#மாசிமகம்_ஸ்பெஷல

#திருகோஷ்டியூர்_செளம்ய_நாராயண_பெருமாள_திருக்கோவில்
திருக்கோஷ்டியூர் தமிழ்நாட்டில் திருப்பத்தூரில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் 104 ஆவது திவ்ய தேசமாகும். பெருமாள் ஐந்து தலங்களில் உள்ளார். சொளம்ய நாராயணனின் பிரம்மாண்டமான திரு உருவம்
ஐந்து தலை நாகத்துடன் பள்ளி கொண்ட நிலையில் காணப்படுகிறது.
உலக மக்கள் அனைவருக்கும் ஓம் நமோ நாராயணய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜர் உபதேசித்தால் (ஓம் என்பது ஓரெழுத்து) திருமந்திரம் விளைந்த திவ்யதேசம் என்ற பெருமை இதற்குண்டு. இதன் வடபகுதியை மயன் என்ற அசுரத் தச்சனும், தென்
பகுதியை விஸ்வகர்மா என்ற தேவதச்சனும் இணைந்து இத்தலத்தில் அஷ்டாங்க விமானம் அமைத்தனர். ‘ஓம்’, ‘நமோ’, ‘நாராயணாய’ எனும் மூன்று பதங்களை உணர்த்தும் விதமாக இந்த விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது.
விமானத்தின் கீழ்தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), முதல் தளத்தில் சயன கோலம்
செளம்ய நாராயணர் (திருப்பாற் கடல்பெருமாள்) இரண்டாவது அடுக்கில் நின்ற கோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்), மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரம பதநாதர் (வைகுண்ட பெருமாள்) என ஸ்வாமி நான்கு நிலைகளில் அருளுகிறார். திருமாமகள் தாயாருக்கு தனிச் சன்னதி இருக்கிறது.
தாயாருக்கு திருமாமகள், நிலமாமகள், குலமா மகள் என்றும் பெயர்கள் உண்டு.
அஷ்டாங்க விமானத்தின் வடப் பக்கத்தில் ஸ்ரீநரஸிம்ஹர் இருக்கிறார்.
இவருக்கு அருகில் ராகு, கேது இருப்பது வித்தியாசமான தரிசனம்.
பிரகாரத்தில் நரசிம்ஹர், ஹிரண்யனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார்.
கோயில் முகப்பில்
சுயம்பு லிங்கம் ஒன்று உள்ளது. ஸ்ரீசெளம்ய நாராயண ஸ்வாமியுடன் ஸ்ரீதேவி, பூதேவி மட்டுமின்றி மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர். அருகில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் இருக்கிறார். இவருக்கு ‘பிரார்த்தனை கண்ணன்’ என்று
பெயர். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இவருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால், அந்த பாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கை.
பிரம்மாவிடம் வரம் பெற்ற ஹிரண்யன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தினான். கலங்கிய தேவர்கள் தங்களை காக்கும் படி மகா விஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர், ஹிரண்யனை வதம்
செய்வது குறித்து ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். ஆனாலும் பயந்த முனிவர்கள் ஹிரண்யன் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசிக்க வேண்டும் என்றனர். ஸ்வாமியும் அவர்களது கோரிக்கையை ஏற்றார். இதனிடையே இத்தலத்தில் கதம்ப மகரிஷி, ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். அவர் தான் தவம்
இருக்குமிடத்தில், எவ்வித தொந்தரவும் இருக்கக்கூடாது என்ற வரம் பெற்றிருந்தார். எனவே தேவர்களுடன் ஆலோசனை செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்தார் ஸ்ரீமகாவிஷ்ணு. அப்போது ஸ்ரீநரசிம்ஹ அவதாரம் எடுத்து ஹிரண்யனை அழிக்கப் போவதாக கூறினார் ஸ்ரீமகாவிஷ்ணு.
