#ஓம்_நமசிவாய #பக்தி
தீபாவளி உலகமெல்லாம் கொண்டாடும் நன்னாள் பொன்னாள். இதை யாண்டும் எல்லோரும் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள். சிவபெருமானை நினைத்துக் கடைத்தேறும் விரதங்கள் எட்டு. அதில் தீபாவளியும் ஒன்று. இது ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முன்தினம் வரும்.
தீபாவளி = தீபம் – விளக்கு, ஆவளி – வரிசை.
தீபத்தை வரிசையாக வைத்துச் சிவபெருமானை வழிபடுவதற்கு உரியநாள் தீபாவளி என உணர்க. தீபங்களை ஏற்றினால் இருள் தானே விலகிவிடும். இந்தத் தீபாவளித் தத்துவத்தை எழுதும்படி அன்பர்கள் விரும்பிக் கேட்டதால் இந்தக் கட்டுரையை எழுதி உதவினேன்.
தீபாவளி விரதம் முறையாக இருந்து வழிபாடு செய்பவர்கள் முத்தி நலம் அடைவார்கள்.
இதனைப் படிக்கும் சிவநேயச் செல்வர்கள் தீபாவளி விரதமிருந்து சிவசாயுஜ்தம் அடைவார்களாக.
அன்பன்
- கிருபானந்த வாரி
விரதமிருந்தால் உடலும் உள்ளமும் தூய்மையடையும். விரதங்கள் பல. அவற்றில் சிவபெருமானை வழிபடும் விரதங்கள் எட்டு எனக் கந்தபுராணத்தில் ஏழாவது காண்டமாகிய உபதேச காண்டம் புகல்கிறது.
தீபாவளி என்னும் நன்னாளைப் பொன்னாளாக எங்கும் கொண்டாடுகின்றார்கள். ஆனால், அதன் உண்மையை அறிந்தவர்கள் ஒரு சிலரே. பெரும்பாலானோர் நரகாசுரனைக் கண்ணபிரான் சங்கரித்தார் அந்த அரக்கனையழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.
பிராக்சோதிடபுரியை ஆண்ட நரகாசுரனைச் சங்கரித்த நாள் அதுவாக இருக்கட்டும். ஆனால், கேவலம் அரக்கனை அழித்த நாளுக்கு ஒரு கொண்டாட்டம் நிகழ்வது எங்கும் எக்காலத்தும் இருந்தது இல்லை. அப்படி இருக்குமாயின் இரணியனைக் கொன்ற நாள்,
இராவணனைக் கொன்ற நாள், கம்சனைக் கொன்ற நாள், இடும்பனை, பகனைக் கொன்ற நாள், துரியோதனனைக் கொன்ற நாள், அவ்வாறே அந்த நாகாசுரன், ஜலந்தராசுரன், இரண்யாட்சன், திருணாவர்த்தன் இப்படி புகழ் பெற்ற அசுரர்களை எல்லாம் கொன்ற நாளைக் கொண்டாடுவதாயின் நம் ஆயுளே அதற்குச் சரியாகிவிடும்.
ஆகவே, நரகாசுரனைக் கொன்றதற்காக தீபாவளி ஏற்பட்டதன்று.
தீபம் = விளக்கு; ஆவளி = வரிசை.
தீபத்தை வரிசையாக வைத்து பிரம்ம முகூர்த்தத்தில் எண்ணெய் ஸ்நானம் செய்து நீராடி, சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய நாள் தீபாவளி என உணர்க.
தீபாவளியன்று பகல் இரவு முழுவதும் பட்டினி இருந்து இரவில் தீபங்களை வரிசையாக வைத்துச் சிவபூசை செய்து நீராடி, நீறாடி, சிவபூசை செய்து விடியுமுன் புத்தாடை உடுத்தி சுத்த சைவ உணவு உண்டு அனுஷ்டிப்பது தீபாவளி விரதமாகும்.
தீப மங்கள ஜோதியாக விளங்கும் பெருமானை நிரம்பவும் விளக்கேற்றி வணங்கினார்கள் நமது முன்னோர்கள். திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வணங்குகின்றார்களன்றோ?
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்
என்பது ஞானசம்பந்தர் வாக்கு.
தீபாவளியன்று மது மாமிசங்களையுண்டு களியாட்டம் களிக்கின்ற மாந்தர் பெரும் பாவத்திற்கு ஆளாவர். இனியேனும் இந்தத் தீய நெறியைக் கைவிட்டுத் தூயநெறி நின்று நலம் பெறுவார்களாக.
தீபாவளி விரதம் காலாந்தரத்தில் பல மாறுதல்கள் ஆகிவிட்டது.
