#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
பாண்டுரங்கனின் மீது மிகுந்த அன்பு கொண்டவர் யோகி பிரேமானந்தர். அவருடைய வழக்கமான வேலை விடிகாலை எழுந்ததும் நதிக்கு செல்வது, நீராடுவது, விட்டலனுக்கு பிரார்த்தனை, பிறகு ஷோடசோபசாரம் செய்து 700 நமஸ்காரம் பண்ணுவது. நம்மால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது!அதற்குப்
பிறகு பகவத் கீதை பாராயணம். மறுபடியும் நமஸ்காரம். பிறகு தான் இலையில் சோறு. அப்படியொரு பக்தி! அவர் மனத்தில் பாண்டுரங்கன் சதா சர்வகாலமும் இருந்தான். இன்பம் தந்தான். ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு பட்டுத்துணி வியாபாரி வந்தான். விட்டலன் கோவிலுக்கு சென்றான். அந்த நேரம் பார்த்து திடீரென்று
விடாத இடி இடித்து பெரிய மழை. வானம் பொத்துக்கொண்டது. சள சள வென்று பெய்த மழையில் தரை மண்ணெல்லாம் சேரும் சகதியுமாகியது. வியாபாரியின் பார்வை, தூரத்தில் இதை எல்லாம் லட்சியம் செய்யாத ஒரு சாமியார் மேல் சென்றது. அது தான் பிரேமானந்தர். பாண்டுரங்கனை நோக்கி கோவில் வாசலில் நமஸ்காரம் செய்து
கொண்டிருந்தார். ஒன்றா இரண்டா. வழக்கமான 700 ஆயிற்றே. அடடா என்ன பக்தி இவருக்கு! மழை, சேர் சக்தி எதையுமே லட்சியம் செய்யாமல் சந்தோஷத்தோடு நமஸ்காரங்கள் விடாமல் பண்ணிக் கொண்டு இருக்கிறாரே என்று அதிசயித்தார் வியாபாரி. மழை விட்டது. கையில் வைத்திருந்த மூட்டையிலிருந்து ஒரு நல்ல விலை
உயர்ந்த பட்டு வேஷ்டியை எடுத்த வியாபாரி அதை யோகியிடம் கொடுத்தான். சுவாமி, தாங்கள் இதை உடுத்திக் கொள்ளுங்கள் என்றான். நமஸ்காரம் பண்ணினான். அவர் பார்த்தார். தலையை ஆட்டினார்.
எனக்கெதற்கு இதெல்லாம்? கிழிசல் துணி ஏதாவது இருந்தால் கொடு. அது போதுமே. நான் அன்றாடம் பிக்ஷை எடுத்து அதில்
கிடைப்பதை உண்பவன். அது தொந்தரவு இல்லாமல் என்னுடைய வேலையை செய்ய உதவும் என்றார் அவர். இல்லை சுவாமி, இது நீங்கள் உடுத்திக்கொள்ள வேண்டும் என்று
எனக்கு ஆசை என்றார் வியாபாரி. தப்பு அப்பனே. இந்த பட்டு வேஷ்டியை பாண்டுரங்கனுக்கு சாற்றினால் அவனை கண்ணாரப் பார்க்கலாம். அவன் உனக்கு சர்வ
மங்களமும் தருவான் என்றார். வியாபாரி காதில் இது ஏறவில்லை. பக்தி மிகுதியால், தானே அவர் இடுப்பில் அந்த பட்டு வேஷ்டியை கட்டிவிட்டான். அந்த பள பள துணியை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டார் பிரேமானந்தா. நமஸ்காரம் பண்ணும் போது மண் பட்டு அழுக்காகாமல் பார்த்து கொள்வது கஷ்டமாக இருந்தது.
வழக்கமாக சுலபமாக சந்தோஷத்தோடு பண்ணும் நமஸ்காரம் இப்போது தடை பட்டது. வெயில் ஏறியது. வியர்த்துக் கொட்டியது. பசியை அடக்கிக் கொண்டு பண்ண வேண்டிய நமஸ்காரங்களை பண்ணினார். முடியவில்லை. எண்ணம் பட்டு வேஷ்டி மீது சென்றது இடைஞ்சலாக இருந்தது. நமஸ்காரம் முடியாமல் சாப்பாடு கிடையாதே! வியர்த்து
களைத்தார். எனக்கு இன்று ஏன் இப்படி ஒரு தண்டனை? புரியவில்லையே? அடேடே எப்படிப்பட்ட சர்வ முட்டாள் நான்? இந்த பட்டு வேஷ்டி அல்லவோ என்னை நிலை குலைய வைத்து விட்டது. காரியம் கெட்டு குட்டிச் சுவராகி விட்டதே! பூரண சந்திரனை ராகு பிடித்து கவ்வியது போல் இந்த வேஷ்டி என்னை விழுங்கி விட்டதே!