மகிழ்ந்த தேவர்களும், கதம்ப மகரிஷியும்
அவர் எடுக்கப்போகும் அவதாரத்தை தங்களுக்கு காட்டும்படி வேண்டினர்,
எனவே, அவதாரம் எடுப்பதற்கு முன்பே இங்கு ஸ்ரீநரசிம்ஹ கோலம் காட்டியருளினார். இதனால் மகிழ்ந்த கதம்ப மகரிஷியும், தேவர்களும் அவரது பிற கோலங்களையும் காட்டியருளும் படி வேண்டினர். ஸ்வாமியும் நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என
நான்கு கோலங்களை காட்டி அருளியதோடு, இங்கேயே எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் ‘திருக்கோட்டியூர்’ என்றும் பெயர் பெற்றது. பேரழகு கொண்டவர் என்பதால் இங்கிருக்கும் பெருமாளுக்கு செளம்ய நாராயணர் என்பது திருநாமம். பொதுவாக கோவில்களில் உற்சவர் விக்ரகங்களை
பஞ்சலோகத்தால் அமைப்பர். ஆனால், தூய்மையான வெள்ளியால் ஆன விக்ரகம் இங்குள்ளது. இதை தேவலோக இந்திரனே தந்ததாக கூறப்படுகிறது. ஸ்ரீமகாவிஷ்ணு ஹிரண்யனை வதம் செய்யும் வரையில், இத்தலத்தில் தங்கியிருந்த இந்திரன், தேவலோகத்தில் பூஜித்த செளம்ய நாராயணரை, கதம்ப மகரிஷிக்கு கொடுத்தார். இந்த
மூர்த்தியே இங்கு உற்சவராக இருக்கிறார். இவர் பெயரால் இத்தலம் அழைக்கப்படுகிறது. பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழி சையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என ஐந்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த ஸ்தலம் இது. இப்பெருமாளை திருமங்கையாழ்வார் வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன் என்று
போற்றுகிறார். கோயிலுக்குள் நுழையும் போது பலிபீடம், த்வஜஸ்தம்பத்தைப் பார்க்கும் நாம், பின்னால் நந்தியையும் காணும் போது மெல்லிய வியப்பு மேலிடுகிறது.
ஆம், இங்கே ஒரு சிவ சந்நிதியும் இருக்கிறது. இந்த ஸ்தலத்தில் ஹிரண்யவதம் பற்றிய திட்டத்தைத் தீட்டும்போது ஈசனும் அதில் பங்கேற்றதன்
சாட்சி. இவரை ‘சரபேஸ்வர லிங்கம்’ என்று குறிப்பிடுகிறார்கள். தனி சந்நதிக்கு முன்னால் ஈசனைப் பார்த்தபடி நந்தி அமர்ந்திருக்க, சந்நதிக்குள் சிறு உருவில் இந்த லிங்கம் அருள் பாலித்துக் கொண்டு இருக்கிறது. இவருக்கு முன்னால், சந்நதிக்குள் வேல் தாங்கிய முருகன், சநகாதி முனிவர்கள், நாகர்
சன்னதிகளும் உள்ளன. கோயிலினுள் நுழைந்ததுமே இடப்பக்கத்தில் ஸ்ரீராமானுஜரும், திருக்கோஷ்டியூர் நம்பிகளும் (இவருடன் இவரது திருவாராதன மூர்த்தியான ஸ்ரீராமன் -சீதை-லஷ்மணன்-ஹனுமனும்) தனித்தனி சந்நதிகளில் காட்சி தருகிறார்கள். அடுத்து, சக்கரத்தாழ்வார் அருள் தரிசனம் நல்குகிறார். அருகில்
ருக்மிணி-சத்ய பாமா சமேத நர்த்தன கிருஷ்ணன் அழகுற காட்சியளிக்கிறார்.
இதே தோற்றத்தையும், கிருஷ்ணனின் இன்னும் பல வான அழகுத் தோற்றங்களையும், இந்த ஸ்தலத்தில் தரிசித்து மகிழ்ந்தவர் பெரியாழ்வார்.
அப்போது மதுரையை ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவனுடைய குரு, செல்வநம்பி
என்பவர். திருக்கோஷ்டியூரைச் சேர்ந்தவரான செல்வநம்பி வருடம் தவறாமல் கிருஷ்ணனின் அவதார விழாவை இந்த ஊரில் சிறப்பாக நடத்துவார். ஒரு முறை அவர் பெரியாழ்வாரை இந்த விழாவைக் காண வருமாறு அழைப்பு விடுத்து இருந்தார். வந்த பெரியாழ்வார் அப்படியே பிரமித்துப் போய் நின்று விட்டார். அவருக்கு
திருக்கோஷ்டியூர், ஆயர்பாடியாகவே தெரிந்தது. அங்கே கண்ணனின் குறும்புத்தனங்க ளைக் கண்டு மனம் விம்மினார்.
