ஸ்ரீமதே ராமானுஜாய நம:
இராமானுஜரின் 1003 வது திருநக்ஷத்திரப்பூர்த்தி நெருங்கிக் கொண்டிருக்கிறது (April 28th 2020). இதை ஒட்டி அவரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பகிர்ந்து, நினைவுப்படுத்தி, அடுத்து வரும் 10 நாட்கள், அவரின் நினைவில் திளைப்போம் 🙏
மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா, உலகோர் களெல்லாம்
அண்ணல் இராமா னுசன்வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக்கொண்டு, நாரணற் காயினரே
- இராமனுஜநூற்றந்தாதி
அவரைக் காண வேண்டும் என்ற ஆசையும், அவரை ரங்கராஜனுக்கு கைங்கர்யம் செய்ய அழைப்பதற்கு முன்பு, வரதனிடம் உத்தரவு பெற வேண்டும் என்றும், காஞ்சிக்கு எழுந்தருளினார் ஆளவந்தார். திருக்கச்சி நம்பிகள் அவரை வரவேற்று உபசரித்தார். கோவிலின் சுற்று ப்ரகாரத்தில்,
இளையாழ்வாரை கண்டு 'ஆ முதல்வனிவன்' என்று ஆசி வழங்கினார். ஆனால் அவர்கள் சந்திக்கவில்லை.
துதிகற்றுலகில் துவள்கின்றிலேன், இனித்* தூய்நெறிசேர்
எதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்
கதி பெற்றுடைய* இராமானுசனென்னைக் காத்தனனே.
- இராமாநுஜநூற்றந்தாதி
மிக உயர்ந்த யதிகளுக்கு எல்லாம் தலைவரான ஆளவந்தாருடைய(யமுனைத்துறைவன்)
வரதனின் உத்தரவால் இளையாழ்வாரும் திருவரங்கம் நோக்கி பயணித்தார்.
தமக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்வித்தருளும்படி பிரார்த்தித்தார்.
பெரியநம்பிகள் இளையாழ்வாருக்கு ஆவணி மாதம் சுக்ல பக்ஷ பஞ்சமி திதியில், மதுராந்தகம் ஏரி காத்த இராமனின் கோவிலில் இருக்கும் மகிழ மரத்தடியில்,