🔥தோர்™🔥 Profile picture
தமிழன் | 90's Kid 💪 | Diploma Mechanic 😎 | Married 😊 | Dhoni 🤗 | காமராஜர் 🙏 | பெரியார் 🔥| Hollywood ரசிகன் 😍 | புத்தக விரும்பி 📚 அறிவியலை தேடுபவன் 🔭
САНДИ НОВЕРСКИЙ(சாண்டி நொவர்ஸ்கி) Profile picture ஆழ்வார்க்கடியான் Profile picture கோவிந்தராஜன் Profile picture GTR Profile picture Selvi Systems Tiruppur - Computer Laptop Service Profile picture 7 subscribed
Apr 13, 2021 32 tweets 8 min read
#Thread
#தெரிஞ்சிக்கோங்க
#Pompeii

முன்னொரு காலத்துல பாம்பெயிங்கிற(Pompeii) நகரம் இருந்ததாகவும் அது வெசுவியஸ் அப்படிங்கிற எரிமலை வெடிப்புல அழிஞ்சதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க.அதைப்பற்றி தான் இந்த த்ரெட் ல தெரிஞ்சிக்க போறோம்.. வரலாறு பாடப் புத்தகத்தில் நாம் மொகஞ்சதாரோ அல்லது சிந்து சமவெளி நாகரிகம் பற்றி படித்திருப்போம். இந்நகரம் மண்ணில் புதையுண்டு அழிந்து போன ஒரு நகர நாகரிகம் என்பது நாம் அறிந்ததே.... ஏறத்தாழ இதேபோன்றுதான் பாம்பெயி நகரமும் வரலாற்றில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைந்துபோய் அழிந்துபோனது..
Oct 30, 2020 28 tweets 7 min read
#Thread
#தெரிஞ்சிக்கோங்க
#Out_of_Africa theory

19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் டார்வின் என்ற இயற்கையியல் அறிஞர் குரங்கிலிருந்துதான் மனிதன் உருவானான் என்ற சித்தாந்தத்தை வெளியிட்டார். சிலவகை குரங்குகள் படிப்படியாக பரிணாமவளர்ச்சி அடைந்து மனித உருவை எட்டின என்றும் அப்படித் தோன்றிய முதல் மனிதன் ஆப்பிரிக்காவில்தான் உருவானான் என்ற கருத்தை வெளியிட்டார்.( எல்லா குரங்குகளும் ஏன் மனிதர்களாக மாறவில்லை என்றெல்லாம் கேட்காதீர்கள். Theory of Natural Selection என்று ஒரு சித்தாந்தம் உள்ளது. அதன்படி சிலவகை குரங்குகளே காலப்போக்கில் பல தலைமுறைகளுக்குப்
Aug 21, 2020 15 tweets 5 min read
#Thread
#தெரிஞ்சிக்கோங்க
#Butterfly_effect

ஒரு இடத்தில் நிகழும் சிறிய நிகழ்வு, உலகில் வேறு இடத்தில் நிகழக்கூடிய நிகழ்வுகளை மாற்றக் கூடியது. இதை விளக்கும் theory தான் பட்டாம்பூச்சி விளைவு (Butterfly Effect). Butterfly Effect: "வண்ணாத்துப்பூச்சி சிறகடிக்கும் போது வரும் காற்று உலகின் வேறு பகுதியில் பேரலை உருவாக்கும்."

எடுத்துக்காட்டாக சின்ராசு life அ பாப்போம்

சிறுவயதில் இருந்தே தந்தையின் தவறான புரிதலாலும் ,கோவத்தாலும் குடும்பத்தில் இருந்து தனிமை படுத்தப்பட்ட சின்ராசு,
Aug 10, 2020 27 tweets 4 min read
#Thread
#தெரிஞ்சிக்கோங்க
#இடஒதுக்கீடு

இடஒதுக்கீடு பற்றி எனக்கு புரிதல் இல்லாமல் இருந்தது சிறிது தேடலில் கிடைத்த விஷயத்தை பகிர்கிறேன்

வகுப்புரிமையே இட ஒதுக்கீட்டின் அடிப்படை.