தீபாவளியன்று பகலும் இரவும் வயிறுபுடைக்க சாப்பிட்டுத் தூங்கி அதிகாலை எண்ணெயிட்டு நீராடி புத்தாடை உடுத்தி பலப்பல ஆகாரங்கள் சாப்பிட்டுப் பட்டாசுகள் வெடித்துக் குசாலாக இருந்து கொண்டு நண்பர்களையும் பந்துமித்திரர்களையும் “கங்கா ஸ்நானம் ஆச்சோ” என குசலம் விசாரிப்பது நடைமுறையாகிவிட்டது.
தீபங்களை ஏற்றினால் இருள்தானே விலகிவிடும். அதுபோல, நம் உள்ளக்கோயிலில் ஞானவிளக்கை ஏற்றினால் அறியாமையாகிய இருள்தானே விலகிவிடும். இதை அப்பர் சுவாமிகள்
உடம்பெனு மனைய கத்து வுள்ளமே தகளி யாக
மடம்படு முணர்நெய் யட்டி யுயிரெனுந் திரிம யக்கி
இடம்படு ஞானத் தீயா லெரிகொள விருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே.
என்று அற்புதமாக பாடுகின்றார்.
இவ்வாறு ஞானவிளக்கேற்றி அறியாமையை அகற்றுவதே தீபாவளிப் பண்டிகையின் நோக்கம். நம்மிடம் உள்ள காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற தீய சக்திகளை இறைவனுடைய திருநாமங்களாகிய பட்டாசுகளினால் சுட்டுத் தள்ளவேண்டும்.
என்று அருளிச்செய்த நாவுக்கரசரது நற்றமிழ்ப்பாடலால் இது விளங்குகின்றது. இதனை அறிந்து நாம் தீபாவளி விரதமிருந்து சிவபெருமானின் திருவருளை அடைய வேண்டும்.
---கிருபானந்த வாரியார் சுவாமிகள்
நமக்கு யாரை எங்கே வைப்பது என்று தெரியவில்லை. முன் பின் தெரியாத பேருக்கு விழுந்து விழுந்து உதவி செய்வோம். கட்டிய கணவன் / மனைவிக்கு ஒன்றும் செய்ய மாட்டோம். அறிமுகம் இல்லாதவர்கள் செய்த சின்ன உதவிக்குக் கூட நன்றி செல்வோம்
பெற்றோருக்கு, ஆசிரியருக்கு, உயிர் காத்த மருத்துவருக்கு எல்லாம் ஒன்றும் நன்றி சொல்ல மாட்டோம்.
இந்த சிக்கல் நமக்கு மட்டும் அல்ல. சிவபெருமானுக்கே இருந்திருக்கிறது.
மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் , திருவானைக்கா அகிலாண்ட நாயகி மேல் பாடிய பாடல் ஒன்று.
நாம் தண்ணீரில் விழுந்து விட்டால், நீச்சல் தெரியாவிட்டால், மூன்று முறை மேலே வருவோம், அதற்குள் எப்படியாவது கரை ஏற முடியவில்லை என்றால், மூழ்கிவிடுவோம். நீர் மூன்று முறை தான் பிழை பொறுக்கும் என்று சொல்லுவார்கள்.
ஒரு தாய் தன் பிள்ளை எத்தனை முறை தவறு செய்தாலும் பொறுப்பாள்.
நம் வாழ்க்கை என்பது நம் மனம் போன படி போகிறது. மனம் எங்கே இழுத்துக் கொண்டு போகிறதோ நாம் அங்கெல்லாம் போகிறோம். சில சமயம் மனம் செய்ய நினைப்பது தவறாக இருக்கலாம். அப்போது அதை அறிவு கொண்டு சற்றே வழி மாற்றுகிறோம்.
அறிவு எவ்வளவுதான் திசை மாற்ற நினைத்தாலும், மனம் போன படி தான் வாழ்க்கை பெரும்பாலும் நகரும். மனம் என்ற தோனியைப் பற்றி, அறிவு என்ற துடுப்பைக் கொண்டு வாழ்க்கையை இந்த சம்சார சாகரத்தில் செலுத்திக் கொண்டு இருக்கிறோம்.
அந்த தோணியில் என்ன சரக்கை ஏற்றுக் கொண்டு போகிறோம் தெரியுமா ? கோபம் என்ற சரக்கை ஏற்றிக் கொண்டு செல்கிறோம். அப்படி இந்த பிறவி என்ற பெரிய கடலில் நம் வாழ்க்கைப் படகு செல்லும்போது , காமம் என்ற பெரிய பாறையில் அந்த படகு முட்டி தலை கீழாக கவிழ்ந்து விடுகிறது.
