#ராமநாம_மகிமை 1. நமக்கு நன்மை வர வேண்டுமானால் 'ராம நாமத்தை' இடைவிடாமல் கூறவேண்டும். நம் ஒவ்வொரு மூச்சும் 'ராம் 'ராம்' என்றே உட்சென்றும் வெளியேறுதலும் வேண்டும்.
2. நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே மிகச் சிறந்த பிராயச்சித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும்
தண்டனையை ஏற்பதும், பிராயச்சித்தமும் ராம நாமமே. காலால் நடக்கும் ஒவ்வொரு அடியும் 'ராம் ராம்' என்றே நடக்க வேண்டும்.
3. எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் 'ராம நாம ஜபமே.' கிழக்கு நோக்கி செல்ல செல்ல மேற்கில் இருந்து விலகி விடுவோம். அது போல ராம நாமாவில் கரைய கரைய துக்கத்தில்
இருந்து விலகி செல்கிறோம்.
4. ‘ராம நாம' ஜபத்திற்கு குரு கிடைக்க வேண்டும் என்று கால தாமதம் செய்தல் கூடாது. ஏனெனில் 'ராம நாமமே' தன்னுள் குருவையும் கொண்டுள்ளது . நாமமே பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.
5. காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்ல வேண்டியது 'ராம நாமம்.'
எழுந்து கடமைகளை செய்யும் போதும் சொல்ல வேண்டியதும் ‘ராம நாமம்.' ஒவ்வொரு நாளும் நமக்கு ‘ராம நாம' நாளாக இருக்க வேண்டும்.
6. 'ராம நாம' ஜபத்தில் நாம் இருந்தால் நம் கர்ம வினைப்படி துக்கமோ அவமானமோ நிகழ வேண்டியதாயின் அவை தடுக்கப்படும் அல்லது நமக்கு அதிக பாதிப்பின்றி மாற்றி அமைக்கப்
படும். பாதிப்பினை தாங்கும் வலிமையையும், அதை பிரசாதமாக ஏற்கும் பக்குவமும் வரும்.
7. எந்த இடத்திலும் எந்த நிலையிலும் ராம நாமத்தைச் சொல்லலாம். உணவு உண்ணுமுன் 'ராம நாமா' சொல்லி சாப்பிடலாம். இறைவனும் அவனது நாமாவும் ஒன்றே!
8. ‘ராம நாமா' எழுத மனம், உடம்பு, கைகள் ஒருமித்து
செயல்படவேண்டும். ஆனால் 'ராமநாமா' சொல்ல மனம் மட்டும் போதும். இதைதான் “நா உண்டு, நாமா உண்டு" என்றனர் பெரியோர்கள் .
9. ஒரு வீட்டில் உள்ள பெண் 'ராம நாமா' சொன்னால் அந்த பெண்ணின் குடும்பம், கணவன் குடும்பம், குழந்தைகள், பெற்றோர்கள் அனைவரும் பிறப்பு, இறப்பு சுழலிலிருந்து விடுபடுவர்.
அந்த வீட்டில் தெய்வீகம் நிறைந்து விடும். அதுவே கோவிலாகும்.
10. எல்லாவித சாஸ்திர அறிவும் 'ராம நாமாவில் அடங்கும். எல்லாவித நோய்களுக்கும் 'ராம நாமா' சிறந்த மருந்து, துன்பங்களுக்கும் அதுவே முடிவு.
11. நமது இலட்சியம் அழியா ஆனந்தமே. அது 'ராம நாம ஜபத்தால் பெற முடியும். ராம
12. காசி விஸ்வநாதர் கோவிலில் மாலை வழிபாட்டின் போது (சப்தரிஷி பூஜையின் போது) ஒவ்வொரு நாளும், வில்வ தளங்களில் சந்தனத்தால் ராம நாமம் எழுதி அவற்றை விஸ்வநாதருக்கு
சமர்ப்பிக்கிறார்கள்.
13. பெண்களின் மாதாந்திர நாட்களிலும் 'ராம நாமா' சொல்வதன் மூலம் அந்த பிரபஞ்ச சக்தியிடமே அடைக்கலமாகிறோம். ‘ராம நாமா' சொல்ல எந்த ஒரு விதியும் இல்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு.