எனக்கும் விஷ்ணுவுக்கும் இடையே ஒரு வேஷ்டியா எதிரியானது? இந்த வேஷ்டிக்கு இடம் கொடுத்த இந்த உடம்புக்கு ஒரு சரியான தண்டனை உடனே கொடுத்தாக வேண்டுமே என்ன செய்யலாம் என்று யோசிக்கும் போது, சரி காட்டுக்கு செல்வோம். நிறைய காய்ந்த கட்டைகளை தீ மூட்டி தீக்குளித்தால் தான் சரியாகும். இல்லை
ஏதாவது புண்ய நதியில் மூழ்கி இந்த உடலை விடலாமா, விட்டலன் அப்போதுதான் மன்னிப்பான் என்று கோவில் வாசலில் அமர்ந்து எதைச் செய்யலாம் என்று யோசித்தார். அந்தப் பக்கமாக ஒரு ரெட்டை மாட்டு வண்டிக்காரன் வந்தான். அவனை நிறுத்தினார். உனக்கு ஒரு விலை உயர்ந்த இந்த பட்டு வேஷ்டி தரேன். உன் ரெட்டை
மாட்டையும் அவற்றை பிணைத்திருக்கும் கழுத்தில்
இருக்கிற கட்டையோடு தருகிறாயா என்று கேட்டார். தன் தொத்தல் மாட்டால் இவ்வளவு பெரிய வருமானம் கிடைக்கும் என்று அவன் எதிர் பார்க்கவில்லை. ஆச்சர்யத்தோடு ஒப்புக்கொண்டான். என் கால் இரண்டையும் இந்த கட்டையில் கட்டு என்றார். அவன் யோசிக்க, சொன்னதை
செய் என்றார் யோகி. கால்கள் இரண்டையும் ரெண்டு மாட்டுக்கும் இடையே கட்டையில் பிணைத்தான். மாட்டை விரட்டு என்றார். சுளீர் என்று சாட்டையடி விழுந்ததும் ரெண்டு மாடுகளும் ஓடின. இடையே கட்டையில் யோகி புரண்டு கொண்டு தொடர்ந்தார். மாடுகள் தலைதெறிக்க ஓடின. நிற்கவே இல்லை. யோகியின் உடல் கிழிந்தது
ரத்தம் ஆறாக பெருக சதை பிய்ந்து கொண்டே வந்து கடைசியில் வெறும் எலும்புகள் மட்டும் தேயும் நிலை. அவர் உயிர் கொஞ்சம் இன்னும் ஊசலாடிக் கொண்டிருந்தது. மனம் பூரா #விட்டலா என்றே நினைவில் ஆழ்ந்தது. மாட்டுக்காரன் ஓடி வந்தான். அவன் கண்களில் நீர் ஆறாக வழிந்தது. என்ன காரியம் செய்தீர்கள்? இதை
ஏன் என்னைச் செய்யச் சொன்னீர்கள் என்றான். அவர் கடைசி நிமிஷ நினைவில் இருந்தார். மாட்டுக்காரன் முகம் லேசாக தெரிந்தது. பேச்சு வரவில்லை. மூச்சு கொஞ்சம் கொஞ்சமாக அடங்க முயன்றது.
காலை கட்டையில் இருந்து அவிழ்த்தான் மாட்டுக்காரன். அவரை விடுவித்து மடியில் போட்டு புண்களையும் ரணங்களையும்
அந்த பட்டு வேஷ்டியாலேயே துடைத்தான். ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று மீண்டும் அவன் அவரைப் பார்த்து கேட்டபோது, அவன் கண்களில் கண்ணீர் ஆறாக இன்னும் ஓடிக் கொண்டிருந்தது. யோகி அவனைப் பார்த்தார். அவன்.... அவன்... விட்டலா .. நீயா நீயா? என்றார். அவன் அவரை அணைத்துக் கொண்டான்.
