#BookReview

#Thread

வானில் மிதக்கும் மேகங்களில் நமக்கு பிடித்த உருவங்களை பொருத்திப் பார்த்து விளையாடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. நம்மைப் போல மேகங்களில் மிதந்து வரும் உருவங்களுடன் விளையாடி சிரித்து மகிழும் மென் வண்ணத்துப்பூச்சி இவள்.

(1)
முதுகில் சதை திரண்டு பாரத்தைக் கொடுத்தாலும், நீண்ட நெடிய வாழ்க்கை பயணக் கனவுகளை சுமந்த அவள், அதனுடன் சேர்த்தே ஒவ்வொரு அடியிலும் அந்த பயணத்தில் வர இருந்த வலிகளை தாங்கும் வலிமையையும் சுமந்தாள்.

தன் கனவுகளை மட்டுமல்ல தன்னை சுற்றி இருந்தவர்களையும் சேர்த்தே சுமந்தாள்.

(2)
கணேசன், அலங்காரவேலன், அப்புனு, ஜோதி, தவமணி, தனக்கே தனக்கான ரேவதி என அனைவரையும் சுற்றி இருந்த அவள் கனவுகள் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து நொருங்கிய பின்னும், உற்ற தோழியாக உடன் இருந்த உடன்பிறவா சகோதரி மல்லிகா அக்கா, அவர் மகன் சிவக்குமார் என வாழ்வில் ஏதோ ஒரு பிணைப்புடன் ஓடினாள்.

(3)
மல்லிகா அக்கா காண்பித்த வழியில் சந்தித்த குப்புவின் கணவர் சாம்பவமூர்த்தி அய்யாவின் துணைக் கொண்டு வாழ்வின் அடுத்த கட்டத்தை எட்டியவள், தன் வாழ்க்கை தொலைந்த இடத்திலேயே அதை தேடி அடைய மீண்டும் சிந்தாதிரிப்பேட்டை நூலகதிற்குள் நுழைகிறாள்.

(4)
அவளின் சிறுவயது நினைவுகளை தாங்கி நின்ற அந்த நூலகத்தை மீண்டும் உயிர் பெற வைப்பவள், அதை சுற்றி இருந்த மக்களின் வாழ்வையும் தெரிந்தோ தெரியாமலோ உயிர்ப்பிக்கிறாள். அங்கு அவளுக்கு கிடைத்த பூர்ணிமா, மீனாளு என அனைவரின் அன்பிலும் மூழ்கும் அவள்,

(5)
பம்பிங் ஸ்டேசன் மக்களின் வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாய் மாறுகிறாள். அங்குள்ள குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக கட்டமைக்க உறுதியான அடித்தளத்தை இடுகிறாள். இப்படி சமூக பொருளாதாரம் என அனைத்திலும் அம்மக்கள் உயர குரல் கொடுக்கிறாள்.

(6)
சாம்பவமூர்த்தி அய்யா அறிமுகப்படுத்திய அண்ணல் அவர்களின் வாக்கை அடிக்கடி நினைத்தவள், தனக்கு கிடைத்ததில் சிறிதளவாவது சமூகத்திற்கு திருப்பி செய்ய வேண்டும் என முனைப்பு காட்டுகிறாள். இயல்பாக இயங்கும் இவள், எழியவர்களுக்கான சமூக பார்வையையும் இயல்பாகவே உள்ளிழுத்துக் கொள்கிறாள்.

(7)
யாரும் எதிர்பாராத ஒரு நாளில் மேகங்களுடன் விளையாட மேகங்களுக்கு நடுவில் சென்று ஒளிந்து கொள்கிறாள், ஆனாலும் அவள் நினைவுகள் அவளை சுற்றி இருந்த மக்களின் வாழ்வில் தலைமுறைகள் கடந்தும் கடத்தப்படுகிறது என்பது தான் அவள் வாழ்ந்த வாழ்வின் அர்த்தமாகி நிற்கிறது.

(8)
இத்தனையையும் வாழ்வில் சுமந்து பால்கனியில் நின்று மேகம் பார்க்கும் "கோசலை". உயரத்தில் குறைவானலும், அவள் வாழ்ந்த வாழ்வில் நிகரில்லா உயரம் சென்று, மேகத்துடன் கலந்துவிட்டவள்.

தோழர் தமிழ்ப்பிரபா @Lovekeegam அவர்கள் எழுதிய "#கோசலை" நாவல் கோசலையின் கதை மட்டுமல்ல,

(9)
பல கேள்விகளையும் அசாத்திய நம்பிக்கையும் நம்முள் எழுப்பும் ஒரு சிறந்த படைப்பு. வாய்ப்புள்ள தோழர்கள் நிச்சயம் படித்துப் பாருங்கள்.

தோழர் தமிழ்ப்பிரபா அவர்களின் "கோசலை" நாவல்.

End ❤️

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Dr. Nagajothi 👩🏽‍⚕️

Dr. Nagajothi 👩🏽‍⚕️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @DrNagajothi11

Mar 13
#திருக்குறள்

#காமத்துப்பால்

உலகப்பொதுமறை திருக்குறள் மனித வாழ்விற்கு தேவையான அத்தனை விஷயங்களையும் சொல்கிறது. மூன்று பால்கள் கொண்டு அமைந்த திருக்குறளில், அறத்துப்பால் பொருட்பால் என இவ்விரு பால்களிலும் உள்ள குறள்களை பள்ளியிலும் பல பொது இடங்களிலும் படித்திருப்போம்.

(1)
மனித வாழ்வில் இன்றியமையாத இன்பம் குறித்து பேசும் காமத்துப்பால் வெகுஜன மக்களால் பெரிதாய் பேசப்படுதில்லை, காரணம் காமம் பேசாப்பொருள் என சமூகம் கற்பித்து வைத்துள்ளது தான்.

காமம் இப்படி பேசாப்பொருளாக இருப்பது தான் வாழ்வில் அடிப்படையான பல பிரச்சனைகளுக்கு காரணம்.

(2)
மிக முக்கியமாக எதிர்ப்பாலினம் குறித்து தவறான பார்வையையும் குறுகிய மனநிலையையும் ஏற்படுத்துகிறது. இந்த மாயை விலகி ஆரோக்கியமான மனநிலையுடன் வாழ்வை அணுக முதலில் காமம் குறித்த புரிதலை உள்வாங்க வேண்டும்.

(3)
Read 10 tweets
Mar 11
#BookReview

#Thread

சாரா ஸ்டீவர்ட் ஜான்சன் (Sarah Stewart Johnson) அவர்கள் அடிப்படையில் ஒரு உயிரியலாளர் (Biologist) ஜியோ கெமிஸ்ட் (Geochemist) வானியலாளர் (astronomer) மற்றும் ப்ளானடரி சயின்டிஸ்ட் (planetary scientist) ஆவார். செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் உள்ளதா

(1) Image
எனத் தேடும் பணியில் உலக நாடுகள் ஒவ்வொன்றும் என்னென்ன செய்துள்ளது என்பதையும், விண்வெளியில் மனிதர்கள் பதித்த வரலாற்று சிறப்பு மிக்க தடங்களையும் காலவரிசைப்படி அட்டவணையிட்டு மிகவும் சுவாரசியமாக "The Sirens of Mars: Searching for Life on Another World" புத்தகத்தில் சொல்கிறார்.

(2)
செவ்வாய் கிரகத்தில் இது வரை செய்யப்பட்டுள்ள ஆய்வுகள் தொடர்புடைய பல குறிப்பிடத்தக்க நபர்கள் மற்றும் விண்கலங்களின் பங்களிப்புகளை குறித்து இவர் சொல்கையில் ஒரு சுவாரசியமான திரைப்படக் கதை போல அடுத்து என்ன நடந்தது என ஆர்வத்தை தூண்டும் அளவு நேர்த்தியாக விவரிக்கிறார்.

(3)
Read 6 tweets
Mar 4
வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து செய்யும் கட்டிட வேலை, ஹோட்டலில் சர்வர் வேலை போன்ற unskilled வேலைகளை செய்ய, வடமாநில தொழிலாளர்களை எதிர்க்கும் எத்தனை தமிழ் பிள்ளைகள் தயாரா உள்ளீர்கள்.

(1)
தமிழ்நாட்டு இளைஞர்கள் படித்து திறன் சார்ந்த வேலைக்கு நகர்ந்து விட்டனர், இங்கு unskilled வேலைகள் செய்ய ஆட்கள் தேவை படுகிறார்கள். உங்கள் வாதப் படி இங்கு வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டாம் என சொன்னால், பட்டம் படித்த இளைஞர்கள் ஹோட்டலில் சர்வர் வேலை செய்ய தயாரா?

(2)
அல்லது கட்டிட வேலை செய்ய பட்டதாரி இளைஞர்கள் தயாரா?

