, 250 tweets, 127 min read Read on Twitter
நம்மால் அறியப்பட்ட கஷ்மீர்-சுற்றுலா,சிறப்பு அந்தஸ்த்து,குண்டுவெடிப்பு,சண்டை,ராணுவம், தீவிரவாதிகள்...
நாம் அறியவேண்டிய கஷ்மீர்- நிறைய இருக்கின்றன
சிறிதே வரலாற்றைப் புரட்டிப் பார்ப்போம்
#அறிவோம்கஷ்மீர்
அவர்கள் பாகிஸ்தானியர்களுமல்ல
அவர்கள் இந்தியர்களுமல்ல
அவர்கள் கஷ்மீரிகள்
#Kashmir
இந்திய ஆட்சியின்கீழ் உள்ள ஜம்மு சமவெளிப்பகுதி, கஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக் என்கிற பனிமலைப்பகுதி

‘ஆசாத் கஷ்மீர்’ எனப் பாக்கித்தானியராலும், ‘பாக்கித்தானியரால் கைப்பற்றப்பட்ட கஷ்மீர்’ என இந்திய அரசாலும் குறிப்பிடப்படும்- மிர்பூர், பூஞ்ச், முசாஃப்ராபாத் உள்ளிட்ட நிலப்பகுதிகள்
பாகிஸ்தான்அரசு தன் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்ட கில்கிட், ஹூன்சா, நாகர், ஸ்கர்டு, பால்டிஸ்தான் முதலான பனிமலைப் பகுதிகள்
சீனா இந்தியாவிடமிருந்து நேரடியாகக் கைப்பற்றிய அக்சாய்சின் பாகிஸ்தான் சீனாவுக்குத் தானமாகக் கொடுத்த ஷாக்ஸ்கம் உள்ளிட்ட பெரிய நிலப்பரப்பு
#Kashmir
இந்த கஷ்மீர் ஒரு பழம்பெரும் நாடு

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பேரரசர் அசோகர் இந்த நாட்டை ஆண்டுள்ளார். இன்று கஷ்மீரின் தலைநகராக உள்ள ஸ்ரீநகரை உருவாக்கியவரே அசோகர்தான்
பிந்திய காலத்தில் குஷானரான கனிஷ்கர், ஹர்ஷர், இராசபுத்திரரான அவந்திவர்மன் போன்றோர் ஆட்சி புரிந்தனர்
#Kashmir
கி.பி.1015, 1021ஆம் ஆண்டுகளில் முகமது கஜினி இப்பகுதியில் கொள்ளையடிக்க முயன்று தோற்றுப் போனார்.

கி.பி.1192இல் படை யெடுத்த கோரி முகம்மது இரசபுத்திர அரசர்களைத் தோற்கடித்து விலை மதிப்பற்ற செல்வத்தைக் கொள்ளை கொண்டார்
கி.பி.14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புல்புல் ஷா என்ற இஸ்லாமிய மன்னர், இந்துக்களில் கீழ்ச் சாதி மக்களாக வைக்கப்பட்டிருந்தவர்களை இஸ்லாமியராக மாற்ற எல்லாம் செய்தார். இஸ்லாமியம் வலிமை பெற்றது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
கி.பி.1420இல் குத்புதீனின் பேரன் சுல்தான் ஜெயனுலாபுதீன் ஆட்சிக்கு வந்தார். அவர் மதங்களைக் கடந்து எல்லா மக்களிடமும் அன்பு காட்டினார். அதனால் 50 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்

சில தலைமுறைகளுக்குப் பிறகு, 1586இல் முகலாயப் பேரரசர் அக்பர் கஷ்மீர் மீது படையெடுத்துத் தன் ஆட்சியை நிறுவினார்
பின்னர் ஜஹாங்கீர், ஷாஜஹான் ஆகியோர் ஆண்டனர்
பிறகு ஆட்சியேற்ற ஒளரங்கசீப் ஷியா முஸ்லிம்களை வெறுத்தார்; சன்னி முஸ்லிம் களை ஆதரித்தார். எனவே நாட்டில் குழப்பங்கள் அதிகரித்தன
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
1752இல் ஆப்கானிஸ்தானத்து அகமது ஷா அப்தாலி என்பவர் கஷ்மீரைக் கைப்பற்றினார். ஆப்கானியர் ஆட்சி 60 ஆண்டுகள் நடைபெற்றது.

ஆப்கன் அரசின் பிரதிநிதிகளாக ‘சுபேதார்கள்’ செயல்பட்டார்கள்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
சுபேர்தார்களின் கொடுமையைத் தாங்க முடியாத கஷ்மீரி பண்டிட்கள் என்கிற பார்ப்பனர்கள் பஞ்சாப் நாட்டை ஆண்ட சீக்கிய மன்னரிடம் முறையிட்டனர். அப்போதைய சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங் 1819 சூன் மாதம் படையெடுத்து, கஷ்மீரைக் கைப்பற்றினார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
ரஞ்சித் சிங்கிடம் போர் வீரராக இருந்த இராசபுத்திரரான குலாப் சிங், அப்படைக்கே தளபதியாக மாறினார். இறுதியில் ஜம்மு பகுதியின் குறுநில மன்னராகவே அமர்த்தப்பட்டார்.

ரஞ்சித் சிங் காலத்திலேயே, குலாப் சிங் 1834இல் லடாக் மீது படையெடுத்து வென்று அதையும் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தார்
பிரிட்டிஷாரின் படையுடன் 3தடவைகள் மோதிய ரஞ்சித்சிங் வழியினர் தோற்க நேர்ந்தது
இவர்களின் தோல்வியை அடுத்து இவர்கள் வெள்ளையர்களுக்கு ஒருகோடி ரூபா தரவேண்டும் இல்லாவிட்டால் லாகூர் அரசின்கீழ் உள்ள கஷ்மீர், பால்டிஸ்தான், ஹசீரா பகுதிகளை ஒப்படைக்க வேண்டுமென உடன்படிக்கை ஏற்பட்டது
#Kashmir
இதில் நடுவராக இருந்தவர் இராசபுத்திரரான - டோக்ரா குலாப்சிங் தான்

பிரிட்டிஷார் குலாப் சிங்குடன் ஓர் உடன்படிக்கையின்படி“பிரிட்டிஷ் அரசு கை மாற்றித்தரும் இந்த நிலப்பகுதியின் சுயாட்சி அதிகார உரிமை, குலாப் சிங் மற்றும் அவருடைய ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே உரியது”
#அறிவோம்கஷ்மீர்
#Kashmir
இருப்பினும் பிரிட்டிஷாரின் தலையீடு அதிகரித்தது. மேலும் தன் தம்பிகளின் வாரிசுகள் அதிகாரத்தில் பங்கு கேட்கக்கூடும் என்ற அச்சமும் இருந்தது. எனவே தன் ஒரே மகன் ரன்பீர் சிங்கை, 1856இல் கஷ்மீரின் மகாராஜாவாக ஆக்கினார்
#அறிவோம்கஷ்மீர்
#Kashmir
ரன்பீர் சிங்கின் மறைவிற்குப் பின் ரன்பீரின் முதல் மகன் பிரதாப்சிங் மன்னாரானார்
மன்னருக்கு உதவுவதற்கு என்று நிர்வாக ஆலோசனைக்குழு ஒன்றை பிரிட்டிஷார் அமைத்தனர். அதன் தலைவராகவும் பிரதம மந்திரியாகவும் ரன்பீரின் கடைசி மகன் அமர்சிங் அமர்த்தப்பட்டார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இரண்டாவது மகன் ராம்சிங் ஆலோசனைக் குழு உறுப்பின ராக்கப்பட்டார். மூன்றாவதாக, ஐரோப்பியர் ஒருவர் நிரந்தரப் பிரதிநிதியாக அமர்த்தப்பட்டார். இவருக்கு ஆலோசனைக்குழுவின் எந்த முடிவையும் தன்னிச்சையாக நடைமுறைப்படுத்தத் தனி அதிகாரமும் தரப் பட்டது. இவரே உண்மையான நிர்வாகியாகத் திகழ்ந்தார்
புதிய அரசமைப்புச் சட்டம் ஒன்றும் அறிமுகப்படுத் தப்பட்டது
அதன்படி மன்னர் பிரதாப் சிங்கின் அதிகாரங்கள் பலவும் நிர்வாக ஆலோசனைக் குழுவுக்கு மாற்றப்பட்டன

ரஷ்ய ஜார் மன்னன் கஷ்மீர் மீது படையெடுப்பான் என்று ஒரு கட்டுக்கதையை பிரிட்டிஷார் பரப்பினர். கடைசியில் பிரிட்டிஷாரே அதற்கு அஞ்சினர்
1888இல் பிரிட்டிஷார் கில்கிட் பகுதியின் நிர்வாகத்தை, பிரதாப் சிங்கிடமிருந்து விடுவித்து, அங்கு நிரந்தரமாக ஒரு படைத்தளம் அமைத்துக் கொண்டனர். இந்தப் படைக்கு ஆகும் செலவுகளை மன்னரும், மந்திரி சபையும் ஏற்கும்படிச் செய்தனர்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
கர்சன் பிரபு வைஸ்ராய் ஆனபின், 1905இல் ஆலோசனைக்குழு கலைக்கப்பட்டு, மன்னருக்கு மீண்டும் சில அதிகாரங்கள் தரப்பட்டன. ஆனால் முதன்மையான அதிகாரங்கள் பிரிட்டிஷார் அமர்த்திய சிறப்பு அதிகாரியிடமே இருந்தன. 1909இல் அமர்சிங் மறைந்தார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
பிரிட்டிஷ் சிறப்பு அதிகாரி திறமையான நிர்வாகிகளை அமர்த்துகிறேன் என்று பலரையும் உயர்ந்த வேலைகளில் அமர்த்திய பெரும்பாலோர் வங்காளிகளும் பஞ்சாபியர்களுமாக இருந்தனர். நல்லபடிப்புப் பெற்ற சில காஷ்மீரிகள் கூட, ‘முன் அனுபவம் இல்லாதவர்கள்’ என்று கூறி வேலை தராமல் ஒதுக்கப்பட்டனர்
#Kashmir
முஸ்லீம்களில் சில பெரியவர்கள் கல்வியின் முதன்மையைப் புரிந்துகொண்டனர். கஷ்மீர் முஸ்லிம்களின் மதத்தலைவராக இருந்த ‘மிர்வைஸ்’ இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். பல முஸ்லீம்கள் முதல் முறையாகப் பள்ளிக் கூடங்களில் காலடி வைத்தனர்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
முதலாவது உலகப் போர் முடிந்தவுடன் பிரிட்டிஷார் அறிமுகம் செய்த ‘மாண்டேகு-செம்ஸ்போர்டு திட்டம்’ - இந்தியாவுக்கு மட்டும் சுயாட்சி உரிமை வழங்குவதோடு நிற்காமல், கஷ்மீர் போன்ற மன்னர் ஆட்சிப் பகுதிக்கும் சுயஆட்சி உரிமையை வழங்கும் என்று கூறினர்.
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
சுயாட்சி உரிமையைக் கஷ்மீருக்கு வழங்கும்படி 1918 இல் பிரதாப் சிங் கோரினார்

1921இல் பிரதாப் சிங் முழு அதிகாரம் பெற்ற மன்னர் ஆனார். ஆனால் அரச அவையில் பிரிட்டிஷ் அரசப் பிரதிநிதி தொடருவார் என்றார்கள், பிரிட்டிஷார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
பிரதாப் சிங்குக்குக் குழந்தைகள் இல்லை. வேறு வழிவகை இல்லாமல், தன் தம்பி அமர்சிங்கின் மகனான ஹரிசிங்கையே தன் அதிகாரம் வாய்ந்த வாரிசாக ஏற்று, அவரை இளவரசராக ஆக்கி, நிர்வாக ஆலோசனைக்குழுவிலும் இடம் தந்தார், பிரதாப் சிங்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
பிரதாப் சிங் ஆட்சியின் போது பணியில் அமர்த்தப்பட்டவர்களே அதிகாரிகளாகத் தொடர்ந்ததால், படித்துவிட்டு வந்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் வேலை கிடைக்காத இளைஞர் கூட்டம் பெருகியது. இந்த மனக்குறையும் வெறுப்பும் போராட்டமாக வெடித்தது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
பஞ்சாபியர்களும், வங்காளிகளும் கஷ்மீரில் அரசு நிர்வாகப் பணிகளைச் செய்து கொண்டிருக்க, கஷ்மீர் மண்ணின் மைந்தர்கள் பட்டினி கிடக்க நேர்ந்தது.

அதன் விளைவாகவே, “காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே!” என்ற உரிமை முழக்கம் எழுந்தது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இந்தப் போராட்டத்தில் முஸ்லீம்கள் மட்டுமின்றி, கஷ்மீரி இந்துக்களும், பண்டிட்களும் பங்கேற்றனர்.

