#நரசிம்ஹ_அவதாரம் திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும். எல்லா இடங்களிலேயும் எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்துவது மகாவிஷ்ணுவின் நரசிம்ம அவதாரம். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம். நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம்.
நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர். நரசிம்மனின் தேஜஸ் காயத்ரி மந்திரத்துக்குள்ளே அவர் இருப்பதாக ஐதீகம். திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு
அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப் படுவதில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்களுக்கு அவர் மிக விருப்பமானவராக இருக்கிறார். நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண்டும் அளவிட முடியாது! #அடித்த_கை_பிடித்த_பெருமாள் என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது
பக்தரகள் உரிமையோடு அடித்து கேட்ட மறு வினாடியே உதவுபவன் என்று இதற்கு பொருள். மகாலட்சுமிக்கு பத்ரா என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் நரசிம்மனை பத்ரன் என்றும் சொல்வார்கள். பத்ரன் என்றால் மங்களமூர்த்தி என்று அர்த்தம். நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம்,
நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு. நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத்திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது. இரண்யகசிபுவை வதம் செய்த போது எழுந்த நரசிம்மரின் சிம்ம கர்ஜனை 7 உலகங்களையும் கடந்து சென்றதாக குறிப்புகள்
உள்ளன. நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி, உயர் நிலையைப் பெற்றன. நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவருக்கு 8
திசைகளிலும் புகழ் கிடைக்கும். ராமாயணம், மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள், உப புராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. நரசிம்ம அவதாரத்தின் முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது. திருத்தக்கதேவர் தனது சீவக சிந்தாமணியில், ‘இரணியன்பட்ட தெம்மிறை எய்தினான்’
என்று நரசிம்ம அவதாரம் பற்றி குறிப்பிட்டுள்ளார். நரசிம்மருக்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் லட்சுமி நரசிம்மர் வடிவத்தையே பக்தர்கள் அதிகம் வழிபடுகிறார்கள். பகவான் பல அவதாரங்களை எடுத்தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்மரிடத்திலேதான் போய் முடியும். சிவனை கடவுளாக ஏற்ற
ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார். வட இந்தியாவை விட தென் இந்தியாவில்தான் அதிக நரசிம்மர் ஆலயங்கள் உள்ளன. நங்கநல்லூர் நரசிம்மர் ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் இதை 1974-ம்
ஆண்டு கண்டுபிடித்து வெளிப் படுத்தினார்கள். சிங்க பெருமாள் கோவில், மட்டப்பள்ளி, யாதகிரி கட்டா, மங்களகிரி ஆகிய தலங்களில் நரசிம்மர் சன்னதிகள் குகைக் கோவிலாக உள்ளன. வேதாத்ரியில் உள்ள யோக நரசிம்மர் இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டிருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு செல்பவர்கள் இவரை வணங்கி
சென்றால் நல்ல பலன் கிடைக்கும். வாடபல்லி தலத்தில் உள்ள நரசிம்மரின் மூக்குக்கு எதிரில் ஒரு தீபம் ஏற்றப்படும். அந்த தீபம் காற்றில் அசைவது போல அசையும், நரசிம்மரின் மூச்சுக் காற்று பட்டு அந்த தீபம் அசைவதாகக் கருதப்படுகிறது. அதே சமயத்தில் நரசிம்மரின் கால் பகுதியில் ஏற்றப்படும் தீபம்
ஆடாமல் அசையாமல் நின்று எரியும். மட்டபள்ளியிப் உள்ள நரசிம்மரை வணங்கினால் மன சஞ்சலங்கள் நீங்கும். தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம் மற்றும் நெல்லை அருகே கீழப்பாவூரில் அமைந்துள்ள நரசிம்மர் தலங்கள் தனித்துவம் கொண்டவை. ஒரு காலத்தில் இந்த 2 ஆலயங்களில் இருந்தும் சிங்கம் கர்ஜிப்பது போல நரசிம்மர்
ஆவேசமாக குரல் எழுப்பியதாக புராணங்களில் பதிவுகள் உள்ளன. விழுப்புரம், அந்திலியில், கருடனுக்கு காட்சியளித்த நரசிம்மரை தரிசிக்கலாம். ஆண்டு முழுவதும் சூரிய ஒளி இந்த நரசிம்மமூர்த்தியின் மீது படர்வது அதிசயமான நிகழ்வாகும். காஞ்சிபுரம், அழகிய சிங்கப்பெருமாள் கோயிலில் நரசிம்மருக்கு எதிரில்
வீற்றிருக்கும் கருடாழ்வார், நரசிம்மரின் உக்கிரம் தாங்காது சற்றே தலை சாய்த்த நிலையில் காணப்படுகிறார். திருநெல்வேலி, மேலமாடவீதியில் உள்ள நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்மரின் தோளை அணைத்தபடி மகாலட்சுமி தாயார் வீற்றுள்ளார். பண்ருட்டிக்கு அருகில் உள்ள திருவதிகையில் சரநாராயணப் பெருமாள்
ஆலயத்தில், திருவக் கரையில் வக்ராசுரனை அழித்த களைப்பு தீர, சயன நிலையில் நரசிம்மரை தரிசிக்கலாம். தாம்பரம்-செங்கல்பட்டு பாதையில் உள்ள சிங்கப்பெருமாள் ஆலயத்தில் பிரமாண்டமான நரசிம்மமூர்த்தியை தரிசிக்கலாம். கடன்கள் தீர, வழக்குகளில் வெற்றி பெற, இவர் அருள்கிறார். ஆலயத்தில் உள்ள அழிஞ்சில்
மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்வோருக்கு குழந்தை பாக்கியம் கிட்டுகிறது. சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் முதல் பூஜை அழகியசிங்கர் என போற்றப்படும் யோக நரசிம்மருக்கே. அவர் எப்போதும் யோகத்திலேயே இருப்பதால் ஓசையால் அவர் யோகம் கலையக் கூடாது என்பதற்காக அவர்
கருவறை கதவுகளில் உள்ள மணிகளுக்கு நாக்குகள் இல்லை.
நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது ஆந்திரா என்றாலும் நரசிம்மர் சாந்தமானது தமிழகத்தில்தான்.
தமிழ்நாட்டில் உக்கிர நரசிம்மரை மூலவராக கொண்ட ஒரே இடம் புதுச்சேரி அருகே உள்ள சிங்கிரி என்ற ஊரில் உள்ள ஆலயமாகும்.
சோளிங்கரில் உள்ள நரசிம்மர்
கார்த்திகை மாதம் கண் திறந்து பார்ப்பதாக ஐதீகம். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள மங்களகிரியில் பானக நரசிம்மர் உள்ளார். இவர் பானகம் அருந்துவதை கண்கூடாக பார்க்கலாம். நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை
நிவேதனமாக படைத்து வணங்க வேண்டும். நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.
நரசிம்மரை வழிபடும் போது ஸ்ரீநரசிம்ஹாய நம என்று சொல்லி ஒரு பூவைப் போட்டு வழிபட்டாலே எல்லா வித்தையும் கற்ற பலன் உண்டாகும். நரசிம்மரை ம்ருத்யுவேஸ் வாகா என்று கூறி வழி
பட்டால் மரண பயம் நீங்கும். தீய சக்தியில் இருந்து நம்மளை காக்கும் தெய்வமான ஸ்ரீ நரசிம்ம பகவானே மனதார வழிபடுவோம். வாழ்வில் வளமும், நலமும் பெறுவோம்.
ஜெய் ஜெய் நரசிம்மா
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாபெரியவா#தெய்வத்தின்குரல்#கனகதாரா_ஸ்தோத்திரம்#ஆதிசங்கரபகவத்பாதாள் “ஆசாரியாள் மஹாலக்ஷ்மியைத் துதிக்கிறபோது ஆகாசத்திலிருந்து அசரீரி கேட்டது. ‘இந்த ஏழைப் பிராமண தம்பதி எத்தனையோ ஜன்மங்களாகப் பாவம் செய்தவர்கள். அதற்கு தண்டனை தான் தாரித்திரியம். பாவம் தொலைகிற காலம் வருகிற வரையில்
இவர்களுக்குச் சம்பத்தைத் தருவதற்கில்லை’ என்றது அசரீரி. உடனே ஆசாரியாள், ‘இவர்கள் ஜன்மாந்தரங்களாகச் செய்த பாவம் இப்போது இருப்பதைவிடக்கூட அதிகமாக வேண்டுமானாலும் இருக்கட்டும்; இத்தனை அன்போடு அகத்தில் இருந்த ஒரே பக்ஷ்யமான நெல்லிக் கனியையும் எனக்கு இவள் போட்டிருக்கிறாளே. இந்த அன்பும்
தியாகமும் எத்தனை புண்ணியமானவை! சாப்பாட்டுக்கே இல்லாத இவள் எனக்குப் பிக்ஷை போட்ட பலன் எத்தனை பாவத்தையும் சாப்பிட்டு விடுமே!’ என்றார். ‘அம்மா, மஹாலக்ஷ்மி! இவளுக்கு இருக்கிற மாதிரி உனக்கும் நிறைய அன்பு இருக்கிறதே! அதனால் ரொம்பக் கண்டிப்போடு நியாயம் மட்டும் வழங்காமல், அன்பைக் காட்டி
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு காட்டில் கரையான்கள் ஒன்று கூடி அதற்கான இடத்தை தேர்வு செய்து, புற்றுக்கு உகந்த மண்ணை எடுத்து புற்றை கட்டத் தொடங்கின. அந்த இடத்திற்கு ஒரு பாம்பு வந்தது. கரையான்கள் கடுமையாக வேலை செய்வதைப் பார்த்தது. தினம் அந்த இடத்திற்கு வருவதும், வேடிக்கை பார்ப்பதும்
வழக்கமாக கொண்டிருந்தது பாம்பு கரையான்கள் புற்றைக் கட்டி முடித்தன. பாம்பு, “கரையான்களே! நீங்கள் கட்டிய புற்று அருமையாக இருக்கிறது. நான் ஒருமுறை உள்ளே சென்று பார்க்கட்டுமா?” என்று கேட்டது. கரையான்களும் சம்மதித்தன. பாம்பு புற்றுக்குள்ளே சென்று பார்த்தது. பாம்பு வெளியே வரும் என்று
கரையான்கள் காத்திருந்தன. அது வெளியே வரவில்லை. கரையான்கள் வெளியிலிருந்து பாம்பை கூப்பிட்டன. “புற்று வசதியாக இருக்கிறது. இனி இது என்னுடையது. வேண்டுமென்றால், நீங்கள் இன்னொரு புற்றை கட்டிக் கொள்ளுங்கள். நீங்கள் அனைவரும் இங்கிருந்து கிளம்புங்கள், இல்லை என்றால் என் விஷத்துக்கு இரை
#சனிபகவான் கோள்களில் பகவான் என்று சேர்த்து அழைக்கப்படும் பெருமை சனீஸ்வரருக்கு மட்டுமே உள்ளது. ஏனென்றால் அவர் நீதிமான் ஆவார். யாரெல்லாம் மற்றவர்களுக்கு துன்பங்கள் தருகிறார்களோ அவர்களை சனி பகவான் தண்டிக்காமல் விடுவதில்லை. அவரவர் வாழ்க்கையில் சனி தசா நடக்கும் போது, அஷ்டம சனி, ஏழரை
சனி காலத்தில் சனிபகவான் பாடம் புகட்டுவார். தவறு செய்து விட்டோம், கர்ம வினைப்படி துன்பத்தை அனுபவிக்கும் போது நமக்கு புத்தி வந்து அதிலிருந்து விடுபட துடிக்கிறோம். அப்போது என்ன செய்ய வேண்டும்?
நமச்சிவயா என்றும், ராம ராம என்றும் தெய்வ நாமம் உச்சரிப்பவர்களை சனி பாதிப்பதில்லை.
ஆஞ்சநேயரை வணங்குவோரையும் சனிபகவான் பாதிப்பதில்லை.
பாவ வினைகளுக்கு பரிகார மருந்து பிரதோஷ வழிபாடு. அதை தடையின்றி செய்பவர்களை அவர் தண்டிப்பதில்லை.
சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன பெருமாள் வழிபாடு செய்வதும் சனி தோஷ பரிகாரங்களில் ஒன்று ஆகும்.
சனிக்கிழமை காக்கைக்கு எள்ளன்னம்
#சைவம்#வைணவம்#ஹிந்துமதம் #மகாபெரியவா காஞ்சிக்கு பக்கத்தில் கீழம்பி என்ற கிராமம். பெரியவா வயல் வரப்பில் நடந்து வந்து கொண்டிருந்தார். அவரோடு பிரதிவாதி பயங்கரம் உ.வே.அண்ணங்கராச்சார்யாரும் நடந்து வந்தார். அவர் பெரிய வைஷ்ணவ தலைவர். வைஷ்ணவ சம்பிரதாயங்களை துளிகூட குறைவில்லாமல்
அனுஷ்டிப்பவர். எல்லாவற்றுக்கும் மேல், பெரியவாளிடம் ஹிமாயலய பக்தி! வரப்பின் மேல் தட்டுத் தடுமாறி நடந்து கொண்டு இருந்த போது, அண்ணா ஸ்வாமி கைகளைக் கூப்பிக் கொண்டு “தேவரீர், ஒரு நிமிஷம் அப்பிடியே நிக்கணும்” என்று வேண்டினார். பைநாகப் பாயை சுருட்டிக் கொண்டு கணிகண்ணன் பின்னால் போன
ஜகன்னாதன் பக்தரின் வேண்டுகோளை உடனே நிறைவேற்ற அப்படியே நின்றார். வரப்பை ஒட்டி வாய்க்காலுக்கு போய்க் கொண்டிருந்த ஜலத்தை, இரு கைகளாலும் அள்ளி பெரியவாளின் திருப்பாதங்களில் வார்த்தார். கொஞ்சம் கூட அசையாமல் நின்றார் பெரியவா. பாத தீர்த்தத்தை எடுத்து தன் தலையில் ப்ரோக்ஷணம் பண்ணிக் கொண்டு
#தாமோதரன் விஷ்ணுவின் பன்னிரு நாமங்களில் பன்னிரண்டாவது பெயராக வருவது இந்த அதி அற்புதமான திருநாமம். தாம உதரன்’ என்றால் ‘எல்லாவற்றுக்கும் இருப்பிடமான வயிற்றைக் கொண்டவன். அதாவது எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பவன்’ என்பது பொதுவான பொருள். வெண்ணெய் திருடுகிறாயா? உன்னைக்
கட்டிப் போடுகிறோன் பார் என்று யசோதை பால கிருஷ்ணனைப் பிடித்துக் கயிற்றால் கட்டிப் போடப் பார்த்தாள். முடியவில்லை. அவள் எத்தனை கயிறுகளைச் சேர்த்து ஒட்டுப் போட்டுக் கொண்டே போனாலும் தன் சின்ன வயிற்றைச் சுற்றிக் கட்டுவதற்குப் போதாதபடி மாயாஜாலம் செய்தான். பிறகு அவள் வேர்த்து
விருவிருத்துப் போனதைப் பார்த்துப் பரிதாபப்பட்டுத் தானாகவே கயிற்றிலே கட்டுப்பட்டான், அதனால் ‘தாமோதரன்’ என்று பேர் ஏற்பட்டது. உதர என்றால் வயிறு. தாம என்றால் இருப்பிடம் என்றும் ஒரு பொருள் உண்டு. உலகத்தனைத்துக்கும் அவனுடைய வயிறுதான் சொந்த இருப்பிடம். எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
பாண்டுரங்கனின் மீது மிகுந்த அன்பு கொண்டவர் யோகி பிரேமானந்தர். அவருடைய வழக்கமான வேலை விடிகாலை எழுந்ததும் நதிக்கு செல்வது, நீராடுவது, விட்டலனுக்கு பிரார்த்தனை, பிறகு ஷோடசோபசாரம் செய்து 700 நமஸ்காரம் பண்ணுவது. நம்மால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது!அதற்குப்
பிறகு பகவத் கீதை பாராயணம். மறுபடியும் நமஸ்காரம். பிறகு தான் இலையில் சோறு. அப்படியொரு பக்தி! அவர் மனத்தில் பாண்டுரங்கன் சதா சர்வகாலமும் இருந்தான். இன்பம் தந்தான். ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு பட்டுத்துணி வியாபாரி வந்தான். விட்டலன் கோவிலுக்கு சென்றான். அந்த நேரம் பார்த்து திடீரென்று
விடாத இடி இடித்து பெரிய மழை. வானம் பொத்துக்கொண்டது. சள சள வென்று பெய்த மழையில் தரை மண்ணெல்லாம் சேரும் சகதியுமாகியது. வியாபாரியின் பார்வை, தூரத்தில் இதை எல்லாம் லட்சியம் செய்யாத ஒரு சாமியார் மேல் சென்றது. அது தான் பிரேமானந்தர். பாண்டுரங்கனை நோக்கி கோவில் வாசலில் நமஸ்காரம் செய்து