#வால்மீகிராமாயணம் #சுந்தரகாண்டம்
ராமாயணத்தை எழுதி முடித்த வால்மீகி முனிவர் ஒவ்வொரு காண்டத்திற்கும் அது நிகழும் சூழலை வைத்தப் பெயர் சூட்டினார். சுந்தர காண்டத்திற்கு மட்டும் ஆஞ்சநேயர் பெயரை சூட்டினார். ஆனால் ஆஞ்சநேயர் தன் பெயரை சூட்ட வேண்டாம் என்று உறுதியாக சொல்லிவிட்டார்.
வால்மீகி முனிவர் ஆஞ்சநேயரை போன்று சமயோசித புத்தி கூர்மையால், சரி வாயு புத்ரா, சுந்தர காண்டம் என்று பெயர் சூட்டுகிறேன் என்று சூட்டினார்.
ஆஞ்சநேயர் ஆஹா அருமை என்று பாராட்டி இது நம் பெயர் இல்லையே என்று சென்று விட்டார். வெகு காலம் ஆனதால் ஹனுமான் தன் தாயை பார்க்க ஆசைப்பட்டு அஞ்சனா
தேவியை காணச் சென்றார். மகன் ஹனுமனின் வரவால் மகிழ்ச்சி அடைந்து, வா சுந்தரா வா என்று அழைத்தாள். ஹனுமானுக்கு தூக்கி வாரி போட்டது. தாயே என்னை எப்படி அழைத்தீர்கள் என்றார். அதற்கு, சுந்தரா அதுதானே உன் பால்ய பருவ பெயர்! நீ தான் மறந்து விட்டாய் ஹனுமான் என்றார். அப்போது தான் ஹனுமானுக்கு
புரிந்தது. தன் பெயரை வால்மீகி தனக்கேத் தெரியாமல் வைத்துவிட்டாரே என்று.
சுந்தரகாண்டம் படிப்பவர்கள் எண்ணற்ற பலன்களை அடையலாம் என்று நம் ஆச்சாரியார்கள் கூறியுள்ளார்.
ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது
என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.

காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸ்வாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார்.
உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன்
படி என்றார். அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய் விட்டது.

சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.
சுந்தரகாண்டத்தை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை
நெருங்குகிறோம் என்று அர்த்தம்.
சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.
சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், மன வலிமை உண்டாகும்.

இதனை முறைப்படி வாசித்தால் காலதாமதமான திருமணம் விரைவில் கைகூடும். சுந்தரகாண்டத்தில்
42-ம் சர்க்கத்தில் 33-வது ஸ்லோகம் முதல் 37-வது ஸ்லோகம் வரை உள்ள
ஸ்ரீஜெயபஞ்சகம் ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் உடனே திருமணம் கைகூடும்.

சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு
சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.

ராமனுடன் மறுபடியும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை சீதைக்கு கொடுத்து சுந்தரகாண்டம் தான். எனவே தான் கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்கிறார்கள்.

சுந்தரகாண்டத்தை மனம் உருகி படித்தால் பாவம் தீரும். முடியாத செயல்கள் முடிந்து விடும்
ஆஞ்சநேயருக்கு வடை வெண்ணை வைத்து நெய்தீபம் ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். ராம நவமியன்று விரதம் இருந்து ராமருக்கு
துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம் படித்து வந்தால் வாழ்வில் அமைதி பெறலாம். ஏழரை சனி, அஷ்டமத்து சனி திசை நடப்பவர்கள் தினமும்
சுந்தரகாண்டம் படித்து வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலைத் தாண்டுவதற்கு முன்பு சொன்ன ஸ்லோகத்துக்கு “ஜெய பஞ்சகம்” என்று பெயர். இதை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையை கண்டு பிடிக்க அசோக வனத்துக்கு செல்லும்
முன்பு கூறிய ஸ்லோகத்தை கூறி வந்தால் வெற்றி மீது வெற்றி உண்டாகும். சுந்தரகாண்டத்தை நீண்ட நாட்களாக பாராயணம் செய்பவர்களை விட்டு நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும்.

சுந்தர காண்டம் படிப்பதன் மூலம் வேதம் சொல்லிய புண்ணியத்தை பெண்கள் பெற முடியும். சுந்தரகாண்டத்தை எவர் ஒருவர் ஆழமாக
படிக்கிறாரோ, அவருக்கு தனது உண்மையான சொரூபத்தை உணரும் ஆற்றல் கிடைக்கும். சுந்தரகாண்ட பாராயணம் நமது ஊழ்வினையால் ஏற்படும் நிம்மதி சீர்குலைவை சரி செய்து விடும்.

ராம நவமியன்று ராகவேந்திர சுவாமிகள் இயற்றிய சுந்தரகாண்ட சுலோகம் கூறினால் மன தைரியம் உண்டாகும்.

