#ராம்நாமி_பழங்குடியினர்
"ஆச்சரியங்கள் நிறைந்த இந்தியாவின் தனித்துவமான பழங்குடியினர் " 😊
மறுக்கப்பட்ட ஆலய பிரவேச உரிமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் அறப்போராட்டத்தின் கதை ..!🙏
#Thread #இழை
🔥"Kill them with your Success
& Burry them with your Smile..!"🔥
என 100 ஆண்டுகளுக்கு முன்பே ஆதிக்க சாதியினரை அகிம்சையால் அலற விட்ட ராமபிரானின்
"உண்மையான" ( மீண்டும் ஒரு முறை அழுத்தி சொல்கிறேன் உண்மையான) பக்தர்கள்..!😂
#வரலாறு
சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் ராம்நாமி என்று அழைக்கப்படும் இந்த பழங்குடியின மக்கள் வசிக்கிறார்கள். இவர்களின் மக்கள் தொகை ஒன்றரை லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை என மதிப்பிடப்படுகிறது..!😊
அந்தப் பகுதியில் உள்ள ராமரின் ஆலயங்களில் இவர்கள் தினமும் சென்று வழிபாடு செய்து வருபவர்கள். இந்த பழங்குடியின மக்கள் ராமரை தங்கள் தெய்வமாக, உயிரினும் மேலாக நினைத்து வழிபட்டு வந்தவர்கள். 🤗
சுமார் 120-150 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு தாங்கள் வாழ்ந்த வந்த பகுதியில் (தற்போதைய சட்டீஸ்கர் மாநிலத்தின் கிராமப்புற பகுதிகள்) உள்ள ஆலயங்களில் சென்று ராமபிரானை வழிபட ஆதிக்க சாதியினரால் உரிமை மறுக்கப்படுகிறது. 😠
திடீரென தங்கள் ஆலய உரிமை பறிக்கப்பட்டதால், ராமபிரானை இனி தரிசிக்க முடியாது எனவும், ராமபிரானை தங்களிடமிருந்து அவர்கள் பிரித்துவிட்டதாகவும் வருந்திக் கண்ணீர் வடிக்கிறார்கள் அவர்கள்..!😢
அதனால் அவர்கள் ஒரு சபதம் ஏற்கிறார்கள்..!
அதாவது
"நாங்கள் எங்கள் உடல் முழுவதும் ராமபிரான் பெயரை பச்சைக் குத்திக் கொள்வோம். நீங்கள் யாரடா எங்களையும் ராமரனயும் பிரிக்க..! இனி எவராலும் எங்களையும் ராமனையும் பிரிக்க முடியாது."
#அறச்சீற்றம்
"இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்.,
அவர் சாதிகளுக்கு அப்பாற்பட்டவர்,
எங்கள் பக்தி உண்மையானது"
... என்பதை உயர் சாதி இந்துக்களுக்கு நெற்றி பொட்டில் அடித்தது போல உணர்த்தவே அவர்கள் இறைவனின் பெயரை உடல் முழுவதும் பச்சை குத்தி கொள்ள தொடங்குகிறார்கள்..!🙄
இதைக் கேள்வியுற்ற ஆதிக்கசாதியினர் அவர்களுக்கு வெவ்வேறு வழிகளில் இன்னல்களை கொடுக்கிறார்கள்.! அவற்றையெல்லாம் அவர்கள் அகிம்சை வழியில் முறியடித்து இறைவனின் திருநாமத்தை தங்கள் உடல் முழுவதும் பச்சை குத்திக் கொள்ள தொடங்கினார்கள்..!😊
இந்த பழக்கத்தை முதன்முதலில் #பரசுராமர் என்ற பெயரைக் கொண்ட ஒரு முத்த பழங்குடி நபர் தோற்றுவித்தார் என்று நம்பப்படுகிறது. இதே பழக்கம் பல தலைமுறைகளாக இன்றும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது.
ராமபிரானின் நாமத்தை உடல் முழுவதும் பச்சை குத்திக் கொள்வதால் இராமநாமி என்று அழைக்கப்படுகிறார்கள்.
அதாவது
"ராமனின் பெயரை உடையவர்கள்" என்பது இதன் பொருள். 😊
இவர்களிடம் பல ஆச்சரியங்கள் உள்ளன,
🔥அவர்கள் மற்றவர்களைப் போல ஆலய உரிமை கோரி போராட்டங்கள் நடத்த வில்லை.
🔥தங்களுக்கு உரிமை மறுத்த சாதியினருக்கு எதிராகவும் எந்த போராட்டங்களையும் அவர்கள் நிகழ்த்தவில்லை. மாறாக அகிம்சை முறையில் அவர்களுக்கு தங்கள் பக்தியை நிரூபித்தார்கள்.
🔥இவர்கள் தினமும் காலை மாலை மற்றும் இரவு எப்பொழுதும் ராம நாம ஜெபம் செய்கிறார்கள்..!
🔥அவர்கள் அதன் பிறகு ஆலயங்களுக்கும் செல்வதேயில்லை.
( "போடா, ஆண்டவனே நம்ம பக்கம்" )😂
🔥அவர்கள் பகுதியில் நடைபெற்ற பல்வேறு மதமாற்ற முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.
🔥இவர்கள் சைவ உணவை மட்டும் உட்கொள்கிறார்கள்.
🔥இவர்களின் வீடுகளில் ராமாயணம் புத்தகம் கண்டிப்பாக இருக்கும். வீடுகளின் சுவர்களிலும் *ராம் ராம்* என்று எழுதி இருப்பார்கள்.
🔥 பெரும்பாலும் "ராம், ராம்" என்று எழுதப்பட்ட துணிகளையே தங்கள் மேலாடைகளாக அணிகிறார்கள்..!
🔥உலகிலேயே, *இறைவனின் பெயரை முகம் கை கால் என உடல் முழுவதும் பச்சை குத்திக்கொள்ளும்* பழங்குடி இனம் இவர்கள்தான்..!
🔥இவர்களில் இன்னும் பலரோ, தங்கள் நாக்கு மற்றும் இமைகளிலும் கூட *ராம் ராம்* என பச்சை குத்திக் கொள்கிறார்கள்.
"ஒட்டு மொத்த சமூகம் தங்களை புறக்கணித்த போதும், மதம் மாறாமல், யாரையும் பழிக்காமல் தங்களுக்கென ஒரு தனித்துவமான அடையாளங்களை உருவாக்கி, அறச்சீற்றத்துடன் இன்றும் தனித்துவமாக வாழும் இவர்கள், பிறப்பினால் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் மூடர்களுக்கு சிம்மசொப்பனமே..!"😊
#ஜெய்_ஸ்ரீராம்..! 🙏
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
