#சனாதன_தர்மம்
சனாதன தர்மம் என்பது முக்கியமாக நமது உயிருக்கும் உள்ளத்திற்கும் தொடர்புடைய நியதிகள் (இயற்கை சட்டங்கள், ஒழுக்கங்கள்) என்னவென்று புரிந்து கொண்டு அதனுடைய அடிப்படைத் தன்மையை அறிந்து கொண்டு, நாம் பிறவி பயனை அடைய வேண்டும் என்பதாகும். அடிப்படையை உணர்ந்து கொண்டால் தான் இந்த
வளர்ச்சி சாத்தியமாகும். இந்த அடிப்படை தன்மையை தான் #சனாதன_தர்மம் என்கிறோம்.
உண்ணும் உணவு தானியங்களில் *'நவதானியங்கள்'* என்று ஒன்பது வகையாக நிர்மாணித்து, அந்த தானியங்களுக்கு அதிபதியாக *'நவக்கிரகங்கள்'* என்று ஒன்பது கிரகங்களையும் அமைத்தனர் நம் முன்னோர்கள். நவதானியங்களை 9 என்ற
அவர்கள், திசைகளை எட்டாக பிரித்தனர்.
கிழக்கு
மேற்கு
வடக்கு
தெற்கு
வட கிழக்கு
வட மேற்கு
தென் கிழக்கு
தென் மேற்கு
இசையை ஏழாக கொடுத்தனர்.
ச ரி க ம ப த நி
இசையை ஏழாக கொடுத்த அவர்கள் சுவையை ஆறாக பிரித்தனர்.
இனிப்பு
கசப்பு
கார்ப்பு
புளிப்பு
உவர்ப்பு
துவர்ப்பு
நிலத்தை 5ஆக பிரித்தனர்
குறிஞ்சி (மலைப்பகுதி)
முல்லை ( வனப்பகுதி)
நெய்தல் ( கடல் பகுதி)
மருதம் ( நீர் மற்றும் நிலம்)
பாலை ( வறண்ட பகுதி)
நிலத்தை ஐந்தாக பிரித்த அவர்கள் காற்றை நான்காக பிரித்தனர்.
தென்றல்
வாடை
கோடை
கொண்டல்
கிழக்கிலிருந்து வீசும் காற்று கொண்டல்
தெற்கிலிருந்து வீசும் காற்று தென்றல்
மேற்கிலிருந்து வீசும் காற்று கோடை
வடக்கிலிருந்து வீசும் காற்று வாடை
காற்றை நான்காக பிரித்த ஹிந்து முன்னோர்கள், மொழியை மூன்றாக பிரித்தனர்.
இயல்
இசை
நாடகம்
வாழ்க்கையை இரண்டாக வகுத்தனர்.
அகம்
புறம்
கணவன் மனைவி வாழும் வாழ்க்கை
அக வாழ்க்கை.
வெளியில் இருக்கும் வியாபாரம் மற்றும்
சுய ஒழுக்கம் எல்லாம் புற வாழ்க்கை.
இவற்றை அகநானூறு, புறநானூறு என்று இலக்கியத்தில் தெளிவாக அறியலாம்.
இப்படி பிரித்த அவர்கள், #ஒழுக்கத்தை_மட்டும்_ஒன்றாக_வைத்தனர் அதோடு, அதை ‘உயிரினும் மேலாக’ வைத்தனர். இதைத் தான் #திருவள்ளுவர் இரண்டடியில் அழகாகச் சொன்னார்,
ஒழுக்கம் விழுப்பந்
தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்
அந்த ஒழுக்கம் தான் சனாதன தர்மம்.
சனாதனம் என்றால் ‘என்றுமே நிலைத்திருக்கும் தன்மை’ என்று பொருளாகும். இதை #அனந்தம் என்றும் கூறலாம். #தர்மம் என்பது ஒரு சட்டம். அதாவது, ஒரு நெறிமுறை-ஒழுக்கம்,
நியதி. உதாரணமாக நாம் சாலையில் சென்றோமானால் இங்கு இடது
பக்கமாக செல்ல வேண்டும். இதுவே அமெரிக்காவில் நாம் வலது புறமாகத் தான் செல்ல வேண்டும். பாரதத்தில் இது தர்மம். அமெரிக்காவில் அதுவே தர்மம். ஆக என்றும் நிலையான, என்றும் மாறாத இயற்கையின் நியதி தான் #சனாதன_தர்மம் இது தான் சரியான வாழ்வியல் நெறிமுறை #ஒழுக்கம். இதை கடைபிடித்தால் மட்டுமே
வாழ்க்கை சிறப்பாக அமையும்.
