#Hinduphobia கூகிளுக்குள் சென்று Beef Violence In India or Muslim Attacked In India என்று டைப் செய்யுங்கள். ஒரு நொடிக்குள் ஆயிரக்கணக்கான பதில்கள் வந்து கொட்டும். 2015 இலிருந்து ஜூலை 2018 வரை பசு சம்பந்தப்பட்ட 17 விஷயங்கள் இதில் ஆவணப் படுத்தப்பட்டுள்ளது. அதில் 7 பேர் கொலை
ஆகியுள்ளனர். இந்த ஒவ்வொரு விஷயமும் மிகப் பெரிய அளவில் மிகக் கடுமையாக ஊடகங்களால் பேசப்பட்டு உள்ளது. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், தி பிபிஸி, அல் ஜஸீரா மற்றும் உலகளாவிய பல சக்திவாய்ந்த ஊடகங்களில் விரிவாக எழுதப்பட்டும் பேசப்பட்டும் உள்ளது. இந்த ஊடகச்
செய்திகளை விரிவாகப் பார்த்தோமானால் இந்த விஷயங்களைப் பற்றி எழுதியது முழுக்க இந்திய ஊடகவியலாளர்கள் மட்டுமே. இவர்கள் இந்தியர்கள். இந்தியாவில் வசித்துக் கொண்டு இருப்பவர்கள். உதாரணமாக வாஷிங்டன் போஸ்டில் உள்ள பெரும்பாலான செய்திகளையும் எழுதியது #பர்கா_தத் (NDTV) இதில் கொடுமை இந்தச்
செய்தித்தாள்களையே உலகில் இருக்கும் பெரும்பாலானவர்கள் வாசிக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் நியூயார்க் டைம்ஸில் இஸ்லாமியர்கள் ஹிந்துக்களால் மாட்டிறைச்சிக்காக விசாரணையின்றி கொல்லப்படுகிறார்கள் என்கிற செய்தி வரும் பொழுது 85% ஹிந்துக்கள் பெரும்பான்மை உடைய தேசத்தில் சகிப்புத்தன்மை என்பதே
இல்லாமல் காட்டுமிராண்டித்தனமாக நடப்பதான செய்தியே மற்றவர்களால் உணரப்படுகிறது. பரப்பப்படுகிறது. அதனால் மற்றவர்களால் நம்பப்படுகிறது. இப்போது நாம் இதை வேறு கோணத்தில் பார்ப்போம். இதே கூகிளில் "Hindus killed/murdered in India” என்று டைப் செய்தால் ஒரே ஒரு நிகழ்வு கூட கிடையாது,
நடக்கவில்லை என்று கூகிள் சொல்கிறது. அப்படியென்றால் ஒரே ஒரு சாவு கூட ஹிந்துக்களுக்கு இந்த சம காலத்தில் நிகழவில்லையா? உண்மையில் 50க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் முஸ்லீம்களாலும், கம்யூனிஸ்ட்களாலும் பாரதத்தில் பல மாநிலங்களில் கொலை செய்யப் பட்டுள்ளார்கள். ஆனால் இந்த ஒவ்வொரு சாவிலும்
இதற்கான காரணமாக வேறு விஷயங்களைக் காட்டி இந்தச் சாவை மதவாத சாவிலிருந்து திசை திருப்பி, தனிப்பட்ட விரோதம் போலவும், ஒரு பெண் விஷயமாக ஏற்பட்ட தகராறு போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்? ஒரே காரணம். இப்படி எழுதுபவர்களின் ஒரே குறிக்கோள் ஹிந்துக்களுக்கு எதிராக உலகளாவ ஒரு
மட்டமான கருத்தை ஏற்படுத்தவே. ஹிந்துக்களையும் இந்தியர்களையும் தவறாக வெளிச்சமிட்டுக் காட்டுவதே இவர்களின் உள்நோக்கம். இப்படிப்பட்ட கயவர்கள் மொத்தமாக 100 பேர் மட்டுமே இருப்பார்கள். இவர்கள் மேல்தட்டு அயோக்யர்கள். தான் என்கிற மமதையில், தன்னால் மட்டுமே என்கிற அகம்பாவத்தில் சரித்திரத்தை
மாற்றி, புரட்டிப் போட்டு, கிங் மேக்கர்களாக வலம் வர ஆசைப்படும் சுயநலவாதிகள். இந்தக் கூட்டம்தான் ஈவு இரக்கமில்லாமல் அஃப்ஸல் குருவை, யாகூப் மேமனை, புர்ஹான் வானியை ஆதரித்தவர்கள். இவர்களே டெல்லியில் உள்ள (Lutynes) உயர்மட்ட பங்களாக்களை ஆக்ரமித்துக் கொண்டிருப்பவர்கள். உலகளவில் இவர்கள்
செல்வாக்கு வாய்த்தவர்கள். இவர்களுடைய நண்பர்கள் ஹார்வர்ட், பெர்க்ளி, ஆக்ஸ்ஃபோர்ட், கேம்பிரிட்ஜ் அளவில் இருப்பார்கள். அதே போல் நியூயார்க் டைம்ஸ், பிபிஸி, வாஷிங்டன் போஸ்ட் ஆகிய இடங்களிலும் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி ஹிந்துக்களை அவமானப்படுத்த, பரிகசிக்கத் தயங்காமல் நம் கலாசாரங்களை
