#Vivek_Gananathan_Thread
ஊரடங்கு நடைமுறைகளுக்கு இடையே கடந்த ஏப்ரல் 17, 2020 அன்று நடப்பில் உள்ள மின்சாரச் சட்டத்தைத் திருத்துவதற்கான மசோதாவை மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு.
இதற்கிடையே, மே 1 அன்று, பிரதமர் தலைமையில் இம்மசோதா குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்துள்ளது.
இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருப்பொருள்களை சட்டமாக்கத்தான் புதிய சட்டத்திருத்தங்களும் உள்ளன.
என்னென்ன திருத்தங்கள் அவை?
(அ)
மின் ஒப்பந்த அமலாக்க ஆணையம் என்கிற மத்திய அரசு ஆணையம் ஒன்று உருவாக்கப்படும். இதன் மூலம், PPA எனப்படும் மின் கொள்முதல், விற்பனை ஒப்பந்தங்கள் மத்திய அரசால் நேரடியாக முறைப்படுத்தப்படும். இத்தகைய ஒப்பந்தங்களை முறைப்படுத்தும் இந்தியாவின் 'ஒரே' ஆணையமாக இது இருக்கும்.
விளைவு?
மத்திய அரசு ஒவ்வொரு ஒப்பந்தத்தையும் 120 நாட்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்கும்.
இதன் மூலம், யார் எவ்வளவுக்கு ஒப்பந்தம் போடுகிறார்கள் என்பதை மத்திய ஆளுங்கட்சி தனக்குத் தேவையான முதலாளிகளுக்குத் தெரிவித்துக்கொள்ளும் வாய்ப்பு கிட்டும். இதனால், 'ஏக இந்திய முதலாளிகள்', குஜராத் முதலாளிகள் செழிப்பார்கள். பிறமாநில முதலாளிகளின் கை சுருங்கும்.
மரபுசாரா ஆற்றல் மூலங்களை ஊக்குவித்தல். இதன்படி, தன் தேவையில் ஒரு குறிப்பிட்ட அளவு 'Renewable energy' மற்றும் நீர் மின்சாரத்தை மாநில அரசு 'கொள்முதல் செய்தே' ஆக வேண்டும். 'அளவு' என்ன என்பதை மத்திய அரசு தீர்மானிக்கும்.
விளைவு?
சம்பந்தமே இல்லாமல், கட்டாயத்தின் பேரில் தேவையற்ற செலவுகளை மாநில அரசு சுமக்க நேரிடும்.
இக்கொள்முதலைச் செய்யாவிட்டால், மத்தியஅரசு எனும் ஹெட்மாஸ்டர், மாநிலஅரசு எனும் குட்டி பையனுக்கு அபராதம் விதிப்பார்.
முதல் ஆண்டு ஒவ்வொரு கிலோவாட்டுக்கு 50 பைசா அபராதம். அடுத்த ஆண்டு 1 ரூபாய்; அடுத்த ஆண்டு 2 ரூபாய்
Renewable energy பட்டியலில் இருக்கும் சூரிய மின்சார உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் குஜராத் கம்பெனிகள் கொழிக்கும். நினைத்த விலைக்கு விற்று லாபம் பார்க்கும்
மின் கட்டணத்தை இனி மத்திய அரசின் ஆணையமே தீர்மானிக்கும். எந்த மானியமும் இதில் சேர்க்கப்படாது. இக்கட்டணம், சாமானிய பொதுமக்களுக்கு சென்றடையும் போது, கடைசி புள்ளிவரை என்ன செலவாகிறதோ அதைவைத்துக் கணக்கிடப்படும். அதை.'விற்றுத்தர வேண்டியது' மாநில அரசின் வேலை !
மாநில இறையாண்மை மீதான செருப்படி இது.
ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமான 'மின் பகிர்மான கட்டமைப்பு' கொண்டது. எனில், ஒவ்வொரு மாநிலத்துக்கும், சாமானிய மக்களுக்கு சென்று சேரும்போது அதன் கடைசிப்புள்ளி செலவு என்பது மாறுபடும்.