‘வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தனில்’ என்று பாடி சிறப்பித்தார். அவர் கண்டு களித்த காட்சிகளில் ஒன்றுதான் இந்த (காளிங்க) நர்த்தன கண்ணன் வடிவம்.
இந்த
திவ்ய தேசத்தில் எம்பெருமான் நின்றும், கிடந்தும், அமர்ந்தும், நடந்தும் தனது பலவகை திவ்ய சொரூபங்களைக் காட்டி நம்மை மகிழ்விக்கிறார். இந்த நர்த்தன கிருஷ்ணன் உருவம் நடந்த திருக்கோலத்தைக் காட்டுகிறது.
மேலே சில படிகள் ஏறிச் சென்றால் பெருமாள் சயன கோலத்தில் அற்புத தரிசனம் தருகிறார்.
இவரது கருவறைக்குள் தேவர்கள் நிறைந்திருக்கிறார்கள். வழக்கம் போல ஸ்ரீதேவி-பூதேவி பிரதானமாக அங்கம் வகிக்க, வழக்கம்போல இல்லாமல் பிரம்மா இடம் பெற்றிருக்கிறார்.
பிரம்மாவுடன் அவரது பத்தினிகளான சாவித்ரி, காயத்ரி, சரஸ்வதி மூவரும் உடன் அமைந்திருக்கிறார்கள். இம்மூவரும் வீணாகானம் இசைத்து
திருமாலை மகிழ்விக்கிறார்கள். இந்தத் ஸ்தலத்தில் பெருமாள் உறையக் காரணமாக இருந்த கதம்ப மகரிஷியும் இருக்கிறார். பெருமாளின் திருவடி அருகே அடங்கிப்போன மது-கைடப அரக்கர்கள், தேவேந்திரன், காசி மகாராஜா மற்றும் சந்திரனின் பேரனான, புதனின் மகனான புரூரவ சக்கரவர்த்தி என்ற ஒரு திருமாலடியார்
பெருங்கூட்டமே காட்சி தருகிறது.
இவ்வாறு தேவர்கள் நடுவே தோன்றியதால் ‘ஸ்தித நாராயணன்’ என்றும் திருமால் பெயர் கொள்கிறார். பாற்கடல் காட்சிபோல இங்கும் ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டதால், ‘உரக மெல்லணையான்’. உரகம் என்றால் பாம்பு. மெல்லணை என்பது அதன் மிருதுவான உடல் படுக்கை. உரக மெல்லணையான்
கொலுவீற்றிருக்கும் கருவறை விமானம், அஷ்டாங்க விமானம் எனப்படுகிறது. 108 திவ்ய தேசங்களிலேயே இங்கும், அருகே, மதுரையைச் சேர்ந்த திருக்கூடல் தலத்திலும்தான் இத்தகைய, ஆகம விதிகளுக்குட்பட்ட அஷ்டாங்க விமானத்தைக் காண முடியும்! அடுத்து, இரண்டாவது தளத்தில் பெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியுடன் நின்ற
நாராயணனாக சேவை சாதிக்கிறார். மூன்றாவதான பரமபத நாதன் கொலுவிருக்கும் தளத்திற்கு செல்ல குறுகலாக மேலேறும் படிகள் உள்ளன. ஒரு கட்டத்தில் மேல் விதானம் தலையில் இடிக்க, சற்றே குனிந்து, உடலைக் குறுக்கிக் கொண்டு தான் போக முடியும். கோபுரத்தின் இந்த உச்சியிலிருந்துதான் ராமானுஜர் உலகோர்
அனைவரும் உய்ய அஷ்டாக்ஷர மந்திரத்தையும், அதன் பொருளையும், அதன் பலனையும் பகிரங்கமாக அறிவித்தார். ஊரைப் பார்த்தவண்ணம் அவரது சிலை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கோபுர உச்சியில் இருந்து பார்த்தால் திருக்கோஷ்டியூர் நம்பிகளும், ராமானுஜரும் வாழ்ந்த வீடுகள் அமைந்திருந்த பகுதியை காணலாம்.