இதன்விளைவாகத்தான், 1927இல், “புதிய ஜம்மு வம்சாவழி மக்கள் உரிமைச் சட்டம்” நிறைவேற்றப்பட்டது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
அச்சட்டத்தின்படி,

1. கஷ்மீர் மன்னராட்சிப் பகுதியின் அரசு நிர்வாகத்தில், இனி கஷ்மீர் மக்களை மட்டுமே பணியில் அமர்த்தலாம்;

2. கஷ்மீர் மண்ணில் வெளியாள்கள் யாரும், இனி சொத்து வாங்க முடியாது
(புதிய ஜம்மு வம்சாவழி மக்கள் உரிமைச் சட்டம்,1927)
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இந்த வம்சாவழி உரிமைச் சட்டத்தின்படி, பல் வேறு அரசுப் பணிகளில் வேலை பெற்றவர்கள் ஜம்மு பகுதியைச் சார்ந்த இரசபுத்திரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களாகவே இருந்தார்கள்.

இப்படி ஒரு சாராரே பயனடைந்ததைக் கண்டு, வாய்ப்புக் கிடைக்காதவர்கள் வெறுப்படைந்தனர்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இது இந்துக்களின் மீதான வெறுப்பாக உருவாயிற்று.

ஏமாற்றத்துக்கு ஆளானவர்கள் ஒன்றுதிரண்டு போராடினார்கள். நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
அதனால் ஹரிசிங் அரசு :

1.முஸ்லீம்கள் யாரும் எக்காரணம் கொண்டும் வெடிப் பொருள்கள் எதையும் வைத்திருக்கக் கூடாது
2.கஷ்மீர் முஸ்லீம்கள் யாரும் இராணுவத்தில் சேர அனுமதி கிடையாது

என அறிவித்தது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
பூஞ்ச் பகுதியின் ‘சுல்தான்களும்’, மீர்பூரின் ‘சந் தான்களும்’ மட்டுமே தொடர்ந்து படையில் சேர்க்கப் பட்டனர். அவர்களைக் கொண்டு கலவரங்கள் அடக்கப்பட்டன
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
ஹரிசிங்கின் வெளியுறவு அமைச்சராகவும் அரசியல் ஆலோசகராகவும் இருந்த அல்பியன் பானர்ஜி என்ற வங்காள பார்ப்பனர், 1929இல், தான் பதவியை விட்டு விலகிய போது, “இந்த ஆட்சியில் முஸ்லிம்கள் வாயில்லாப் பூச்சிகள் போல- ஆடு, மாடுகளைப் போல நடத்தப்படுகிறார்கள்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
அவர்களுடைய வாழ்நிலை, பொருளாதாரம் நாளுக்கு நாள் நசித்து வருகிறது” என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்

இந்தச் சமயத்தில் தான், படித்த முஸ்லிம் இளைஞர்கள் ஒன்றுசேர்ந்தனர். ஜம்முவில், குலாம் அப்பாஸ் என்ற இளைஞர் ‘ஜம்மு முஸ்லிம் இளைஞர் பேரவை’ யைத் தொடங்கினார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
ஸ்ரீநகரில் ‘படிப்பறைக்கட்சி’ (Reading Room Party) என்ற ஓர் அமைப்பை பிரேம்நாத் பாஸ், முகமது யூசப் ஷா மற்றும் பலர் சேர்ந்து தொடங்கினர்

முஸ்லிம்கள் மசூதிகளில் கூட்டு வழிபாடுகளைச் செய்ததை வைத்து, “மசூதிகள் அரசுக்கு எதிராகப் பிரசாரம் செய்யும் களங்களாக உள்ளன
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
உடனடியாக இப்பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும்” என காவல்துறை குற்றஞ்சாட்டி நடவடிக்கை எடுத்தது

1931 சூனில் ஸ்ரீநகரில் பெரியஅளவில் முஸ்லிம்கள் கூடி ஹரிசிங்கின் அடக்குமுறைக்கு எதிரான செயல்பாடுகளுக்காக படிப்பறைக் கட்சி சார்பில் 11பேர் கொண்ட ஒருகுழுவை அமைத்தனர்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இதில் ‘மிர்வைஸ்’ முகமது யூசுப் ஷா, குலாம் அப்பாஸ் ஆகியோருடன் ஷேக் அப்துல்லாவும் இடம்பெற்றிருந்தார். அப்போது அவர் இளைஞர்

கஷ்மீரி இந்து பண்டிட் குடும்பத்தில் பிறந்து, 1796இல் முஸ்லிமாக மாறியவரின் வழியில் பிறந்தவர்தான் ஷேக் அப்துல்லா
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
முதுநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற ஷேக் அப்துல்லாவின் இலக்கு, ஹரிசிங் அரசின் உயர் நிர்வாகப் பதவியில் அமர வேண்டும் என்பதுதான்

ஹரிசிங்குக்கு எதிராக 25.6.1931இல் நடந்த போராட்டத்தில் பல முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்; சிறைப்படுத்தப்பட்டனர்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
சிறை சென்று விடுதலையான முஸ்லிம் இளைஞர்கள் ஒன்றுகூடி, 1932 சூனில், “முஸ்லிம் மாநாட்டுக் கட்சி” என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினர். அதன் தலைவராக ஷேக் அப்துல்லாவும், பொதுச் செயலாளராக குலாம் அப்பாஸ் என்பவரும் அமர்த்தப் பட்டனர்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
சர். பெர்டிராண்ட் டக்ளஸ் கிளான்ஸ் தலைமையிலான கமிஷன், கஷ்மீர் பகுதியிலும் “மக்கள் பிரதிநிதித்துவ அவை” அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இந்த முடிவை ஹரிசிங் ஏற்றார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
‘பிரதிநிதித்துவ அவை’யில் 75 உறுப்பினர்கள். இதில் 15 பேர் அரசு அதிகாரிகள்; 33 பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்; மீதி 27 பேர் நியமிக்கப்படுவார்கள் என ஹரிசிங்கே முடிவு செய்தார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
தேர்ந்தெடுக்கப்படும் 33பேர்களில் 21இடங்கள் முஸ்லிம்களுக்கும் மீதி 12இடங்கள் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினருக்கும் என பிரித்துத் தரப்பட்டன

பிரதிநிதித்துவ அவைக்கான தேர்தலில்(1934) முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்ட 21இடங்களில் 14இடங்களை முஸ்லிம் மாநாட்டுக் கட்சி கைப்பற்றியது
பின்னர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடந்த தேர்தலில் 19 இடங்களை அக்கட்சி பெற்றது
மன்னர் ஹரிசிங் சிந்துஆற்றுக்கு வட பகுதியிலுள்ள கில்கிட் நிலப்பகுதியை 1935ஆம் ஆண்டு மார்ச்சு முதல் 60 ஆண்டுகளுக்கு பிரிட்டிஷாருக்குக் குத்த கைக்கு விட்டார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
எது எப்படியிருந்தாலும் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை முஸ்லிம் மாநாட்டுக்கட்சி தொடர்ந்து நடத்தியது

முஸ்லீம் மாநாட்டுக்கட்சியில் ஷேக் அப்துல்லாவுக்கு எதிர்ப்பு முளைத்தது
அதைச் சமாளித்த ஷேக்அப்துல்லா மீண்டும் 1937ல் முஸ்லிம் மாநாட்டுக் கட்சியின் தலைவரானார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
ஹரிசிங்கின் அமைச்சரவையில் பிரதம மந்திரியாக என். கோபாலசாமி அய்யங்கார் இருந்தார். அவருடன் அப்துல்லா ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதால், முஸ்லீம்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் கொடுக்கக் கூடாது என்று இருந்த சட்டத்தைத் திருத்த அப்போது ஒரு முயற்சி நடந்தது. அப்துல்லா குழுவினர் மட்டும் அரசுக்குச் சார்பாக வாக்களித்தனர்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
அதனால் கட்சிக்குள் உள்சண்டை காரணமாகத் தகராறு வரும்போது, அரசு அப்துல்லாவுக்கு ஆதரவாக இருந்தது. மேலும் அப்துல்லா இந்திய தேசிய காங்கிரசின் முன்னணித் தலைவர்களான நேரு, படேல் போன்றவர்களுடன் நெருக்கமான உறவு கொண்டார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
1939 ஏப்ரலில் நடந்த கட்சியின் சிறப்புக் கூட்டத்தில், கட்சியின் பெயரை ‘ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி’ என்று அப்துல்லா மாற்றினார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
சுதந்திரம் பெற்றவுடன் சுதேச மன்னர் ஆட்சிப் பகுதிகளை இந்தியா அல்லது பாகிஸ்தான் ஏதாவது ஒன்றுடன் இணைத்துவிடுவது, இதற்கான ஒப்பந்தத்தில் சுதேச மன்னர்கள் கையொப்பம் போட வேண்டும் என்று வற்புறுத்துவது என்பது காங்கிரசின் திட்டம்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
ஷேக் அப்துல்லா, “மன்னர் ஹரிசிங் கஷ்மீரில் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெறாதவர் எனவே கஷ்மீர் பற்றி முடிவெடுக்க அவர் தகுதி அற்றவர்” என்றார்
மேலும், “கஷ்மீர் மக்களிடம் நேரடியாக ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி, கஷ்மீரின் நிலை குறித்து முடிவெடுக்க வேண்டும்” என அவர் வற்புறுத்தினார்
நேரு முதலாவதாக கஷ்மீரில் சுற்றுப் பயணம் சென்ற போது, ஷேக் அப்துல்லாவுடன் சேர்ந்தே பயணம் செய்தார்; கூட்டங்களில் பேசினார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
நேருவின் முன்னோர் 18ஆம் நூற்றாண்டிலேயே கஷ்மீரிலிருந்து வெளியேறி அலகாபாத்தில் குடி யேறிவிட்டனர். ஆனாலும், “கஷ்மீர் என்னுடைய பூர்விக மண்” என்று, கஷ்மீரில் கூட்டங்களில் பேசும்போது நேரு குறிப்பிட்டார். “நேருவின் இந்த பூர்விக மண் பற்றுத்தான்” கஷ்மீர் சிக்கலுக்கு முதலாவது அடிப்படை
இரண்டாவது முறையாக, 1944இல் ஜின்னா கஷ்மீரில் பயணம் மேற்கொண்டார். அவர் மன்னர் ஹரிசிங்கைச் சந்திக்க முயன்றும் முடியவில்லை.

அச்சமயம் ஷேக் அப்துல்லா கஷ்மீரில் செல்வாக்கு உள்ள ஒரே தலைவராக இருந்தார் #Kashmir
#அறிவோம்கஷ்மீர்
ஹரிசிங்கிடம் பிரதம மந்திரியாக இருந்த இராமச்சந்திரகக், ஹரிசிங் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை முடக்குவதில் தீவிரம் காட்டினார். ஷேக் அப்துல்லா தன் பேரில் நடவடிக்கை வரும் என அஞ்சி, தக்க ஆலோசனை பெறுவதற்காக நேருவைச் சந்திக்க தில்லிக்குப் புறப்பட்டார். #Kashmir
#அறிவோம்கஷ்மீர்
ஆனால் வழியிலேயே அப்துல்லா கைது செய்யப்பட்டார். அவருடைய கட்சியின் மற்ற தலைவர்கள் தப்பித்து லாகூருக்கு ஓடிவிட்டனர்

கைதாக்கப்பட்ட ஷேக் அப்துல்லாவுக்கு வாதாடுவதற்காக, நேரு கஷ்மீருக்குப் புறப்பட்டார்; ஆனால் கஷ்மீரில் நுழைந்தவுடன் நேரு கைது செய்யப்பட்டார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
காங்கிரசுப் பெருந்தலைவர்களும் பிரிட்டிஷ் பெரிய அதிகாரிகளும் வற்புறுத்திய பிறகு, நேருவை விடுதலை செய்தனர். அவர் அப்துல்லாவைச் சந்தித்தார். ஆனால் நேருவைச் சந்திக்க அரிசிங் மறுத்து விட்டார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
12.8.1947 அன்று புதிதாக உருவாகும் இரு நாடுகளுடனும் பொதுவான ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள ஹரிசிங் முன்வந்தார்

“கஷ்மீரைப் பொறுத்தவரை, இப்போதைக்கு, பாக்கிஸ்தான், இந்தியா என இரு நாடுகளில் எதனுடன் சேருவது என முடிவெடுக்க முடியாத நிலை இருக்கிறது
எனவே இருநாடுகளுடனும் நட்புறவைத் தொடருவோம்”
பாக்கிஸ்தான் இந்த ஒப்பந்தத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு ஆவணத்தில் கையொப்பமிட்டது. ஆனால், இந்தியா இந்த ஒப்பந்தத்தை ஆய்வு செய்யவும், கவனித்து முடிவெடுக்கவும் தற்போதைக்குப் போதுமான நேரமில்லை எனக்கூறி, அந்த ஆவணத்தில் கையொப்பம் இடாமல் தள்ளி வைத்தது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இந்த நிலையில்தான் 1947 ஆகஸ்ட் 14 அன்று பாக்கிஸ்தானுக்கும், 15 அன்று இந்தியாவுக்கும் சுதந்திரம் அளிக்கப்பட்டு, இந்தியா, பாக்கிஸ்தான் என்னும் புதிய இரு நாடுகள் உருவாயின
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
keetru.com/index.php/2010…
டோக்ரா அரசக் குடும்ப ஆட்சி உருவான காலம் தொட்டே, பூஞ்ச் பகுதி மக்கள் அரசுக்கு எதிராக இருந்தனர். ஹரிசிங் ஒரு ‘கொடுங்கோலன்’ என்றே பூஞ்ச் பகுதி மக்கள் கருதினர். அது உண்மையுங்கூட
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இரண்டாம் உலகப்போரில் சண்டையிட கஷ்மீரிலிருந்து அனுப்பப்பட்ட 71,667 போர் வீரர் களில், 60,000 பேருக்கு மேற்பட்ட எண்ணிக்கை யினர் பூஞ்ச், மீர்பூர் பகுதிகளிலேயே இருந்தனர். இவர்களிடமிருந்த ஆயுதங்கள் மன்னரால் பறிக்கப் பட்டிருந்தன
எனவே இவர்கள் ஹரிசிங் ஆட்சி மீது வெறுப்படைந்தனர்
#Kashmir
ஹரிசிங் ஆட்சியில் சட்ட அதிகாரியாக இருந்த முகமது இப்ராஹிம்கான் என்கிற இளைஞர் இந்த நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு 2மாத காலத்தில் 50000பேர் கொண்ட ஒருபடையையே திரட்டிவிட்டார்
உடனே அரசருக்கு எதிரான போராட்டம் வெடித்தது

