வணக்கம்
நீங்கள் அரியானவில் சொல்லியபடியே மிகச்சரியாக 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று அசுர பலத்தோடு ஆட்சியில் மீண்டும் ஏறுகிறீர்கள்
வாழ்த்துகள்
நாடெங்கும் #மோடிஅலை வீசிய போது இங்கு வீசவில்லை
ஒர் சாரணர் இயக்க தேர்தலில் கூட உங்கள் தேசிய செயலர் 50 ஓட்டுகள் கூட வாங்க முடியவில்லை, சட்டமன்ற தேர்தலிலும் அப்படியே
இப்போது நாடாளுமன்ற தேர்தலில் அப்படியே
உங்கள் கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சொல்கிறார்👉🏿மோடிக்கு வாக்களிக்காமல் விட்டதால் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்கள் கிடைக்க வாய்ப்பிலை என்கிறார் அப்படியா?
இது தான் உங்கள் கட்சி புரிந்து வைத்திருக்கும் அரசியல் சட்டமா ?
கடந்த ஐந்தாண்டுகள் அப்படித்தான் செயல்பட்டீர்களா ?😏
பாருங்கள் உங்கள் கட்சியே உங்கள் நிர்வாக லட்சணத்தை இப்படி காட்டிக்கொடுக்கிறது 🤦🏾♀
இது போல இவர் உளறிக்கொட்டியது இவரை போன்றவர்கள் உளறிக்கொட்டியது அதிகம்
இப்போது தெரிகிறதா நாங்கள் ஏன் உங்களை ஏற்கவில்லை என்பது...😏😏
எல்லாமே மிரட்டல் அல்லது கமிசன் வாங்கதானே அந்த ரைடு எல்லாமே ?
இது இந்தியா முழுமைக்கும் நடந்தது. உங்கள் ஆட்சியில் இது ஊழலில் சேராதா...🤔🤔
ஊழலில் கமிஷன் மகா கேவலமில்லையா ?
இது போன்ற ஊழல்களை வைத்து மெஜாரிட்டி இல்லாத அதிமுக அரசை நீங்கள் ஆண்டீர்கள்
ஆள மட்டுமா செய்தீர்கள்😏
விவசாயத்தை கெடுத்து...
மாநில ஒற்றுமையை கெடுத்து...
எங்கள் உரிமைகளை பறித்து....
இப்போது தெரிகிறதா நாங்கள் ஏன் உங்களை ஏற்கவில்லை என...
👉🏿உங்கள் கட்சியின் விசுவாசி ஒருவர் மீடியாவில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் படுத்துதான் வாய்ப்பை பெறுகிறார்கள் என்றார்💦💦💦
தூத்துகுடியில் ஏன் எங்கள் மக்களை கொன்றீர்கள் என கேட்டவளை விரட்டியது ஒரு குற்றவாளி போல...
அவர் பாஸ்போர்டை முடக்கியது... கைது செய்தது...
இதே கேள்வியை கேட்ட முகிலனை இதுவரை காணவில்லை...
8வழிச்சாலை வேண்டாம் என்ற மக்களை அடித்து விரட்டியது
தூத்துக்குடியில் மக்களை விரட்டி சுட்டுக்கொன்றது
தஞ்சையில் மிரட்டியது
இப்போது தெரிகிறதா நாங்கள் ஏன் உங்களை ஏற்கவில்லை என...
அப்போது டிவிட்டரில் கூட நீங்கள் பெரிதாக கேட்கவில்லை
ஏதோ ஒரு நடிகையின் திருமணத்தில் பிசியாக இருந்துவிட்டீர்கள்
ஆனால் அதற்கான நிதியை கூடகொடுக்கவில்லை என நான் சொல்லவில்லை
உங்கள் தமிழக ஏஜெண்ட் ஒபிஎஸ் சட்டமன்றத்தில் சொன்னார்....
இது ஒரு பக்கமெனில்
எங்கள் தமிழக மீனவர்களை உங்கள் இந்திய கடற்படையினர் சுட்டுக்கொன்றனர்
ஆமாம் எங்கள் குண்டுதான் என காவற்படையினர் சொல்ல
இல்லை என உங்கள் குறுக்குவழி அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
கடைசிவரை அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை
அவர்கள் உப்பு நீரில் உடல் உப்பி மிதந்தார்கள்...