இந்த வீடுகள் திருமாளிகை என்று அழைக்கப்டுகிறது. நம்பியின் வம்சாவழியினர் இன்னமும் இவ்வூரில் வாழ்ந்து வருகிறார்கள். கீழிறங்கி வந்தால் தாயார் திருமாமகள் நாச்சி யாரை தரிசனம் செய்யலாம். புருரூப சக்கரவர்த்தி இத்தலத்தை திருப்பணி செய்தபோது மகாமகம் பண்டிகை வந்தது. அப்போது பெருமாளை தரிசிக்க
விரும்பினார் புருரூபர். அவருக்காக இத்தலத்தில் ஈசான்ய (வடகிழக்கு) திசையில் உள்ள கிணற்றில் கங்கை நதி பொங்க, அதன் மத்தியில் பெருமாள் காட்சி தந்தார்.
பிரகாரத்தில் உள்ள இந்த கிணறை #மகாமக_கிணறு என்றே அழைக்கிறார்கள். 12 வருடங்களுக்கு ஒருமுறை மகாமக விழாவின் போது, ஸ்வாமி கருட வாகனத்தில்
இங்கு எழுந்தருளி தீர்த்தவாரி செய்கிறார்.
இவ்வூரில் வசித்த திருக்கோஷ்டியூர் நம்பியிடம் திருமந்திர உபதேசம் பெறுவதற்காக, வைணவ ஆச்சார்யாரான #ஶ்ரீராமானுஜர் வந்தார். நம்பியின் இல்லத்திற்கு சென்ற அவர் வெளியில் இருந்து அழைத்தார். நம்பி, ‘யார்?' என்று கேட்க, ‘நான் ராமானுஜன் வந்து
இருக்கிறேன்’ என்றார். நம்பி வீட்டிற்குள்ளிருந்தே, ‘நான் செத்து வா!’ என்றார். புரியாத ராமானுஜரும் சென்றுவிட்டார் இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலை சொன்னார். அடுத்த முறை சென்ற ராமானுஜர் ‘அடியேன் வந்திருக்கிறேன்’ என்றார். அவரை அழைத்த நம்பி,
‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திர உபதேசம் செய்தார். மேலும், மந்திரத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும், மீறி சொன்னால் அவருக்கு நரகம் கிடைக்கும் என்று கூறினார். ஆனால், ராமானுஜரோ உலக உயிர்களும் நாராயண மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இக்கோயில் விமானத்தில் ஏறி, அங்கிருந்து
மக்களை அழைத்து மந்திரத்தை உபதேசித்துவிட்டார். கோபம் கொண்ட நம்பி, ராமானுஜரை கடிந்து கொண்டார். அவரிடம் ராமானுஜர் பணிவாக, தனக்கு நரகம் கிடைத்தாலும், மக்கள் நன்றாக வாழ்வார்களே, அதுபோதும்! என்றார். மகிழ்ந்த நம்பி ‘நீ என்னிலும் பெரியவர்,
#எம்பெருமானார் என்று சொல்லி கட்டித் தழுவிக்
கொண்டார். இக்கோயிலில் நம்பி, ராமானுஜர் இருவருக்கும் தனி சன்னதிகள் இருக்கிறது. இங்கு பிரார்த்திப்பவர்கள் ஒரு அகல் விளக்கு வாங்கி ஸ்வாமியிடம் வைத்து பின், வீட்டிற்கு கொண்டு செல்கின்றனர். பின் அவ்விளக்கில் காசும், துளசியும் வைத்து, சிறு பெட்டியில் வைத்து மூடி பூஜையறையில் வைத்து
விடுகின்றனர். இந்த விளக்கில் பெருமாளும், லட்சுமியும் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். இவ்வாறு செய்வதால் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியவர்கள் மாசி தெப்ப திருவிழாவின்போது இந்த விளக்குடன் மற்றொரு நெய் விளக்கை தீர்த்த கரையில் வைத்து வழிபடுகின்றனர்.