அரசரின் படைகள் மக்களைச் சுட்டுக் கொன்றன
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
ஆனாலும் மக்களைக் காப்பாற்ற விரும்பிய முகமது இப்ராஹிம் கான், பாக்கிஸ்தான் அரசிடமிருந்து ஆயுத உதவி கோரினார். 500 துப்பாக்கிகள் கேட்ட அவருக்கு-4,000 துப்பாக்கிகளை, ஜின்னாவுக்குக் கூடத் தெரியாமல், பாக்கிஸ்தான் அதிகாரிகள் அனுப்பினர்

இந்தியாவும் காஷ்மீரும் அதிர்ச்சி அடைந்தன
#Kashmir
இந்த இக்கட்டான நிலைமையிலிருந்து மீளுவ தற்கு ஹரிசிங்குக்கு இருந்த ஒரே வழி ஷேக் அப்துல்லாவை சிறையிலிருந்து விடுவித்து அவரை அரசுக்கு ஆதரவாளராக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதே
அவ்வாறே முடிவு செய்யப்பட்டது
அதற்கு அப்துல்லாவும் இணங்கினார்
அவர் 9-9-1947இல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்
ஹரிசிங்கின் ஆதரவாளரான ஷேக் அப்துல்லாவுக்கு, பாக்கிஸ்தான் பெருநில உடைமைக்காரர்களும் பணக்காரர்களும் அழுத்தம் தந்து கஷ்மீரை பாக்கிஸ்தானுடன் சேர்த்துவிட முயலும்படித் தூண்டினர்; மேலும் கஷ்மீரில் அப்போதே நிலங்களை வாங்கிப் போடவும் அவர்கள் எத்தனித்தனர்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
ஷேக் அப்துல்லா, குலாம் முகமது சாதிக் மூலம் “இப்போது அவசரப்பட வேண்டாம்” என்று, பாக்கிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கானுக்குச் செய்தி அனுப்பினார்.

“ஷேக் அப்துல்லா ஒரு இந்திய ஏஜெண்ட்” என்று பாக்கிஸ்தான் கணித்தது.

அதேபோல், இந்தியாவின் பக்கம் நிற்கவே ஷேக் அப்துல்லா முடிவு செய்தார்
இந்த நேரத்தில் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா பகுதியிலிருந்த ஜுனாகரை ஆண்ட சுல்தான் பாக்கிஸ்தானுடன் சேர விரும்பினார். ஜுனாகர் மக்கள், சுல்தானின் முடிவை எதிர்த்தனர்.

“பாக்கிஸ்தானோடு - காஷ்மீர்; இந்தியாவோடு - ஜுனாகர்” என்று எல்லோரும் பேசத் தொடங்கினர்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இதைப் புரிந்துகொண்ட இந்திய அரசு, கஷ்மீருக்கு வரும் அனைத்துப் போக்கு வரவு வசதிகளையும் நிறுத்தியது; குறிப்பாக உணவுப் பொருள்கள், பெட்ரோல், உப்பு போன்ற பொருள்களைப் பாக்கிஸ்தான் சாலைகள் வழியாக அனுப்ப வேண்டும் - எனவே இது இப்படியே தடைப்பட்டு நிற்க இந்திய அரசினர் திட்டமிட்டனர்
#Kashmir
பாக்கிஸ்தானின் இந்நிலைமையை ஹரிசிங் கண்டித்தார்; பயன் இல்லை

இப்போது, “தனி ஜம்மு-காஷ்மீர் தேசமாக இருப்போம்” என்று சொல்லிக் கொண்டிருந்த ஹரிசிங், “இந்தியாவோடோ அல்லது பாக்கிஸ்தானோடோ சேர்ந்து கொள்ளலாம்” என்று மனம் மாறியிருந்தார்

#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
“எந்த நாட்டுடன் சேருவது என்பது பற்றி மக்களின் கருத்தை அறிய ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தலாம்” என்பதற்குச் சம்மதிக்கும் அளவுக்கு ஹரிசிங் மாறியிருந்தார். ஆனாலும் அதற்கு ஒரு தடை இருந்தது

#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
“பொது வாக்கெடுப்பின் முடிவு எதுவாக இருந்தாலும்-அதற்குப் பிறகும் இந்தியாவிலிருந்து கஷ்மீருக்கு வரவும் போகவும் தடையற்ற சாலைப் போக்கு வரவு வசதி செய்து தர வேண்டும்” என்பதே அந்தத் தடை

#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
கஷ்மீரின் புதிய பிரதமர் மகாஜனுடன் பேசிட, பாக்கிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் தம் பிரதி நிதிகளை அனுப்பினார். ஆனால் மகாஜன், அவர்களைச் சந்திக்க மறுத்துவிட்டார். ஏன்?
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
பாக்கிஸ்தான் எல்லையில் கஷ்மீருக்கு எதிராகக் கலவரங்களைத் தூண்டிவிட்டு விட்டு, ஒன்றுமே தெரியாதது போல் நட்புப் பாராட்டுவது சரி அல்ல என்று கூறிவிட்டார்.

#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
மேலும், “உடனடியாகக் கலவரங்களை நிறுத்தாவிட்டால், அதை அடக்க அண்டை நாடுகளிடம் இராணுவ உதவி கோரப்படும்” என்று எச்சரித்து லியாகத் அலிகானுக்கு மகாஜன் ஒரு மடலும் அனுப்பினார்

keetru.com/index.php/2010…
சட்ட அதிகாரியாக இருந்த முகமது இப்ராஹீம்கான், உள்நாட்டிலேயே அரசனுக்கு எதிராகப் போராட்டம் தொடங்கிவிட்டது, ஒருபக்கம்.

இன்னொரு பக்கம் கஷ்மீரின் வடக்குத் திசையிலிருந்து, மலைவாழ் பழங்குடி முரட்டுக் கூட்டம் ஒன்று ஆயுதங்களுடன் பாக்கிஸ்தான் எல்லையைக் கடந்து கஷ்மீருக்குள் நுழைந்தது
பாக்கிஸ்தானின் மறைமுக ஆதரவோடு அது நடந்தது
அந்த நடவடிக்கைக்கு “இருட்டறை நடவடிக்கை” - “ஆபரேஷன் குல்மார்க்” (Operation Gulmark) என்று பெயர்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
“பாக்கிஸ்தான் எல்லையைத் தாண்டிவிட்டோம். கஷ்மீருக்குள் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்” என்று செய்திகளை அவர்களே பரப்பினார்கள். அவர்களைத் தடுப்பார் இல்லை. எனவே அப்படை கொலை, கொள்ளை, தீ வைப்பு, தடையின்றிப் பெண்களைக் கற்பழிப்பது - சூறையாடுவது நடந்தது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
முதன்முதலில் அவர்கள் எதிர்ப்பைக் கண்டது முசாபராபாத் நகரத்தில்தான்
ஹரிசிங்கின் மூத்த இராணுவப்படை அதிகாரி பிரிகேடியர் ராஜேந்திர சிங். அவர் 2 நாள்கள் அங்கே வீரத்துடன் போராடினார். இறுதியில் ‘குல்மார்க்’ படையினரால் அவர் கொல்லப்பட்டார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
ஹரிசிங்கின் படையில் எஞ்சியிருந்த முஸ்லீம்களும் பழங்குடிகள் படையுடன் சேர்ந்து கொண்டனர்
எல்லா இராணுவ இரகசியங்களும் இவர்களுக்குத் தெரியும்
இவர்களில் பலர் எல்லாவற்றையும் காட்டிக்கொடுத்துவிட்டுப் பரிசுகள் பெற்றனர். முரட்டுப்படை ஒவ்வொரு பகுதியாகக் கைப்பற்றியது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இதன்பிறகு ஜம்மு பகுதியில் இருந்த சீக்கியர்களும், இந்துக்களும் ஒன்றுசேர்ந்து, அப்பகுதியிலிருந்த முஸ்லீம்களைத் தாக்கினர். உயிருக்குப் பயந்து 5 இலட்சம் முஸ்லீம்கள் ஜம்முவை விட்டு ஓடிவிட்டதாகக் கருதப் பட்டது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
ஆனாலும் கஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களின் மன நிலை பாக்கித்தானின் முரட்டுப் படைக்கு எதிராகத்தான் இருந்தது. இவர்கள் பாக்கிஸ்தானின் அடாவடிப் போரைக் கண்டித்தார்கள்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இந்த நெருக்கடியான சூழலில் ஷேக் அப்துல்லா தன் கட்சித் தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் நம்பிக்கையை ஊட்டி அவர்களைக் கொண்டே தேசியஇராணுவம் (National Militia) என்ற புதிய அமைப்பை உருவாக்கினார்
இப்படையின் தொண்டர்கள் அனைவருக்கும் அரசனின் இராணுவக் கிடங்கிலிருந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டன
சீக்கிய மற்றும் டோக்ரா இனப் பொது மக்களுக்கும் ஆயுதங்கள் கிடைத்தன. இவர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து ‘குல்மார்க்’ படையுடன் போரிட்டனர்

சிலர் ஷேக் அப்துல்லாவின் அரசியல் எதிரிகளையும் பழிதீர்த்தனர்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
ஜம்மு பகுதியிலிருந்த அரசின் அலுவலர்கள், ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சித் தொண்டர்களிடம் நிர்வாகத்தை ஒப்படைத்துவிட்டு ஓடிவிட்டனர்
இவ்வளவையும் மீறி பாக்கிஸ்தானின் முரட்டுப் படையினர் ஜீலம் ஆற்றங்கரையிலிருந்த பாரமுல்லா அருகில் இயங்கிய பெரிய மின் உற்பத்தி நிலையத்தை அழித்தனர்
ஸ்ரீநகர் இருளில் மூழ்கியது
சிக்கல் அதிகமாவதைக் கண்ட ஷேக் அப்துல்லா, தன் நண்பர்கள் மூலம் இந்தியாவின் உதவியை நாடினார்.

அதேபோல், நிலைமை கைமீறிப் போய்விட்டதை அறிந்த ஹரிசிங், 24-10-1947இல், “உடனடியாக இந்திய இராணுவ உதவி வேண்டும்” என இந்திய அரசிடம் கோரினார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
பாக்கிஸ்தானின் முரட்டுப் படைகள் கஷ்மீரில் முன்னேறி முக்கிய இடங்களைப் பிடித்துவிட்டார்கள் என்கிற செய்திகள் இந்திய அரசுக்கு அதிர்ச்சியை அளித்தன.

25-10-1947 அன்று தில்லியில் நடந்த பாதுகாப்புக் குறித்த உயர்மட்டக் கூட்டத்தில், கஷ்மீருக்குப் படை அனுப்புவது பற்றிப் பேசப்பட்டது
#Kashmir
அரசப் பிரதிநிதி (Viceroy) மௌண்ட்பேட்டன் பிரபு, “மூன்றாவது நாடு ஒன்றுக்கு இந்தியா படை அனுப்புவது சட்டப்படி சரியற்றது” என்று சொல்லித் தடுத்துவிட்டார்.

மௌண்ட்பேட்டன் இன்னொரு கருத்தையும் முன் வைத்தார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
“தற்போதைக்குத் தற்காலிகமாகக் கஷ்மீரை இந்தியாவுடன் சேரச் சொல்லுங்கள். நிரந்தரமாக எந்த நாட்டுடன் சேர்ப்பது என்பதை, பின்னர், மக்களிடம் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்து கொள்ளலாம்"
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இப்படிப்பட்ட ஓர் ஒப்பந்தத்தை இந்திய அரசுடன் செய்தாலன்றி, இந்தியாவின் இராணுவ உதவி கிடைக்க வாய்ப்பு இல்லை என்பது ஹரிசிங்கிடம் தெளிவாகக் கூறப்பட்டது.
keetru.com/index.php/2010…
"பழங்குடியினரின் கோரதாண்டவத்திற்கு சாட்சியாக காஷ்மீர் மகாராஜாவின் ராணுவ வீரர்கள், உள்ளூர் ஆண்கள் மற்றும் பெண்களின் உடல்கள் காணப்பட்டன, ஆற்றில் உடல்கள் மிதந்தன. உடைந்த கட்டடங்கள், பொருட்கள், எரித்து சாம்பலாக்கப்பட்ட பொருட்களின் குவியல்,
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் என சிதறிக்கிடந்த காட்சி காணவே கொடூரமாக இருந்தது."
மூன்று நாட்கள்வரை முஜாஃபராபாதில் இருந்த பழங்குடியினர், ஸ்ரீநகருக்கு செல்ல 170 கிலோமீட்டர் பயணிக்க வேண்டியிருந்தது.
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
அங்கிருந்து கிளம்பிய ஒரு குழு, ஜீலம் நதியை கடந்து பள்ளத்தாக்குப் பகுதிகளை நோக்கி முன்னேறியது. பாரமுல்லாவை அடைந்த அவர்கள், நகரை சூறையாடிய பின்னர் நெருப்பு வைத்தார்கள்
200 கிலோமீட்டர் பயணித்து ஸ்ரீநகரின் புறநகர் பகுதியை அடைந்த அவர்களை யாரும் எதிர்க்கவில்லை
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
கஷ்மீர் அரசரின் படைகள் சிதறியோடிவிட்டன. இந்துக்களும், சீக்கியர்களும் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறினார்கள். அவர்கள் எதிர்கொண்டது முஸ்லிம்களை மட்டுமே

முஸ்லிம் பெண்கள் உணவளிக்க தயாராக இருந்தார்கள், ஆனால் பழங்குடியினர் அவர்களிடமிருந்து உணவு வாங்கி சாப்பிட அச்சம் கொண்டார்கள்
உணவில் நச்சுக் கலந்துவிடலாம் என்ற அச்சமே அதற்கு காரணம்".

"எனவே மக்களின் கால்நடைகளை பிடித்து கொன்று, தீயிலிட்டு சுட்டு சாப்பிட்டார்கள் பழங்குடியினர்

எண்ணிக்கையில் அதிகமாக இருந்த பழங்குடியினர்கள், முறையாக போரிடாமல், கொரில்லா முறையில் திடீர் தாக்குதல்களை நடத்தினார்கள்
#Kashmir
பழங்குடியினருக்கு உதவும் வகையில் பாகிஸ்தானும் ஸ்ரீநகருக்கு படைகளை அனுப்ப விரும்பியது. ஆனால் பிரிட்டிஷ் கூட்டுத் தலைமை அதற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது
அந்த சமயத்தில் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் ராணுவம் பிரித்து வழங்கப்படவில்லை.
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
நவம்பர் மாத இறுதியில் பெரும்பாலான பழங்குடியினர் ஸ்ரீநகரில் இருந்து திரும்பிவிட்டார்கள்
"கைப்பற்றிய பொருட்களையும், ஆயுதங்களையும் எடுத்துச் சென்ற அவர்கள், கால்நடைகளையும் ஓட்டிச் சென்றார்கள், அதுமட்டுமா? பெண்களையும் அடிமைகளாக அழைத்துச் சென்றார்கள்
#Kashmir
bbc.com/tamil/global-4…
மகராஜாவின் பிரச்சினை எளிதானது அல்ல. அவர் பாகிஸ்தானுடன் இணைவதை முஸ்லிம் அல்லாதவர்களும் ஷேக் அப்துல்லாவின் தேசிய கான்ஃப்ரன்ஸை ஆதரிக்கும் பள்ளத்தாக்கு முஸ்லிம்களும் விரும்பவில்லை. இந்தியாவுடன் இணைவதை கில்கிட் பகுதி, பாகிஸ்தானோடு ஒட்டியிருக்கும் பகுதியில் இருப்பவர்கள் விரும்பவில்லை.
மேலும் இந்தியாவுடன் இணைக்கும் சாலைகள் அன்று இல்லை. சாலைகள் எல்லாம் பாகிஸ்தான் பக்கம் இருந்தன. அவரது நாட்டின் முக்கிய வருவாயை ஈட்டித் தரும் மரவியாபாரமே பாகிஸ்தான்பகுதியில் ஓடும் நதிகளோடு இணைந்து இருந்தது.”
இது இந்திய அரசிற்கும் தெரிந்திருந்தது
குறிப்பாக சர்தார் படேலுக்கு
கஷ்மீரைப் பற்றி அவர் 13 செப்டம்பர் 1947ஆம் ஆண்டு அன்றைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த சர்தார் பல்தேவ்சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் கஷ்மீர் பாகிஸ்தானோடு இணைந்தால் அதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகிறார்
இதற்கு முன்னாலேயே ஜூன் மாதம் ஹரிசிங்கைச் சந்தித்த மவுன்ட் பேட்டன், “பாகிஸ்தானுடன் சேர கஷ்மீர் முடிவெடுத்தால் இந்திய அரசு அந்த முடிவைத் தவறாக எடுத்துக் கொள்ளாது. நான் சர்தார்படேலின் உறுதியான வாக்குறுதியைப் பெற்றிருக்கிறேன்” என்று சொன்னார்.
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
ஆனால் “மக்களின் கருத்தை அறிய வேண்டும். அதன்படித்தான் நடக்க வேண்டும்” என்றும் சொன்னார்
எனவே ஆகஸ்டு 15, 1947க்குப் பிறகும் கஷ்மீர் பாகிஸ்தானோடு இணைந்திருந்தால், இந்தியா அதை எதிர்த்திருக்காது என்பது தெளிவு. கஷ்மீர் மக்கள் எதிர்த்திருந்தால் வரலாறு வேறு மாதிரி திரும்பியிருக்கும்.
ஷேக் அப்துல்லா அன்றைய காலகட்டத்தில் பாகிஸ்தானோடு இணையத் தயாராக இல்லை
நேரு முதலில் சிறையில் இருக்கும் ஷேக் அப்துல்லாவை விடுதலை செய்து மக்கள் விரும்பும் ஆட்சி ஒன்றை அமைக்கச் சொன்னார். பின்னர் இந்தியாவோடு இணையலாம் என்றார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
படேலுக்கு ஷேக் அப்துல்லாவை அவ்வளவாகப் பிடிக்காது என்றாலும், அப்துல்லாவும் மகராஜாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற கருத்தோடு அவரும் ஒத்துப்போனார்.

கஷ்மீர் தன்னோடுதான் இணையும் என்று பாகிஸ்தான் எதிர்பார்த்தது.
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
ஜின்னா ‘பழுத்த பழம்போல அது நமது மடியில் விழும்’ என்று சொன்னார் (இந்த உவமை சொன்னாலே பிச்சிக்கும் போலயே🤪 )

ஜம்மு பகுதியில் இந்து அதிகமாக இருக்கும் பகுதியில் முஸ்லிம்களும் முஸ்லிம் அதிகம் இருக்கும் பகுதியில் இந்துக்களும் படுகொலை செய்யப்பட்டனர்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
மகராஜாவிற்கு வேறு வழியில்லை. அக்டோபர் 26(27)ஆம் தேதி இந்தியாவோடு இணையும் பத்திரத்தில் கையெழுத்திட்டார்
வி.பி. மேனன் நேரடியாகச் சென்று பெற்றுக்கொண்டார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
லாகூரில் 1947 நவம்பரில் நடந்த இருதரப்புப் பேச்சு வார்த்தையின் போது, ‘கஷ்மீர் சிக்கலைத் தீர்க்க மூன்றாம் தரப்பை அழைப்போம்’ என்று மவுண்ட் பேட்டன் வற்புறுத்தினார். பாக்கிஸ்தான் இதற்குச் சம்மதித்தது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
ஆனால் இந்தியத் தலைவர்கள், “கஷ்மீர் மன்னர் இந்தியாவோடு இணைக்க ஒப்பந்தம் போட்டுக் கொண்ட பிறகு, எந்த அடிப்படையிலும் கஷ்மீர் பேரில் உரிமை இல்லாத பாக்கிஸ்தானை ஏன் சமமாக மதித்துப் பேச வேண்டும்” என்று கேள்வி எழுப்பினர்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இந்தியப் படை 1947 நவம்பர் 7ந் தேதி ஸ்ரீநகரில் குண்டு மழை பொழிந்தது. இறுதியில் பாக். முரட்டுப் படையினர் 300 பேர் கொன்றொழிக்கப் பட்டனர். அவர்களின் உடல்களை அப்படியே போட்டு விட்டு, தப்பினால் போதும் என்று மீதிப்பேர் ஓடிப்போனார்கள். நவம்பர் 8ஆம் நாள் பாரமுல்லாவை இந்தியப் படை மீட்டது
அடுத்த சில வாரங்களில் யூரி நகரையும் முரட்டுப் படையிடமிருந்து இந்தியப் படை மீட்டது

எல்லை கடந்து வந்த பழங்குடி முரட்டுப் படையினர் ஏராளமானோர் உயிரிழந்தனர்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இந்நிலையில், ஆங்கிலேயே அதிகாரிகளின் தூண்டுதலால், 1947 நவம்பர் இறுதியில் பாக். பிரதமர் லியாகத் அலிகான் தில்லிக்கு வந்து நேருவைச் சந்தித்தார். அப்போது ஒரு தீர்வு ஏற்படும் என எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக, காஷ்மீரில் பாக். படையின் தாக்குதல் அதிகரித்தது
#Kashmir
இப்போதும் மவுண்ட் பேட்டன் தன் நிலைப்பாட்டில் மாறவில்லை
அவருடைய வற்புறுத்தலின் பேரில் இருநாட்டுப் பிரதமர்களும் 1947 திசம்பரில் மீண்டும் லாகூரில் சந்தித்தனர்
அதே நேரத்தில் பாக். தரப்பிலிருந்து புதிதாக ஆள் வரவர வேகமாக முன்னேறுவதும், களப்பலி அதிகமாகும் போது பின்வாங்குவதுமாக இருந்தனர்
பாக். - இந்தியப் பிரதமர்களின் சமரசக் கூட்டம் ஒன்றில், பிரதமர் நேரு, “பாக். முரட்டுப் படையினால் பதற்ற நிலை தொடருகிறது. அவர்களை உடனே வெளியேற்ற வேண்டும்
இரு தரப்பினரும் ஐநாவுக்குச் செல்வோம்” என்று வெளிப்படையாக அறிவித்தார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இதன்படி, 1947 டிசம்பர் 31 அன்று இந்தியப் பிரதமர் நேரு, ஐநா அவையின் விதி 35இன்கீழ், தம் முறையீட்டு விண்ணப்பத்தைப் பதிவு செய்தார். சில நாள்களில் இதுபற்றி, ஐநா பாதுகாப்புக் குழுவில் விவாதம் நடந்தது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
அங்கு நடந்த வாக்குவாதத்தின் போது, பாக்கிஸ்தான் சார்பாகப் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஃப்ருல்லா கான் 5 மணிநேரம் எடுத்து வைத்த வாதம் ஆணித்தரமாக இருந்தது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
அவர், “டோக்ரா வம்சத்தார் ஜம்மு-கஷ்மீரை பிரிட்டிஷாரிடம் விலைக்கு வாங்கினார்கள் என்கிற மண் உரிமையை வைத்து, கஷ்மீரிகளைச் சுரண்டி நாசப்படுத்திவிட்டார்கள்
டோக்ரா இனத்தவரின் ஆதிக்கத்திலிருந்து கஷ்மீரிகளை மீட்டுக் காப்பாற்றுவதே பாக். அரசின் நோக்கம்” என்பதையும் வலிவாக நிறுவி விட்டார்
தொடக்கத்தில் இந்தியத் தரப்பில் பேசியவர்களின் வாதம் அவ்வளவு வலுவாக இல்லை
அங்கு 20நாள்கள் நடந்த கேட்புரையின் போது, இந்திய அரசு சார்பில், இரண்டாம் கட்டத்தில், டாக்டர் ஏ.இலட்சுமண சாமி முதலியார், என். கோபாலசாமி அய்யங்கார், ஷேக் அப்துல்லா போன்றோர் பங்கேற்று வாதாடினர்

#அறிவோம்கஷ்மீர்
பாக். தரப்பில் பேசியவர்கள் பாக்கிஸ்தானுடன் அதன் மன்னரால் சேர்க்கப்பட்ட ஜுனாகர் சிற்றரசை இந்தியா கைப்பற்றிவிட்டதாகக் குற்றஞ்சாட்டினர்