அதாவது, இயற்கையின் நியதிகளான ஒழுக்கங்களை, சனாதன தர்மத்தை கடைபிடித்தால் தான் வாழ்வில் உயர்வு கிடைக்கும். அந்த ஒழுக்கங்களை சனாதன தர்மத்தை உயிரின் மேலாக போற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் திருவள்ளுவர். இன்று சமூகத்தில் பலவிதமான சூழ்நிலைகள் உள்ளன. நம்
முந்தைய தலைமுறையினரின் சமூகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நாளை வேறுமாதிரி இருக்கும். இதைப் போல மனித வாழ்க்கையில் மாறிக் கொண்டேயிருக்கும் விஷயங்களுக்கு சட்டங்களை நாம் வகுத்துள்ளோம். அதைக் கையாளுவது என்பதும் ஒவ்வொரு தலைமுறைக்கும் மாறிக் கொண்டேயிருக்கும்.
ஏனென்றால் சூழ்நிலைகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் நம் உயிரோடு சம்மந்தப்பட்ட #உள்தன்மை அதாவது இயற்கையின் நியதிகள் என்ற ஒழுக்கங்கள் என்றுமே மாறாதது. இது நிதர்சனமான உண்மை. இதைத் தான் சனாதன தர்மம் என்கிறோம்.
எது என்றுமே மாறாத உண்மையான ஒழுக்கங்களாக உள்ளதோ அதை நோக்கிச் செல்லுதல்,
மற்றும் அதை அடைவதற்கான வழி முறைகளை உருவாக்குதலே சனாதன தர்மமாகும். அனைத்திற்கும் ஒவ்வொரு தர்மமுண்டு.
ராஜ தர்மம், குடும்ப தர்மம், கணவன் தர்மம் மற்றும் மனைவி தர்மம் என்று கூறலாம். அதே போல அந்த வெளிச் சூழல் தொடர்பான பல தர்மங்கள் உள்ளன. அனைத்தும் ஒவ்வொரு தலை முறைக்கும் மாறிக் கொண்டே
இருக்கும். ஆனால் நம் உயிரோடு தொடர்புடைய #ஸ்வதர்மம் மட்டும் என்றுமே மாறுவதில்லை. இதைத் தான் சனாதன தர்மம் என்கிறோம். இதனை வாழ்வியல் நெறிமுறைகளாக
ஒழுக்கங்களாக வகுத்து. உலகின் தலைசிறந்த பண்பாடு, கலாச்சாரத்தை கடைபிடித்து சீரும் சிறப்புமாக வாழ்ந்தார்கள் நம் முன்னோர்கள். இன்று நாம்
கூறும் 'எங்கள் மதம், உங்கள் மதம்' என்பதெல்லாம் தோராயமாக 2000 ஆண்டுகளுக்கு முன்பு தான் தோன்றியுள்ளது. அதற்கு முன் உன் மதம் என் மதம் என்பதில்லை. பிறந்த ஒவ்வொரு உயிரும் இறுதியில் #முக்தி அடைவதே நோக்கமாகும்.
இது நமது அந்தராத்மாவிலேயே (அக ஜீவனிலேயே) உள்ளது. இதற்காகவே மனிதருக்குள்
'தேடல்' என்பது இயற்கையாக படைக்கப் பட்டுள்ளது. அந்தத் தேடலுக்கு ஒரு சரியான நோக்கத்தை அமைப்பதே #ஆன்மீகமாகும்
நாம் நமது பிழைப்பிற்கான தேடலில் உள்ள போது, உணவு உணவு என்றும் பொருள், பணம் என்றும் மனம் சிந்திக்கிறது. அந்தத் தேடல் நிறைவடைந்து விட்டால் சுதந்திரம் என்ற தேடல். அடுத்ததாக
பேரானந்தம் என தேடல் விரிவடைகிறது. அது எல்லோருக்குமே இயற்கையாக அக ஜீவனில் உள்ளது. அதாவது நாம் தற்பொழுதுள்ள நிலையை, வளையத்தைத் தாண்டி வளர வேண்டும் என்ற எண்ணம் எல்லா மனிதனுக்கு இயற்கையாக உள்ளது. அந்த நோக்கத்திற்கு சரியான வழிமுறைகளை அமைத்து கொடுத்தது தான் நமது கலாச்சாரம்.
சைவம்,
வைணவம் போன்ற பல வகையான பிரிவுகள் இருப்பதால் ஒன்றுக் கொன்று எதிரானதல்ல.