வகுப்புரிமை என்பது என்ன? ஒவ்வொரு வகுப்பின் மக்கள்தொகைக்கு ஏற்ப கல்வியிலும் அரசாங்கப் பணிகளிலும் தம் சார்புத்துவத்தை பெற்றிருக்க வேண்டும்.

உதாரணமாக ஒரு சமூகத்தில் 100 பேர் இருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அதில்
Aug 9, 2020 13 tweets 3 min read
#Thread
#Cobra_effect

பட்டாம்பூச்சி விளைவவை (Butterfly Effect ) பற்றி நாம் அறிவோம் .

நாகபாம்பு விளைவு ,அதாவது Cobra Effect பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

தெரிந்துகொள்வோம் வாருங்கள்.. நம் இந்தியாவை ,ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த போது,தலைநகர் தில்லியில், விஷத்தன்மை உள்ள நாகப்பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டுள்ளது .

இதனால் கவலையுற்ற பிரிட்டிஷ் அரசாங்கம்,பாம்புகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்தில், பொதுமக்களிடம் ஒரு திட்டத்தை அறிவித்தது.
Jun 11, 2020 24 tweets 7 min read
#Thread
#தெரிஞ்சிக்கோங்க
#Masaru_Emoto_WaterExperiment

ஜப்பான் நாட்டை சேர்ந்த pseudo scientist மாசறு எமோட்டோ(Masaru Emoto) என்பவர் ,நம் எண்ணங்களுக்கு அதிக சக்தி இருக்குறது என்றும் ,நம் எண்ணங்களின் மூலமா நமக்கு ஏற்படும் உணர்வு மற்றும் நாம் பேசும் வார்த்தைகள் தான் நம் வாழ்வை வடிவமைக்கிறது என உறுதியாக இருந்தார். இதை நிரூபிக்க அவர் எடுத்துக்கொண்ட கருவி

"நீர் "

நீர் இன்றி அமையாது உலகு ,நம் பூமி 70 சதவிகிதம் தண்ணீரால் சூழப்பட்டது .

நீர் இன்றி அமையாது உடல்,நம் உடலும் 60 சதவிகிதம் தண்ணீரால் உண்டானதே .
May 15, 2020 24 tweets 5 min read
#Thread
#தெரிஞ்சிக்கோங்க

நிக்கோலஸ் காேபர்நிக்கஸ், ஜியார்டானோ புரூனோ, கலிலியோ கலிலி.

மத நம்பிக்கையால் வரலாற்றில் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட இம்மூன்று அறிவியலாளர்களுக்கும் இழைக்கப்பட்ட துரோகங்கள் அன்றைய காலகட்ட மக்கள் செய்த மிகப்பெரிய வரலாற்று பிழை என்றே சொல்லலாம். இவர்களின் மூவரின் அறிவியல் கருத்தையும் அன்றய மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் பல நூற்றாண்டுகள் கழித்தே ஏற்றுக்காெண்டனர். மேலும் இம்மூவரையும் தவறாக புரிந்து கொண்டு அவர்களை சித்திரவதையும் செய்தனர்.
Mar 26, 2020 29 tweets 7 min read
#Thread
#தெரிஞ்சிக்கோங்க
#God_Particles

கடவுள் துகள் என்று அழைக்க படும் ஹிக்ஸ் போஸான்கள் (higgs boson) பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள். அவைகள் மொத்த பிரபஞ்சத்தையே ஒட்டுமொத்தமாய் அழித்திடும் ஆற்றல் கொண்டவை தெரியுமா ? ஒரு பெரிய விண்கல் வந்து மோதி பூமி அழியும் என்று சொன்னால் நம்பலாம். ஆனால் கண்ணுக்கு தெரியாத அணுவுக்குள் ஒளிந்திருக்கும் தம்மாதுண்டு துகள் அதுவும் உலகத்தை கூட அல்ல மொத்த பிரபஞ்சத்தை அழிக்குமா எப்படி ?
Mar 15, 2020 12 tweets 3 min read
#தெரிஞ்சிக்கோங்க

ஏழாம்அறிவு படத்துல ஸ்ருதிஹாசன் இப்போதான் 9 கோள்கள் இருக்குறதை கண்டுபிடிச்சாங்க...ஆனால் முன்னோர்கள் 1000 வருஷம் முன்னாடியே 9 கோள்களையும் கண்டுபிடிச்சு, அதை நவக்கிரகமா கோவிலில வச்சு கும்புடாங்கன்னு ஒரு டயலாக் வரும். வரும்.படம் வந்த புதுதில் இந்த scene க்கு உடம்பெல்லாம் புல்லரித்தது

சமீபத்தில் அந்த படத்தை பார்க்கும்போது அந்த வசனம் வந்தது அதை கேட்டத்திலிருந்து அதெப்படி தொலைநோக்கி இல்லாமல் அந்த காலத்திலையே கண்டுபிடிச்சாங்க என்று எனக்கு குழப்பம்…அப்புறம் கொஞ்சம் ஆழமா இறங்கி யோசிப்போமே என்று
Mar 12, 2020 4 tweets 2 min read
#தெரிஞ்சிக்கோங்க
#CoronaVirus

பெரும்பாலான வைரஸ்கள் மூன்று பொருட்களால் ஆனதே.

ஆர்.என்.ஏ (RNA)
ப்ரோடீன்கள்
லிப்பிடுகள்.
இந்த லிப்பிடுகள் கொழுப்பால் ஆனவை. இதுவே வைரஸ்சின் வெளி அடுக்கு ஆகும். இதன் உள்ளே தான் RNA இருக்கும். அது மட்டுமின்றி, இந்த லிப்பிடுகள் தான், நம் கையில் ஒட்டிக்கொள்ள காரணமாக இருக்கிறது.

நீங்கள் சோப்பு போட்டு கை கழுவும்போது, சோப்பு லிப்பிடுகளைக் கரைத்து விடும். அதன்மேல், வைரஸ் உங்கள் கைகளில் தங்க முடியாது. லிப்பிடுகள் இன்றி வைரசும் வாழ முடியாது.
Feb 28, 2020 17 tweets 5 min read
#Thread
#தெரிஞ்சிக்கோங்க
#Why_sea_water_is_Salty

ஏன் கடல் நீர் உப்பாக உள்ளது???

இதற்கான பதிலை அறிவதற்கு முன் முதலில் நீரானது பூமிக்கு எப்படி வந்தது என தெரிந்து கொள்வோம்.ஏனெனில் நீர் மூலக்கூறுகள் பூமியில் உருவானவை கிடையாது.பூமியில் நீர் உருவானதற்கு பொதுவாக இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது.

1.சோலார் நெபுலா(Solar Nebula)
2.விண்கல் மோதல்கள்
Feb 15, 2020 22 tweets 7 min read
#Thread
#தெரிஞ்சிக்கோங்க
#Time_dilation

இதுக்கு முன்னாடி Special theory of Relativity, General theory of Relativity thread போட்டிருந்தேன் அதோட தொடர்ச்சி தான் இது Time dilation ஐ நீங்கள் உணர வேண்டுமேயானால், இரு வழியில் மட்டுமே உணர முடியும்

1.ஒளியின் வேகத்தில் பாதி வேகத்திலாவது செல்ல வேண்டும்.(Velocity time dilation)

2.Gravity அதிகம் உள்ள இடத்திற்கு செல்ல வேண்டும்.(Gravitational time dilation)
Feb 8, 2020 22 tweets 5 min read
#Thread
#தெரிஞ்சிக்கோங்க

சிப்ஸ் பாக்கெட்டை பிரிச்சு கொடுத்தால் உண்ணாமல் ஏன் கட்டுப்பாடோடு இருக்க முடியாது???

