#கனவு_உண்மையா? #ஶ்ரீமத்ராமானுஜர் தூங்கும் போது பல கனவுகள் வருகின்றன. ஆண்டாள், ஆழ்வார்கள் கனவில் பெருமாள் வந்ததாக சொல்கிறார்கள். நம்மில் சிலருக்கு தெய்வங்கள் கனவில் காட்சி கொடுக்கிறார்கள். பல சமயம் கெட்ட கனவுகள் வருகின்றன. நல்ல கனவுகளும் தான். கனவுகள் உண்மையா என்பது பற்றி
ஶ்ரீ
ராமானுஜர் தெளிவு படுத்தி இருக்கிறார். #கனவு என்பது அவஸ்தை (அனுபவம்) தானே! அதை எப்படி உண்மை என்று நம்ப முடியும் என்று நினைக்கிறோம். ராமானுஜர் தனது #ஸ்ரீபாஷ்யத்தில் "விழித்து இருக்கும் போது நாம் காணும் காட்சிகள் எந்த அளவுக்கு சத்தியமோ அது போல, கனவில் காணும் காட்சிகளும் சத்தியமே”
என்கிறார். ஒரு நாள், ஒருவன் திடீரென்று காக்கையாகி விட்டான். காகம் போல கரைந்து கொண்டு பறக்கிறான். தன் வீட்டை பார்த்ததும், வாசல் வழியாக நுழைய முயன்றான். அவன் மனைவியே "சூ சூ” என்று துரத்தி விட்டாள். "ஐயோ! என் நிலைமை இப்படி ஆகி விட்டதே!" என்று புலம்பி அழ, விழித்துக் கொண்டு விட்டான்.
“அட சீ! என்ன கனவு இது!" என்று பெருமூச்சு விட்டான். கனவு பொய் என்று நினைத்தான். ராமானுஜரிடம் கேட்டால், "கனவு சத்தியம் தான். ஏதோ ஒரு பூர்வ ஜென்மத்தில் காக்கையாக இருந்திருப்பான், அந்த வாசனை இன்னும் போகாததால், இப்படி ஒரு கனவு கண்டான்" என்கிறார். ஒருநாள், திடீரென்று 4 பேர் சேர்ந்து
கொண்டு, இவனை அடி அடியென்று அடித்து நொறுக்கி விட்டார்கள். ரத்தம் சொட்ட, வலி தாங்க முடியாமல், உயிருக்கு பயந்து இவன் ஓட, விழித்துக் கொண்டு விட்டான். "அப்பாடா! பெரிய கஷ்டத்தில் இருந்து தப்பித்தோம்! சீ! என்ன கனவு இது!" என்று நினைத்தான். இதற்கும் விளக்கம் கொடுக்கிறார் ராமானுஜர். சின்ன
சின்ன பாவம் புண்ணியம் சித்திக்க பகவானால் கனவு சிருஷ்டிக்கப் பட்டுள்ளது. “கனவு சத்தியம் தான். இவனுக்கு இப்படி ஒரு அவஸ்தை விழிப்பு நிலையில் இவனது பூர்வ கர்மாவால் நடக்க வேண்டியிருக்க, பெருமாளின் கருணையால், இந்த அனுபவத்தை கனவில் கொடுத்து, பாப கர்மாவின் கணக்கை கழித்து விட்டார்.
நியாயமாக இவன் பெருமாளுக்கு நன்றி சொல்ல வேண்டும். கெட்ட கனவும், பாபத்தை கழிக்கவே வருகிறது. இது பெருமாளின் கருணையையே காட்டுகிறது” என்கிறார். பெரிய மாளிகையில், பெரிய சிம்மாசனத்தில் இவன் அமர்ந்து இருக்கிறான். ஆயிரக்கணக்கான வேலைக்காரர்கள் சூழ, பல வித உணவுகள் இருக்க, சகல வசதியுடன்
இருக்கிறான். ஆஹா எத்தனை சுகமான வாழ்க்கை என்று அனுபவித்து கொண்டு இருக்கும் போது, விழித்துக் கொண்டு விட்டான். ஒட்டு வீட்டில், வெறும் தரையில் படுத்து கொண்டு இருக்கிறான். அடடா, என்ன அற்புதமான கனவு இது என்று நினைத்தான். இதற்கு ராமானுஜர் சொல்கிறார், "இந்த கனவு சத்தியம் தான். இவனுக்கு
இப்படி ஒரு அவஸ்தை விழிப்பு நிலையில் இவனது பூர்வ கர்மாவால் நடக்க வேண்டியிருக்க, பெருமாளின் கருணையால், இந்த சௌக்கியமான அனுபவத்தை கனவில் கொடுத்து, புண்ணிய கர்மாவின் கணக்கை கழித்து விட்டார். நல்ல கனவு, புண்ணியத்தை கழிக்கவே வருகிறது. இதுவும் பெருமாளின் கருணையே” என்கிறார். பெரிய
மாளிகை கட்டி, வசதியாக வாழும்படி நிஜத்தில் நடத்தி இருக்க கூடாதா என்று கேட்டால், “வசதி நிஜத்தில் கொடுத்து இருக்கலாம். கஷ்டம் இருந்தால், பெருமாளை கொஞ்சமாவது நினைப்பான். அதீத வசதி கொடுத்தால், பெருமாளை விட்டு விலகி சென்று விடுவானே! மீண்டும் சம்சார சுகத்தில் வீழ்ந்து விடுவானே! அதனால்
தான் அந்த புண்ணிய அனுபவத்தையும் கனவில் கொடுத்து, அதையும் கழித்து விடுகிறார்" என்கிறார். இப்படி, நல்ல கனவும், கெட்ட கனவும், 'பூர்வ ஜென்ம வாசனையாலும், சில பாவ கர்மாக்களை கழிக்கவும், சில புண்ணிய கர்மாக்களை கழிக்கவும்' ஏற்படுகிறது என்கிறார்.