14. சமைக்கும் பொழுது ராம நாமம் சொல்லி சமைத்தால், அந்த உணவே ராம பிரசாதமாகி,
அதை உண்பவருக்கு தூய குணங்களையும், நோயற்ற தன்மையையும் அவர்களது உடல் ஆரோக்கியத்தையும் பெறும். நோய்கள் இருப்பின் குணமாகும்.
15. வேதங்களின் படி ஒருவன் புண்ணிய நதிகளில் நீராடி பின்பு வேதம் கற்று, பூஜைகளை நியதிப்படி செய்தவனாய், யோகியாய் முந்தைய ஜன்மங்களில் வாழ்ந்தவனாக
இருந்தால், சுமார் 40,00,000 பிறவிகளை கடந்தவனாக இருந்தால் மட்டுமே அவனால் 'ராம நாமா' வை ஒரு முறை சொல்லமுடியும்.
16. ராம நாமாவை உரக்க சொல்ல, காற்றில் ராம நாம அதிர்வு பரவி, காற்றில் ஒரு தூய்மையை ஏற்படுத்தும். கேட்கும் மற்றவருக்குள்ளும் அந்த தூய அதிர்வு ஊடுருவி தூய்மை மற்றும்
அமைதியை கேட்பவருக்கும் தரும்.
சுற்றியுள்ள மரம், செடி கொடிகள், பறவைகள், விலங்குகள் எல்லாம் ‘ராம நாமா' கேட்டு கேட்டு அவைகளும் மிக உயர்ந்த பிறவிகளை பெறலாம். இதுவும் சேவையே! நம் முந்தைய பிறவிகளில் நாமும் ‘ராம நாமா' கேட்டு கேட்டு இப்போதைய பிறவியை பெற ஏதேனும் ஒரு பக்தரின்
வீட்டருகில் மரமாய் செடியாய் பறவையாய் விலங்காய் இருந்தோமோ! ‘ராம நாமா' சொல்லும் பொழுது ஏற்படும் தூய அதிர்வு, காற்றில் பதிந்துள்ள மனிதர்களின் தீய எண்ணங்களால் ஏற்பட்ட தீய அதிர்வுகளை, தீய சக்திகளை, நோய்க் கிருமிகளை அழித்துவிடும். ராம நாமா அதிர்வு, கோபம் வெறுப்பு பொய் பொறாமை சூது
போன்ற தீய குணங்களின் தன்மைகளுக்குக் காரணமான gene codingஐ அழித்து, ராம நாம அதிர்வு, சாந்தம் பொறுமை பணிவு உண்மை தூய்மைக்குக் காரணமான ராமரின் குணங்களை ஏற்படுத்தும். ('யத் பாவோ தத் பவதி'--எதை நினைக்கிறாயோ அதுவே ஆகிறாய்!) ‘ராம நாமா' சொல்ல சொல்ல பரப்ரம்மமாகவே ஆகி விடுகிறோம்.
அகில
உலகையும் வியாபித்து காக்கும் விந்தை மிக்கதோர் நுண்ணிய சக்தியே ‘ராம்’. அதுவே உருவம் கொண்ட போது தசரதராமனாக, சீதாராமானாக, ரகுராமனாக, கோதண்டராமனாக பெயருடன் (நாம ரூபமாக) வந்தது.
உண்மையில் சத்தியமாம் ஒரே உண்மை ராம் ஒருவனே. ராம் அனைத்திலும் உள்ளான், அனைத்தும் ராமில் உள்ளன. ராம்
ஒருவனே உண்மையான பேரன்பே வடிவான உணர்வுமய வஸ்து. பிரம்மம் என்பதும் அவனே! எண்ணம், மனம், செயல், உள்ளம், உயிர் அனைத்தும் ராமில் ஒடுங்கவேண்டும். இடைவிடாது ராம நாமத்தை ஜபித்து வந்தால் அழியா இன்பத்தை ராம் அருள்வான் என ஸ்வாமி பப்பா ராமதாஸ் தமது தந்தையிடம் உபதேசமும் பெற்று ராம
நாமத்தில் கரைந்து ராம ரசமாய், அதன் மயமாய், தானே ஆனார்.
