைத்தார். விழாவில் சிற்பி ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் காணொளி இங்கே
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
Another beautiful video of the Abhishekam of the largest Natarajar🙏🏻🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#MahaPeriyava Once some learned people were conversing with Sri Maha Periyava. Even though the topic was on a high level Vedantic matter, Periyava’s talk and the language was so simple that even an illiterate could understand it easily. It was different from the lectures normally
delivered by Pundits. At that time, a young man from Australia came there to have His darshan. The young man was doing research on the comparison of various religions and he could speak small sentences in Sanskrit. After the normal enquiries, Periyava asked him what he wanted.
“How should I be? How should I live? What is way of life? What is the way to perform good deeds in life and to get good results?” The young man piled his queries, politely. After a few minutes silence, Periyava said, “All that is okay. But why come here (Kalavai was the place)
#பக்தி மங்களவேடா என்ற ஊர் பண்டரிபுரத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ளது. அந்த ஊரில் பீடார் சுல்தானுக்கு வரி வசூல் அதிகாரியாக தாமாஜி வேலை பார்த்து வந்தார். தாமாஜி பண்டிதர் தீவிர விட்டல பக்தர். தினமும் விட்டலனை பூஜித்து யாரேனும் அதிதி வந்தால் அவருக்கு போஜனம் செய்வித்து பிறகுதான்
சாப்பிடுவார். சுல்தானுக்கு அவரது நேர்மை நல்லொழுக்கம் ரொம்ப பிடித்து விட்டதால் அவனின் கஜானா மற்றும் பண்டக சாலைக்கு அவரை பொறுப்பாளியாக நியமித்தான். எதிர்பாராத விதமாக நாட்டில் பஞ்சம் வந்தது. ஆடு மாடு கோழி எல்லாம் தீவனமின்றி மெலிந்து போயின. பயிர் பச்சை எல்லாம் வாடி கருகின. மக்கள்
உணவு தட்டுப்பாட்டால் தவித்தனர். ஒருநாள் தாமாஜி வீட்டு வாசலில் ஒரு பிராமணர் பசியோடு வந்தார். தாமாஜி அவரை அழைத்து உபசரித்து உணவளித்தார். அந்த மனிதர் அழத் தொடங்கவே தாமாஜி விவரம் கேட்டார். "நான் இங்கே வயிறார உண்கிறேன். பண்டரி புரத்தில் என் வீட்டில் மனைவி குழந்தைகள் உணவின்றி
#நற்சிந்தனை
ராம ராம ராம ராம!
ராம நாம ஜபத்தில் நாம் இருந்தால் நமது கர்ம வினைப்படி ஏதேனும் துக்கமோ அவமானமோ நிகழ வேண்டி இருந்தால் அவைகள் தடுக்கப்படும் அல்லது நமக்கு பாதிப்பின்றி மாற்றி அமைக்கப்படும். ராம நாமத்தின் சிறப்பே ராமாயணம். ஆஞ்சநேயருக்கு உயிராய் இருப்பது ராம நாமமே. எல்லாவித
பயங்களையும் போக்கடித்து, சகல ஞானத்தையும் பக்தியையும் அளித்து, இகபர சுகங்களையும் தரவல்லது ஸ்ரீராம நாமம். ராமா என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருந்தால் நமக்கு எந்த ஒரு செயலிலும் வெற்றி கிடைக்கும் என்பதால், ராமா என்ற மந்திரத்துடன் வெற்றி என்ற பொருளுடைய ஜயம் சேர்க்கப்பட்டு ராம ஜயம்
என உச்சரிக்கப்படுகிறது. நமது இலட்சியம் அழியா ஆனந்தமே. அதை ராம நாம ஜபத்தினால் பெற முடியும். ராம நாமாவினால் வினைகள் எரிந்து நோய்கள் குறையும். சஞ்சிதம், ஆகாமியம் கருகி, ப்ராரப்தம் சுகமாக அனுபவித்து ஜீரணிக்கப்படும். வினை தாங்கும் வலிமையையும், அதுவும் பிரசாதமாக ஏற்கும் பக்குவமும்