நீங்கள் மெதுவாக வந்து அந்த புகைப்படங்களை பார்த்தீர்கள்...
இப்போது தெரிகிறதா நாங்கள் ஏன் உங்களை ஏற்கவில்லை என...
👉🏿மின்சாரம் கொடுத்திருக்கலாம்...
👉🏿சாலை போட்டிருக்கலாம்...
👉🏿மருத்துவகல்லூரி கனவுகளை கொடுத்திருக்கலாம்... ( அப்படியேதும் இல்லை அது வேறு விசயம் 😜😜)
ஆனால் நாங்கள் அதையெல்லாம் தாண்டி வந்துவிட்டோம்💪🏾💪🏾
👉🏿கல்வியில்
👉🏿வேளாண்மையில்
👉🏿சட்ட ஒழுங்கில்
👉🏿மருத்துவத்தில்
👉🏿சுற்றுலாவில்
குறிப்பாக 👉🏿மத ஒற்றுமையில் நாங்கள் பலமடங்கு மேல்💪🏾💪🏾💪🏾
ஒன்றை தவிர
அதானியின் நலனுக்காக நீங்கள் கொண்டுவந்த சோலர் பிளாண்டுகள் வகையில் மட்டுமே உங்கள் மாநிலம் முதன்மை
இங்கே சுயமாகவே பலர் சோலர் நோக்கி நகர்கிறார்கள்
காரணம் அடிப்படை #அறிவு💪🏾💪🏾
உங்களைவிட எங்களுக்கு அது அதிகம்💪🏾
யாரை எங்கே வைப்பது என எங்களுக்கு தெரியும்💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾
அந்த சினிமா கூட பார்க்க முடியாத மக்களை உங்களால் ஏமாற்ற முடிந்தது
எங்களை முடியவில்லை 💪🏾
இப்போது தெரிகிறதா நாங்கள் ஏன் உங்களை ஏற்கவில்லை என...
சொன்னால் நீண்டுகொண்டே போகும்
ஆனால் பாருங்கள் சம்மட்டியால் ஓங்கி அடித்திருக்கிறோம் உங்கள் பிஜேபி நடுமண்டையில்
இன்னும் புத்தி வரவில்லை உங்கள் சகாக்களுக்கு...
கூட்டாச்சி, மாநில சுயாட்சி என எதுவும் புரியாமல்...🤦🏾♀
நீங்கள் திணித்த நீட் போல... ஜிஎஸ்டி போல... பணமதிப்பிழப்பு போல... உங்கள் கட்சி மூடர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்
என்ன ஒரு அறிவு பாருங்கள்... உங்களை போல...😆😆😆
இந்தியாவில் 40% ஜிடிபி நாங்கள் அல்லவா...
சொல்லச் சொல்லுங்கள்
எங்கள் வரியை வைத்து நாங்களே எங்களை சரி செய்துகொள்கிறோம்
"இல்லை எனக்கு அதையெல்லாம் தீர்த்து வைக்கும் வக்கில்லை" என சொல்லுங்கள் கேட்கிறோம்
முடியுமா ?
👉🏿வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் #பிரதமர்👈🏿
இதை நீங்கள் புரிந்தால்...
அதன் படி தமிழகத்தை வஞ்சிக்காத திட்டங்களை கொண்டுவந்தால் எப்போது வேண்டுமானாலும் வரலாம்
#தமிழர்கள் #GobackModi என்று துணிந்து எதிர்த்து நிற்பார்கள்
ஏனெனில்.... உங்களுக்கு எங்கள் உணர்வுகள் புரியாது.... எங்களையும் தெரியாது
நீங்கள் ஓசைகளில் இருந்த போதே நாங்கள் இலக்கணத்தை உருவாக்கிவிட்டோம்
அது கொடுத்த அறிவு யாருக்கும் அஞ்சி நிற்காது💪🏾💃🏾💃🏾💃🏾
ஆனால் இங்கே போடா புண்ணாக்கு என தூக்கு மேடை ஏறி நின்றவர்கள்
இனியாவது ஆளுங்கள்
ஆள்வதை போல செய்தி பரப்பாதீர்கள்
(உங்களது Photoshop கிளை... அது நாட்டின் களை
தயவுசெய்து முதலில் அதைக் களையுங்கள்)