ஒரு பெண் கருத்தரித்த நாள்
முதல் 9 மாதம் வரை நாள் தவறாமல்
சுந்தரகாண்டம் படித்து வந்தால் சுகப் பிரசவம் உண்டாகி ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். கர்ப்பிணிகள் குறைந்த பட்சம் 5-வது மாதத்தில் இருந்து சுந்தரகாண்டம் படித்து வந்தால், பிறக்கும் குழந்தை ஆன்மிக சிந்தனை உள்ள குழந்தையாக பிறக்கும்.
சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்தால்தான் அதன் முழு பலனும் கிடைக்கும். சுந்தரகாண்டத்தில் காயத்திரி மந்திரத்தின் அளவற்ற சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.
சுந்தரகாண்டம் படிக்க தொடங்கும் மன்பு முதலில் ராமாயணத்தை ஒரே நாளில் படித்து விட வேண்டும். அதன் பிறகு சுந்தரகாண்டம் படிக்க வேண்டும்
என்பது ஐதீகம். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து, ஸ்ரீராம் பட்டாபிஷேகம் படத்திற்கு முன்பு அமர்ந்து சுந்தரகாண்டம் படிப்பது மிகவும் நல்லது. பலன்கள் உடனே பலிதமாகும். கஷ்டங்கள் உடனேயே நிவர்த்தியாகும். சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து முடித்ததும் ஆஞ்சநேயரை வழிபட்டு, ஏழைகளுக்கு உதவி
செய்தால் அளவில்லா புண்ணியம் கிடைக்கும். சுந்தரகாண்டம் புத்தகத்தின் பிரதிகள் வாங்கி பதினோரு பேருக்கு படிக்க கொடுத்தால் யாகம் செய்ததற்கான பலன்கள் கிடைக்கும்.
சுந்தரகாண்டம் என்று பெயர் சொல்லுவார். இதை சுகம் தரும் சொர்க்கம் என்பார்கள்.

ஜெய் ஸ்ரீராம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Oct 19
#MahaPeriyava
There was a bank director in France who was keen on having a darshan of Maha Periyava having heard a lot about him. Dr. Raghavan used to receive frequent phone calls from the bank director. He would ask if he could come and have a darshan of Periyava. Dr. Raghavan Image
who was a Sanskrit professor in the Madras University would inform Periyava about the request. Even though he said, "He is very keen to have darshan of Periyava; he bothers me frequently", Periyava did not give his consent to meet him. Some years passed in this way. Suddenly
one day, Dr. Raghavan received intimation that said, I have arrived at Bombay. I shall come over to Madras and meet you. Please arrange for the darshan. At that time our Acharyas were staying in the Mylapore Sanskrit College. One evening Dr. Raghavan was waiting to have darshan
Read 19 tweets
Oct 18
20 நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரே மத, சமூக மற்றும் கலாச்சாரத்தைக் கடைபிடித்து 2000 ஆண்டுகளாக ஒரே இடத்தில் வசிக்கும் ஒரு சமூகம் அல்லது பிரிவு அல்லது குலம் ஒன்றை ஒருவர் உலகில் தேடினால்,
தென்னிந்தியாவில் 1.399686°N, 79.693622°E இந்த முகவரியில் உள்ள பழமையான கோவில் நகரமான சிதம்பரத்தில்
வந்து தான் நிற்பார்.இதுபோன்ற சமூகத்தை ஒருவர் வேறெங்கும் கண்டுபிடிக்க முடியாது. இந்த பொது தீட்சிதர்கள் தில்லை வாழ் அந்தணர் அல்லது ‘தில்லைப் பிராமணர்கள்’ என்றும் அழைக்கப்படுபவர்கள் கோயிலுடன் அதன் தொடக்கத்திலிருந்தே தொடர்புடையவர்கள். இந்த தனித்தன்மை வாய்ந்த குலம் முதலில் மூவாயிரமாக
இருந்ததால் அவர்கள் தில்லை மூவயிரவர் என்றும் அழைக்கப்பட்டனர். ஸ்தல புராணங்கள், மரபுகள் மற்றும் சைவ நம்பிக்கைகளின்படி, சிதம்பரம் கோயிலின் முதன்மைக் கடவுளான நடராஜப் பெருமான் தில்லை பிராமணர்களில் ஒருவர். நடராஜப் பெருமான் அவர்களின் வழிபாட்டு கடவுள் மற்றும் அவர்களின் குலத்தின் தலைவர்.
Read 17 tweets
Oct 18
#திருமாலின்_10_சயனத்_திருக்கோலங்கள்
1. ஜல சயனம்.
107-வது திவ்ய தேசமான ஸ்ரீவைகுண்டம் எனும் திருப்பாற்கடலில் அமைந்துள்ளது. மக்கள் தம் பூத உடலுடன் சென்று தரிசிக்க முடியாத ஜல சயனம்.

