#உலகம்மை_அந்தாதி எனும் அற்புதமான நூலை இயற்றினார் #நமச்சிவாயக்கவிராயர் அபிராமி அந்தாதியைப் போல் அதியற்புதமான நூல் இது. அந்தாதி பாடப்பாட அம்மையின் கரத்துள்ள பூச்செண்டின் தங்க நார்கள் ஒவ்வொன்றாய் அறுந்து விழுந்தன!
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விக்ரமசிங்கபுரத்தில்
பிறந்தவர் நமச்சிவாயக் கவிராயர். பாபநாசத்தில் எழுந்தருளியிருக்கும் பாபநாசநாதர் மற்றும் உலகம்மை மீதும் பெரும்பக்தியும் பேரன்பும் செலுத்திவந்தார். குறிப்பாக உலகம்மை மீது அவருக்கு அத்தனை அன்பு. நமச்சிவாயர் நாள்தோறும் பாபநாசம் சென்று அங்கு எழுந்தருளி இருக்கும் உலகம்மையை வழிபாடு செய்து
வருவது வழக்கம். ஒரு நாள் இரவு, வழக்கம் போல பாபநாசம் சென்று உலகம்மையைத் தொழுதுவிட்டு இல்லத்திற்குத் திரும்பும் போது, உலகம்மையைப் புகழ்ந்து கவிதை பாடிக்கொண்டே வந்தார். பக்தன் பாடும் கவிதையை கேட்க ஆவல் கொண்ட உலகம்மை, அர்ச்சகர் அலங்கரித்த அலங்காரத்தோடு, கவிராயரை பின் தொடர்ந்து வந்தாள
அம்பிகை வருவதை அறியாத கவிராயர், வெற்றிலை தரித்து போட்டுக் கொண்டு வாய்விட்டுப் பாடி வந்தார். மெய்ம்மறந்து பாடியபோது அவருமறியாமல் தெறித்த எச்சில் துளிகள் தேவியின் மேல்பட்டன. அத்திருக்கோலத்தோடு உலகம்மை கோயிலில் மீண்டும் எழுந்தருளினாள். மறு நாள் காலையில், கோயிலைத் திறந்து பார்த்த
அர்ச்சகர், உலகம்மையின் சேலையில் தெரிந்த எச்சில் துளிகளைக் கண்டு திடுக்கிட்டார். இறைவழிபாட்டுக்குப் பாபநாசம் வந்திருந்த அரசனிடம் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டது. மன்னன் வேதனையுற்றான். இப்பாதகத்தை செய்தவன் யார் என அரசன் யோசித்துக் கொண்டு தூங்குகையில், அவன் கனவில் அசரீரி 'விஜயரங்க
சொக்கநாதா! உலகம்மை யான்! என் மீது கொண்ட பக்தியினால் நமச்சிவயாத்தின் பாடலுக்கு வசப்பட்டு அவனறியாது அவன் பின் சென்றவள் நானே. எனது கவனக் குறைவாலே அவன் துப்பிய எச்சில் என் மீது பட்டது. அவனை விட சிறந்த பக்தன் கிடையாது. அதனால் அவனுக்கு சகல மரியாதைகளையும் செய்து கௌரவிப்பாயாக!' என்று
உலகம்மை எடுத்துரைத்தாள். அம்பிகையின் உத்தரவு கேட்டு, இப்படி ஒரு பக்தனா என்று அகமகிழ்ந்தான் அரசன். அம்பிகையின் உத்தரவின் படி கௌரவிக்க எண்ணினான். நமச்சிவாயரை கோவிலுக்கழைத்து "தாங்கள் அம்பிகை தாசர் என்பது ஸத்யமானால், இதோ உலகம்மை கையிலிருக்கும் தங்கப் பூச்செண்டு, தாங்கள் பாடப் பாட
அப்பூச்செண்டை சுற்றியிருக்கும் தங்க கயிறுகள் அறுந்து, பூச்செண்டு தானாக உங்கள் கையில் வந்து விழ வேண்டும்" என்றான் அரசன். உலகம்மை அந்தாதி எனும் அற்புதமான நூலை அப்பொழுது இயற்றினார். அந்தாதி பாடப்பாட அம்மையின் கரத்துள்ள பூச்செண்டின் தங்க நார்கள் அறுந்து விழுந்தன. என்னே உலகம்மையின்
கருணை!