அந்நேரத்தில் புதிதாக வேண்டுதல் செய்பவர்கள் இந்த விளக்கை எடுத்துச் செல்கிறார்கள்.
ஸர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்பணம்.🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Mar 7
#MahaPeriyava
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

Once a Sri Vaishnavite family had come for the darshan of Sri Maha Periyava. Even though they followed the Sri Vaishnava tradition, they had deep devotion (bhakti) towards Sri Maha Periyava and Image
believed that He was Sakshat Sriman Narayana Swaroopam. They had come to have darshan of Periyava since the head of their family who was old was suddenly suffering from paralysis and chitta bramhai (paranoia). They had come there with the whole family. Sri Maha Periyava asked
them to be seated. He then asked for a small pot of water to be brought. Once it was brought, He put some tulsi leaves in the pot of water from the mala (garland) He was wearing. As they belonged to the Sri Vaishanavite tradition, He then advised all the family members to recite
Read 8 tweets
Mar 7
#கைலாசநாதர்_திருக்கோவில் ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி மாவட்டம்.
திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் ரோட்டில் ஸ்ரீவைகுண்டம் அமைந்துள்ளது.
சுவாமி: கைலாசநாதர்.
அம்மை: சிவகாமி அம்மை.
திருக்கோவில் விருட்சம்: இலுப்பை  மரம்.
தீர்த்தம்: தாமிரபரணி.
உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ImageImage
ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த  ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் என்று வழங்கப் பெறுகிறது. அதில் ஆறாவது மலர் கரை ஒதுங்கிய இடம் தான் ஶ்ரீவைகுண்டம் ஆகும். இங்கு அவர் பிரதிஷ்டை செய்து
வணங்கிய லிங்கமே கைலாசநாதர் ஆகும். நவதிருப்பதிகளில் ஒன்றான ஸ்ரீ வைகுண்டநாத பெருமாள் திருக்கோவில் இதே ஊரில் உள்ளது. வைகுண்டத்தில் உறையும் மகாவிஷ்ணுவே இங்கு வைகுண்டநாத பெருமாளாகக் காட்சிதருவதால் இந்தத் தலம் பூலோக வைகுண்டம் என்ற சிறப்பைப் பெறுகிறது. அதனால் திருவைகுண்டம் என்ற பெயரை
Read 16 tweets
Mar 7
#கடவுளிடம்_என்ன_வரம்_கேட்க_வேண்டும்
பகவானே, உனக்கு கைங்கர்யம் செய்யும் வரத்தை கொடு என்று தான். எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் ஒரு அர்ப்பணிப்பாக செய்வது தான் கைங்கர்யம். இறைவன் நமக்கு செய்த பல உதவிகளுக்கு கைமாறாகவும் அதைக் கொள்ளலாம் அல்லது பகவான் மீது நாம் கொண்ட அன்பின் Image
வெளிப்பாடாகவும் அதைச் செய்யலாம். திருக்கோயில்களைச் சுத்தம் செய்வது, கோலம் போடுவது, பூ மாலைகள் தொடுத்துக் கொடுப்பது இப்படி நம்மால் முடிந்த சிறுசிறு கைங்கர்யங்களை செய்வதை சிரமேற் கொள்ள வேண்டும். நல்ல வசதி உள்ளவர்களாக நாம் இருக்கும் பட்சத்தில், கோயில் உற்சவங்களில் பணமோ பொருட்களோ ImageImageImageImage
கொடுத்து கலந்து கொள்வது கைங்கர்யமே.
ராமபிரான் இலங்கைக்குச் செல்வதற்காக இக்கரையிலிருந்து அக்கரைக்கு சேது பாலம் அமைத்துக் கொண்டிருந்த சமயம் அது. கடலின் நடுவே பாலம் அமைக்க வானரங்கள் எல்லாம் பெரிய பெரிய பாறைகளையும், மலைகளையும் கடலின் நடுவே போட்டு பாலம் கட்ட உதவி புரிந்து கொண்டிருந்தன
Read 13 tweets
Mar 6
#ஶ்ரீமகாலட்சுமி_தாயாரின்_பன்னிரு_திருநாமங்கள்
1.  #ஶ்ரீரங்கநாச்சியார் - #ஶ்ரீரங்கம்
பன்னிரு திருநாமங்களில் முதல் திருநாமம்.