'சும்மா ஒரே ஒரு சிப்ஸ் மட்டும் சாப்பிடுவோம்' என்று ஆரம்பித்த நீங்கள் உங்களை அறியாமலேயே கட்டுப்பாட்டை மீறி முழு பாக்கெட்டையும் தீர்த்து விடுகிறீர்களா? கவலைவேண்டாம். ஏனெனில் நீங்கள் மட்டும் அப்படி கிடையாது நானும்தான். நீங்களும் நானும் மட்டுமா அதுவும் கிடையாது, உலகில் உள்ள பெரும்பாலானவர்களின் நிலை இதுதான்.சாப்பிடுபவர்கள் எல்லோரையும் இப்படி எல்லை மீறவைக்கும் இந்த உருளைக்கிழங்கு சிப்ஸில் அப்படி என்னதான் உள்ளது என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா
Jan 12, 2020 27 tweets 6 min read
#Thread
#Time
#தெரிஞ்சிக்கோங்க

கடைசி 2 thread ல ஓரளவு உங்களுக்கு ஐன்ஸ்டைனோட special relativity அப்புறம் general relativity புரிஞ்சிருக்கும்

நாம் எப்படி ஒரு பொருளை கண்ணால பாக்குறோம்…?

சூரியனில் இருந்து அல்லது விளக்குகளில் இருந்து வரும் வெளிச்சம் அதாவது ஒளி பொருளின் மேல் பட்டு அது refelect ஆகி அந்த refelect ஒளி நம்ம கண்ணை வந்து அடைகின்ற காரணத்தால் நாம் பொருள்களை பார்க்கின்றோம்…இது basic

அந்த ஒளியானது எவ்வளவு வேகத்தில் கண்ணை வந்து அடைகிறதென்றால் ஒளியின் வேகத்தில்…
Dec 10, 2019 14 tweets 3 min read
#Thread

இந்த படத்தில் நீங்கள் காண்பது கடலின் நடுவே இருக்கும் ஏதோ ஒரு ஹெலிபேட் இல்லை.

இது ஒரு நாடு. உலகிலேயே மிகச்சிறிய நாடு. இது இரண்டாம் உலகப்போரின்பொது இங்கிலாந்து அரசால் கட்டப்பட்டது. பின் பயன்படுத்தப்படாமல் விடப்பட்டது. இங்கே நித்யானந்தா போல் ஒரு தனி நபர் இதைத் தனி நாடு என்று அறிவித்தார். அவர் பெயர் ராய் பேட்ஸ். இதற்கு சீலாந்து (Sealand) என்று பெயரிட்டார்.
Nov 29, 2019 19 tweets 6 min read
#Thread
#Theory_of_General_relativity
#தெரிஞ்சிக்கோங்க

Special theory இல் காலம் மாறாது என்ற நியூட்டனின் கருத்தை மறுத்த அவர் இம்முறை general theory of relativity இல் நியூட்டன் கண்டு பிடித்த ஈர்ப்பு விசையை கேள்விக்கு ஆளாக்கினார்...சர் ஐசக் நியூட்டன் கூற்று படி... ஈர்ப்பு விசை என்பது நிறையுள்ள எந்தப் பொருளும் இன்னொரு பொருளை ஈர்க்கும் சக்தி கொண்டது. அந்த சக்தியை ஈர்ப்பு விசை என்று சொல்கிறோம். எல்லாப் பொருட்களும் எல்லா பொருட்களையும் ஈர்த்துக் கொண்டுதான் இருக்கின்றன.
Nov 25, 2019 29 tweets 5 min read
#தெரிஞ்சிக்கோங்க
#Time_dilation
#SpecialRelativity

காலம் எப்படி மாறுபடும் என்பதை தெரிந்து கொள்வதற்கு முன் "Theory of relativity" என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