17. மற்ற எல்லா தர்மங்களும் ஒன்று பாவத்தை நீக்கும், மற்ற ஒன்று புண்ணியத்தைத் தரும். ஆனால் 'ராம நாமா' ஒன்றே பாவத்தை அறுத்து, புண்ணியமும் அர்ப்பணமாகி பாவ, புண்ணியமற்று (நிச்சலதத்வம் ஜீவன்முக்தி) முக்தி தரும்.
18. ராம நாமா
மட்டுமே நன்மையே கொண்டு வந்து தரும். மருந்தின் தன்மை தெரியாமல் சாப்பிட்டாலும் அது நோயினை குணப் படுத்திவிடும். அது போல ராம நாமாவும் சொல்லச் சொல்ல பிறவி நோயை, துக்க நோயை, ஆசை என்ற சம்சார நோயை அழித்து விடும்.
19. நம் கைகளால் எது கொடுத்தாலும், அது நம் தலைவனாகிய ஸ்ரீ ராமனுக்கே
(எதிரில் உள்ள மனித வடிவில் உள்ள எஜமான் ஸ்ரீராமனுக்கே) கொடுக்கிறோம். எது எதனை எவரிடம் இருந்து பெற்றாலும், நமது அன்னையாகிய ஸ்ரீராமனே (எதிரில் உள்ள மனித வடிவில்) கருணை உடனும், அன்புடனும் நம் நன்மைக்காகத் தருகிறான். இந்த உணர்வு பெருக, பெருக ஸ்ரீ ராமனே தந்து வாங்குகிறான்.
கொடுப்பவன் ஸ்ரீ ராமன். வாங்குபவன் ஸ்ரீ ராமன்.
20. 'ராம நாமா' சொல்லச் சொல்ல நிகழும் எல்லா செயல்களும் நிகழ்ச்சிகளுக்கும் அந்த ஒன்றே காரணமாகிறது என்பதும் எல்லாம் அந்த பிரம்மத்தின் விளையாட்டே என்பதும் உள்ளங்கை நெல்லிக் கனியாய் உணரப்படும்.
21. ‘ராம நாமா' சொல்லச் சொல்ல
சொல்லுவதன் மூலம், பார்ப்பது ராம், பார்வை ராம், பார்க்கப்படுவது ராம், கேட்பது ராம், கேள்வி ராம், கேட்கபடுவது ராம், புலன்கள் ராம், உணர்வது ராம், உணரப்படுவது ராம், உணர்வு ராம், இந்த பிரபஞ்சம் ராம், இந்த மனம் ராம், புத்தி ராம், உடலும் ராம், ஆன்மா ராம், 24 தத்துவங்கள் ராம்,
நன்மை தீமை, இன்பம் துன்பம் , எல்லாம் ராம், எல்லாம் ராம், எல்லாம் ராம். இத்தகைய ராம நாமாவில் பைத்தியமாவதே, அனைத்தும் ராமனாக ஆன்மாவாக (ஏகாக்கிரக சித்தமாக) அனைத்தும் ஒன்றாக அறிவதே உண்மையான அறிவு. அனைத்தும் ஒன்றாக ராமனாக (ஆத்மா ராமனாக) பார்ப்பதுவே எல்லா எண்ணங்கள் எல்லா
செயல்கள் எல்லா உணர்ச்சிகளிலும் இறை உணர்வை உணர்வதுவே இந்த பிறவியின் பயனாகும்.
பகவத் கீதை: அத்: 2 - 17
"இந்த வையகம் முழுதும் பரந்து விரிந்து நிற்கும் பொருள். அழிவே இல்லாதது என்பதை அறிந்து கொள்; அது தீங்கற்றது; அதனை அழிக்க யாராலும் முடியாது”
இவ்வாறு வாழ்ந்தவளே அன்னை சீதா தேவி.
அந்த அளவிற்கு சீதாதேவி ராமனின் மீது பைத்தியமாக இருந்தாள்.
