சாரா ஸ்டீவர்ட் ஜான்சன் (Sarah Stewart Johnson) அவர்கள் அடிப்படையில் ஒரு உயிரியலாளர் (Biologist) ஜியோ கெமிஸ்ட் (Geochemist) வானியலாளர் (astronomer) மற்றும் ப்ளானடரி சயின்டிஸ்ட் (planetary scientist) ஆவார். செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் உள்ளதா
(1)
எனத் தேடும் பணியில் உலக நாடுகள் ஒவ்வொன்றும் என்னென்ன செய்துள்ளது என்பதையும், விண்வெளியில் மனிதர்கள் பதித்த வரலாற்று சிறப்பு மிக்க தடங்களையும் காலவரிசைப்படி அட்டவணையிட்டு மிகவும் சுவாரசியமாக "The Sirens of Mars: Searching for Life on Another World" புத்தகத்தில் சொல்கிறார்.
(2)
செவ்வாய் கிரகத்தில் இது வரை செய்யப்பட்டுள்ள ஆய்வுகள் தொடர்புடைய பல குறிப்பிடத்தக்க நபர்கள் மற்றும் விண்கலங்களின் பங்களிப்புகளை குறித்து இவர் சொல்கையில் ஒரு சுவாரசியமான திரைப்படக் கதை போல அடுத்து என்ன நடந்தது என ஆர்வத்தை தூண்டும் அளவு நேர்த்தியாக விவரிக்கிறார்.
(3)
வுல்ஃப் விஷ்னியாக் (Wolf Vishniac), நார்மன் ஹோரோவிட்ஸ் (Norman Horowitz), வான்ஸ் ஓயாமா (Vance Oyama) மற்றும் கார்ல் சாகன் (Carl Sagan) போன்ற பல முக்கியமான விஞ்ஞானிகளின் பணியை குறித்தும் புத்தகம் ஆராய்கிறது.
(4)
வெற்றியளித்த ஆய்வுகளை மட்டுமல்ல செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் தோல்வியடைந்தவை குறித்தும், அது எப்படி நிகழ்ந்தது என்பது குறித்தும் பேசுகிறது.
இன்று வரை நடந்து வரும் ஆரிச்சிகளை விரிவாக சொல்லி, அடுத்த கட்டமாக மனித இனம் செவ்வாயில் என்ன மாதிரியான ஆராய்ச்சிகளில் ஈடுபட உள்ளது
(5)
என்ற ஆர்வத்தையும் சிந்தனையையும் நம்முள் விதைக்கிறது புத்தகம்.
ஆச்சரியமூட்டும் பல தகவல்களை தெரிந்து கொள்ள படித்துப் பாருங்கள் சாரா ஸ்டீவர்ட் ஜான்சன் அவர்களின் "The Sirens of Mars: Searching for Life on Another World" புத்தகம்.
E-book available in Kindle amzn.eu/d/cEN3xn5
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
உலகப்பொதுமறை திருக்குறள் மனித வாழ்விற்கு தேவையான அத்தனை விஷயங்களையும் சொல்கிறது. மூன்று பால்கள் கொண்டு அமைந்த திருக்குறளில், அறத்துப்பால் பொருட்பால் என இவ்விரு பால்களிலும் உள்ள குறள்களை பள்ளியிலும் பல பொது இடங்களிலும் படித்திருப்போம்.
(1)
மனித வாழ்வில் இன்றியமையாத இன்பம் குறித்து பேசும் காமத்துப்பால் வெகுஜன மக்களால் பெரிதாய் பேசப்படுதில்லை, காரணம் காமம் பேசாப்பொருள் என சமூகம் கற்பித்து வைத்துள்ளது தான்.
காமம் இப்படி பேசாப்பொருளாக இருப்பது தான் வாழ்வில் அடிப்படையான பல பிரச்சனைகளுக்கு காரணம்.
(2)
மிக முக்கியமாக எதிர்ப்பாலினம் குறித்து தவறான பார்வையையும் குறுகிய மனநிலையையும் ஏற்படுத்துகிறது. இந்த மாயை விலகி ஆரோக்கியமான மனநிலையுடன் வாழ்வை அணுக முதலில் காமம் குறித்த புரிதலை உள்வாங்க வேண்டும்.
(3)
⚠️இது வெறும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல.
==========
ஒரு அடுப்பில் வைத்திருந்த குக்கர் ஸ்ஸ்ஸ் என்று விசிலடித்து தன் இருப்பை காட்ட, ஒரு கையால் அந்த குக்கரை எடுத்து கீழே வைத்து விட்டு கடாயை அடுப்பில் வைத்து
எண்ணெய் ஊற்றி சமையல் செய்ய ஆரம்பித்தான், மற்றொரு அடுப்பில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த கடாயில் எதையோ வதக்கி கொண்டிருந்தான். இப்படி இரு அடுப்பிலும் வைத்திருந்த கடாய்களில் குழம்பு, கூட்டு என வகைவகையாய் ஒரே நேரத்தில் செய்து கொண்டிருந்தவன், பக்கத்து அறையிலிருந்து வந்த சத்தத்தை
கேட்டு சமையல் அறையை விட்டு வெளியே வந்தான்.
குளியலறையில் இருந்து தலை துவட்ட துண்டு கேட்ட தன் மனைவிக்கு துண்டை எடுத்துக் கொடுத்தவனின் நாசிக்கு அடுப்பில் ஏதோ கரியும் வாசனை எட்டியது, காரியமே கெட்டதே என புலம்பிக்கொண்டே சமையலறையை நோக்கி ஓடினான். அங்கு அவன் கடாயில் வைத்திருந்த
#கீழடி #thread
மதுரையிலிருந்து சுமார் 13 கிமீ தொலைவில் உள்ள வைகை ஆற்றங்கரையில் உள்ள கீழடி எனும் குக்கிராமத்தில் இந்திய தொல்லியல் துறையின் முதல் இரண்டு கட்ட அகழ்வாராய்ச்சியின் தொல்பொருள் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் சங்க காலம் கிமு 800க்கு பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது.
(1)
கீழடியைக் கண்டுபிடித்து, 2014 முதல் 2016 வரையிலான முதல் இரண்டு கட்ட அகழ்வாராய்ச்சிகளுக்குத் தலைமை தாங்கிய K. அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் சமீபத்தில் ஏஎஸ்ஐ இயக்குநர் ஜெனரல் வி. வித்யாவதியிடம் தனது 982 பக்க அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார்.
இந்த அறிக்கை 12 அத்தியாயங்களில்
(2)
வரலாற்று பின்னணி மற்றும் அகழ்வாராய்ச்சியின் நோக்கங்களை விளக்குகிறது. முதல் இரண்டு கட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட பண்பாட்டு எச்சங்களின் அடிப்படையில், சங்க கால தொல்பொருள் தளத்தின் காலம் கிமு 8 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3 ஆம் நூற்றாண்டு வரை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
(3)
இன்று அனைத்து அரசு விழாக்களிலும், கல்வி நிலைய விழாக்களிலும் பாடப்படும் "நீராருங் கடலுடுத்த” எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படவேண்டும் என ஆணை பிறப்பித்து கையெழுத்திட்டது.
ஒரு மனிதனை சக மனிதன் உட்கார வைத்து இழுத்துக்கொண்டு செல்லும் அவலம் நிறைந்த கை ரிக்ஷாக்கள் ஒழிக்கப்பட்டு சைக்கிள் ரிக்ஷாக்களை அறிமுகம் செய்ய கையெழுத்திட்டது.
குடிசை வீடுகள் இல்லா தமிழகத்தை அமைக்க 'குடிசை மாற்று வாரியம்’ உருவாக்க கையெழுத்திட்டது.
(2)
சுதந்திர தினத்தன்று பிரதமரும், குடியரசு தினத்தில் குடியரசுத் தலைவரும், மாநிலங்களில் ஆளுநர்கள் மட்டுமே கொடியேற்றுவது மரபாக இருந்த நிலையில், மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநரைவிட மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களே கொடி ஏற்றும் உரிமை பெற்றவர்
(3)
மோடி அவர்களை குறித்து BBC ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டுருக்கு, BBC யாருன்னா நம்மள ஆட்சி செஞ்ச பிரிட்டிஷ் காரர்களின் செய்தித்தாள் என சொல்லி இந்த வீடியோவை ஆரம்பிப்பதே, விடியோ பார்ப்பவர்களின் மனநிலையை BBC ஆவணப்படத்திற்கு எதிராக தயார் செய்வது போல் உள்ளது.
(1)
இந்தியாவின் இறையாண்மையை குலைக்க செய்யப்படும் சதி தான் இந்த ஆவணப்படம் எனவும், மோடி அவர்களை இழிவு செய்ய அவதூறு பரப்பும் விதமாக செய்யப்பட்ட விஷயம் இது எனவும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் சொன்னதாக பதிவு செய்துள்ளீர்கள்.முதலில் அவதூறு என்பது இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி சொல்வது
(2)
என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், இந்த BBC ஆவணப்படத்தில் அவதூறு பரப்பப்படவில்லை இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்த வன்முறை வெறியாட்டத்தை வெளிச்சம் போட்டு கட்டியுள்ளனர். உண்மையாக நடந்ததை எடுத்து சொல்வது அவதூறு ஆகாது என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன்.
(3)
ஊருக்குள்ள இருக்குற மொத்த சாதிவெறி அப்யூஸர் கூட்டமும் இந்த பதிவுக்கு கீழ தான் குத்தவச்சுருக்கு.
இவங்களுக்கெல்லாம் தான் ஏதோ இந்த கலாச்சாரத்தை தூக்கி நிறுத்துற மாதிரி நெனைப்பு. மூஞ்சி தெரியாத ஒரு ஐடில வந்து சாதி வெறியை காட்டுற கோழைகளின் ஒரு சின்ன sample தான் இந்த abuser கூட்டம்👇🏽
ஒருத்தர் என்னன்னா இந்த காதலர்கள அங்கையே கொலை செஞ்சிருக்கனும்னு சொல்லுறாரு, இன்னொருத்தர் ஏதோ வீட்ல உள்ள ஆடு மாடு மாதிரி நான் சொல்லுறத மட்டும் தான் என் பிள்ளைகள் கேக்கனும்னு சொல்லுறாரு, என் புள்ள யாருகூட வாழனும்னு நான் தான் முடிவு செய்வேன்னு சொல்லுறதெல்லம் அசிங்கம்னு கூட தெரியல 👇🏽
இன்னும் சாதியை கட்டிகிட்டு அழர இந்த சாதிவெறி கூட்டத்துக்கிட்ட இருந்து இந்த சமூகம் மேல வரனும்னா சுயமா யோசிக்க கத்துக்கனும், கலாச்சாரம் பண்பாடு எல்லாத்தையும் பொண்ணுங்க காலுக்கு நடுவுல வச்சிருக்கிற இந்த சாதிவெறி கூட்டம் சொல்லுறத ஒரு பொருட்டாகவே மதிக்காம கடந்து போறது தான் சரி 👇🏽