#சரஸ்வதி_விளாகம் சரஸ்வதி கோவில் திருத்தல வரலாறு. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் சரஸ்வதி விளாகம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீவித்யா நாயகி உடனாகிய ஸ்ரீ வித்யாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சரஸ்வதிதேவி தனி சன்னதியில் எழுந்தருளி
பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தலத்தில் சரஸ்வதிதேவி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து ஆயக்கலைகள் அறுபத்தி நான்கும் கிடைக்க வேண்டி தவம் இருந்து அருள் பெற்றதாக தல புராணம் தெரிவிக்கிறது. இதனால் இவ்வூர் சரஸ்வதி விளாகம் என்று அழைக்கப்படுவது உடன் சரஸ்வதி தேவியால் ஸ்தாபிக்கப்
பட்ட சுவாமி ஸ்ரீவித்யாரண்யஸ்வரர் அம்பாள் ஸ்ரீவித்யா நாயகி என்ற திருநாமத்தோடு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் சரஸ்வதி பூஜை சிவராத்திரி நவமி திதி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் கலந்துகொண்டு சுவாமி, அம்பாள் மற்றும் சரஸ்வதி தேவியை வழிபட்டால் ஞானமும்,
சிறந்த கல்வியும் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் சரஸ்வதி பூஜையின் போது வருடம் தோறும் சிறப்பு வித்யார்த்தி ஹோமம் நடத்தப்பட்டு குழந்தைகளுக்கு கல்வி ஞானம் சிறக்க வித்யாரம்பம் செய்து வைக்கப்படுகிறது மேலும் சுவாமி, அம்பாள் மற்றும் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு
அபிஷேக, அலங்காரம் நடை பெறுகிறது தொடர்ந்து மகா தீபாராதனை நடத்தப்பட்டு, குழந்தைகள் கல்வியில் சிறக்க வித்தியாரம்பம் செய்து வைக்கப்படுகிறது. அப்போது குருக்கள் வேத மந்திரம் ஓத, ஓதுவார்கள் தேவாரம் இசைக்க, குழந்தைகள் அரிசி மணிகளில் எழுத, அவர்களது நாவில் கோயில் அர்ச்சகர் தேன் கொண்டு
தமிழின் முதல் எழுத்தான 'அ' எழுதினார். பின்னா், குழந்தைகள் கல்வியில் சிறக்கும் வகையில் தா்ப்பை புல்லில் தேனை தொட்டு மந்திரம் ஓதி குழந்தையின் நாவில் எழுதியும், அரிசி போன்ற உணவு தானியத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதவும் பழக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சாா்பில்
கோயில் அா்ச்சகா் இங்கு செய்கிறார். உலகத்திலேயே சரஸ்வதி தேவியால் ஸ்தாபிக்கப்பட்ட சிவாலயம் இங்கு மட்டுமே உள்ளது
ஆலயம் செல்லும் வழி:மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கே 2கிமீ தொலைவிலுள்ளது
தொடர்புக்கு: L. ராஜாராமன்
கொன்னகாட்டு படுகை
செல்: 9976868604
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#நரசிம்ஹ_அவதாரம் திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும். எல்லா இடங்களிலேயும் எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்துவது மகாவிஷ்ணுவின் நரசிம்ம அவதாரம். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம். நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம்.
நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர். நரசிம்மனின் தேஜஸ் காயத்ரி மந்திரத்துக்குள்ளே அவர் இருப்பதாக ஐதீகம். திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு
அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப் படுவதில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்களுக்கு அவர் மிக விருப்பமானவராக இருக்கிறார். நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண்டும் அளவிட முடியாது! #அடித்த_கை_பிடித்த_பெருமாள் என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
பாண்டுரங்கனின் மீது மிகுந்த அன்பு கொண்டவர் யோகி பிரேமானந்தர். அவருடைய வழக்கமான வேலை விடிகாலை எழுந்ததும் நதிக்கு செல்வது, நீராடுவது, விட்டலனுக்கு பிரார்த்தனை, பிறகு ஷோடசோபசாரம் செய்து 700 நமஸ்காரம் பண்ணுவது. நம்மால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது!அதற்குப்
பிறகு பகவத் கீதை பாராயணம். மறுபடியும் நமஸ்காரம். பிறகு தான் இலையில் சோறு. அப்படியொரு பக்தி! அவர் மனத்தில் பாண்டுரங்கன் சதா சர்வகாலமும் இருந்தான். இன்பம் தந்தான். ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு பட்டுத்துணி வியாபாரி வந்தான். விட்டலன் கோவிலுக்கு சென்றான். அந்த நேரம் பார்த்து திடீரென்று