இதற்கு இந்தியத் தரப்பில் பதிலடி அதாவது பாக்கிஸ்தானுக்கு எதிராகக் குற்றவாளிக் கூண்டில் நின்று இந்தியா விடை சொல்ல வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது
உலக நாடுகளைச் சேர்ந்த நாள் ஏடுகள் பலவும் கஷ்மீர் நிலை பற்றி எழுதிய செய்திகள் இந்தியத் தரப்புக்கு வலுசேர்ப்பதாக இருந்தன. அதாவது பாக். படைகள் மூன்று மாத காலமாக எல்லை தாண்டிவந்து கஷ்மீரில் செய்த அட்டுழியங்களைப் பற்றி அவை எழுதின
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
கஷ்மீரில் தாக்குதல் நடத்துவது பாக். முரட்டுப் படைதான் என்றாலும் அவர்களுக்கு ஆயுதங்களைத் தருவதும், அப்படை இடம்பெயர வாகனங்களைத் தருவரும் பாக்கிஸ்தான் தான் என்பதை உலக நாட்டு ஏடுகள் அம்பலப்படுத்தின
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இந்த வேளையில் 1948 ஜனவரி 30 அன்று காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதால், ஐநா. பாதுகாப்புக் குழுவின் நடப்புகள் தாமதப்பட்டன. ஆனால் இந்தியப் படைக்கும், பாக். படைக்கும் சண்டை தொடர்ந்து நடந்தது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இதற்கிடையே 1948 பிப்ரவரி 20 அன்று ஜுனாகரில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் - பாக்கிஸ்தானுடன் இணைவதற்கு ஆதரவாக 91 வாக்குகளே பதிவாயின; ஆனால் இந்தியாவுக்கு ஆதரவாக 1,90,870 வாக்குகள் பதிவாயின. ஜுனாகர் இந்தியாவுடன் இணைவது உறுதி செய்யப்பட்டது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இதைத் தொடர்ந்து, கஷ்மீரில் அமைதி ஏற்பட்ட பிறகு, இதுபோன்ற வாக்கெடுப்பை கஷ்மீரிலும் நடத்துவதாக, 1948 மார்ச்சு 8 அன்று, இந்திய அரசு, ஐநா. அவையில் வாக்குறுதி அளித்தது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
ஐநா தீர்மானம் 21 ஏப்ரல் 1948ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது
👉🏾இந்தியாவுடன் சேர்வதா அல்லது பாகிஸ்தானுடன் சேர்வதா என்பதைத் தீர்மானிக்க ஜம்மு கஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
👉🏾வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னால் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதியிலிருந்து தனது படையையும் மற்றவர்களையும் அகற்றிக்கொள்ள வேண்டும்
👉🏾பாகிஸ்தான் பகுதியிலிருந்து படை அகற்றப்பட்டுவிட்டது என்பது உறுதி செய்யப்பட்டதும், இந்தியாவும் தனது படையை விலக்கிக்கொள்ள வேண்டும்

#அறிவோம்கஷ்மீர்
ஆனால் சட்டம், ஒழுங்கு காப்பாற்றப்படுவதற்காக எவ்வளவு படைவீரர்கள் தேவைப்படுகிறார்களோ அவ்வளவு வீரர்களை வைத்துக்கொள்ளலாம்
👉🏾வாக்கெடுப்பு இந்தியாவின் மேற்பார்வையில் நடத்தப்படும்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இந்தியப் படையின் வலிமைக்கு ஈடு கொடுக்க முடியாத பாக். முரட்டுப் படை - கஷ்மீர் பள்ளத்தாக்கைத் தவிர்த்துவிட்டு, பால்டிஸ்தான், லடாக் போன்ற பகுதிகளுக்கு நகர்ந்தது. ஆனால் வழியில் இருந்த கார்கில், டராஸ் போன்ற பகுதிகளைக் கைப் பற்றிக் கொண்டு முன்னேறிய போது,
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
லடாக்கில் நிறுத் தப்பட்டிருந்த மன்னர் ஹரிசிங்கின் படை காணாமல் போயிருந்தது
மேலும் அப்படையினர் தங்களிடமிருந்த ஆயுதங்களையும் இந்தியப் படை தந்த ஆயுதங்களையும் போர்க்களத்தில் போட்டுவிட்டு, ஓடிவிட்டனர். இவை பாக். முரட்டுப் படையின் கைக்குக் கிடைத்து விட்டன என்ற செய்தி
இந்தியாவுக்குப் பெரிய அதிர்ச்சியைத் தந்தது
‘ஆஸாதி படையினர்’(விடுதலைப்படை) என்று தங்களை அழைத்துக் கொண்ட பாக் முரட்டுப்படை தங்களை நெருங்குவதைக் கண்ட லடாக்கியர், பயந்துபோய், ஸ்ரீநகரில் இருந்த இந்தியப் படைத் தளபதி திம்மையாவை அணுகித் தங்களைக் காப்பாற்றும்படிக் கோரினர்

#அறிவோம்கஷ்மீர்
இதற்கு இடையில், மன்னர் ஹரிசிங்கின் படையும், இந்தியப் படையும் இணைக்கப்படுவதா அல்லது ஹரிசிங்கின் படையின் பாதுகாப்பிலேயே கஷ்மீரை வைத்திருப்பதா என்ற குழப்பத்துக்கு இந்திய அரசு ஆளானது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
எனவே, “ஐநா. மேற்பார்வையில் கஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்துவது என்று 1948 மே மாதம் ஐநா. பாதுகாப்புக்குழு கொண்டுவந்த தீர்மானத்தை ஏற்க இந்தியா உறுதியாக மறுத்துவிட்டது.”
ஐநா. பாதுகாப்புக் குழுவில் தொடர்ந்து நடந்த கேட்புரையின்படி - 1948 ஆகத்து 13 அன்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்து கொண்டு, கஷ்மீர் மக்களின் விருப்பப்படி, சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும்” என்று அத்தீர்மானம் கூறியது

அச்சமயம் பாக்கித்தான் அதிபர் முகமது அலி ஜின்னா மறைவுற்றார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
அடுத்த சில மாதங்களில் இந்தியா-பாக்கிஸ்தான் போர் முடிவுக்கு வந்தது.

இந்தியா தரப்பில் ஜெனரல் ராய் புச்சர் - பாக்கிஸ்தான் தரப்பில் ஜெனரல் கிரேஸி இருவரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் 01-01-1949இல் கையொப்பமிட்டனர்
1. போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்துப் போடப் பட்ட 01-01-1949 அன்று எந்தெந்த நாட்டுப் படை எங்கெங்கே நின்றதோ அதுதான் போர் நிறுத்த ஒப்பந்த எல்லைக்கோடு (Cease-fire Line.)

2. ஜம்மு-காஷ்மீர் பகுதி முழுவதும் இந்தப் போர் நிறுத்த எல்லைக்கோடு - இருநாட்டு இராணுவ அதிகாரிகளின் ஒப்புதலோடு,
1949 சூலை 27இல் ஆவணம் ஆக்கப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்டது.
3. மனித நடமாட்டம் இல்லாத - இருநாட்டுப் படைகளும் இல்லாத சியாச்சின் பனி மலைப் பகுதியில் எது போர் நிறுத்தக் கோடு என்பது தெளிவாக்கப்படவில்லை
இந்த எல்லைக்கோட்டை மீறுவதுதான், இருநாடுகளும் மோதிக்கொள்ள முதலாவது காரணம்
ஹரிசிங்கின் ஆளுகையிலிருந்த ஜம்மு-கஷ்மீரில் மூன்றில் ஒரு பகுதியை - ‘குல்மார்க்’, ‘பாக். கூலிப்படை’ என்கிற பழங்குடி முரட்டுப் படையினராலும் பாக். இராணுவத்தாலும் கைப்பற்றப்பட்டு பாக்கிஸ்தான் ஆளுகைக்கு உட்பட்டுவிட்டது. மூன்றில் இரண்டு பங்கு பகுதி கஷ்மீர் மட்டும் இந்தியாவிடம் உள்ளது
இதன் விளைவாக புதிதாக ஒரு போர் நிறுத்தக் கோடு அல்லது எல்லைக்கோடு உருவானது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
keetru.com/index.php/2010…
கஷ்மீர் இந்தியாவுடன் முழுமையாக இணைய வேண்டும் என்கிற நேருவின் கருத்துக்கு ஆதரவாக இருந்தார் மாநில முதல்வரான (அப்போது அதற்கு பிரதமர் பதவி எனப் பெயர்) ஷேக் அப்துல்லா. அவருக்கு ஐநா. சபையின் தலையீடு பிடிக்கவில்லை. பொது வாக்கெடுப்பிலும் ஆர்வமில்லை
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
நேரு தலைமையிலான இந்திய அரசாங்கமோ பொது வாக்கெடுப்புக்கு ஒப்புக் கொண்டிருந்தது.

ஆனால்,பாகிஸ்தான் தன்னுடைய இராணுவத்தை வெளியேற்றினால்தான் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும்என இந்தியா கூறியது

#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
நேருவுடன் ஷேக் அப்துல்லா நட்பு பாராட்டுவதாலும் இந்திய இராணுவம் நிலை கொண்டிருப்பதாலும் கஷ்மீர் மக்களால் சுதந்திரமாக வாக்களிக்க முடியாது என பாகிஸ்தான் கூறியது

உலக நாடுகளின் தலையீட்டில் இருதரப்பு இராணுவத்தையும் வெளியேற்றலாம் என்றும் பாகிஸ்தான் தெரிவித்தது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
கஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவதுநாட்டின் தலையீட்டை விரும்பவில்லை எனக் கூறி, பாகிஸ்தானின் யோசனையை நிராகரித்த இந்தியா, பொது வாக்கெடுப்பு என்கிற ஐநா ஒப்பந்தத்தையும் நிறைவேற்றாமல் கை கழுவியது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
அதே நேரத்தில் கஷ்மீரைத் தக்க வைத்துக்கொள்வதில் இந்தியா முழுமையாகக் கவனம் செலுத்தியது. அதன் விளைவுதான், கஷ்மீர்மாநிலத்திற்கு சிறப்புத் தகுதி தரும் 370 ஆவது அரசியல் சட்டப் பிரிவின் உருவாக்கம்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இந்த சிறப்புத் தகுதியைப் பெறுவதன் மூலம் கஷ்மீரின் சுயநிர்ணய உரிமையைப் பாதுகாக்கலாம் என நினைத்தார் ஷேக் அப்துல்லா. பொது வாக்கெடுப்பைத் தவிர்க்க இது நல்ல வழி என நினைத்தது நேரு அரசாங்கம்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இந்திய அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவு, ஜம்மு கஷ்மீர் மாநிலத்திற்கு தற்காலிகமாக சிறப்புத்தகுதியை அளித்தது. இந்த சிறப்புத் தகுதியின்படி இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மட்டுமே பெருமளவில் மாநில சுயாட்சியை கொண்டிருந்தது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
ஜம்மு-கஷ்மீரின் மாநில ஆட்சிக் காலம் 6 ஆண்டுகளாகும். கஷ்மீர் மக்கள் தங்களுக்கு என்று சிறப்புச் சட்டங்கள் இயற்றி அதன் கீழ் வாழ்ந்தனர். இதில் குடியுரிமை, சொத்துரிமை,அடிப்படை உரிமைகள் போன்றவை அடங்கும்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இந்தச் சிறப்பு சட்ட பாதுகாப்பு கஷ்மீருக்கு மட்டுமல்லாமல், இமாசலபிரதேசம், அருணாசலபிரதேசம், அந்தமான் நிகோபர் தீவு, நாகாலாந்து உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கிற பழங்குடியினருக்கும் உண்டு
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
thewire.in/history/public…
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இந்திய பாராளுமன்றத்தில் இராணுவம், தகவல்தொடர்பு, வெளியுறவு விவகாரம் ஆகிய துறைகளைத் தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்தச்சட்டமும் ஜம்மு கஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி அம்மாநிலத்தில் செல்லாது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
பிரதமர் நேருவின் நம்பிக்கைக்குரியவரும் அவரது அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தவரும், கஷ்மீர் மகாராஜாவான ஹரிசிங்கின்முன்னாள் திவானுமான தமிழகத்தைச் சேர்ந்த கோபால்சாமி அய்யங்கார்தான் இச்சட்டப்பிரிவை வடிவமைப்பதில் முன்னின்றார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
உள்துறை அமைச்சர் பட்டேலின் ஒத்துழைப்பையும் கோபால்சாமி அய்யங்கார் பெற்றார்
இதன் காரணமாக 370ஆவது சட்டப் பிரிவு நிறைவேறியது
மேலும் இந்தியாவுக்குத் தனியாக அரசியல் சாசனம் இருப்பதுபோல் கஷ்மீருக்குத் தனியாக அரசியல் சாசனம் உருவாக்கிக் கொள்ள இந்திய அரசு ஒப்புக் கொண்டு,

#அறிவோம்கஷ்மீர்
அதன்படி கஷ்மீருக்குத் தனி அரசியல் சாசனச் சட்டம் உருவாக்கப்பட்டு 17.11.1956 இல் நிறைவேற்றப்பட்டது

இது 26.1.1957இல்இந்தியாவின் 8ஆவது குடியரசு நாளில் நடைமுறைக்குவந்தது
கஷ்மீருக்கெனத் தனி தேசியக் கொடியும் அமைத்துக் கொள்ள சட்டம் அனுமதித்தது.அதன்படி, காஷ்மீர் தேசியக் கொடியும் உருவானது
பொது வாக்கெடுப்பு நடத்தாமல் கஷ்மீரைத் தக்க வைத்துக்கொள்ள விரும்பிய இந்தியா, எக்காரணம்கொண்டும் கஷ்மீரை இழந்துவிடக் கூடாது என நினைத்ததால்தான் சிறப்புத் தகுதி வழங்கும் 370 ஆவது பிரிவுக்கு வழி வகுத்தது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இந்தியாவுடன் ஜம்முகஷ்மீர் இணைப்புக்கு, ஜம்முகஷ்மீர் சட்டமன்ற ஆதரவு கிடைத்தவுடன் ஜம்முகஷ்மீர் மாநிலத்துக்குத் தனியான அரசமைப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கான பணியில் ஷேக் அப்துல்லா நாட்டம் செலுத்தினார் அப்படி ஒருசட்டத்தை உருவாக்க முடியுமா என்கிற ஐயம் அவருக்கே இருந்தது

#அறிவோம்கஷ்மீர்
மேலும் பல நேரங்களில், பல இடங்களில் “தனி கஷ்மீர் தேசம்” என்றும் ஷேக் அப்துல்லா பேசியதால், மற்ற அரசியல்வாதிகள் எச்சரிக்கை செய்யத் தொடங்கினர்.

குறிப்பாக ஜம்மு, லடாக் பகுதி மக்களும், அரசியல் வாதிகளும் தூங்கிக் கொண்டிருந்த இந்திய அரசை எழுப்பி உசுப்பிவிட்டனர்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இதனால், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜம்மு-கஷ்மீருக்குத் தனி அந்தஸ்து அளிக்கப்பட்டது-மீண்டும் விவாதத்துக்கு உள்ளாயிற்று

ஷேக் அப்துல்லாவுக்கு மரியாதை நிமித்தமாக அளிக்கப்பட்டுவரும் சலுகையைத் தாண்டி அவர் வரம்பு மீறிப் பேசுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
அவருடைய குற்றச்சாட்டின் வீச்சு அதிகரித்த போது, வேறு வழியில்லாமல், பண்டித நேரு ஷேக் அப்துல்லாவிடம் கடுமை காட்டி மடல் எழுதினார். அப்துல்லா நேருவுக்கு விடை மடல் விடுத்தார்; அவர்களுக்குள் மோதல் பெரிதானது. ஆனாலும் விரைவில் சமரச முயற்சி நடந்தது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
நேருவும் அப்துல்லாவும் தில்லியில் கலந்து பேசி, 24-7-1952இல் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அது “தில்லி ஒப்பந்தம்” என்று குறிப்பிடப்பட்டது. அவ் ஒப்பந்தத்துக்கு ஜம்மு-கஷ்மீர் சட்டமன்றம் 19-8-1952இல் ஒப்புதல் அளித்தது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370ஆம் விதியின் படியும், 24-7-1952இல் இந்திய அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படியும் - ஜம்மு-கஷ்மீர் மாநிலத்துக்கு மட்டும் தனியாக ஓர் அரசமைப்புச் சட்டம், தனியாக ஒரு கொடி,
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
அப்பகுதியை நிர்வகிக்கும் மக்கள் பிரதிநிதியை ‘பிரதமர்’ என்று பொருள்தரும் வசீர்-இ-ஆசம் (Vazir-i-Azam) எனக் குறிப்பிடுவது, காஷ்மீருக்கு என ஒரு தனி ‘ஜனாதிபதி’ அந்தஸ்தோடு ‘சதர்-இ-ரியாசத்’ எனக் (Sadar-i-Riyasat)) குறிப்பிடும் ஒருவரை ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றமே தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட
மற்றும் பல தனி உரிமை கள் அளிக்கப்பட்டன

கஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் ஏன் இந்த சிறப்புத்தகுதி என்று பொதுவாகக் கேட்கப்பட்டாலும், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் சிலவற்றுக்கும் அந்தந்த மாநிலங்களின் தன்மைக்கேற்ப இதுபோல சிறப்புத் தகுதி அளிக்கப்பட்டுள்ளது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இந்திய அரசியல் சாசனத்தின் 371ஆவது பிரிவின்படி மகாராஷ்டிராவின் விதர்பா, மரட்வாடா, குஜராத்தின் சவுராஷ்ட்ரா, கட்ச் ஆகிய பகுதிகளுக்கும்
371ஏ பிரிவு நாகலாந்திலுள்ள ஒரு மாவட்டத்திற்கும், 371ஜே பிரிவு ஐதராபாத்துக்கும் வளர்ச்சிநோக்கத்தின் அடிப்படையில் சிறப்புச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன
நமது அரசியல் சாசனத்தின் தொடக்கத்திலேயே, “இந்தியா, அதாவது பாரதம் பல மாநிலங்களின் ஒன்றியம்” என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலத்தின் மொழி, இனம், பண்பாடு, மக்களின் வாழ்க்கை முறை இவற்றின் அடிப்படையில் அவர்களின் உரிமைகள் காக்கப்பட சில சிறப்பு சட்டப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன
ஷேக் அப்துல்லாவுக்கு அளவுக்கு மீறி இடம் தரப்படுவதாகக் கூறி, இந்தியாவில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தன
1950 ஏப்ரலில் பாக்கிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகானுடன் நேரு செய்து கொண்ட சமரச ஒப்பந்தத்தை எதிர்த்து, நேருவின் முதலாவது அமைச்சரவையில் ஓர் அமைச்சராக இருந்து அதற்காகவே
அமைச்சரவையிலிருந்து விலகிய ஷ்யாம் பிரசாத் முகர்ஜி தான், இப்போதும் எதிர்த்தார்
நேருவின் அமைச்சரவையிலிருந்து விலகிய உடனே அவர் “ஜனசங்கம்” (Jan Sangh) என்ற ஓர் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியிருந்தார். அவரே தலைமையேற்று, இப்போது ஷேக் அப்துல்லாவுக்கு எதிரான போராட்டங்களை நடத்தினார்
“ஷேக்அப்துல்லா தலைமையில் இயங்கும் தேசிய மாநாட்டுக்கட்சி இன்னொரு முஸ்லீம்லீக் போன்றதுதான்
முஸ்லீம் அடிப்படை வாதத்தை(Fundamentalism) அது வளர்க்கிறது
நேரு அதை உணர மறுக்கிறார்” என்று குற்றஞ்சாட்டி இந்துக்களின் உரிமையைக் காப்பாற்றப் போவதாகச் சூளுரைத்து, அவரே நேரடியாக களத்திலிறங்கினார்
அவருடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “இந்தியா ஒரு நாடு என்றால் - அதற்கு ஒரே ஜனாதிபதி, ஒரே அரசமைப்புச் சட்டம், ஒரே கொடி என்பதுதான் சரியானது” என்று வாதிட்டார்கள்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
மேலும் “கஷ்மீரில் இந்தியக் குடிஅரசு சார்பில் பங்காற்றுபவர் மாநில ஆளுநர் (Governor) என்று அழைக்கப்பட வேண்டும், கஷ்மீருக்கு ஒரு முதலமைச்சர் (Chief Minister)தான் நிர்வாகியாக இருக்க வேண்டும், அவர்களை வேறு பெயர்களில் அழைக்கக் கூடாது ” அவர்களுடைய முக்கிய கோரிக்கைகள்
#அறிவோம்கஷ்மீர்
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தியாவில் நடந்த போராட்டம், 72 மணிநேர ஊரடங்குச் சட்டம் அமலாக்கப்படும் சூழலை உருவாக்கியது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இதற்கிடையில், பாக்கிஸ்தானில் அந்நாட்டுப் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்ற அயூப் கானுக்கும், கஷ்மீர் மீது படைகளை ஏவிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பாக்கிஸ்தான் தரைப் படைத்தளபதி அக்பர் கானுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
அதனால், அக்பர் கான் தனது இராணுவ விசுவாசிகள் மூலம் ஆட்சியைக் கைப்பற்றத் திட்டமிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார். ‘மாஸ்கோ’ வின் ஆதரவுடன், அவர் இராணுவ ஆட்சியைக் கொண்டுவர, ராவல்பிண்டி நகரில் சதித்திட்டம் தீட்டிய தாகவும், குற்றஞ்சாட்டப்பட்டார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
கஷ்மீர் விவகாரத்திலும் பாக்கிஸ்தான் இராணுவம் பிளவுபட்டு நிற்பதாகச் செய்தி பரவியது

இந்த இக்கட்டுகள் நிறைந்த சூழலில் 1952 அக்டோபரில் பாக்கிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கான் அடையாளம் தெரியாத ஆள்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
கஷ்மீர் தொடர்பாக முஸ்லீம் நாடுகளின் ஆதரவை வேண்டி, வெளிப்படையான வேண்டுகோள் ஒன்றை முன்வைக்க லியாகத் அலிகான் திட்டமிட்டிருந்தார். அதற்கென்றே நடத்தப்பட்ட பொதுக்கூட்ட மேடையி லேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
“கஷ்மீர் தினம்” என, 24-10-1952 அன்று பாக்கிஸ்தானியர் கொண்டாடினர். அன்றைக்கு பாக்கிஸ்தானுக்கு வெளிப்படையான மிரட்டலை நேரு அறிவித்தார்
கஷ்மீர் சம்பந்தமாக பாக்கிஸ்தான் மீண்டும் சில்மிஷம் செய்தால், அதனால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் நேரு எச்சரித்தார்
#அறிவோம்கஷ்மீர்
இந்திய நாடாளுமன்றத்தில் அதற்கான சட்டத்தை நிறைவேற்றும் தன்மையில், கஷ்மீர் மாநிலத்தின் முதல் சதர்-இ-ரியாசத் ஆக - (ஜனாதிபதியாக) ஹரிசிங்கின் மகன் கரண்சிங், 15-11-1952 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
அரசின் தலைவர் என்ற முறையில் இளவரசர் கரண்சிங் 1951 மே 1 அன்று அரசமைப்புச் சட்ட அவை அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டார். 21 அகவை நிரம்பிய அனைவரும் வாக்காளர்களாகப் பட்டியலிடப்பட்டிருந்தனர். 1951 ஆகத்து மாதம் சட்டமன்றத்துக்குத் தேர்தல் நடந்தது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
அக்டோபர் மாதம் சட்டமன்றம் கூடியது. இதுவே அரசமைப்புச் சட்ட அவையாகச் செயல்பட்டது. 1956 நவம்பர் 17ல் ஜம்மு-கஷ்மீர் அரசமைப்புச் சட்டம் நிறைவேறியது
1957 ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த அரசமைப் புச் சட்டத்தின் மூலம் மன்னர் வாரிசு உரிமை ஒழிக்கப்பட்டது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
அரசின் தலைவர் சதார்-அய்-ரியாசத் (Sadar-i-Riyasat) என்று அழைக்கப்படுவார். இவர் சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார். அரசமைப்புக்கு முரணாக அவர் செயல்பட்டால், சட்டமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் அவரைப் பதவியிலிருந்து நீக்கலாம்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதி 35-ஏ, ஜம்மு-கஷ்மீரின் நிலையான குடிமக்கள் மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்து சட்டம் இயற்றிக் கொள்ளும் அதிகாரத்தை ஜம்மு-கஷ்மீருக்கு வழங்கியது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
அதன்படி ஜம்மு-கஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தில் நிரந்தரக் குடிமக்கள் குறித்தும் அவர்களின் சிறப்பு உரிமைகள் குறித்தும் வரையறுக்கப் பட்டது
மறைந்த அரசர் குலாப் சிங் சாகிப் பகதூர் ஆட்சி தொடங்கிய காலம் (1848) முதல் பிறந்து இங்கேயே குடியிருப்பவர்கள்,
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
1942இல் சம்வத் ஆண்டு தொடங்குவதற்குமுன் இங்கே குடியமர்ந்து தொடர்ந்து நிலையாக வாழ்பவர்கள் மற்றும் 1954 மே 14க்குமுன் சட்டப்படி அசையா சொத்து வாங்கி, பத்து ஆண்டுகளுக்குமேல் குடியிருப்பவர்கள் ஜம்மு-கஷ்மீரின் நிரந்தரக் குடிமக்கள் ஆவர் என்று அம்மாநில அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ளது
நீண்டகாலமாக ஜம்மு-கஷ்மீரை மற்ற மாநிலத்தவர்கள் குறிப்பாகப் பஞ்சாபியர்கள் சுரண்டி வருவதைத் தடுப்பது நிரந்தரக் குடிமக்கள் சட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும். வேலை வாய்ப்பு, கல்வி உதவித் தொகை. அரசின் பிற சலுகைகள் கஷ்மீர் மக்களுக்கே கிடைக்க வேண்டும் என்பது இதன் முதன்மையான நோக்கமாகும்
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதி 15(1)இன்படி, பிறந்த இடம் காரணமாகப் பாகுபாடு காட்டக் கூடாது; விதி 16(1)இன்படி வேலையில் சம வாய்ப்பு; விதி 19(1)(f)இல் எந்த இடத்திலும் சொத்து வாங்க, வைத்திருக்க, விற்க உரிமை உண்டு; 19(1)((e)இல் எந்தப் பகுதியிலும் நிலையாக வாழும் உரிமை உண்டு.
ஆனால் 35-ஏ, ஜம்மு-கஷ்மீரில் இவை இந்தியாவின் பிற பகுதிகளில் வாழும் குடிமக்களுக்குப் இது பொருந்தாது என்றது

ஜம்மு-கஷ்மீர் அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப் படுவதற்கு முன்பே அம்மாநில அரசியலில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
ஷேக் அப்துல்லா ஆசாத் கஷ்மீரை அலட்சியமாக நினைத்தாலும், அங்கிருந்த மக்களுடனும், தலைவர்களுடனும் நெருங்கிய தொடர்புடன் இருப்பதைக் கைவிடவில்லை.

இத்துடன் இந்தியத் தலைவர்கள், காங்கிரசுக் கட்சி, அதன் கொள்கைகள், நடவடிக்கைகள் இவற்றை விமர்சனம் செய்து பேசி வந்தார். பல நேரங்களில் நேருவையும்
“இந்தியா என்றைக்கும் தனது இந்து மத வாதங்களைக் கைவிடாது; பெருவாரி மக்களான இந்துக்களைத் திருப்திப்படுத்த வேண்டியிருப்பதால், காங்கிரசுக் கட்சியால் நடு நிலைமையில் இருக்க முடியாது” என்றும் கூறத் தொடங்கினார், அப்துல்லா
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இந்த நேரத்தில்,

1. ‘வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்ட ஷேக் அப்துல்லா, அங்கு பாக்கித்தான் அதிகாரிகளைச் சந்தித்தார்’ என்ற செய்தியும் கசிந்தது.

2. 1953 மே மாதத்தில், டேட்லி ஸ்டீவென்சன் என்ற அமெரிக்கரை ஷேக் அப்துல்லா சந்தித்தது, பெரிய குற்றமாக இந்திய அரசால் கருதப்பட்டது
இந்த ஸ்டீவென்சன்தான், “காஷ்மீர் சிக்கலுக்குச் சரியான தீர்வு என்றால், அது இந்தியா - பாக்கிஸ்தான் இரண்டையும் சமநிலையில் வைத்து விட்டுத் தனி நாடாகக் கஷ்மீர் இருப்பதுதான்” என்று சொன்னவர்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
கஷ்மீர் சிக்கலில் தாங்கள் தலையிடுவதில்லை என்று அமெரிக்கா சொல்லி வந்தாலும் - அமெரிக்காவின் மறைமுக ஆதரவு ஷேக் அப்துல்லாவுக்கு இருக்கிறது என்று இந்தியா நம்பியது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
1953 சூலை 13 , “தியாகிகள் தினம்” என, மறைந்த அப்துல் காதர் நினைவாக, ஜம்மு-கஷ் மீர் மக்கள் கொண்டாடினர். அவ்விழாவில் பேசிய ஷேக் அப்துல்லா, “பாக்கிஸ்தான் அல்லது இந்தியா என இரண்டில் ஒரு கூடுதல் இணைப்பு நாடாக ஜம்மு-காஷ்மீர் நாடு இருக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இல்லை” என்றே பேசினார்
நேருவுக்கும் ஜம்மு-கஷ்மீரில் பிரதமராக இருந்த ஷேக் அப்துல்லாவுக்கும் கருத்து முரண்பாடு முற்றியது

ஷேக் அப்துல்லா மீது தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு, அவருடைய அரசு கலைக்கப்பட்டு, பிரதமர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
1953 ஆகஸ்ட் 8 அன்று ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டார்.

கைது செய்வதில் நேரு நெருக்கம் காட்டவில்லை.

மாறாக, அன்று ஜம்மு-காஷ்மீரின் குடிஅரசுத் தலை வராக இருந்த கரண் சிங்கே, அப்துல்லாவைக் கைது செய்யும் பணியை நிறைவேற்றினார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
ஷேக் அப்துல்லாவின் நெருங்கிய சகாவாக இருந்த பக்ஷி குலாம் முகமது, ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தின் பிரதமராக 9.8.1953 அன்று அமர்த்தப்பட்டார்
அதுமுதல் ஜம்மு-கஷ்மீரில் நடுவண் அரசின் ஆதிக்கம் வளரத் தொடங்கியது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இந்நிலையில், ‘ஜனசங்கம்’ கஷ்மீருக்கு சலுகைகள் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டது. 1953இல், ஜனசங்க நிறுவனர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி வேறொரு கோரிக்கை முழக்கத்தை முன்வைத்தார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
“ஒன்றுபட்டு இருக்க வேண்டிய பாரத தேசத்தை, முகமது அலி ஜின்னாவின் இரு தேசக் கொள்கையும் அதிகாரத் தாகமும் இரண்டாக்கியது. இப்போது ஷேக் அப்துல்லாவின் நடவடிக்கை 3ஆவது தேசத்தை உருவாக்க வழிசெய்கிறது” என, ஓங்கி முழங்கினார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
1953, பிப்ரவரியில் ‘கஷ்மீர் சலோ!’ - ‘கஷ்மீரை நோக்கிச் செல்லுங்கள்’ என்ற போராட்டத்தை முகர்ஜி தொடங்கினார். அவர் கஷ்மீருக்குள் செல்ல முயன்றார்.
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
அப்போது கஷ்மீருக்கு இருந்த சிறப்பு உரிமைகளில் ஒன்று - கஷ்மீர் குடிமகன் அல்லாத மற்றவர்கள் - இந்தியர்களாக இருந்தாலும்கூட, “நுழைவு அனுமதிச்சீட்டு” பெற்றுக் கொண்டுதான் கஷ்மீர் மாநிலத்துக்குள் செல்லமுடியும். இதற்கும் முகர்ஜி எதிர்ப்புத் தெரிவித்தார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
உரிய அனுமதிச் சீட்டு இல்லாமல் நுழைகிறார் என்பதால், முகர்ஜி கஷ்மீர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 11-5-1953இல் கைது செய்யப்பட்டார். ஆனால், ஜன சங்கம் இதை எளிதில் விடுவதாக இல்லை. ஜம்மு-கஷ்மீர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் பட்டது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு 23-6-1953இல் வெளியாக இருந்தது. ஆனால், முகர்ஜி, 22-6-1953 இரவு கஷ்மீர் சிறையிலேயே மறைவுற்றார்

பாகிஸ்தானில் அக்பர்கான் அடக்கப்பட்டு, முகமது அலி போக்ரா நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றிருந்தார்.
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
அதுசமயம் 1953 ஜூனில் லண்டனில் நடைபெற்ற இரண்டாவது எலிசபெத் மகாராணியின் பதவி ஏற்பு விழாவுக்கு இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்
அங்கே சந்தித்த வேளையில் இருநாட்டுப் பிரதமர்களும் கஷ்மீர் சிக்கல் பற்றிப் பேசினார்கள்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்கள் லண்டனில் பேசியதை ஒட்டி, மீண்டும் கராச்சியில் ஒரு தடவை யும், தில்லியில் ஒரு தடவையும் சந்தித்துப் பேசினார்கள். அப்பேச்சுகளின் போது, கஷ்மீர் முழுவதிலும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தும் பொறுப்பை யாரிடம் ஒப்படைக்கலாம் என்பது பற்றிப் பேசினர்
அப்போது விவாதத்துக்கு உரிய பெயர்களில் அமெரிக்க அட்மிரல் நிம்திஸ் என்பவரைத் தவிர வேறு யார் பெயரையும் ஆய்வுக்கே எடுத்துக் கொள்ள முடியாது என்று பாகிஸ்தான் பிடிவாதமாகக் கூறி விட்டது. அந்த அமெரிக்க அட்மிரலை மட்டும் ஏற்க முடியாது என இந்தியா மறுத்தது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
மற்றயார் பெயரையும் இந்தியா முன்மொழிவதையும் பாகிஸ்தான் மறுத்தது
அதன்பிறகு, கஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்துவது பற்றிய முயற்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
ஷியாம் பிரசாத் முகர்ஜியின் சாவுக்குப் பின்னர், ஷேக் அப்துல்லாவுக்கு எதிராக நடந்த போராட்டங்களும் அவருக்குக் கேடு சூழும் நிலையை உண்டாக்கின
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
1954இல் ஜம்மு-கஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததற்கான மக்களின் ஒப்புதல் சட்டமன்றத்தின் மூலம் வழங்கப்பட்டது. ஷேக் அப்துல்லா 11 ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
ஷேக் அப்துல்லாவை விடுதலை செய்யுமாறு மக்கள் தொடர்ந்து குரல்கொடுத்து வந்தனர்
நேருவின் திட்டப்படி ஷேக் அப்துல்லா 1954 ஏப்ரல் 6 அன்று விடுதலை செய்யப்பட்டார். கஷ்மீர் சிக்கலுக்குத் தீர்வு காண பாகிஸ்தான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஷேக்கைப் பாகிஸ்தானுக்கு அனுப்பினார் நேரு
ஷேக் பாகிஸ்தானில் இருந்தபோதே நேரு 1964 மே 27 அன்று இறந்தார். லால்பகதூர் சாஸ்திரி இந்தியாவின் பிரதமரானார். அதன்பின் நடுவண் அரசின் அதிகாரங்கள் ஜம்மு-கஷ்மீருக்கு வேகமாக விரிவுபடுத்தப்பட்டன
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இந்திய அரசமைப்புச் சட்ட விதிகள் 356, 357 ஆகியவை ஜம்மு-கஷ்மீர் சட்ட மன்றத்தால் ஏற்கச் செய்யப்பட்டது. இவற்றின்படி, நடுவண் அரசு ஜம்மு-கஷ்மீர் ஆட்சி அதிகாரத்தையும், சட்டமன்ற அதிகாரத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
ஜம்மு-கஷ்மீர் அரசின் தலைவர் பெயர் சதார்-ஐ-ரியாசட் என்பது ஆளுநர் என்றும், பிரதமர் என்ற பெயர் முதலமைச்சர் என்றும் மாற்றப்பட்டது

ஆளுநர் சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப் படும் நிலை ஒழிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் நிலை ஏற்படுத்தப்பட்டது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இவ்வாறு தன்னாட்சி உரிமைகளும், அடையாளங்களும் அழிக்கப்படுவதைக் கஷ்மீர் மக்கள் கடுமையாக எதிர்த்தனர்.

1974 நவம்பர் 13 அன்று பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கும் ஷேக் அப்துல்லாவுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி ஷேக் அப்துல்லா முதலமைச்சரானார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
ஆனால் காங்கிரசுக் கட்சியின் சட்டமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் ஷேக் முதலமைச்சரானதை இளைஞர்கள் எதிர்த்தனர். 1977, 1983 தேர்தல்களில் ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இதற்கிடையில் ஷேக் அப்துல்லாவின் மறைவுக்குப்பின் அவருடைய மகன் பாரூக் அப்துல்லா முதலமைச்சரானார். கஷ்மீர் தனிநாடாக வேண்டும் என்று இளைஞர்கள் போராடிக் கொண்டிருந்த போதிலும் பத்து ஆண்டுகளில் பெரிய அளவில் வன்முறை நிகழவில்லை
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இந்நிலையில் 1984 சூலை 2 அன்று இந்திராகாந்தி, பாரூக் அப்துல்லா கட்சியின் 12 சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்த்தார். இத்திட்டத்துக்கு ஆளுநர் பி.கே. நேரு ஒத்துழைக்க மறுத்ததால், அவரைக் குஜராத்துக்கு மாற்றிவிட்டு,
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
நெருக்கடி நிலைக் காலத்தில் தில்லியில் துணை நிலை ஆளுநராக இருந்தபோது அடாவடித்தனமாகச் செயல்பட்ட ஜக்மோகனை ஜம்மு-கஷ்மீர் ஆளுநராக நியமித்தார்
பாரூக்கிற்குப்பின் ஜி.எம். ஷா முதல்வராக்கப்பட்டார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
பாரூக்கை முதல்வர் பதவியிலிருந்து நீக்கியதையும், நடுவண் அரசின் அத்துமீறல்களையும் கண்டித்து கஷ்மீர் மக்கள் போராடினர். ஆளுநர் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. ஜக்மோகன் கஷ்மீரி தேசிய இன உணர்வை ஒடுக்கும் நடவடிக்கைகளை எடுத்தார்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
பாரூக் அப்துல்லாவின் பதவி ஆசை காரணமாக 1986 நவம்பர் 7 காங்கிரசு - தேசிய மாநாட்டுக் கட்சியின் கூட்டணி ஆட்சி ஏற்பட்டது. பாரூக் முதலமைச்சரானார். பாரூக்கின் சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் எதிர்த்தனர். இளைஞர்கள் ஜம்மு-கஷ்மீர் விடுதலை முன்னணி என்ற பெயரில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்
பாகிஸ்தான் அரசு தன் எல்லையில் முகாம்கள் அமைத்து கஷ்மீர் இளைஞர்களுக்குப் பயிற்சியும் ஆயுதமும் அளித்து இந்தியாவுக்குள் அனுப்பிக்கொண்டே இருக்க 1988முதல் இந்தியஅரசின் ஆயுதப் படையினருக்கும் ஆயுதமேந்திய இளைஞர்களுக்குமிடையே மோதல்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
1954 முதல் 1994 வரையிலான காலத்தில் இந்தியஅரசின் ஏகாதிபத்திய மனப்போக்கின் காரணமாக குடியரசுத் தலைவரின் 47ஆணைகள் மூலம் கஷ்மீரின் தன்னாட்சி உரிமைகள் பறிக்கப்பட்டன
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 395 உறுப்புகளில் 260உறுப்புகள் ஜம்மு-கஷ்மீருக்கு நீட்டிக்கப்பட்டன
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
நடுவண் அரசின் அதிகாரப் பட்டியலில் உள்ள 97 விதிகளில் 94 விதிகளும், பொதுப் பட்டியலில் உள்ள 47 விதிகளில் 26 விதிகளும் ஜம்மு-கஷ்மீருக்கு நீட்டிக்கப்பட்டன. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 370க்கு இவை முற்றிலும் எதிரானவை ஆகும்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
1996இல் பாரூக் அப்துல்லா மீண்டும் முதலமைச்சரான போது ஆகஸ்ட் 11 அன்று மாநில சுயாட்சி குறித்து ஆராய ஒரு குழுவை அமைத்தார். அக்குழுவின் அறிக்கை 2000 சூன் 26 அன்று சட்டமன்றத்தால் ஒருமனதாக ஏற்கப்பட்டது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
1953ல் ஷேக் அப்துல்லா பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன் ஜம்மு-கஷ்மீருக்கு என்னென்ன உரிமைகள் இருந்தனவோ அவை மீண்டும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை கூறியது. 2000 ஆகஸ்ட் 4 அன்று இந்த அறிக்கையை ஆய்வு செய்த வாஜ்பாய் அமைச்சரவை இதை ஏற்க மறுத்தது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
2010ஆம் ஆண்டில் ஜம்மு-கஷ்மீரில் பெருங்கலவரம் ஏற்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் 130 பேர் இறந்தனர். அப்போது மன்மோகன் சிங் தலைமையில் இருந்த நடுவண் அரசு ஒரு தூதுக்குழுவை அமைத்தது. அக்குழு 2011இல் அதனுடைய அறிக்கையை அளித்தது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
அந்த அறிக்கையில், 1952க்குப்பிறகு ஜம்மு-கஷ்மீருக்கு விரிவாக்கம் செய்யப் பட்ட நடுவண் அரசின் சட்டங்களை மறுஆய்வு செய்ய வேண்டும்; அரசமைப்புச் சட்டத்தில் விதி 370 தற்காலிகமானது என்று இருப்பதைச் சிறப்பு ஏற்பாடு என்று மாற்ற வேண்டும்;
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் கடுமையான குற்றச்சாட்டு இல்லாதவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது
ஆனால் நடுவண் அரசு இந்த அறிக்கை மீதும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
மேற்கு பாகிஸ்தான் அகதிகளின் அமைப்பான “குடிமக்களாகிய நாங்கள்” அமைப்பும், காஷ்மீர் பார்ப்பனர்களான பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த சாரு வாலி கன்னா என்பவரும் அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் 35ஏ, 370 ஆகியவற்றை நீக்குமானறு கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
பார்ப்பனர்கள் உள்ளிட்ட மேல்சாதியினர், பணக்காரர்கள், முதலாளிகளைக் கொண்ட இந்திய ஆளும் வர்க்கம் தன் பொருளியல் சுரண்டலுக்கும், சமூக ஆதிக்கத்திற்கும் ஏற்ற தன்மையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தை இயற்றிக் கொண்டது. இதன்மூலம் தேசிய இனங்களின் உரிமைகளை நசுக்கியது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
கழுதை @HRajaBJP க்குத் தெரியுமா...👇🏾

ஜம்மு-கஷ்மீர் அரசமைப்பின் கீழ், ஜம்மு-கஷ்மீர் பட்டியல் வகுப்பினர் (Scheduled Castes) மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கான (Backward Classes) இடஒதுக்கீடு பற்றிய நடைமுறை விதிகள் (Reservation Rules), 28-4-1970ஆம் நாளிட்ட அறிவிக்கையின் படி
(Notification Dated 28th April 1970), அட்டவணைகள் பகுதியை அடுத்து வெளியிடப் பட்டுள்ளன
13 உள்சாதிகளை உள்ளடக்கிய பட்டியல் வகுப்பினருக்கு, ஜம்மு-கஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் 22-12-1956 ஆணையின்படி, அந்த நாள் முதல் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
சமுதாயத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான 1969ம் ஆண்டைய ஆய்வுக்குழு (Backward Classes Committee of 1969) அறிக்கையின்படி, 61 + 23 = 84 உள்சாதிகளை உள்ளடக்கிய பிற்படுத்தப்பட்டோருக்கு 01.5.1970 முதல் ஜம்மு-கஷ்மீர் மாநில அரசு இடஒதுக்கீடு வழங்குகிறது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
அரசமைப்புச் சட்டத்தைப் பற்றி நாம் அறிந்திருந்தாலும் அறியாமல் இருந்தாலும் ஜம்மு-கஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவிலுள்ள 130 கோடி குடிமக்களுக்கும் உரிமைகளை வழங்கவும், அவர்களின் உரிமைகளைப் பறிக்கவும் முற்றதிகாரம் பெற்ற ஒரே கருவி அரசமைப்புச் சட்டம் தான்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
மற்ற மாநிலங்களைவிட கஷ்மீருக்கு மட்டும் ஏன் சிறப்புரிமை என்று கேட்கும் அறிவாளிகள் 2 மாயைகளில் உலாவுகிறார்கள்
அவை,

1. கஷ்மீர் தவிர இன்னும் சில மாநிலங்களுக்குத் தரப்பட்டுள்ள சிறப்புத் தகுதியை மறைப்பது(அரசியல் சாசனப் பிரிவு 371).

2. கஷ்மீரை இந்தியாவின் இதர மாநிலங்களுக்கு இணை என்பது
கஷ்மீர் இந்தியாவின் பிற மாநிலங்களைப் போல பிரிட்டீஷ் காலனி நாடாக இருந்து விடுதலை பெற்ற மண் அன்று
இந்தியாவை ஆண்ட பிரிட்டீஷ் அரசாங்கம், கஷ்மீரை ஆளவில்லை
மாறாக, கஷ்மீருக்கு ஒரு காப்பாளர் என்ற நிலையிலேயே இருந்தது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
கஷ்மீர் அரசு 1846இல் பிரிட்டீஷ் அரசுடன் செய்து கொண்ட அமிர்தசரஸ் ஒப்பந்தம் இதை உறுதி செய்கிறது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
பிரிட்டீஷ் ஆட்சியிலிருந்து, இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரிந்து விடுதலை அடைந்த போது, கஷ்மீர் இரு நாடுகளுடனும் சேராமல் தனித்தே இருந்தது. எனவே நம் நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15க்கும் கஷ்மீருக்கும் சம்பந்தமே இல்லை
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
எதார்த்தத்தில் பாகிஸ்தான், இந்தியா இரு நாடுகளையும் அம்மக்கள் அந்நியமாகவே பார்த்தனர். தங்களின் இன, மொழி, கலாச்சாரம் தனித்துவத்தோடு இருக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்பினர்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
1948, அக்.24 300 பழங்குடியினரைக் கொண்ட படை ஜம்முவில் அத்து மீறிப் புகுந்து அராஜகத்தில் இறங்கியது. இதுவே கஷ்மீரின் பெரும் பின்னடைவுக்குக் காரணமானது
மன்னர் ஹரிசிங், இந்தியப் பிரதமர் நேருவுடன் பேச, அக்.26, 1947இல் இந்தியாவுடன் கஷ்மீர் இணைக்கப்பட்டது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இணைப்பின்போது, இந்திய அரசு கஷ்மீருக்குச் சில உறுதி மொழிகளை வழங்கியது. அதுவே இந்திய அரசியல் சாசனத்தின் 370ஆவது பிரிவுக்கு அடிப்படையாகும்

மன்னர் ஹரிசிங்கும், இந்திய அரசும் செய்து கொண்ட உடன்படிக்கை (Instrument of Accession.IOA) இரு முக்கியக் கூறுகளைக் கொண்டிருந்தது
#அறிவோம்கஷ்மீர்
- பாதுகாப்பு, அயலுறவு, தகவல் தொடர்பு ஆகிய துறைகள் மட்டுமே இந்திய அரசிடம் ஒப்படைக்கப்படும். இவை தவிர உள்ள அனைத்துத் துறைகளின் அதிகாரங்களும் கஷ்மீர் அரசிடமே இருக்கும்.

- ஊடுருவல்காரர்கள் விரட்டப்பட்டு, அங்கே சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டபின்,
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்தப்படும். இதில் ஜம்மு - கஷ்மீர் மக்களின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே, இந்தியாவுடன் இணைப்பு இறுதியாக்கப்படும்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
“ஜுனாகத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தியதுபோல கஷ்மீரில் ஏன் நடத்தப்படவில்லை?” என்ற கேள்விக்கு பதிலளிக்க மாட்டார்கள் 370ஐ எதிர்த்தவர்கள்

பயம்... கஷ்மீர் என்றால் பயம்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
கஷ்மீரின் துயரங்களுக்குக் காரணமே 370ஆவது பிரிவுதான் என்று நெஞ்சாரப் பொய்யுரைப்போர் அறிவர் அரசியல் சாசனத்தில் சிறப்புத் தகுதி இருந்தாலும், ஏட்டில் இருப்பதற்கும், நடை முறையிலுள்ள சூழ்நிலைக்கும் தொடர்பே இல்லாத தேசத்தில், கஷ்மீரிகளின் வாழ்வுரிமையும், தன்மானமும் கேள்விக்குறி என
இதற்குக் காரணம் அங்கு நடைமுறையில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்
ஒருவரை தீவிரவாதி என ராணுவம் சந்தேகித்தால் போதும் கொன்று விடலாம்
பாலியல் வன்முறைகளும் அவர்களுக்குப் பாதுகாப்பு நடவடிக்கைகள்தான். தேசப் பாதுகாப்பு என்ற போர்வை, எல்லா அக்கிரமங்களை யும் மூடிமறைக்கப் போதுமானது
இதயத்தில் ஈரமற்றவர்களிடமிருந்து ஆட்சியதிகாரம் இதயமே அற்றவர்களுக்கு மாறியுள்ளது. 370ஆவது பிரிவுக்கு அம்பேத்கர் ஆதரவளிக்கவில்லை என்பதை வைத்து, அவரைத் தங்களுக்குச் சாதகமாக்கப் பார்க்கும், சங்பரிவாரங்கள், அம்பேத்கரை முழுமையாக ஏற்றுக்கொள்வார்களா?
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
மதமாற்றம்தான் இனஇழிவுக்குத் தீர்வு என உணர்ந்து, “சாகும்போது, நிச்சயமாக ஒரு இந்துவாக சாகமாட்டேன்” என்ற அம்பேத்கரின் கருத்தை அவர்கள் வழி மொழிவார்களா?

அன்று, துறை ஒதுக்கப்படாத அமைச்சராக இருந்த கோபால்சாமி ஐயங்கார்தான் 370ஆவது பிரிவை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
#Kashmir
அரசியல் சாசனத்தின் 370ஆவது பிரிவை, அரசியல் சூழ்ச்சிகள் மூலம், மைய அரசுகள் நீர்த்துப் போகச் செய்தன

- கஷ்மீர் அரசியல் சாசனம் 1939ன் 75ஆவது பிரிவின்படி, கஷ்மீர் அமைச்சரவையின் விளக்கங்களே இறுதியானவை என்ற அதிகாரம் இருந்தது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இதையும், மைய அரசின் அதிகாரத்தின் கீழ் வரும் துறைகளில் சட்டமியற்றும் அதிகாரத்தையும், மத்திய அரசு பறித்தது

1958இல் 312ஆவது பிரிவில் திருத்தம் செய்து, கஷ்மீருக்கு அதிகாரிகளை அனுப்பும் அதிகாரம் கொண்டுவரப்பட்டது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
- 1964இல் 356,357 அரசியல் சாசனப் பிரிவுகள் கஷ்மீருக்கு விரிவுபடுத்தப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வரும் வழிமுறை செய்யப்பட்டது.

இவ்வாறு இன்னும் பல... இதுதான் சிறப்பு அந்தஸ்தின்(?) லட்சணம்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவின் பல்வேறு பிரிவுகள் நீர்த்துப் போகச் செய்யப்பட்டாலும் பிற மாநிலத்தவர்கள் கஷ்மீரில் நிலம் வாங்க முடியாமல் 370ஆவது பிரிவு தடுத்தது
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
பூலோக சொர்க்கம் எனப் போற்றப்படும் கஷ்மீரில், நிலங்களை வளைத்து, வளைத்து, பெரும்புள்ளிகள் வாங்கிப் போட முடியாமல் தடுப்பது 370ஆவது பிரிவுதான்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
முக்கியமாக, கஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துள்ள கண்ணிதான் 370ஆவது பிரிவு.

சில முதலாளிகளுக்கு கஷ்மீரின் நிலம் சொந்தமாக வேண்டும் என்பது 370 எதிர்ப்பாளர்களின் விருப்பம்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
உண்மையில், தமிழ்நாட்டை மார்வாடிகள் உள்ளிட்ட வடவர்களின் ஆதிக்கத்திலிருந்து பாதுகாக்க, 370ஐப் போன்ற பிரிவுகள் அரசியல் சாசனத்தில் உருவாக்கப்பட வேண்டும்😉
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
இந்தியாவில் உள்ள மொழிவழித் தேசிய இனங்கள் கஷ்மீரின் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பதன் மூலமே தங்களின் தன்னாட்சிக்கு வழிகாண முடியும்
தேசிய இனங்களின் தன்னாட்சியே உண்மையான மக்களாட்சியாகும்
ஒற்றை அதிகார மையப்படுத்தப்பட்ட ஆட்சிமுறை சர்வாதிகாரத்துக்கே வழிவகுக்கும்
#Kashmir
#அறிவோம்கஷ்மீர்
தன்னாட்சி கொண்ட தேசிய இனங்களின் உண்மையான(மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் #சுயாட்சி) கூட்டாட்சியே ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் இந்திய யூனியனின் சமச்சீரான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்
#வெல்கநாடுவாழ்கமக்கள்
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to கவி தா
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!