"விண்டல நின்ற சரற்கால சந்திர சுவேதமுக
மண்டலமும் கையில் மலரொடும் தோளில் வழிந்த ரத்ன
குண்டலமும் பொலி வாலப் பிராய குமாரத்தியாய்
செண்டலர் செங்கை உலகாள் என் நாவில் சிறந்தவளே"

எனும் பாடலை பாடி முடித்த சமயம் படபடவென்று அனைத்து தங்க நாரும் அறுந்து, தங்கச் செண்டு தேவியின்
கையிலிருந்து நமச்சிவாயர் கரத்திற்கு தாவி வந்தது. அரசர் முதற் கொண்டு அனைவரும் நமச்சிவாயர் பாதத்தில் விழுந்தனர். இவ்வாறு தன் பக்தனின் எச்சிலை அணியாக ஏற்ற உலகம்மையின் கருணையை எண்ணி அவளைத் துதிப்போம்.
அம்பிகையின் திருவடிகளில் சரணம்!
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Mar 22
#SriKrishnaPremi_Swamigal #SriSri_Anna
He is an embodiment of kindnes and compassion who has come to this world to initiate us in the path of Nama Sankeerthanam which is the only way to attain Hari in Kali. He was born to pious parents, Sri Venkatarama Shastrigal - Smt. Parvathi Image
Ammal in a village Senganur on the banks of Cauvery. He was born on the Krishnashtami day, Rohini star in 1934 was named Ramakrishnan. His family were the descendents of the renowned Vaishnavite Acharya Sri Periya Vachan Pillai. In his childhood he charmed everyone with his Bala Image
leelas and came to be fondly known as Ambi. Right from an early age of 8 he was joyfully engaged in composing soulful Bhajans and verses on Sri Krishna. Next came a period of rigorous Yogic practices and Dhyana. Sri Anna had become a master yogi by the age of 12. After which with
Read 19 tweets
Mar 22
#MahaPeriyava
Narrated by SriMatham Balu Mama
Source: Maha Periyaval Darisana Anubhavangal

In a small village in Thanjavur district, all the families were devoted to SriMatham. There was bitter enmity in the street where the Brahmins lived and they had fallen apart to form two Image
groups. The reason was not worth a pinch of salt, though the enmity grew to enormous proportions. By some quirk of circumstances, both Ananthu and Sethu, who spear-headed the two groups respectively, came to Sri Maha Periyava at the same time. They prostrated to Periyava.
"Excellent!" said Periyava. "Have you both come together?"
"Yes", they lied in one voice, not wanting to broadcast their enmity in Periyava's presence. Periyava chatted with them for long. In between, He gestured to the attendants in a way in which they alone could understand, to
Read 8 tweets
Mar 22
#நற்சிந்தனை
விசித்திரபுரம் என்ற ஊரில் ஞானசித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்து வந்தான். அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த ஸ்ரீ கிருஷ்ண பக்திமானாக இருந்தும் அவனுக்கு வாய்த்த மனைவி கொடுமைக்காரியாக இருந்ததால் அவன் வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது. வேலை நேரத்தை தவிர்த்து மற்ற Image
நேரங்களை இறை தியானத்திலும் பிராத்தனையிலும் செலவிட்டான். ஆனால் கஷ்டங்கள் என்னவோ அதிகமாக சூழ்ந்து கொண்டன. அதே ஊரில் குமணவித்தன் என்ற சூழ்ச்சி குணமுடைய பணக்கார நண்பன் இருந்தான். தன் இன்பத்திற்காக எந்த ஒரு கொடுமையான செயலையும் செய்யும் குணமுடையவன். அவனுக்கு நல்ல குணமுள்ள பக்தியில்
சிறந்த மனைவியும் அமைந்திருந்தாள். அவனுக்கு கடவுள் நம்பிக்கை துளிகூட இல்லை. அவனுக்கு தன் நண்பன் ஞானசித்தனின் கடவுள் நம்பிக்கையை கேலி செய்வது வாடிக்கையான வேலை. இதன் காரணமாக ஒரு கட்டத்தில் இருவரிடையே சண்டையே வந்து, கோபத்தில் ஞானசித்தன், ஸ்ரீ கிருஷ்ணன் மீது தனது பக்தி உண்மையாக
Read 17 tweets
Mar 21
#மொட்டை_அடித்துக்_கொள்ளுதல்
ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்றோர் தங்களுடைய ஆண் பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு குலதெய்வத்தின் ஆலயங்களுக்குச் சென்று அங்கு குலதெய்வத்தின் சந்நிதியில் குழந்தைகளுக்கு தலைமயிரை நீக்கி மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். பெரியோர்களும் ஒரு சில
விருப்பங்கள் நிறைவேறுவதற்காக மொட்டை அடித்துக் கொள்ளுதல் என்ற தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். உடலில் அனைத்து உறுப்புகளுக்குள்ளும் தலையே முக்கியம் எனும் சாஸ்திரப்படி ஒருவன் தன்னையே, தனது உடலையே இறைவனுக்கு அர்ப்பணம் சரணாகதி செய்ய வேண்டும் என்று விரும்பினால் அதை உணர்த்தும்
விதமாக தலையிலுள்ள கேசங்களை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்கிறான். இதுவே மொட்டை அடித்தல் எனப்படுகிறது. ஆகவேதான் இறைவனிடம் தன்னையே ஒப்படிக்கும் விதமாக பக்தர்கள் குலதெய்வ ஆலயங்களில் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கிறார்கள். குழந்தை பிறந்த ஒரு வருடத்துக்குள்ளேயோ அல்லது சில காலங்கள் முன்னோ
Read 14 tweets
Mar 20
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள்
மகாராஷ்டிராவில் வசித்து வந்த ஜானுதேவர், சத்யவதி தம்பதிக்குப் பிறந்த மகன் புண்டரீகன். பெற்றோரிடம் மிகுந்த மரியாதையும் பக்தியுமாக இருந்தவன், திருமணத்துக்குப் பின் மனைவியின் பேச்சால் அவர்களை அவமதிக்கத் துவங்கினான். மனம் நொந்து, பெற்றோர் காசி யாத்திரைக்குப் Image
புறப்பட்டனர். அவர்கள் மட்டும் எப்படிப் போகலாம்? நாமும் போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள், புண்டரீகனின் மனைவி. காசி போகும் குழுவில் அவர்களும் சேர்ந்தனர். பெற்றோர் நடந்து வர, புண்டரீகனும் அவன் மனைவியும் குதிரையில் சவாரி செய்தனர். அவர்கள் எல்லோரும் குக்குட முனிவரின் ஆசிரமத்தில
தங்கி ஓய்வெடுத்தனர். விடியும் நேரத்துக்குச் சற்று முன்பாக, நைந்து போன ஆடைகளில் அழுக்கும் அருவருப்பான தோற்றமுமாக அழகான யுவதிகள் பலர் ஆசிரமத்துக்குள் நுழைவதைப் புண்டரீகன் பார்த்தான். அவர்கள் ஆசிரமத்தின் தரையைச் சுத்தம் செய்தனர். முனிவரின் உடைகளைத் துவைத்தனர். கிணற்றிலிருந்து தண்ணீர
Read 12 tweets
Mar 20
#ராமநாம_மகிமை
1. நமக்கு நன்மை வர வேண்டுமானால் 'ராம நாமத்தை' இடைவிடாமல் கூறவேண்டும். நம் ஒவ்வொரு மூச்சும் 'ராம் 'ராம்' என்றே உட்சென்றும் வெளியேறுதலும் வேண்டும்.

2. நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே மிகச் சிறந்த பிராயச்சித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும் Image
தண்டனையை ஏற்பதும், பிராயச்சித்தமும் ராம நாமமே. காலால் நடக்கும் ஒவ்வொரு அடியும் 'ராம் ராம்' என்றே நடக்க வேண்டும்.

3. எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் 'ராம நாம ஜபமே.' கிழக்கு நோக்கி செல்ல செல்ல மேற்கில் இருந்து விலகி விடுவோம். அது போல ராம நாமாவில் கரைய கரைய துக்கத்தில் Image
இருந்து விலகி செல்கிறோம்.

4. ‘ராம நாம' ஜபத்திற்கு குரு கிடைக்க வேண்டும் என்று கால தாமதம் செய்தல் கூடாது. ஏனெனில் 'ராம நாமமே' தன்னுள் குருவையும் கொண்டுள்ளது . நாமமே பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.

5. காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்ல வேண்டியது 'ராம நாமம்.'
Read 24 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(