Abdullah_Rawuthar Profile picture
தமிழ்க் குடியில் பிறந்ததாலேயே நான் தமிழன்.

Jul 26, 2020, 13 tweets

"தனி ஒருவர்" - நம் தாத்தா!!

"தமிழ் தாத்தா #உவேசா".. இது ஒன்றை தவிர, தற்போதுள்ள இளைய தமிழருக்கு இந்த தாத்தாவை பற்றி வேற எதுவுமே தெரியாது.

கும்பகோணத்தில் பிறந்திருக்கிறார். இந்த தாத்தாவுக்கு, அவருடைய தாத்தாதான் தமிழ் சொல்லி தந்தாராம். அப்போதெல்லாம் பேப்பர் கண்டுபிடிக்கப்படவில்லை.

அதனால் வெறும் மணலில் மட்டுமே அரிச்சுவடி எழுதி பழகி.. அதற்கு பிறகு ஓலைச்சுவடியில் எழுதி எழுதி படித்திருக்கிறார்.

#கும்பகோணம் ஆர்ட்ஸ் காலேஜில் தமிழ் பேராசிரியராக வேலை பார்த்தார். இன்னின்ன பாடங்களை நடத்த வேண்டும் என்று அரசு தரப்பில் குறிப்பு வெளியிடுவார்கள்.

ஆனால், அந்த குறிப்பு பற்றி எங்குமே தொகுப்பு இருக்காது. அதனால், அது சம்பந்தப்பட்ட ஓலைச்சுவடிகள் எங்கெங்கே இருக்கின்றன என்று தேடி கண்டுபிடித்து, அதை வைத்து கொண்டு, பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி தருவார்.

இவர் பாடம் நடத்தினாலே காலேஜ் #பிரின்சிபல் முதல் பேராசிரியர்கள் வரை..

கொஞ்ச நேரம் கிளாசுக்கு வெளியே நின்று கேட்டுவிட்டுதான் போவார்களாம். காரணம், பாடம் நடத்தும்போது, நிறைய கதை சொல்வாராம். அதனால், எல்லோருக்குமே இவர் வகுப்பு என்றால் ஒரு ஆர்வம்!

மொத்தம் 22 வருடம் இங்கு வேலை பார்த்திருக்கிறார்.. அப்பறம்தான் #சென்னை மாநில கல்லூரிக்கு டிரான்ஸ்பர்

ஆகி வந்திருக்கிறார்.

1919-ல் ரிடையர் ஆகிவிட்டார். இவரது நண்பர் அண்ணாமலை செட்டியார் கேட்டு கொண்டதற்காக, மீனாட்சி தமிழ்கலைச்சாலை என்ற கல்வி நிறுவனத்தின் தலைவராக 4 வருஷம் வேலை பார்த்தார்.. அந்த நிறுவனம்தான் இப்போது இருக்கிற "#அண்ணாமலை யூனிவர்சிட்டி"ஆகும்!!

இதெல்லாம் அவரது வேலை சம்பந்தப்பட்டது என்றாலும்..

#தமிழுக்கு இவர் செய்த பணிதான் எனக்கு மலைப்பை தருகிறது.. தமிழ் பற்றி எத்தனையோ அறிஞர்கள், வெவ்வேறு காலகட்டங்களில் எத்தனையோ குறிப்புகளை ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துவிட்டு இறந்தும் விட்டனர்..

அப்படி புதைந்து, மறைந்து கிடந்த ஓலைச்சுவடிகளை தேடி கண்டுபிடித்ததுதான் இவர் செய்த பெரிய சாதனை.

தெரிந்தவர், தெரியாதவர் வீடுகளுக்கெல்லாம் சென்று ஏதாவது #ஓலைச்சுவடி இருக்கிறதா என்று விசாரிப்பார். ஒரு வீட்டில் ஓலைச்சுவடி இருக்கிறது என்று கேள்விப்பட்டாலே போதும், அந்த வீடு எவ்வளவு

தூரம் என்றாலும், நடந்தே போவாராம்.

இதற்காக சரியாக #சாப்பிடுவது கூட இல்லை. போகிற வழியில் குடிக்க தண்ணீர்கூட கிடைக்காதாம். சில வீடுகளில் சுவடியை இவரிடம் தருவதற்கு மனசு வராதாம். பலமுறை #அலைக்கழித்துவிட்டு, அதற்கு பிறகு தருவார்களாம். தமிழ் முன் எதுவுமே அவமானம் இல்லை என்பதால்

இதையெல்லாம் #உவேசா பெரிசாக எடுத்து கொள்வதில்லை.

இப்படியாக, செல்லரித்து-தூசுபடிந்து -கிழிந்த நிலையில் இருந்த பொக்கிஷங்களை எல்லாம் சேகரித்தார்.

அதில் இருந்து ஆராய்ச்சி,ஆய்வுரைகள் எழுதினார். அப்படி பதிப்பித்த நூல்கள்தான் #சீவகசிந்தாமணி, #பத்துப்பாட்டு, #சிலப்பதிகாரம், #புறநானூறு,

#மணிமேகலை, போன்றவை.

இப்படி 100 புத்தகங்களை இவர் வெளி கொண்டு வந்தார். இவ்வளவும் செய்து முடித்தபோது, தாத்தாவுக்கு 50 வயசு கூட ஆகவில்லை.

உவேசா மட்டும் இல்லை என்றால், இன்று நமக்கு சிலப்பதிகாரமும் இல்லை. மணிமேகலையும் இல்லை. கையில் கிடைத்த நூல்களை எல்லாம் ஒளித்து வைத்து கொள்ளாமல்,

நமக்காக அச்சிட்டு கொடுத்த #வள்ளல் இவர். பனை ஓலைகளில் மறைந்து கிடந்த பொக்கிஷங்களை தூசு தட்டி புதுப்பித்து கொடுத்த பழுத்த #பழம்!

உவேசாவிற்கு தமிழும், இங்கிலீஷூம் கலந்து பேசினால் பிடிக்காது. 1942-ல் உவேசா மறைந்துவிட்டார்.

எதிர்கால சந்ததியினருக்கு தமிழ் பொக்கிஷங்கள் போய் சேர வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுக்காக 87 வருடம் கஷ்டப்பட்டிருக்கிறார்.

தமிழரைப் பொறுத்தவரை இவரைதான் "#தனி_ஒருவர்" என்று சொல்ல வேண்டும். காரணம், எத்தனையோ #புலவர்கள், #தமிழ்_அறிஞர்கள்,

#கல்வி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து செய்யக்கூடிய ஒரு செயலை உவேசா மட்டுமே செய்து முடித்திருக்கிறார்.

இறுதிவரை தமிழுக்காகவே வாழ்ந்தவர். தமிழாகவே வாழ்ந்தவர். தமிழே அவரானது.

அவரே தமிழானார். பழுத்த அனுபவத்தின் #முதிர்ச்சியும் வெளிப்பாடும்தான், நம் தாத்தா உவேசா!

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling