நம் புத்தகங்கள் மறைத்த உண்மைச் செய்திகளை நம் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்ப்போம்.
#மாவீரன் என்றாலே அலெக்சாண்டர் என்றும் #நெப்போலியன் என்றும் செங்கிஸ்கான் என்றும் கூறுவதை இனிமேலும் நாம் திருத்திக் கொள்ள வேண்டும்.
*The Greatest Emperor of India - #Rajendra_chozan.* +
இந்தியத் துணைக் கண்டத்திலேயே மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் மாமன்னர் #ராஜேந்திர_சோழர் மட்டுமே.
தனது ஆயுட்காலத்தில் 65 ஆண்டுகளை போர்க்களத்தில் செலவிட்டவர். 35 நாடுகளை போரில் வெற்றி கண்டவர்.
அவரது போர்ப்படையில் 60,000 #யானை களும், 5 லட்சம் #குதிரை களும் இருந்ததாக +
செப்பேடுகள் கூறுகின்றன.*.
இன்றைய காலகட்டத்தில் ஒரு பசுமாட்டிற்கு தினந்தோறும் ஆகும் தீவன செலவு 200 ரூபாய். பத்து மாட்டிற்கு ஆகும் செலவு 2000 ரூபாய். ஒரு மாதத்திற்கான செலவு சராசரியாக 60,000 ரூபாய். ஒரு மாட்டை வளர்த்தால் அதன் மூலம் பெறப்படும் #பால், #தயிர் ,#வெண்ணெய், #நெய் +
போன்றவற்றால் லாபம் ஈட்ட முடியும்.
ஆனால் எந்த லாபத்தையும் வழங்காத 60,000 யானைகளையும் 5 லட்சம் குதிரைகளையும், ராஜேந்திர சோழன் பராமரிப்பது எதற்காக??
போர் புரிவதற்காக மட்டும்தான்!!
#யானைப்படை மற்றும் #குதிரைப்படை யே இலட்சக்கணக்கில் வைத்திருந்தவனின், #காலாட்படை எவ்வளவு +
இருந்திருக்க வேண்டும்??
தனது #பதினேழாம் வயதில் #இளவரசன் ஆக இருந்து ராஜேந்திர சோழன் வென்ற போரில் அவனுடன் இருந்த வீரர்களின் எண்ணிக்கை 90,000
1016 ஆண்டுக்கு பிறகு சோழர் படை முழுவதும் அவன் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. சுமார் 20 லட்சம் #வீரர்கள் அவன் படையில் இருந்தனர். +
தன் #சேனை முழுவதற்கும் நாளொன்றுக்கு ஆகும் சாப்பாட்டு செலவு எவ்வளவு இருந்திருக்க வேண்டும்? பராமரிப்பு செலவு எவ்வளவு இருந்திருக்க வேண்டும்?#நிச்சயம் கோடிக்கணக்கில் இருந்திருக்கும்.
அத்தனை பேருக்கும் உணவு வழங்குவதற்கு, அவன் நாட்டை எவ்வளவு செழிப்பாக வைத்திருந்துருப்பான் என்பதை +
#கற்பனை செய்யுங்கள்.
மாதக்கணக்கில் வீரர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போதும் அதற்கான உணவை கையில் எடுத்துச் சென்றிருப்பார்கள் அல்லவா? #தஞ்சை டெல்டா மாவட்டங்கள் விவசாயத்தில் உயர்ந்து நின்றதற்கு இராஜேந்திர சோழனே முதன் முதற் காரணம்.
எதிரிகள் தன் நாட்டைத் தாக்கி +
அழிக்க நேரிட்டால், தஞ்சையின் நெற்களஞ்சியங்கள் எல்லாம் அழிந்துவிடும் என்ற ஒரே காரணத்திற்காக தனது தந்தை ராஜராஜ சோழன் ஆட்சி செய்த தஞ்சை மண்ணிலிருந்து #ஜெயங்கொண்ட #சோழபுரத்திற்கு தனது தலைமை இடத்தை மாற்றினான் ராஜேந்திரசோழன்.