“என்னுடன் வாருங்கள்" என்று அழைத்த அவனோடு வைகுண்டம் ஏகினார் யோகி பிரேமானந்தர்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாபெரியவா#தெய்வத்தின்குரல்#கனகதாரா_ஸ்தோத்திரம்#ஆதிசங்கரபகவத்பாதாள் “ஆசாரியாள் மஹாலக்ஷ்மியைத் துதிக்கிறபோது ஆகாசத்திலிருந்து அசரீரி கேட்டது. ‘இந்த ஏழைப் பிராமண தம்பதி எத்தனையோ ஜன்மங்களாகப் பாவம் செய்தவர்கள். அதற்கு தண்டனை தான் தாரித்திரியம். பாவம் தொலைகிற காலம் வருகிற வரையில்
இவர்களுக்குச் சம்பத்தைத் தருவதற்கில்லை’ என்றது அசரீரி. உடனே ஆசாரியாள், ‘இவர்கள் ஜன்மாந்தரங்களாகச் செய்த பாவம் இப்போது இருப்பதைவிடக்கூட அதிகமாக வேண்டுமானாலும் இருக்கட்டும்; இத்தனை அன்போடு அகத்தில் இருந்த ஒரே பக்ஷ்யமான நெல்லிக் கனியையும் எனக்கு இவள் போட்டிருக்கிறாளே. இந்த அன்பும்
தியாகமும் எத்தனை புண்ணியமானவை! சாப்பாட்டுக்கே இல்லாத இவள் எனக்குப் பிக்ஷை போட்ட பலன் எத்தனை பாவத்தையும் சாப்பிட்டு விடுமே!’ என்றார். ‘அம்மா, மஹாலக்ஷ்மி! இவளுக்கு இருக்கிற மாதிரி உனக்கும் நிறைய அன்பு இருக்கிறதே! அதனால் ரொம்பக் கண்டிப்போடு நியாயம் மட்டும் வழங்காமல், அன்பைக் காட்டி
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு காட்டில் கரையான்கள் ஒன்று கூடி அதற்கான இடத்தை தேர்வு செய்து, புற்றுக்கு உகந்த மண்ணை எடுத்து புற்றை கட்டத் தொடங்கின. அந்த இடத்திற்கு ஒரு பாம்பு வந்தது. கரையான்கள் கடுமையாக வேலை செய்வதைப் பார்த்தது. தினம் அந்த இடத்திற்கு வருவதும், வேடிக்கை பார்ப்பதும்
வழக்கமாக கொண்டிருந்தது பாம்பு கரையான்கள் புற்றைக் கட்டி முடித்தன. பாம்பு, “கரையான்களே! நீங்கள் கட்டிய புற்று அருமையாக இருக்கிறது. நான் ஒருமுறை உள்ளே சென்று பார்க்கட்டுமா?” என்று கேட்டது. கரையான்களும் சம்மதித்தன. பாம்பு புற்றுக்குள்ளே சென்று பார்த்தது. பாம்பு வெளியே வரும் என்று
கரையான்கள் காத்திருந்தன. அது வெளியே வரவில்லை. கரையான்கள் வெளியிலிருந்து பாம்பை கூப்பிட்டன. “புற்று வசதியாக இருக்கிறது. இனி இது என்னுடையது. வேண்டுமென்றால், நீங்கள் இன்னொரு புற்றை கட்டிக் கொள்ளுங்கள். நீங்கள் அனைவரும் இங்கிருந்து கிளம்புங்கள், இல்லை என்றால் என் விஷத்துக்கு இரை
#சனிபகவான் கோள்களில் பகவான் என்று சேர்த்து அழைக்கப்படும் பெருமை சனீஸ்வரருக்கு மட்டுமே உள்ளது. ஏனென்றால் அவர் நீதிமான் ஆவார். யாரெல்லாம் மற்றவர்களுக்கு துன்பங்கள் தருகிறார்களோ அவர்களை சனி பகவான் தண்டிக்காமல் விடுவதில்லை. அவரவர் வாழ்க்கையில் சனி தசா நடக்கும் போது, அஷ்டம சனி, ஏழரை
சனி காலத்தில் சனிபகவான் பாடம் புகட்டுவார். தவறு செய்து விட்டோம், கர்ம வினைப்படி துன்பத்தை அனுபவிக்கும் போது நமக்கு புத்தி வந்து அதிலிருந்து விடுபட துடிக்கிறோம். அப்போது என்ன செய்ய வேண்டும்?
நமச்சிவயா என்றும், ராம ராம என்றும் தெய்வ நாமம் உச்சரிப்பவர்களை சனி பாதிப்பதில்லை.
ஆஞ்சநேயரை வணங்குவோரையும் சனிபகவான் பாதிப்பதில்லை.
பாவ வினைகளுக்கு பரிகார மருந்து பிரதோஷ வழிபாடு. அதை தடையின்றி செய்பவர்களை அவர் தண்டிப்பதில்லை.
சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன பெருமாள் வழிபாடு செய்வதும் சனி தோஷ பரிகாரங்களில் ஒன்று ஆகும்.
சனிக்கிழமை காக்கைக்கு எள்ளன்னம்
#சைவம்#வைணவம்#ஹிந்துமதம் #மகாபெரியவா காஞ்சிக்கு பக்கத்தில் கீழம்பி என்ற கிராமம். பெரியவா வயல் வரப்பில் நடந்து வந்து கொண்டிருந்தார். அவரோடு பிரதிவாதி பயங்கரம் உ.வே.அண்ணங்கராச்சார்யாரும் நடந்து வந்தார். அவர் பெரிய வைஷ்ணவ தலைவர். வைஷ்ணவ சம்பிரதாயங்களை துளிகூட குறைவில்லாமல்
அனுஷ்டிப்பவர். எல்லாவற்றுக்கும் மேல், பெரியவாளிடம் ஹிமாயலய பக்தி! வரப்பின் மேல் தட்டுத் தடுமாறி நடந்து கொண்டு இருந்த போது, அண்ணா ஸ்வாமி கைகளைக் கூப்பிக் கொண்டு “தேவரீர், ஒரு நிமிஷம் அப்பிடியே நிக்கணும்” என்று வேண்டினார். பைநாகப் பாயை சுருட்டிக் கொண்டு கணிகண்ணன் பின்னால் போன
ஜகன்னாதன் பக்தரின் வேண்டுகோளை உடனே நிறைவேற்ற அப்படியே நின்றார். வரப்பை ஒட்டி வாய்க்காலுக்கு போய்க் கொண்டிருந்த ஜலத்தை, இரு கைகளாலும் அள்ளி பெரியவாளின் திருப்பாதங்களில் வார்த்தார். கொஞ்சம் கூட அசையாமல் நின்றார் பெரியவா. பாத தீர்த்தத்தை எடுத்து தன் தலையில் ப்ரோக்ஷணம் பண்ணிக் கொண்டு
#தாமோதரன் விஷ்ணுவின் பன்னிரு நாமங்களில் பன்னிரண்டாவது பெயராக வருவது இந்த அதி அற்புதமான திருநாமம். தாம உதரன்’ என்றால் ‘எல்லாவற்றுக்கும் இருப்பிடமான வயிற்றைக் கொண்டவன். அதாவது எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பவன்’ என்பது பொதுவான பொருள். வெண்ணெய் திருடுகிறாயா? உன்னைக்
கட்டிப் போடுகிறோன் பார் என்று யசோதை பால கிருஷ்ணனைப் பிடித்துக் கயிற்றால் கட்டிப் போடப் பார்த்தாள். முடியவில்லை. அவள் எத்தனை கயிறுகளைச் சேர்த்து ஒட்டுப் போட்டுக் கொண்டே போனாலும் தன் சின்ன வயிற்றைச் சுற்றிக் கட்டுவதற்குப் போதாதபடி மாயாஜாலம் செய்தான். பிறகு அவள் வேர்த்து
விருவிருத்துப் போனதைப் பார்த்துப் பரிதாபப்பட்டுத் தானாகவே கயிற்றிலே கட்டுப்பட்டான், அதனால் ‘தாமோதரன்’ என்று பேர் ஏற்பட்டது. உதர என்றால் வயிறு. தாம என்றால் இருப்பிடம் என்றும் ஒரு பொருள் உண்டு. உலகத்தனைத்துக்கும் அவனுடைய வயிறுதான் சொந்த இருப்பிடம். எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்
#நரசிம்ஹ_அவதாரம் திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும். எல்லா இடங்களிலேயும் எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்துவது மகாவிஷ்ணுவின் நரசிம்ம அவதாரம். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம். நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம்.
நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர். நரசிம்மனின் தேஜஸ் காயத்ரி மந்திரத்துக்குள்ளே அவர் இருப்பதாக ஐதீகம். திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு
அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப் படுவதில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்களுக்கு அவர் மிக விருப்பமானவராக இருக்கிறார். நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண்டும் அளவிட முடியாது! #அடித்த_கை_பிடித்த_பெருமாள் என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது