#மகாபெரியவா#தெய்வத்தின்குரல்#கனகதாரா_ஸ்தோத்திரம்#ஆதிசங்கரபகவத்பாதாள் “ஆசாரியாள் மஹாலக்ஷ்மியைத் துதிக்கிறபோது ஆகாசத்திலிருந்து அசரீரி கேட்டது. ‘இந்த ஏழைப் பிராமண தம்பதி எத்தனையோ ஜன்மங்களாகப் பாவம் செய்தவர்கள். அதற்கு தண்டனை தான் தாரித்திரியம். பாவம் தொலைகிற காலம் வருகிற வரையில்
இவர்களுக்குச் சம்பத்தைத் தருவதற்கில்லை’ என்றது அசரீரி. உடனே ஆசாரியாள், ‘இவர்கள் ஜன்மாந்தரங்களாகச் செய்த பாவம் இப்போது இருப்பதைவிடக்கூட அதிகமாக வேண்டுமானாலும் இருக்கட்டும்; இத்தனை அன்போடு அகத்தில் இருந்த ஒரே பக்ஷ்யமான நெல்லிக் கனியையும் எனக்கு இவள் போட்டிருக்கிறாளே. இந்த அன்பும்
தியாகமும் எத்தனை புண்ணியமானவை! சாப்பாட்டுக்கே இல்லாத இவள் எனக்குப் பிக்ஷை போட்ட பலன் எத்தனை பாவத்தையும் சாப்பிட்டு விடுமே!’ என்றார். ‘அம்மா, மஹாலக்ஷ்மி! இவளுக்கு இருக்கிற மாதிரி உனக்கும் நிறைய அன்பு இருக்கிறதே! அதனால் ரொம்பக் கண்டிப்போடு நியாயம் மட்டும் வழங்காமல், அன்பைக் காட்டி
அநுக்கிரகம் பண்ணம்மா’ என்று லக்ஷ்மியைப் பிரார்த்தித்தார்.
லக்ஷ்மியிடம் அவர் ஏழைப் பிராமண ஸ்திரீக்காக முறையிட்டதற்கு கனகதாரா ஸ்தவத்திலேயே உட்சான்று (Internal evidence) இருக்கிறது. “தத்யாத் தயாநுபவனோ” என்கிற சுலோகத்தில் இது வெளியாகிறது. “சாதக பட்சி மழைத் துளிக்கு ஏங்குகிற மாதிரி
இவர்கள் சம்பத்துக்காக ஏங்குகிறார்கள். இவர்களுடைய பூர்வபாவம் மழையே இல்லாத கோடை மாதிரி, இவர்களைத் தகிக்கிறது என்பது வாஸ்தவம்தான். ஆனாலும் உன்னிடம் தயை என்கிற காற்று இருக்கிறதல்லவா? அந்தக் காற்றினால் உன் கடாக்ஷ மேகத்தைத் தள்ளிக் கொண்டு வந்து இவர்களுக்குச் செல்வ மழையைப் பொழியம்மா!’
என்கிறார், இந்தச் சுலோகத்தில். இப்படி அவர் ஸ்தோத்திரத்தைப் பாடி முடித்ததும், மஹாலக்ஷ்மிக்கு மனம் குளிர்ந்தது. அந்த ஏழைப் பெண் அன்போடு போட்ட ஓர் அழுகல் நெல்லிப் பழத்துக்குப் பிரதியாக அந்த வீட்டு வேலி எல்லை வரையில் தங்க நெல்லிக் கனிகளை மழையாகப் பொழிந்து விட்டாள். இதனால் தான் அந்த
ஸ்தோத்திரத்துக்கு “கனகதாரா ஸ்தவம்” என்கிற பேரே உண்டாயிற்று. ‘கனகதாரா’ என்றால் ‘பொன்மழை’ என்று அர்த்தம். ‘ஸ்தவம்’ என்றாலும் ‘ஸ்துதி’ என்றாலும் ஒன்றேதான். ஆசாரியாள் முதல் முதலாகச் செய்த ஸ்துதி இதுதான் என்பது இதற்கு ஒரு விசேஷமான பெருமை. ஆசார்யாளுடைய அன்பு, பிராம்மண பத்தினியின் அன்பு
மஹாலக்ஷ்மியின் அன்பு, எல்லாம் இதில் சேர்ந்திருக்கின்றன. அதனால் இதைப் பாராயணம் செய்கிறவர்களுக்கும் துர்பிக்ஷங்கள் நீங்கி, தர்ம நியாயமாகக் காலக்ஷேபம் நடத்துவதற்குக் குறைவில்லாதபடி சம்பத்து கிடைக்கும். ஆசாரியாள் “எல்லாம் ஒன்றே” என்று சொன்னவர் முடிவில் ஜீவனுக்கும் ஈசுவரனுக்குமே
பேதமில்லை என்றவர். அதனால் அவருக்குத் தெய்வங்களிடையே பேதபுத்தியே கிடையாது. எல்லாத் தெய்வங்களும் ஒரே பராசக்தியின் ரூபங்கள் தாம் என்று அவர் எப்போதும் வலியுறுத்துவார். அம்மாதிரி ஒரு சுலோகம் இந்த ஸ்தோத்திரத்திலும் இருக்கிறது. ‘கீர்தேவதேதி’ என்று ஆரம்பிக்கும். “கருடக் கொடியோனான மஹா
விஷ்ணுவின் பத்தினி என்று சொல்லப்படுகிற நீயேதான் வாக்தேவியான ஸரஸ்வதியாகவும், தாவர வளத்தைத் தருகிற சாகம்பரியாகவும், சந்திர மௌலீசுவரரின் பத்தினியான பார்வதியாகவும், இருக்கிறாய். மூன்று லோகங்களுக்கும் குருவான ஒரு பரமாத்மா இருக்கிறது. அதன் சக்தியே நீ. இருவருக்குமாகச் சேர்ந்து உலக
சிருஷ்டி பரிபாலனம், சம்ஹாரம் என்கிற விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்” என்கிறார்.
பராசக்தியான காமாக்ஷியும் காஞ்சி மண்டலத்தில் இதே மாதிரியாகப் பொன் மழை பொழிந்து மஹாலக்ஷ்மிக்கும் தனக்கும் அபேதத்தைக் காட்டியிருக்கிறாள்.”
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் குழந்தை கண்ணன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தான். அவன் பிறந்து மூன்று மாதங்கள் ஆகி விட்டது. குப்புறக் கவிழ்ந்து கொள்ள ஆரம்பித்தான். யசோதை, அதைக் கொண்டாட ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தாள். இதற்கிடையே கம்ஸன் அனுப்பிய சகடாசுரன் என்ற மற்றொரு ராக்ஷஸன்,
வண்டியின் உருவெடுத்து, கோகுலத்தில் யசோதையின் வீட்டிற்கு அருகே. குழந்தையைக் கொல்வதற்காகக் காத்திருந்தான். விழாவிற்கு, யசோதையும் நந்தகோபரும், கோகுலத்தில் உள்ள அனைவரையும் அழைத்திருந்தார்கள். யசோதை, குழந்தையை நன்கு குளிப்பாட்டி, அலங்கரித்து விட்டாள். குழந்தைக்குத் தூக்கம் கண்ணைச்
சொருகியது. அதனால், அருகில் இருந்த அந்தப் பெரிய வண்டியின் அடியில் தொட்டில் கட்டி, அதில் குழந்தையைப் படுக்க வைத்து, சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்தாள். சிறிது நேரத்தில் கண் விழித்த குழந்தை கண்ணன் ஆழ ஆரம்பித்தான். வேலையின் மிகுதியாலும், கூடியிருந்தவர்களின் பேச்சு சத்தத்தாலும்
#வெள்ளைவிநாயகர்
கல்லால், மரத்தால், சுதையால், உலோகத்தால் அமைக்கப்பட்ட விநாயகரை பார்த்திருப்போம். கடல் நுரையால் ஆன விநாயகரைக் காண வேண்டுமா?கும்பகோணத்திலிருந்து சுமார் 6கிமீ தூரத்திலுள்ள ஸ்ரீசெஞ்சடைநாதர் சிவன் கோவிலில், திருவலஞ்சுழி எனும் வெள்ளை வாரணப் பிள்ளையார் அருள்புரிகிறார்.
இங்கு கபர்தீஸ்வரர் எனும் பெயரில் ஈசன் இருக்க, அவருக்கு முன்புறமாக பெரிய பிராகாரத்தினுள் தனிக்கோயில் கொண்டுள்ளார் ஸ்வேத விநாயகர். இவரின் மூர்த்தி சிறிது ஆனால் கீர்த்தி பெரிது. இந்த விநாயகரை இந்திரன் உருவாக்கியதாகப் புராணம் கூறுகிறது. தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்ட பாற்கடலைக
கடைந்தபோது பல தடைகள் ஏற்பட்டன. விநாயகரை வழிபடாமல் செயல்பட்டதால் தான் இவ்வாறு நிகழ்கிறது என்பதை உணர்ந்த இந்திரன், உடனே கடல் நுரையால் ஒரு விநாயகரை உருவாக்கி வழிபட்டு பின் முயற்சியைத் தொடர்ந்தான். அதனால் அமிர்தமும் கிடைத்தது. இந்த விநாயகரை வழிபட அனைவரும் போட்டி போட்டார்கள். இறுதியில
#நற்சிந்தனை
ஒரு அரசன் அந்தணர்களுக்கு ஒரு நாள் உணவளித்துக் கொண்டு இருக்கையில் வானில் ஒரு கழுகு, தனக்கு இரையாக பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு அவ்வழியே பறந்து சென்றது. பாம்பின் வாயிலிருந்து சிறு துளி விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது. அரசன்
அந்த உணவை ஓர் அந்தணருக்கு அளிக்க, அதை உண்ட மறு கணமே அவர் இறந்து போனார். அரசன் மிகவும் வருத்தம் அடைந்தான். கர்மாகளுக்கான வினைகளை நிர்ணயிக்கும் சித்திரகுப்தனுக்கு இந்த கர்மவினையை யாருக்குக் கொடுப்பது என்று குழப்பம் வந்தது. கழுகிற்கா, பாம்பிற்கா அல்லது அரசனுக்கா? கழுகு அதன் இரையைத்
தூக்கிக் கொண்டு சென்றது அது அதன் தவறு இல்லை. விஷம் இறந்துபோன பாம்பின் வாயிலிருந்து வழிந்தது அது பாம்பின் குற்றம் இல்லை. அரசனுக்கும் உணவில் பாம்பின் விஷம் கலந்தது தெரியாது.