#உழவர் களின் மேல் அவ்வளவு வாஞ்சை!! +
ராஜேந்திர சோழன் தன் படைகள் ஓய்வு எடுப்பதற்காக காடுகளை வெட்டி சீர் படுத்தினான் என்பதற்கு இன்றைய அரியலூர் மாவட்டத்தில் உள்ள #படைநிலைகாடுவெட்டி என்ற ஊரே சாட்சி.
ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு நாட்டை பத்தாயிரம் போர் கப்பலுடன் வெற்றி பெற்றான் என்பது நம் கற்பனைக்கு எட்டாதவை.+
இந்தியாவை பிடிப்பதற்கு கூட பிரிட்டிஷ், பிரஞ்சு அரசுகள் அவ்வளவு கப்பலில் வந்ததாகத் தெரியவில்லை.
ஒரு நாட்டைப் பிடிக்க 6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் ஆகும் என்பதும், அத்தனை நாட்கள் தனது யானைகள் ,குதிரைகள் , காலாட் படை வீரர்களுக்கான உணவை தன்னுடன் எடுத்துச் சென்றான் என்றால் +
அவனின் உணவு தானிய உற்பத்தி எவ்வளவு இருந்திருக்க வேண்டும்??
#உப்பு நீர் சூழ்ந்த கடல்களின் இடையே, லட்சக்கணக்கான வீரர்களுக்கும் குதிரைகளுக்கும் மாதக்கணக்கில் தூய்மையான குடிநீரை எவ்வாறு அவன் வழங்கியிருக்க முடியும்?? அசுத்தமான குடிநீரால் அந்த காலத்திலும் காலரா பரவியது +
என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அப்படியானால், #கடல்_நீரை சுத்தப்படுத்தும் அறிவியலை அறிந்தவனா அவன்??
போரில் அடிபட்ட வீரர்களின் காயங்களை ஆற்றுவதற்கு எத்தனை ஆயிரம் மருத்துவர்கள் அவனுடன் சென்று இருக்கவேண்டும்? மருத்துவத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற குழுவை அவன் பெற்றிருக்கவில்லை +
என்றால் 60 ஆண்டுகளாக தொடர் வெற்றி பெற்றிருக்க முடியுமா??
தற்போதைய #இந்தோனேஷியா, #மலேசியா, #சீனா, #கம்போடியா, #இலங்கை போன்ற நாடுகளை கப்பல் படையால் வென்றெடுத்த #மாவீரன் அவன். +
பல நாட்டு போர்வீரர்களை துவம்சம் செய்து அவர்களின் #வணிகத்தை கைப்பற்றியவன் #ராஜேந்திரசோழன்.
தமிழக வாணிப செட்டியார்கள், அவன் காலத்தில்தான் உலகம் முழுவதும் பயணம் செய்து பெரும்பணம் ஈட்டினர்.
நமது அறிவுசார் காப்பியங்களான, #தொல்காப்பியம், #சிலப்பதிகாரம், #திருக்குறள், +
#மன்னரின் நூல்கள் உள்ளிட்ட பலவற்றையும் பாடசாலைகள் அமைத்து அதன் மூலம் பாதுகாத்தவன் அவன்.
உங்களுக்கு கோயில்கள் எதற்கு?? அதற்கு பதில் #பள்ளிக்கூடங்களையும் #மருத்துவமனை களையும் கட்டுங்கள் என்று எந்த தற்குறியும் கேள்வி கேட்க வாய்ப்பு வழங்காதவன் அவன். +
முக்கியமாக,
பல்வேறு பொழுதுபோக்குகள் இருக்கும் இந்த காலத்திலேயே நமக்குள் தேவை இல்லாத ஜாதி #சண்டைகள் வருகிறது. ஆனால் அந்த காலத்தில் பல ஜாதி பிரிவை உள்ளடக்கிய லட்சக்கணக்கான போர் வீரர்கள் இடையே எந்தவித ஜாதி சண்டையும் வந்ததாக எந்த ஒரு வரலாற்று ஏடுகளும் கூறவில்லை!! +
ஆம், சமூக நீதியின் படி செம்மையான ஆட்சிபுரிந்த #மன்னன் அவன்.
தமிழர்களின் ஒப்பற்ற #முன்னோன் அவன்.
அவன் நம் #முப்பாட்டன் என்ற பெருமையோடு #தமிழர் நாம் தலை நிமிர்வோம்.
#மாமன்னன் #ராஜேந்திர_சோழன்
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