விடாத இடி இடித்து பெரிய மழை. வானம் பொத்துக்கொண்டது. சள சள வென்று பெய்த மழையில் தரை மண்ணெல்லாம் சேரும் சகதியுமாகியது. வியாபாரியின் பார்வை, தூரத்தில் இதை எல்லாம் லட்சியம் செய்யாத ஒரு சாமியார் மேல் சென்றது. அது தான் பிரேமானந்தர். பாண்டுரங்கனை நோக்கி கோவில் வாசலில் நமஸ்காரம் செய்து
#கனவு_உண்மையா? #ஶ்ரீமத்ராமானுஜர் தூங்கும் போது பல கனவுகள் வருகின்றன. ஆண்டாள், ஆழ்வார்கள் கனவில் பெருமாள் வந்ததாக சொல்கிறார்கள். நம்மில் சிலருக்கு தெய்வங்கள் கனவில் காட்சி கொடுக்கிறார்கள். பல சமயம் கெட்ட கனவுகள் வருகின்றன. நல்ல கனவுகளும் தான். கனவுகள் உண்மையா என்பது பற்றி
ஶ்ரீ
ராமானுஜர் தெளிவு படுத்தி இருக்கிறார். #கனவு என்பது அவஸ்தை (அனுபவம்) தானே! அதை எப்படி உண்மை என்று நம்ப முடியும் என்று நினைக்கிறோம். ராமானுஜர் தனது #ஸ்ரீபாஷ்யத்தில் "விழித்து இருக்கும் போது நாம் காணும் காட்சிகள் எந்த அளவுக்கு சத்தியமோ அது போல, கனவில் காணும் காட்சிகளும் சத்தியமே”
என்கிறார். ஒரு நாள், ஒருவன் திடீரென்று காக்கையாகி விட்டான். காகம் போல கரைந்து கொண்டு பறக்கிறான். தன் வீட்டை பார்த்ததும், வாசல் வழியாக நுழைய முயன்றான். அவன் மனைவியே "சூ சூ” என்று துரத்தி விட்டாள். "ஐயோ! என் நிலைமை இப்படி ஆகி விட்டதே!" என்று புலம்பி அழ, விழித்துக் கொண்டு விட்டான்.
#MahaPeriyava
This man was the miser of all misers! He was of course a wealthy man but would not spend a penny. He had come for Sri Maha Periyava's darshan. With his right hand over his mouth, he started speaking emotionally. I have blood pressure and diabetes for a long time.
Now, I have been diagnosed with cancer too. I am suffering a lot. Periyava must please suggest a parikaram (remedy).
"Will you do as I say" asked Periyava.
"Certainly" said the man.
"It might be difficult.”
"Never mind. I want to just get rid of these diseases. I will do whatever
Periyava instructs. All I want is to be cured of this BP, diabetes and cancer”saying this, he wiped his eyes. Generally, Maha Periyava had compassion towards everyone for no reason at all, and now, this man was in tears. Could Periyava let him down?
Periyava said, "In the well,
#நற்சிந்தனை
சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்ளும்.
சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும் போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக் கொள்கிறது. நன் முறையில் முன்னேற விரும்பினால் நம் பக்கத்தில் இருப்பவர் யார் என்பதில் அதிக கவனம்
செலுத்த வேண்டும். சிலர் எப்பொழுதும் நடக்கும் அனைத்து கெட்டதையும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். எந்தச் செயலை செய்ய தொடங்கும் போதும் அதைரியப் படுத்துவார்கள். அவர்களிடம் இருந்து தள்ளியே இருக்க வேண்டும். அதே சமயம் இடித்துரைக்க, எடுத்து சொல்லத் தக்கவர்களை நம் அருகில் வைத்துக் கொள்ளத்
தவறக் கூடாது. ஆமாஞ்சாமிகளை மட்டுமே பக்கத்தில் வைத்துக் கொண்டதால் வீழ்ந்தவர்கள் பலர். மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள், அரசியல்வாதிகள், தங்கள் பக்கத்தில் இருந்த தவறானவர்களால் வீழ்ந்து இருக்கிறார்கள். நள்ளிரவில் 120 கி.மீ வேகத்தில் கார் சென்று கொண்டு இருந்தது. காரில்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்#துளசி எந்த வீட்டில் காலையிலும் மாலையிலும் துளசி தேவியை வணங்கி வருகிறார்களோ அங்கு யமதேவன் நுழைய முடியாது,
கெட்ட ஆவிகளும் அண்டுவதில்லை.
நாள்தோறும் தீபமேற்றி பூஜிப்பவர் நூற்றுக் கணக்கான யாகம் செய்ததின் பலனை அடைவர். துளசியின் காற்று பட்டாலும் துளசியை வலம் வந்து
வணங்கினாலும் எல்லா பாபங்களும்
நீங்கும். தொடுபவர்கள் புனிதம் அடைகிறார்கள். துளசியின் வேர்ப்பக்கம் உள்ள தூசியை நெற்றியிலிடுவது மாபெரும் கவசமாகும். பகவான் ஹரிக்கு ஸமர்ப்பிக்கப் பட்ட துளசி தீர்த்தத்தை, பக்தியுடன் ஏற்பவர் கங்கையில் நீராடிய பலனை அடைவர். பகவானது தாமரைப் பாதங்களில்
சந்தனம் கலந்து துளசி இலையை சமர்ப்பிப்பவர், ஒரு லட்சம் அஸ்வமேத யாகத்தை நடத்திய பலனை பெறுவர். துவாதசி தினத்தில் பகவான் துளசியுடன் வசிக்கிறார். துளசி இலைகளை பெளர்ணமி,
அமாவாசை, துவாதசி, சூர்ய
சங்கராந்தி, உச்சி மதியம், இரவு,
சந்த்யா வேளைகளில் பறிக்கக்
கூடாது. பிரதிஷ்டை செய்யப்பட்ட