அப்படி, இந்தியா முழுமைக்கும் ஒரேவிலையைத் தீர்மானித்தால், உத்திர பிரதேசத்தில் இருக்கும் மோசமான கட்டமைப்பின் விளைவை, தமிழ்நாடும் சேர்ந்தும் சுமக்க வேண்டியிருக்கும்.
அப்படி தனித்தனியாக தீர்மானிப்பது என்றால், அதை மாநில அரசே செய்யலாமே? எதற்கு ஹிந்திய நாட்டாமை?
உபவிளைவு?
இந்திய மின் சட்டம், 2003 'Open access' என்பதை வலியுறுத்துகிறது. பாகுபாடில்லாமல் அனைவருக்கும் மின்சாரம் சேர வேண்டும் என்பதே இந்த வலியுறுத்தலின் நோக்கம்.
அந்தக் கட்டணத்தை தீர்மானிக்கப் போவது யார்?
மத்திய அரசு !
மேலும், மக்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் படிப்படியாக நிறுத்தப்படும் என திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது.
விளைவு?
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள முதல் 100 யூனிட் இலவசம் நடைமுறையும் கேள்விக்குறியாகும்.
மிகச்சிறந்த உதாரணங்கள் LPG மற்றும் PDS.
இப்போது மின்சாரத்துக்கும் DBT. இனி ஒவ்வொருவரும் மின்கட்டணத்தைச் செலுத்திவிட்டு, அரசின் மானியத்தொகைக்காக காத்திருக்க வேண்டும். அந்தக்காசும் ஒட்டுமொத்த இந்திய சராசரிக்கே தீர்மானிக்கப்படும்.
உபவிளைவு?
கார்ப்பரேட் விவசாயம் மட்டுமே கதியாகும். தொழிற்சாலைகளின் மின் உபயோக விகிதத்தால் ஏற்படும் மின் வர்த்தக இழப்பைக்கூட சாமானிய மக்கள் சந்திப்பார்கள்.
வீட்டை வாடககைக்கு எடுத்து உள்வாடகைக்கு விடுவதைப்போல, மாநில அரசிடம் உரிமம் பெற்றுள்ள நிறுவனமோ, அல்லது மாநில அரசோ உரிமங்களை இனி பகுதி, பகுதியாக உள்வாடகைக்கு விடலாம். சிறப்பான சேவையை வழங்குவதற்காக இப்படிச் செய்யலாம் என்கிறது திருத்தம்
விளைவு?
அரசு செலுத்தும் மானியம் ஒழுங்காக வரவில்லை என்றால், உள்வாடகைக்காரர் மின்சார இணைப்பைத் துண்டித்துவிடும் அபாயம் உண்டு.
நீண்ட கால நோக்கில், ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு கம்பெனி மின்சாரம் கொடுக்கும் நிலைமை உருவாகக்கூடும்.
ஏர்டெல், வோடோபோன் என கம்பெனிகள் ஒரே 4ஜி சேவையை வெவ்வேறு விலைக்கு விற்பது போல, மின்சாரம் விற்கப்படும்.
மின் பகிர்மான தீர்ப்பாயம், மத்திய மின் கட்டுப்பாட்டு ஆணையம், மின் ஒப்பந்த அமலாக்க ஆணையம் உட்பட அனைத்துக்கும் 'ஒரே தேர்வுக்கமிட்டி' பணியாளர்களை நியமிக்கும்
விளைவு?
உபவிளைவு?
அல்லது
தனிநாடு கோரிக்கைகள் வலுக்கும்.
***
மொத்தத்தில், மாநில உரிமைகளின் சவக்குழியில் மின்சாரத்துக்கு சவப்பெட்டி, தேசிய இன இறையாண்மைக்கு புதைப்பெட்டி, சாமானிய மக்களுக்கு விஷக்குப்பி.