ஸ்ரீ ராம ஜயம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#MahaPeriyava
Narrated by SriMatham Balu Mama
Source: Maha Periyaval Darisana Anubhavangal
In a small village in Thanjavur district, all the families were devoted to SriMatham. There was bitter enmity in the street where the Brahmins lived and they had fallen apart to form two
groups. The reason was not worth a pinch of salt, though the enmity grew to enormous proportions. By some quirk of circumstances, both Ananthu and Sethu, who spear-headed the two groups respectively, came to Sri Maha Periyava at the same time. They prostrated to Periyava.
"Excellent!" said Periyava. "Have you both come together?"
"Yes", they lied in one voice, not wanting to broadcast their enmity in Periyava's presence. Periyava chatted with them for long. In between, He gestured to the attendants in a way in which they alone could understand, to
#நற்சிந்தனை
விசித்திரபுரம் என்ற ஊரில் ஞானசித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்து வந்தான். அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த ஸ்ரீ கிருஷ்ண பக்திமானாக இருந்தும் அவனுக்கு வாய்த்த மனைவி கொடுமைக்காரியாக இருந்ததால் அவன் வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது. வேலை நேரத்தை தவிர்த்து மற்ற
நேரங்களை இறை தியானத்திலும் பிராத்தனையிலும் செலவிட்டான். ஆனால் கஷ்டங்கள் என்னவோ அதிகமாக சூழ்ந்து கொண்டன. அதே ஊரில் குமணவித்தன் என்ற சூழ்ச்சி குணமுடைய பணக்கார நண்பன் இருந்தான். தன் இன்பத்திற்காக எந்த ஒரு கொடுமையான செயலையும் செய்யும் குணமுடையவன். அவனுக்கு நல்ல குணமுள்ள பக்தியில்
சிறந்த மனைவியும் அமைந்திருந்தாள். அவனுக்கு கடவுள் நம்பிக்கை துளிகூட இல்லை. அவனுக்கு தன் நண்பன் ஞானசித்தனின் கடவுள் நம்பிக்கையை கேலி செய்வது வாடிக்கையான வேலை. இதன் காரணமாக ஒரு கட்டத்தில் இருவரிடையே சண்டையே வந்து, கோபத்தில் ஞானசித்தன், ஸ்ரீ கிருஷ்ணன் மீது தனது பக்தி உண்மையாக
#மொட்டை_அடித்துக்_கொள்ளுதல்
ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்றோர் தங்களுடைய ஆண் பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு குலதெய்வத்தின் ஆலயங்களுக்குச் சென்று அங்கு குலதெய்வத்தின் சந்நிதியில் குழந்தைகளுக்கு தலைமயிரை நீக்கி மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். பெரியோர்களும் ஒரு சில
விருப்பங்கள் நிறைவேறுவதற்காக மொட்டை அடித்துக் கொள்ளுதல் என்ற தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். உடலில் அனைத்து உறுப்புகளுக்குள்ளும் தலையே முக்கியம் எனும் சாஸ்திரப்படி ஒருவன் தன்னையே, தனது உடலையே இறைவனுக்கு அர்ப்பணம் சரணாகதி செய்ய வேண்டும் என்று விரும்பினால் அதை உணர்த்தும்
விதமாக தலையிலுள்ள கேசங்களை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்கிறான். இதுவே மொட்டை அடித்தல் எனப்படுகிறது. ஆகவேதான் இறைவனிடம் தன்னையே ஒப்படிக்கும் விதமாக பக்தர்கள் குலதெய்வ ஆலயங்களில் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கிறார்கள். குழந்தை பிறந்த ஒரு வருடத்துக்குள்ளேயோ அல்லது சில காலங்கள் முன்னோ
#உலகம்மை_அந்தாதி எனும் அற்புதமான நூலை இயற்றினார் #நமச்சிவாயக்கவிராயர் அபிராமி அந்தாதியைப் போல் அதியற்புதமான நூல் இது. அந்தாதி பாடப்பாட அம்மையின் கரத்துள்ள பூச்செண்டின் தங்க நார்கள் ஒவ்வொன்றாய் அறுந்து விழுந்தன!