ஜீவர்களுக்கும் பரமனுக்கும் இடையே ஒரு பாலமாக பிராட்டி செய்யும் இவ்வுதவியை விளக்குவதே ஸ்ரீ: என்னும் திருநாமம். வடமொழியில் இப்பெயருக்கு ஆறு பொருள்கள் உண்டு. Image
#ஶ்ரீயதே - ஜீவர்கள் அனைவராலும் தஞ்சமாக பற்றப்படுகிறாள்.

#ஸ்ரயதே - தான் நாராயணனை சரணமாகப் பற்றுகிறாள்.

#ஸ்ருணோதி - தன்னை அண்டிய ஜீவர்கள் தங்கள் குறைகளையும் பாபங்களையும் விண்ணப்பிக்கும் போது காது கொடுத்துக் கேட்கிறாள்.

#ஸ்ராவயதி - ஜீவர்களுக்காகப் பரிந்து பேசி அவர்களது வேண்டுகோளை
பகவான் காது கொடுத்துக் கேட்கும் படி செய்கிறாள்.

#ஸ்ருணாதி - பெருமானை அடையத் தடங்கலாக இருக்கும் பக்தர்களின் பாவங்களை தன் அருளால் நீக்குகிறாள்.

#ஶ்ரீணாதி - ஜீவர்களைப் பெருமானோடு சேர்த்து வைக்கிறாள்.

2. #அம்ருதோத்பவா - #ஶ்ரீஅம்ருதவல்லி தாயார் - #சோளிங்கர்
இரண்டாவது திருநாமம். Image
Read 9 tweets
Mar 6
#வடுவூர்_ஶ்ரீகோதண்டராமசுவாமி_கோவில்
ஶ்ரீ கோதண்டராமர் கோவில், “பஞ்ச ராம க்ஷேத்திரங்களில்” ஒன்று. அபிமான ஸ்தலம். தக்ஷிண அயோத்தி. ஒரு காலத்தில் மகிழ மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் வகுளாரண்ய க்ஷேத்ரம் என்றும் பாஸ்கர ஷேத்திரம் என்றும் பெயர். ஐந்து நிலை ராஜகோபுரம். மூலவராக கோதண்டராமர்
சீதாதேவியுடன் திருக்கல்யாண கோலத்தில், லக்ஷ்மணர், அனுமாருடன் எழுந்தருளியுள்ளார். உற்சவர் ராமர் பேரழகு! இந்த ராமனைக் காணக் கண் கோடி வேண்டும். பேரழகு வாய்ந்த ராமர். அழகுக்கே அழகு சேர்க்கும் ராமர். சேவித்துக்கொண்டே இருக்கலாம். என்ன அழகு! என்ன அழகு! பார்த்தவர் மயங்கும் அழகு! மந்தகாசப்
புன்னகை! இது போன்ற தத்ரூபமான புன்னகையை வேறு எங்குமே காண முடியாது. வில்லினைப் பிடித்திருக்கும் அழகு அதி ஆச்சர்யம்!
“மையோ, மரகதமோ, மறிகடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு! என்பது ஓர் அழியா அழகு உடையான்”
- கம்பர்
வடுவூர் சிலையழகு, மன்னார்குடி மதிலழகு, திருவாரூர் தேரழகு என்பர். சரி
Read 6 tweets
Mar 6
#Parasara_Maharishi
#Temple_For_Parashara_Maharishi
#Parashar_Lake in Himachal Pradesh
Parashara is a Rigvedic Maharishi and author of many ancient Indian texts such as Parashara Smriti and Parashara Samhita, Vishnu Purana. He was the grandson of Vasishta, the son of Shanta-Muni
and the father of Vyasa. Parashara Muni was raised by his grandfather, Vasishta, because he lost his father at an early age. His father, Shakti-muni, was on a journey and came across an angry Rakshasa (demon) who had once been a king but was turned into a demon feeding on human
flesh as a curse from Vishwamitra. The demon devoured Parashara’s father. When Parāśara's father, Sakti Maharishi died after being devoured by the demon along with Vasishta’s other sons, Vashista resorted to ending his life by suicide. Hence he jumped from Mount Meru but landed
Read 22 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(