சிலருக்கு ஆச்சர்யமாக கனவில் பெருமாள்
தோன்றுகிறாரே! ஆண்டாள் தனது கனவில் பெருமாள் வந்து தன்னை கரம் பிடித்ததாக கண்டேன் என்று சொல்கிறாளே! மற்ற ஆழ்வார்களும் கனவில் பெருமாளை தரிசித்தேன் என்று சொல்கிறார்களே! நமக்கும், எப்பொழுதாவது, தெய்வீக காட்சிகள் ஏற்படுகிறதே, அதற்கு காரணம் என்ன என்று கேட்டால், ராமானுஜர், "அந்த திவ்ய
காட்சிகள் சத்தியமே! என்கிறார். “பெருமாளை நேரில் வந்தால் தாங்க முடியாது. நேரில் பார்த்த ஆழ்வார்களால் உலகத்தோடு பழக முடியவில்லை. நேராக தெய்வம் வந்து பேசினால் பித்தனாகி விடுவோம். உலக விஷயங்களில் பிறகு மனம் செல்லவே செல்லாது. ஆதலால், பெருமாள், பக்குவம் இல்லாத தன் பக்தனிடம், பழக ஆசைப்
படும் போது, முதலில் கனவில் வருகிறார். நாளைக்கு பெருமாளை கனவில் பார்க்க போகிறேன் என்று சொல்லி யாரும் பார்த்து விட முடியாது. பெருமாள் கனவில் வருவது நம் சாமர்த்தியத்தால் அல்ல, அவர் கருணையால் மட்டுமே என்பதால் கனவில் எற்படும் திவ்ய காட்சிகளை சத்தியம் என்றே உணர வேண்டும். தன்னிடம் பழக
தெய்வம் வருகிறார் என்று கனவில் பார்த்த பக்தன், மேலும் மேலும் நம் பக்தியை வளர்த்து கொள்ள வேண்டும். வேதத்தில் இல்லாத, சொல்லாத உருவங்கள், போலி தெய்வங்கள் கனவில் ஏற்பட்டால், அது இந்த ஜென்மத்தில் பழகிய வாசனையே என்று உதற வேண்டும்.” என்று சொல்லி உள்ளார்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Oct 8
#நரசிம்ஹ_அவதாரம் திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும். எல்லா இடங்களிலேயும் எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்துவது மகாவிஷ்ணுவின் நரசிம்ம அவதாரம். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம். நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம். Image
நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர். நரசிம்மனின் தேஜஸ் காயத்ரி மந்திரத்துக்குள்ளே அவர் இருப்பதாக ஐதீகம். திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு
அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப் படுவதில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்களுக்கு அவர் மிக விருப்பமானவராக இருக்கிறார். நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண்டும் அளவிட முடியாது! #அடித்த_கை_பிடித்த_பெருமாள் என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது Image
Read 20 tweets
Oct 7
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
பாண்டுரங்கனின் மீது மிகுந்த அன்பு கொண்டவர் யோகி பிரேமானந்தர். அவருடைய வழக்கமான வேலை விடிகாலை எழுந்ததும் நதிக்கு செல்வது, நீராடுவது, விட்டலனுக்கு பிரார்த்தனை, பிறகு ஷோடசோபசாரம் செய்து 700 நமஸ்காரம் பண்ணுவது. நம்மால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது!அதற்குப் Image
பிறகு பகவத் கீதை பாராயணம். மறுபடியும் நமஸ்காரம். பிறகு தான் இலையில் சோறு. அப்படியொரு பக்தி! அவர் மனத்தில் பாண்டுரங்கன் சதா சர்வகாலமும் இருந்தான். இன்பம் தந்தான். ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு பட்டுத்துணி வியாபாரி வந்தான். விட்டலன் கோவிலுக்கு சென்றான். அந்த நேரம் பார்த்து திடீரென்று
விடாத இடி இடித்து பெரிய மழை. வானம் பொத்துக்கொண்டது. சள சள வென்று பெய்த மழையில் தரை மண்ணெல்லாம் சேரும் சகதியுமாகியது. வியாபாரியின் பார்வை, தூரத்தில் இதை எல்லாம் லட்சியம் செய்யாத ஒரு சாமியார் மேல் சென்றது. அது தான் பிரேமானந்தர். பாண்டுரங்கனை நோக்கி கோவில் வாசலில் நமஸ்காரம் செய்து
Read 17 tweets
Oct 7
#சரஸ்வதி_விளாகம் சரஸ்வதி கோவில் திருத்தல வரலாறு. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் சரஸ்வதி விளாகம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீவித்யா நாயகி உடனாகிய ஸ்ரீ வித்யாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சரஸ்வதிதேவி தனி சன்னதியில் எழுந்தருளி
பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தலத்தில் சரஸ்வதிதேவி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து ஆயக்கலைகள் அறுபத்தி நான்கும் கிடைக்க வேண்டி தவம் இருந்து அருள் பெற்றதாக தல புராணம் தெரிவிக்கிறது. இதனால் இவ்வூர் சரஸ்வதி விளாகம் என்று அழைக்கப்படுவது உடன் சரஸ்வதி தேவியால் ஸ்தாபிக்கப்
பட்ட சுவாமி ஸ்ரீவித்யாரண்யஸ்வரர் அம்பாள் ஸ்ரீவித்யா நாயகி என்ற திருநாமத்தோடு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் சரஸ்வதி பூஜை சிவராத்திரி நவமி திதி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் கலந்துகொண்டு சுவாமி, அம்பாள் மற்றும் சரஸ்வதி தேவியை வழிபட்டால் ஞானமும்,
Read 7 tweets
Oct 7
#MahaPeriyava
This man was the miser of all misers! He was of course a wealthy man but would not spend a penny. He had come for Sri Maha Periyava's darshan. With his right hand over his mouth, he started speaking emotionally. I have blood pressure and diabetes for a long time.
Now, I have been diagnosed with cancer too. I am suffering a lot. Periyava must please suggest a parikaram (remedy).
"Will you do as I say" asked Periyava.
"Certainly" said the man.
"It might be difficult.”
"Never mind. I want to just get rid of these diseases. I will do whatever
Periyava instructs. All I want is to be cured of this BP, diabetes and cancer”saying this, he wiped his eyes. Generally, Maha Periyava had compassion towards everyone for no reason at all, and now, this man was in tears. Could Periyava let him down?
Periyava said, "In the well,
Read 8 tweets
Oct 6
#நற்சிந்தனை
சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்ளும்.
சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும் போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக் கொள்கிறது. நன் முறையில் முன்னேற விரும்பினால் நம் பக்கத்தில் இருப்பவர் யார் என்பதில் அதிக கவனம்
செலுத்த வேண்டும். சிலர் எப்பொழுதும் நடக்கும் அனைத்து கெட்டதையும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். எந்தச் செயலை செய்ய தொடங்கும் போதும் அதைரியப் படுத்துவார்கள். அவர்களிடம் இருந்து தள்ளியே இருக்க வேண்டும். அதே சமயம் இடித்துரைக்க, எடுத்து சொல்லத் தக்கவர்களை நம் அருகில் வைத்துக் கொள்ளத்
தவறக் கூடாது. ஆமாஞ்சாமிகளை மட்டுமே பக்கத்தில் வைத்துக் கொண்டதால் வீழ்ந்தவர்கள் பலர். மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள், அரசியல்வாதிகள், தங்கள் பக்கத்தில் இருந்த தவறானவர்களால் வீழ்ந்து இருக்கிறார்கள். நள்ளிரவில் 120 கி.மீ வேகத்தில் கார் சென்று கொண்டு இருந்தது. காரில்
Read 7 tweets
Oct 6
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் #துளசி எந்த வீட்டில் காலையிலும் மாலையிலும் துளசி தேவியை வணங்கி வருகிறார்களோ அங்கு யமதேவன் நுழைய முடியாது,
கெட்ட ஆவிகளும் அண்டுவதில்லை.
நாள்தோறும் தீபமேற்றி பூஜிப்பவர் நூற்றுக் கணக்கான யாகம் செய்ததின் பலனை அடைவர். துளசியின் காற்று பட்டாலும் துளசியை வலம் வந்து
வணங்கினாலும் எல்லா பாபங்களும்
நீங்கும். தொடுபவர்கள் புனிதம் அடைகிறார்கள். துளசியின் வேர்ப்பக்கம் உள்ள தூசியை நெற்றியிலிடுவது மாபெரும் கவசமாகும். பகவான் ஹரிக்கு ஸமர்ப்பிக்கப் பட்ட துளசி தீர்த்தத்தை, பக்தியுடன் ஏற்பவர் கங்கையில் நீராடிய பலனை அடைவர். பகவானது தாமரைப் பாதங்களில்
சந்தனம் கலந்து துளசி இலையை சமர்ப்பிப்பவர், ஒரு லட்சம் அஸ்வமேத யாகத்தை நடத்திய பலனை பெறுவர். துவாதசி தினத்தில் பகவான் துளசியுடன் வசிக்கிறார். துளசி இலைகளை பெளர்ணமி,
அமாவாசை, துவாதசி, சூர்ய
சங்கராந்தி, உச்சி மதியம், இரவு,
சந்த்யா வேளைகளில் பறிக்கக்
கூடாது. பிரதிஷ்டை செய்யப்பட்ட
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(