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விக்ரமசிங்கபுரத்தில்
பிறந்தவர் நமச்சிவாயக் கவிராயர். பாபநாசத்தில் எழுந்தருளியிருக்கும் பாபநாசநாதர் மற்றும் உலகம்மை மீதும் பெரும்பக்தியும் பேரன்பும் செலுத்திவந்தார். குறிப்பாக உலகம்மை மீது அவருக்கு அத்தனை அன்பு. நமச்சிவாயர் நாள்தோறும் பாபநாசம் சென்று அங்கு எழுந்தருளி இருக்கும் உலகம்மையை வழிபாடு செய்து
வருவது வழக்கம். ஒரு நாள் இரவு, வழக்கம் போல பாபநாசம் சென்று உலகம்மையைத் தொழுதுவிட்டு இல்லத்திற்குத் திரும்பும் போது, உலகம்மையைப் புகழ்ந்து கவிதை பாடிக்கொண்டே வந்தார். பக்தன் பாடும் கவிதையை கேட்க ஆவல் கொண்ட உலகம்மை, அர்ச்சகர் அலங்கரித்த அலங்காரத்தோடு, கவிராயரை பின் தொடர்ந்து வந்தாள
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள்
மகாராஷ்டிராவில் வசித்து வந்த ஜானுதேவர், சத்யவதி தம்பதிக்குப் பிறந்த மகன் புண்டரீகன். பெற்றோரிடம் மிகுந்த மரியாதையும் பக்தியுமாக இருந்தவன், திருமணத்துக்குப் பின் மனைவியின் பேச்சால் அவர்களை அவமதிக்கத் துவங்கினான். மனம் நொந்து, பெற்றோர் காசி யாத்திரைக்குப்
புறப்பட்டனர். அவர்கள் மட்டும் எப்படிப் போகலாம்? நாமும் போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள், புண்டரீகனின் மனைவி. காசி போகும் குழுவில் அவர்களும் சேர்ந்தனர். பெற்றோர் நடந்து வர, புண்டரீகனும் அவன் மனைவியும் குதிரையில் சவாரி செய்தனர். அவர்கள் எல்லோரும் குக்குட முனிவரின் ஆசிரமத்தில
தங்கி ஓய்வெடுத்தனர். விடியும் நேரத்துக்குச் சற்று முன்பாக, நைந்து போன ஆடைகளில் அழுக்கும் அருவருப்பான தோற்றமுமாக அழகான யுவதிகள் பலர் ஆசிரமத்துக்குள் நுழைவதைப் புண்டரீகன் பார்த்தான். அவர்கள் ஆசிரமத்தின் தரையைச் சுத்தம் செய்தனர். முனிவரின் உடைகளைத் துவைத்தனர். கிணற்றிலிருந்து தண்ணீர
#ஶ்ரீவிஷ்ணுசஹஸ்ரநாமம்_சொல்வதால்_ஏற்படும்_நன்மைகள்
மகாபாரதத்தின் இறுதிக்கட்டம். பீஷ்மர் அம்புப் படுக்கையில் மரணத்தை எதிர் நோக்கிப் படுத்திருக்கிறார். கதறிக் கொண்டிருந்த கொல்லப்பட்ட வீரர்களின் மனைவிகள், தாய்மார்கள் மத்தியில் இன்னொரு தெய்வப் பெண்மணியும் தனியாக நின்று அழுதாள். அதைக்
கண்ட தருமபுத்திரர் கிருஷ்ணனைப் பார்த்து, "இவள் யார்? இவள் ஏன் அழுகிறாள்?” என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணர், "இவள் தர்ம தேவதை. இனி உலகில் தர்மமே இருக்கப் போவதில்லை. பூமியில் எனக்கென்ன வேலை என்று உலகை விட்டுப் போகிறாள் அவள்”என்றார். தர்மபுத்திரரை பயம் சூழ்ந்து கொண்டது. காரணம்-
பாண்டவர்களுடைய பேரனான ஜெனமேஜெயன் ஆளும்போது இந்த நாட்டில் தர்மம் இருக்காதா என்கிற பயம்தான் அது. "தர்மம் மீண்டும் செழிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?” என்று பரந்தாமனை தர்மர் கேட்க, பரந்தாமனோ "அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரைக் கேள், அவர் சொல்வார்” என்றார்.