திருநீறு,
திருமண்,
சந்தனம்,
குங்குமம்
என்று அவரவர் விருப்பப்படி வைத்துக் கொள்ளலாம். எதுவும் வைக்காமலும் இருக்கலாம். இருப்பினும் நமது நோக்கம் ஒன்றே. அது மனிதனுடைய ஆத்ம #வளர்ச்சி அதாவது, பிறவி பயன்! ஆகவே,
உலகில் உன்னதமான நமது இந்திய
வாழ்வியல் அறநெறிகளான
சனாதன தர்மத்தை கடைபிடிப்போம். இதை விட சிறந்ததான ஒன்று வேறில்லை.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#நற்சிந்தனை ஒருநாள் காசி விஸ்வநாதர் வறியவன் வேடம் பூண்டு காசியில் நகர் வலம் வந்தார். செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியில் பசிக்கு உணவு கேட்டார். எல்லாக் கதவுகளும் மூடப்பட்டன. பின் நடுத்தர மக்கள் வசிக்கும் இடங்களில் வீடு வீடாக ஏறி இறங்கினார். யாரும் பிச்சை போடவில்லை. மாலை 7 மணி
ஆகிவிட்டது. உணவு கிடைக்கவில்லை. பசியோடு காசியின் கழிவு நீர் கங்கையில் கலக்கும் இடத்திற்கு வந்தார். அங்கே தனியாக ஒரு தொழுநோயாளி அமர்ந்திருப்பதைக் கண்டார். அவரைச் சுற்றி நான்கு நாய்கள். காலை முதல் மாலை வரை எடுக்கும் பிச்சையை இங்கே கொண்டு வந்து 5 பங்காக பிரிப்பார். முதல் 4 பங்கு
உணவுகளை நான்கு நாய்களுக்கும் மிச்சமுள்ள ஒரு பங்கை இவரும் சாப்பிடுவார். அங்கு வந்த காசி விஸ்வநாதர் அவரிடம் சென்று எனக்குப் பசிக்கிறது என்று கை நீட்டினார். தொழு நோயாளி அவர்வாடிய முகத்தை கண்டு தன் பங்கு உணவை அவருக்கு நீட்டினார். காசி விஸ்வநாதர் அதிர்ந்துவிட்டார். நான் யார் தெரியுமா
#ஶ்ரீவைஷ்ணவம் ஸ்ரீரங்க ஷேத்திரத்தில் #பராசர_பட்டர் என்கிற ஆச்சார்யார் இருந்தார். (இராமானுசரின் முதன்மை சீடரான கூரத்தாழ்வாரின் மூத்த மகன்) ரெங்கநாத புரோஹிதர் அவர். சஹஸ்ரநாமத்துக்கு பகவத் குண தர்ப்பணம் என்ற பாஷ்யம் எழுதியிருக்கிறார். பகவானுடைய கல்யாண குணங்களைக் காட்ட கூடிய கண்ணாடி
அது. ஸ்ரீரங்கத்திலேஇருக்கும் போது சிஷ்யர்களுக்கல்லாம் பாடம் சொல்லி கொடுப்பது வழக்கம். அவ்வாறு சொல்லுகிறபோது, ஒரு பெரிய வித்வான் வீதி வழியே போவார். அந்த வித்வான் போனால் பராசர பட்டர் ஏறடுத்தும் பார்க்கமாட்டார். விசாரிக்க கூட மாட்டார். அவர் போன சிறுது நேரத்துக்கெல்லாம், ஒரு பெரிய
செப்புச் சொம்பை நன்றாக பள பளவேன்று தேய்த்து எடுத்துக் கொண்டு, உஞ்சவிருத்தி பிராமணர் ஒருத்தர் வருவார். அரை குறையாக ஒரு ஸ்லோகத்தை சொல்லிக் கொண்டு வீதியோடு போவார். ஸ்லோகத்தையும் தப்பாகச் சொல்லுவார். பாத்திரம் ரொம்பும் அளவுக்கு வீதியில் சுற்றிவிட்டு வீட்டுக்கு போய்விடுவார்.ஒன்றும்
#மகாபெரியவா
ஒரு நாள், ஒரு கணவனும் மனைவியும் சேர்ந்து மஹா பெரியவா அவர்களை பார்ப்பதற்காக மடத்திற்கு வந்து இருந்தார்கள். கணவன் மனைவி இரண்டு பேர் முகத்திலேயும் சோகம். இவர்களுடைய தீராத துன்பத்திற்கு தீர்வை தேடி நொந்து போய், மகா பெரியவாவை பார்ப்பதற்காக மடத்திற்கு வந்திருந்தார்கள்.