கேவலப்படுத்துபவர்கள். ஹிந்துக்கள் ஹிந்துமதம் என்பதை எந்த அளவு அசிங்கப்படுத்த முடியுமோ அந்த அளவு கொஞ்சமும் தயக்கமின்றி செய்யக் கூடியவர்கள். இப்போது நடக்கும் யுத்தம் தர்மத்திற்கும் அதர்மத்திற்குமே. இவர்கள் கையில் அகப்பட்டிருப்பது #CAA, #NRC விஷயங்கள், இப்போது #ஹிஜாப். அலுப்பில்லாமல
ஊதி ஊதிப் பெரிதாக்குகிறார்கள். பேஸ்புக்கில் ஹிஜாபுக்கு எதிராக பதிவிட்டதற்கே இன்று கொல்லப்பட்டுள்ள #ஹர்ஷா பற்றி இந்த ஊடகங்களில் செய்தி வராது. அதோடு இவர்களின் போராட்டங்களில் கம்யூனிஸ கொள்கைகளால் குட்டிச்சுவராய்ப் போன முன்னாள் இன்னாள் கல்லூரி மாணவர்களையும், மாணவிகளையும் குழந்தை
குட்டிகளோடு குடும்பப் பெண்களையும் நுழைத்திருக்கிறார்கள். இந்துகள் ஒன்றிணைந்து இவர்கள் சதிகளை முறியடிக்க வேண்டும். ஒன்றிணைக்க யார் வருவார்கள் என்று தான் தெரியவில்லை.
மிகப் பெரும் செல்வந்தர், அவருக்கு மனைவி குழந்தைகள் என்று யாரும் இல்லை, பரோபகாரி. ஒரு தீபாவளி பண்டிகையையொட்டி தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்குச் சிறந்த விருந்து ஏற்பாடு செய்து அவரே முன்னின்று அனைவரையும் உபசரித்தார். விருந்து முடிந்தவுடன், ஒவ்வொருவருடைய இருக்கைக்கு முன்
இரண்டு பெரிய வண்ண கவர்களை வைக்கப்பட்டன. ஒன்றில் பணம் என்றும் மற்றொன்றில் ஶ்ரீராமாயண புத்தகம் என்றும் எழுதி வைக்கபட்டு இருந்தது. அவர்களிடம் அவர், நீங்கள் எனக்காக உண்மையாக உழைக்கிறீர்கள். உங்கள் வேலைக்கேற்ற அல்லது அதற்கும் அதிகமாகவே உங்களுக்கு சம்பளமும் கொடுத்து வந்துள்ளேன். என்
இந்த செல்வம் இறைவனால் அருளப்பட்டது. என் செல்வத்தை எவ்வாறு செலவழித்தேன் என்று இறைவனுக்கு பதில் சொல்ல கடமைபட்டுள்ளேன். உங்கள் முன் இரண்டு கவர்கள் உள்ளன. ஒன்றில் பணம், மற்றொன்றில் ராமாயணப் புத்தகம். இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் என்றார். முதலாமவர் தயங்கியவாறே, முதலாளி
#தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சேலம் மாவட்டத்தில் உள்ளது. தாயார் பெயர் கற்பகாம்பாள். சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இங்கு திருமணம் நடந்து, திருமால் தன் அன்புத் தங்கை பார்வதியை சிவபெருமானுக்கு தாரை வார்த்துக் கொடுத்ததால் 'தாரமங்கலம்' எனும் திருப்பெயர் இத்தலத்துக்கு வந்ததென்று
கூறுவர். 10 ஆம் நூற்றாண்டிலேயே இதன் சில பகுதிகள் இருந்தன. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கெட்டி முதலி அரச பரம்பரையினர் இந்தக் கோயிலை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். பிற்காலத்தில் மும்முடிச் சோழனும், சீயாழி மன்னனும் இந்தக் கோயிலைப் புதுப்பித்து திருவிழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர்.
வணங்காமுடி மன்னர் காலத்தில்தான், இந்தக் கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப் பட்டுள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி 306 து164 அடி அளவுக்கு மிகப்பெரிய கல்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆலயத்தின் முன்கோபுரம் 90 அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக் கொண்டது.
#ஸ்ரீரங்கம் கோவிலின் சிறப்பு சொல்லில் அடங்காது. இக்கோவிலின் ஒரு விசேஷம் 7 என்ற எண்ணிக்கையில் பல அதிசயங்களை கொண்டுள்ளது இத்திருத்தலம்.
ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களைக் கொண்டது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். (1) பெரிய கோவில் (2) பெரிய பெருமாள் (3) பெரிய பிராட்டியார்
(4) பெரிய கருடன் (5) பெரியவசரம் (6) பெரிய திருமதில் (7) பெரிய கோபுரம்
வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். (1) விருப்பன் திருநாள் (2) வசந்த உத்சவம் (3) விஜயதசமி (4) வேடுபரி (5) பூபதி திருநாள் (6) பாரிவேட்டை (7) ஆதி பிரம்மோத்சவம்.
இங்கு வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார்.
ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்திற்குப் பிறகு அவரைப் பார்த்து ஆசி கூற அகஸ்திய மாமுனிவர் அயோத்திக்கு வருகை புரிந்தார். அகஸ்தியர் சபையில் அமர்ந்ததும், ராவண வதம் பற்றி விவாதிக்கலாயினர் அனைவரும். அப்பொழுது அகஸ்தியர் சபையினரை பார்த்து ராவண, கும்பகர்ண வதத்தை விட லக்ஷ்மணன் ராவணன் மகன் மேகநாதனை
வதைத்ததே மாபெரும் வீரச் செயல் என்றார். அதை கேட்டு அனைவரும் ஆச்சரியமாக அகஸ்தியரை பார்க்க, ஸ்ரீராமர் ஏதும் அறியாதவர் போல ஸ்வாமி எதை வைத்து அப்படி கூறினீர்கள்? மேகநாதன் அவ்வளவு சக்தியுள்ளவனா என்று கேட்டார். அகஸ்தியர், ராமா எல்லாம் அறிந்தவன் நீ. ஆனால் ஏதும் அறியாதவன் போல லக்ஷ்மணனின்
பெருமையை என் வாயால் கூறவேண்டும் என்று இப்படி அறியாதவன் போல் கேட்கிறாய், சரி நானே சொல்கிறேன் என்று தொடர்ந்தார். சபையோர்களே ராவணன் மகன் மேகநாதன் தேவலோக அரசன் இந்திரனுடன் போர்புரிந்து அவனை வென்று சிறையில் அடைத்து வைத்தது யாவரும் அறிந்ததே. நான்முகக் கடவுளான பிரம்மா இந்திரனை
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு ஊரில் விஷ்ணுபக்தர் ராகவன் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் தினமும் தன் தோட்டத்தில் உள்ள துளசியை மாலையாகவும் பூக்களை வைத்து அர்ச்சனை செய்வதும் வழக்கம். சில பூக்களே தோட்டத்தில் இருந்தாலும் சரி அவற்றைப் பறித்து அர்ச்சனை செய்துவிடுவார் ராகவன். ஒரு நாள் புயலுடன
கூடிய பலத்த மழை ஏற்பட்டது. அர்ச்சனை செய்ய பூக்களை பறிக்க தோட்டத்துக்குப் போனால் புயலின் காரணமாக அனைத்து பூக்களும் நாசமடைந்திருந்தன. சரி துளசியை கொண்டாவது அர்ச்சிக்கலாம் என்று எண்ணி துளசி பறிக்க சென்றார் ராகவன். அதில் உள்ள இலைகளும் சில உதிர்ந்திருந்தன. அதில் உள்ள துளசி இலைகளை
வைத்து மாலை மட்டுமே கட்ட இயலும். அர்ச்சனை செய்ய என்ன செய்வதென புரியாமல் மிகவும் வேதனைப் பட்டார். ராகவன் வீடோ தனித்திருந்தால் உதவி கேட்க கூட சிறிது தூரம் செல்ல வேண்டி இருக்கும். மழையும் புயலும் நிற்காமல் பெய்து கொண்டே இருந்ததால் அதற்கும் வழியின்றி தவித்து கொண்டிருந்தவர் அருகில்
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் தட்சிணேஸ்வரம் காளிகோயிலில் அர்ச்சகராகப் பணிபுரிந்தார். பக்தர் ஒருவர் அவரிடம், ஐயா! நீங்கள் காளியைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டார்.
'ஓ! பார்த்திருக்கிறேனே! இன்று காலையில் கூட அவளிடம் பேசிக் கொண்டிருந்தேன்' என்றார். நீங்கள்
சொல்வது உண்மையானால், அவளை எனக்காக வரவழையுங்கள் என்றார் பக்தர். ராமகிருஷ்ண பரமஹம்சர் அவரிடம் நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று கேட்டார். டாக்டர் என்றார் வந்தவர்.அ ப்படியானால்
இப்போதே என்னை டாக்டராக்குங்கள் பார்க்கலாம் என்றார் ராமகிருஷ்ணர். எப்படி முடியும்? படித்தால் தான்
முடியும், என்றார் வந்தவர். படித்தால் தான் மருத்துவராக முடியும் என்பது போல, காளியைக் காணவும் 'பக்தி' என்னும் படிப்பு வேண்டும். அதைப் படித்துவிட்டு வாருங்கள். கண்ணுக்குத் தெரிவாள் என்றார் ராமகிருஷ்ணர். அநித்யத்தின் மூலமாய் நித்யத்தையும், மாயையின் உதவியால் உண்மையையும், உருவத்தின்