அது அவனும் அறியாமல் நடந்த விஷயம். இதுபற்றி எமதருமனிடமே கேட்கலாம் என்று எமனிடம் சென்று தன் குழப்பத்தைக்
இந்த மாதிரி பக்தனும், பக்தனுக்காக உருகும் பகவானுமே நம் வரம்.
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு ராம பக்தர் பெயர் ரகுதாசர், அவருக்கு ரொம்ப பொருத்தமான பெயர். ஒரு நாள் அவர் ஜெகன்நாதர் கோவிலில் தரிசனம் செய்ய அவன் முன் நிற்கும் போது அவர் கண் எதிரே தோன்றியது ராமர். அந்தக் கணம் முதல் ஜெகந்நாதர்
வேறு யாருமில்லை ராமர் தான் என்று எங்கும் சொல்லிக் கொண்டே போனார். ஒரு நாள் நிறைய பூகளை பறித்துக் கொண்டு வந்து பூமாலை தொடுத்தார் ரகுதாஸர். இதை ஜெகநாதனுக்கு அணிவியுங்கள் என்று மாலையை பட்டாச்சார்யாரிடம் கொடுத்த போது அதை அந்த பட்டர் வாங்கி ஒரு ஓரமாக வைத்து விட்டார். மாலையை ரகுதாஸர்
வாழை நாரில் தொடுத்திருந்தார். இந்த பழக்கம் அப்போது ஜகந்நாதர் கோவிலில் இல்லை. ஜெகன்னாதா, எவ்வளவு ஆசை ஆசையாக நான் இந்த மாலையை மணிக்கணக்காக உனக்கு என்று தொடுத்தேன். நீ ஏற்றுக் கொள்ள மறுத்தாயே என்று வருத்தம். கண்களில் தாரையாக நீர். மெதுவாக வெளியே நடந்தார். கோவிலில் வழக்கம் போல
#Babiya Sri Ananthapura temple is located in the middle of a lake in the village of Ananthapura. It is the only lake temple in Kerala and is believed to be the original seat
(Moolasthanam) of Ananthapadmanabha Swami Thiruvananthapuram. Babiya is the famous vegetarian temple
crocodile who lived in the temple pond/lake, which loved eating the rice prasad of the Lord passed away yesterday. Babiya was 75. The six-foot long Babiya was worshipped by the locals as the guardian of Ananthapura Lake Temple. The gentle crocodile was believed to be a vegetarian
No one in the temple knew how Babiya came to the temple pond and who named it. Babiya reached the lake after a British soldier killed the only crocodile that lived in the lake in 1945. (British soldier died on the same day from a snake bite.) Later, Babiya became the favourite of
#நற்சிந்தனை
ஒரு பெரிய மலையின் அடிவாரத்தில், ஓர் அழகிய காட்டில் ஒரு பறவை இன்பமாக சுற்றித் திரிந்து வந்தது. ஒரு நாள் ஆகாயத்தில் சில தேவர்கள் வேகமாக மிதந்து சென்று கொண்டு இருந்தனர். அவர்களைக் கண்ட அந்தப் பறவை ஒரு பெரிய மரத்தின் மேல் உள்ள கிளையில் அமர்ந்து கவனித்தது. அனைத்து
தேவர்களையும் கண்ட பறவை இறுதியில் எமதர்ம ராஜன் கதையையும் பாசக் கயிற்றினையும் சுமந்து கொண்டு நடந்து வரும் காட்சியைப் பார்த்து அதிர்ந்தது. அவரும் பறவையை பார்த்துக் கொண்டே சென்றார். பறவை அச்சம் அடைந்தது. ஒருவர் இறக்கும் தருவாயில் அல்லவா எமதர்மனை காண இயலும். அப்படி எனில் தாம் மரணமடைய
போகிறோமா என்று பறவை நினைத்தது. எமனின் பிடியிலிருந்து தப்பிக்க சிவபெருமானை துதிக்க வேண்டும் என்று முடிவு செய்தது. கண்ணில் கண்ணீர் மல்க அய்யனை துதி பாடியது. பறவையின் இசை கேட்டு இன்பமுற்று சிவபெருமான் தன் நந்தி வாகனத்தில் பறவைக்குக் காட்சி தந்தார். வேண்டும் வரத்தைக் கேள் என்றும்