உலக வரலாற்றின் மிக பெரிய விஞ்ஞானியான ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவமும் (theory of relativity) .. மேலும் அவர் கண்டு பிடித்த சில கோட்பாடுகளும் ..மற்றும் அவரது trade மார்க் formula E=MC² உம் அறிவியல் உலகின் அஸ்திவாரத்தை ஆட்டி பார்த்த சங்கதிகள்.
Nov 15, 2019 30 tweets 7 min read
#Thread
#Nikola_Tesla
#தெரிஞ்சிக்கோங்க

எடிசனிடம் தனது திறமையை, கண்டுபிடிப்பை ... அறிவை ..பறிகொடுத்த பரிதாப மனிதர் யார் தெரியுமா அவர் தான் உலகத்தால் மறைக்க பட்ட விஞ்ஞாணி நிகோலஸ் டெஸ்லா...
ஆமாம் யார் இந்த டெஸ்லா? டெஸ்லா ஒரு சேர்பிய நாட்டு விஞ்ஞாணி 1856 இல் பிறந்தவர் எடிசனின் சக காலத்து விஞ்ஞானி பிற்காலத்தில் அமெரிக்கா சென்று குடியேறிய பின் 1884 முதல் எடிசனுக்காக அவருடன் வேலை செய்துவந்தார்.
Nov 6, 2019 25 tweets 6 min read
#Thread
#தெரிஞ்சிக்கோங்க
#Fermi_paradox

பூமி

நாம் அவ்வபோது கண்டுபிடிக்கும் பல கெப்ளர் கிரகங்களை விட மிக மிக அபூர்வமான ஒரு மர்ம கிரகம் தான் . சுற்றி பல கிலோமீட்டருக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தகிக்கும் மணல் நிரம்பிய பாலைவனதில் நடுவே ஒரே ஒரு ஒற்றை ரோஜா பூத்திருப்பதை போல "Observable univerce " என்று சொல்ல கூடிய 9300 கோடி ஒளி ஆண்டுகள் அளவு

பரவிய பாலைவனத்தில் ஒற்றை ரோஜாவாய் நீரும் ,காற்றும், பசுமையும் விலங்குகளையும் பறவைகளையும் ,உங்களையும் என்னையும் கொண்ட ஒரு உயிருள்ள கிரகமாக பூமி இருப்பது மிக பெரிய மர்மங்களிலும் மர்மம்.
Oct 20, 2019 28 tweets 9 min read
#Thread
#தெரிஞ்சிக்கோங்க

பிரபஞ்சம் விட பெரிதான ஒன்று இருக்கிறதா என்பதினை அறிந்துகொள்ள பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்பதினை முதலில் அறிய முயற்சிப்போம் அதற்கு முன் நமது சூரியனை (சூரியன் ஒரு நட்சத்திரம்) போன்ற பிற நட்சத்திரத்தையும், மாபெரும் நட்சத்திரத்தையும், அதை விட மிகவும் பெரிய நட்சத்திரத்தையும் பற்றி காணலாம். இவைகளின் குறுக்களவை நமது பூமி, மற்றும் நமது சூரிய குடும்பத்தின் இதர கோள்களின் குறுக்களவோடு ஒப்பிட்டு பார்க்கலாம்.
Sep 28, 2019 19 tweets 5 min read
#Thread

நாம் பொதுவாக திரைப்படங்களில் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் படத்தை காட்டுவதை பார்த்திருப்போம்.
அழகாக மிதக்கும் ஒரு பந்து போல காட்டப் பட்டிருக்கும். ஆனால் உண்மையில் நீங்கள் கற்பனை செய்ய வேண்டியது உங்கள் கண்ணெதிரே மிதக்கும் அந்த லட்டுவை சுற்றி ஒரு 50 ...100 ஈக்கள் கச்சா முச்சா என்று மொய்த்து கொண்டு இருப்பதை போல தான்.