இன்று நம் நிறுவனத்தில் பணியாற்றும் ஓர் ஊழியர் (பெண்) எப்போதும் ருத்ராச்சம் அணிந்து இருப்பவர், அவர்கள் சொந்தத்தில் ஓர் மரணம், காலையில் விடுமுறை வேண்டும் என்று தகவல் சொல்ல வந்தபோது
என்னை எல்லோரும் ருத்ராச்சதை கழட்டும்படி தீட்டுகிறார்கள், பிணத்தை எடுத்த பின் வேண்டுமானால் போட்டு கொள் என்று சொல்கிறார்கள் என்று சொல்ல !!
நம் வாயோ சும்மா இருக்குமா ??
இறந்தவருக்கு மரியாதை செலுத்ததானே போகிறாய் ஆமாம், நீ இப்படியே போய் நமச்சிவாய மந்திரம் சொல்லிக்கொண்டே அங்கே இரு !
எத்தனையோ லட்சம் பணம் செலவு செய்து இறுதி மரியாதை செய்வது வேண்டுமானால் ஊருக்காக இருக்கும்..
ஆனால் நீ ஒரு ஆள் மட்டுமே அந்த அலைபாயும் இறந்த ஆன்மா இறைவன் அடி நிழலில் இளைப்பாற துணை புரிவாய் என்று சொன்னேன் !!
மேலோட்டமாக பார்க்கும்போது எங்கோ எதையோ நாடி திரிபவனை தான்பால் ஈர்த்து ஆண்ட பெருமானே என்றே பொருள்கொள்கிறோம் ?? ஆனால் அவ்வரிகளை உட்கொண்டு அனுபவிக்க உற்றவன் உணர்வித்த பொருளே இப்பதிவு !!
பிற பொருள் !! உயிர் !! மீது உள்ள ஈர்ப்பே இன்றுவரை வாழ வைக்கிறது !! ஈர்ப்புக்கு உட்படும் பொருளும் ! உயிரும் ! மாறலாம் ஆனால் ஈர்ப்பு என்று ஒன்று எதையோ ! எதைநாடியோ !! நம்மை பயணிக்கவைத்து கொண்டே இருக்கு ! இருக்கும் !!
நமது உடலில் உயிர் என்ற ஒன்றின் ஈர்ப்பாலே உடல் உடலாகவே இருக்கிறது !! அந்த ஈர்ப்பின் பயனாக உடலின் உள் நடக்கும் இயக்கமும் !! வெளியே நடக்கும் இயக்கமும் !!
காரைக்கால்: மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பரமதத்தர் புனிதவதியார் திருக்கல்யாணம் பக்தர்கள் பங்கேற்பு இன்றி எளிமையாக நடைபெற்றது. மாலை வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவபெருமானின் 63 நாயன்மார்களில் இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட சிறப்பு பெற்றவர் காரைக்கால் அம்மையார். ஐந்தாம் நூற்றாண்டில் அவதரித்தவருமான புனிதவதியார் எனும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக்கோயில் உள்ளது.
இக்கோயிலில் அம்மையாரின் வரலாற்றை விளக்கும் விதமாக ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படும் மாங்கனித் திருவிழா மிகவும் சிறப்புப் பெற்றதாகும். காரைக்காலில் ஆண்டுதோறும் மிகவும் விமரிசையாக நடத்தப்படும் காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம்
#வீதி_உலாவிற்கு_வெளியே_வராத_நடராஜர் #சைவ_சமயம்
சோழவள நாட்டில் திருவிடைமருதூரில் இருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள கோனேரிராஜபுரம் என்ற ஊரில் பூமீஸ்வரர் கோயிலில் இருக்கும் நடராஜர் ஆறடி உயரத்தில், மிக அழகாகவும் கம்பீரமாகவும் காணப்படுகிறார்.
• இங்குள்ள நடராஜருக்கு மனிதருக்கு இருப்பது போலவே ரோமம் மார்பில் மருவு உடலில் கொழுப்புக் கட்டி கையில் மச்சம், கைவிரல் ரேகைகள் நகம் போன்றவைகள் இருப்பது அதிசயமாகும்.
இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக்கூத்தராகிய நடராஜப்
பெருமான் காண்போரை கவர்ந்திழுக்கும் சுந்தர நடராஜராகவும்,
உலகிலேயே மிகப்பெரிய நடராஜராகவும் விளங்குகிறார்.
ஒரு சமயம் சோழ மன்னர் ஒருவரது கனவில் பூமீஸ்வரர் தோன்றி கலைநுட்பத்துடன் கூடிய பெரிய பஞ்சலோக நடராஜர் சிலை ஒன்றை அமைக்கும்படி கூறினார்.
அதையடுத்து, நல்ல அழகிய நடராஜர் சிலை அமைத்திட மன்னன் தனது ஆஸ்தான கலைஞர்களிடம் கூறினான்.