2. தல சயனம்.
63 வது திவ்ய தேசமான மாமல்லபுரம் என்னும் மல்லையில் அமைந்துள்ளது,தல சயனம். இங்கு திருமால் ImageImage
வலது கரத்தை உபதேச முத்திரையுடன் மார்பின் மீது வைத்து தரையில் ஆதிசேஷன் மீது சயனித்து காட்சி தருகிறார்.

3. புஜங்க சயனம் (சேஷசயனம்).
முதலாம் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கம் விண்ணகரத்தில் அமைந்துள்ளது புஜங்க சயனம். இங்கு திருமால் புஜங்க சயனத்தில் ஆதிசேஷன் மீது சயனித்து Image
காட்சி தருகிறார்.

4. உத்தியோக சயனம்.
12 வது திவ்ய தேசமான திருக்குடந்தை என்னும் கும்பகோணத்தில் அமைந்துள்ளது உத்தியோக சயனம்(உத்தான சயனம்). வேறு எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு சாரங்கபாணிப் பெருமாள் திருமழிசை ஆழ்வாருக்காக சயனத்தில் இருந்து சற்றே எழுந்து பேசுவது போலான உத்தியோக Image
Read 8 tweets
Oct 18
#DeathCleaning நாம் 60 வயதை அடைந்து விட்டால், சிறிது சிறிதாகவும், தொடர்ச்சியாகவும் ஒரு பண்பட்ட விதத்தில், கடந்த 60 வருடங்களில் சேகரித்த உலகாயுத பொருட்களை, மனதில் உள்ள பல கெட்ட படிமங்களை சுத்தம் செய்து வெளியேற்றத் தொடங்க வேண்டும். முதலில் நாம் சேகரித்து வைத்துள்ள தேவையற்ற துணிகள் Image
பொருட்கள், பல இடங்களில் நாம் வாங்கிய கலைப்பொருட்கள், ஞாபகார்த்த சின்னங்கள், நாம் பணிபுரிந்த இடங்களில் நமக்கு கொடுக்கப்பட்ட பரிசுப் பொருட்கள், நாமே விரும்பி வாங்கிய பொருட்கள், அலங்கார பொருட்கள் ஆகியவற்றை, அவை நமக்குப் பயனுள்ளதா என ஆராய்ந்து, சிறிது சிறிதாக வெளியேற்ற வேண்டும். Image
வயதாகி விட்டால் இந்த உலகத்தில் நமக்கு இடமில்லை என்பதை உணர வேண்டும். நம் குடும்பத்தாருக்கு நம்மை கவனிக்க நேரம் இல்லை. ஏனெனில் அவர்களுக்கு கவனிக்க வேண்டிய பல விஷயங்கள், அவர்களுடைய சொந்த குடும்பம் ஆகியவை உள்ளன. நம்முடைய இறப்பிற்குப் பின் நாம் ஏன் மற்றவர்களுக்கு இந்த சுத்தம் செய்யும்
Read 9 tweets
Oct 18
#MahaPeriyava one of Maha Periyava’s ardent devotee was hard of hearing and had very poor eyesight. He had one wish. He came to Kanchi, waited in queue for a long time for his turn and when he came in front of Maha Periyava did a sashtang Namaskaram. Periyava knew his inabilities Image
instantly. He asked him by hand action as to why he had come there. He replied, “Swami, I want to read Ramaysnam, Mahabharatam, 18 Puranas and put an end to my cycle of birth. But I have very poor eye sight and my ears have lost the faculty to hear. I surrender to you, you are my
only recourse.”
At that time there were many learned people gathered there. Maha Periyava asked them, “he has come here with this request of wanting to read all the Puranam, though he has poor eye sight. What can we do?”
He is the knower of everything “sarvagnar” but He was like
Read 11 tweets
Oct 17
#மகாபெரியவா #கவியரசர்_கண்ணதாசன்

சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பிற்காக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில்
இருந்தார். காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்ட தேவர் அவர்கள், சிவஸ்தானம் எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து வணங்கி ‘விபத்து நேர்ந்து விட்டது’ என்று சொன்ன மாத்திரத்தில் ‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’ என்றும் பெரியவர் கேட்க, அதிர்ந்து
போனார் தேவர். கண்கள் கலங்க வியப்பும் வருத்தமுமாய் “அவர் படுகாயத்துடன் நினைவில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார்” என நா தழுதழுக்கக் கூறினார். தேவரின் கவலையை உணர்ந்த பெரியவர், ‘சரி, கவலைப்படாதே. இந்த விபூதியைக் கொண்டுபோய், அவன் நெற்றியில் இட்டு, வாயிலும் சிறிதளவு போடு, மீதி
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(