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஓர் ஆங்கிலேயே ஆளுநர் கஜேந்திர மோக்ஷம் ஓவியத்தைப் பார்த்து விட்டு, தன உதவியாளரிடம், உங்கள் கடவுளான திருமாலுக்கு யாரும் சேவகர்களே கிடையாதா என்று கேட்டார். அதற்கு அந்த உதவியாளர், அவருக்கு ஆயிரக் கணக்கான சேவகர்கள் இருக்கிறார்கள் ஏன்
கேட்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர், ஒரு சாதாரண யானையின் காலை ஒரு முதலை பிடித்ததற்காகவா அவரே கருடன் மீது ஏறி சங்கு சக்கரத்துடன் வந்து அந்த யானையை காக்க வேண்டும்? நீர் கூறியது போல் ஆயிரக் கணக்கான சேவகர்கள் இருக்கிறார்களே அவர்களில் யாரவது ஒருவரை அனுப்பி அந்த யானையை காப்பாற்றி
இருக்கலாமே. அதை விட்டு விட்டு அவர் ஏன் வந்து அந்த யானையை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டார். அதை கேட்ட உதவியாளர் ஏதும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார். ஆளுநருக்கு தான் நன்றாக இந்து மதத்தை மட்டம் தட்டி விட்டோம் என்று மனத்திற்குள் பெருமை பட்டுக் கொண்டார். ஒரிரு நாட்கள் சென்றன.
#The_cause_of_anger A monk decides to meditate alone away from his monastery. He takes his boat out to the middle of the lake, moors it there, closes his eyes and begins his meditation. After a few hours of undisturbed silence, he suddenly feels the bump of another boat colliding
with his own. With his eyes still closed, he senses his anger rising, and by the time he opens his eyes, he is ready to scream at the boatman who dared disturb his meditation. But when he opens his eyes, he sees an empty boat that had probably got untethered and floated to the
middle of the lake. At that moment, the monk achieves self-realization, and understands that the anger is within him, it merely needs the bump of an external object to provoke it out of him. From then on, whenever he comes across someone who irritates him or provokes him to anger
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் கொடியில் உணர்த்தியிருந்த புதிய புடவையை ஆசையோடு பார்த்தாள் கமலாபாய். இதுவரை ஒரே ஒருமுறை தான் அதை உடுத்தி இருக்கிறாள். இன்று மாலை கிருஷ்ணர் கோயிலுக்குச் செல்லும்போது இந்தப் புடவையைத் தான் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும். சற்று விலைமதிப்புடையது. #துக்காராமின் மனைவ
நல்ல சேலைகளையும் கட்டுவாள் என்பதைக் கோயிலுக்கு வருபவர்கள் உணரட்டுமே! துக்காராமின் கிருஷ்ண பக்திக் கீர்த்தனைகளின் ரசிகர் அன்பளிப்பாகக் கொடுத்த புடவை! இல்லா விட்டால் துக்காராம் சம்பாத்தியத்தில் விலைமதிப்புள்ள புடவையை வாங்க முடியுமா என்ன! உத்யோகம் புருஷ லட்சணமாம்? ஆனால் துக்காராம்
எந்த வேலைக்கும் போய் எதுவும் சம்பாதிக்கவில்லை. கீர்த்தனைகளை மட்டுமே பாடிக் கொண்டிருந்தால் அடுப்பில் சோறு வேகுமா? வயிறு என்று ஒன்று இருக்கிறதே! தெரிந்தவர் ஒருவரிடம் சொல்லி, சோளக்கொல்லை ஒன்றைக் காவல் காக்கும் பணியைச் சிறிதுகாலம் முன் துக்காராமுக்கு அவள் தான் வாங்கிக் கொடுத்தாள்.