#Vivek_Gananathan_Thread
பெட்ரோல், டீசல் கலால் வரியை மத்திய அரசு ரூ.10, ரூ.13 என கூட்டியுள்ளது. சில தினங்களாகவே எதிர்பார்க்கப்பட்டதுதான் இது. ஊரடங்கால் பெட்ரோல், டீசல் பயன்பாடு ஏப்ரல் மாதத்தில் மட்டும் 80% வரை குறைந்துள்ளது.
வருவாயை இழப்பைச் சரிசெய்ய இந்த வரி உயர்வு உதவும் என்றும், இதனால் சந்தையில் விலை கூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது
இன்னொருபுறம், கடந்த 12 ஆண்டுகளில் கச்சா எண்ணெயின் விலை இரண்டு மடங்கு குறைந்துள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல்
விலை கிட்டத்தட்ட 50% உயர்ந்துள்ளது.
இன்றைக்கு சென்னை சந்தையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ₹75.64. டீசல் ₹ 68.22.
ஆனால், ஆபத்து காலத்தில்கூட போதிய நிதி ஒதுக்கீட்டை தமிழகம் பெறுவதில்லை.