இருவரும் சேர்ந்துதான் மடத்திற்குள் வந்து, சேர்த்துதான் அமர்ந்தனர். மஹா பெரியவா அவர்களை சந்திப்பதற்காக வரவேற்பறையில் அமர்ந்திருக்கும் போது, ஒரு கட்டத்தில் மனைவி, கணவரை பார்த்து கோபத்தோடு எழுந்து கணவரை விட்டு ஒரு அடி தள்ளி போய் அமர்ந்து கொண்டார். இதை மகா பெரியவா உள்ளிருந்து
பார்த்துக் கொண்டு இருக்கிறார். தன்னுடைய சீடனை விட்டு பெரியவா, அந்த மனைவியை மட்டும் உள்ளே அழைத்து வரச் சொல்லி சொன்னார்.
அந்த மனைவியும் உள்ளே வந்து மகா பெரியவா அவர்களை வணங்கி விட்டு முகத்தில் கலக்கத்தோடு குழப்பத்தோடு தயக்கத்தோடு நின்றார். உடனே மகா பெரியவா அந்த பெண்ணை பார்த்து
1. Keep walking 2. Take a deep breath when you feel irritable 3. Exercise so that the body does not feel stiff 4. Drink more water when the air conditioner is on in summer 5. The more you chew, the more
energetic the body and brain will be 6. Memory declines not because of age, but because of long-term non-use of the brain 7. No need to take a lot of medicine 8. No need to deliberately lower blood pressure and blood sugar levels 9. Only do what you love, not what you hate 10. No
matter what, don’t stay at home all the time 11. Eat whatever you want, the fat body is just right 12. Do everything meticulously 13. Don't deal with people you hate 14. Rather than fighting the disease to the end, it is better to live with it 15. You can't fall asleep and don't
#மகாபெரியவா
கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-05-04-2017 குமுதம் லைஃப் ஒரு பகுதி.
ஸ்ரீமடம் பாலு சபரிமலையை விட்டு இறங்கி எர்ணாகுளம் வந்து ஒரு வக்கீலின் வீட்டில் வந்து தங்கினார் .அங்கேயே உணவருந்தினார். வக்கீலின் தாயார் இவருக்கு ஆசி வழங்கிய பின்னர்,
"டேய் நீ ராமய்யர் மாமாவைப் பார்க்காமல் போகாதே. மகா பெரியவா கிட்டேயிருந்து வந்திருக்கேன்னு சொன்னா அவர் ரொம்ப சந்தோஷப்படுவார்" என்று வற்புறுத்திச் சொல்லவே ஸ்ரீமடம் பாலு அதற்கு சம்மதித்தார். ராமய்யருக்கு வயது 90 இருக்கும். இவர்(பாலு) காஞ்சி மடத்தில் இருந்து வந்திருப்பதாகவும்,
ஸ்ரீமகா பெரியவாளிடம் கைங்கர்யம் செய்பவர் என்று தெரிந்ததும் அந்த முதியவர் இவர் காலில் திடீரென்று விழுந்து நமஸ்கரித்தார். ஸ்ரீமடத்து பாலுக்கு உடலும் உள்ளமும் பதறியது. இவ்வளவு வயதானவர் நம் காலில் விழுவதா? அபசாரம் அல்லவா என்று பதறினார்.
"நான் ரொம்பச் சின்னவன்.எனக்குப் போய் நமஸ்காரம்
#பர்வதமலை திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இம்மலை. மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று பர்வதமலையும்
சித்தர் புகழ்பெற்ற மலையாகும். திருவண்ணாமலை, போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது. இம்மலைமீது சிவன் தனது பாதம் வைத்ததாக வரலாறு. இம்மலை மீதுள்ள மல்லிகார்ஜுனர், பிரமராம்பிகை கோயில் கி.பி. 3-ம் நூற்றாண்டில் நன்னன் என்ற குறுநில மன்னன் கட்டியதாகக்
கல்வெட்டுகள் உள்ளன. இம்மலைக்குச் செல்வோர் வழியில் பச்சையம்மன் ஆலயத்தையும், சப்த முனிகளையும் வணங்கி, மலை அடிவாரத்தில் உள்ள வீரபத்திர ஆலயத்தை வணங்கி மலையேறத் தொடங்குவர். மலை ஏறும் வழி ஓரளவிற்கே வசதியான வழியாக அமைந்துள்ளது. பாதி மலையை அடைந்ததும் இங்கு கடலாடியில் இருந்து வரும்