இல்லையல்லவ, தமிழ்நாட்டில் கூடாரம் போட்டு அமர்ந்து கொண்டு வளத்தை சுரண்டும் வடநாட்டு பார்ப்பன பனியா பெருமுதலாளிகளை எதிர்ப்பதை விட்டு விட்டு, பஞ்சம் பிழைக்க வந்த தினக் கூலிகளை எதிர்ப்பது முட்டாள் தனம்.

(3)
Read 4 tweets
Mar 2
#BookReview

#Thread

"Gary Wilson" அவர்கள் எழுதிய "Your Brain On Porn: Internet Pornography and the Emerging Science of Addiction" புத்தகம் அதிகப்படியாக ஆபாச படங்கள் பார்ப்பவர்களில் ஏற்படும் உடல்நலம் மற்றும் மனநல மாற்றங்கள் குறித்து விரிவாக பேசியுள்ளது.

(1) Image
ஆபாச படங்கள் பார்ப்பது சிலருக்கு சாதாரணமான ஒன்று, ஆனால் நாட்கள் செல்ல செல்ல சிலருக்கு இந்த பழக்கம் ஒரு போதைப்பழக்கம் போல மாறி இதற்கு எப்படி அடிமையாகிறார்கள் என்பதையும் விரிவாக பேசுகிறது. இந்த பழக்கத்தால் எப்படி நிஜ உலகில் இருந்து

(2)
மன அளவில் நிழல் உலகத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை சொல்லும் எச்சரிக்கை அடையாளங்கள் குறித்தும் பேசியுள்ளது, முக்கியமாக ஒருவர் இந்த பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறாரா இல்லையா என்பதை பிரித்து அடையாளம் காணுவதற்கான உபாயங்களும் இதில் சொல்லப்படுகிறது.

(3)
Read 5 tweets
Feb 12
#Just_imagine

#ulta_bulta

⚠️இது வெறும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல.

==========

ஒரு அடுப்பில் வைத்திருந்த குக்கர் ஸ்ஸ்ஸ் என்று விசிலடித்து தன் இருப்பை காட்ட, ஒரு கையால் அந்த குக்கரை எடுத்து கீழே வைத்து விட்டு கடாயை அடுப்பில் வைத்து
எண்ணெய் ஊற்றி சமையல் செய்ய ஆரம்பித்தான், மற்றொரு அடுப்பில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த கடாயில் எதையோ வதக்கி கொண்டிருந்தான். இப்படி இரு அடுப்பிலும் வைத்திருந்த கடாய்களில்  குழம்பு, கூட்டு என வகைவகையாய் ஒரே நேரத்தில் செய்து கொண்டிருந்தவன், பக்கத்து அறையிலிருந்து வந்த சத்தத்தை
கேட்டு சமையல் அறையை விட்டு வெளியே வந்தான்.

குளியலறையில் இருந்து தலை துவட்ட துண்டு கேட்ட தன் மனைவிக்கு துண்டை எடுத்துக் கொடுத்தவனின் நாசிக்கு அடுப்பில் ஏதோ கரியும் வாசனை எட்டியது, காரியமே கெட்டதே என புலம்பிக்கொண்டே சமையலறையை நோக்கி ஓடினான். அங்கு அவன் கடாயில் வைத்திருந்த
Read 28 tweets
Feb 10
#கீழடி
#thread
மதுரையிலிருந்து சுமார் 13 கிமீ தொலைவில் உள்ள வைகை ஆற்றங்கரையில் உள்ள கீழடி எனும் குக்கிராமத்தில் இந்திய தொல்லியல் துறையின் முதல் இரண்டு கட்ட அகழ்வாராய்ச்சியின் தொல்பொருள் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் சங்க காலம் கிமு 800க்கு பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது.

(1)
கீழடியைக் கண்டுபிடித்து, 2014 முதல் 2016 வரையிலான முதல் இரண்டு கட்ட அகழ்வாராய்ச்சிகளுக்குத் தலைமை தாங்கிய K. அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் சமீபத்தில் ஏஎஸ்ஐ இயக்குநர் ஜெனரல் வி. வித்யாவதியிடம் தனது 982 பக்க அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார்.

இந்த அறிக்கை 12 அத்தியாயங்களில்

(2)
வரலாற்று பின்னணி மற்றும் அகழ்வாராய்ச்சியின் நோக்கங்களை விளக்குகிறது. முதல் இரண்டு கட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட பண்பாட்டு எச்சங்களின் அடிப்படையில், சங்க கால தொல்பொருள் தளத்தின் காலம் கிமு 8 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3 ஆம் நூற்றாண்டு வரை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

(3)
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(