ஸ்ரீமதே ராமாநுஜாய நம: 🙏
முன் உறைத்த திரு விருத்தம் நூறு பாட்டும்
முறையில் வரும் ஆசிரியம் ஏழு பாட்டும்
மன்னிய நற்பொருள் பெரிய திருவந்தாதி
மறவாத படி எண்பத்து ஏழு பாட்டும்
பின் உரைத்ததோர் திருவாய்மொழி எப்போதும்
பிழையற ஆயிரத்தொரு நூற்றிரண்டு பாட்டும்
எழில் குருகை வருமாறா இரங்கு நீயே
- ப்ரபந்தசாரம் ஸ்ரீ வேதாந்த தேசிகன்
உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொரு நாள்
உண்டோ சடகோபர்க்கு ஒப்பொருவர் - உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு, தென்குருகைக்கு உண்டோ ஒரு பார்தனில் ஒக்கும் ஊர்
நம்மாழ்வாரின் திருநக்ஷத்திரம் வைகாசி விசாகம், இந்த வருடம், ஜூன் மாதம் 4 ஆம் தேதி, அதையொட்டி நம்மாழ்வாரை போற்றும் வெவ்வேறு திருநாமங்களின் தொகுப்பு.
1. சடகோபன் - சடம் என்பது ஒரு வகைக் காற்று (வாயு). அதன் ஸ்பரிசத்தால் ஞானம் மங்கி அஞ்ஞானம்
கண்ணி நுண் சிறுத்தாம்பு - "தக்க சீர் சடகோபன் என்நம்பிக்கு ஆட் புக்க காதல்"
3. காரி மாறன் - நம்மாழ்வாரின் தந்தை பெயர் காரியார், தாய் உடையநங்கை. அதனால் காரிமாறன் என்றும்
கண்ணி நுண் சிறுத் தாம்பு -"கண்டு கொண்டு என்னைக் காரி மாறப்பிரான்"
4. பராங்குசன் - பரன் ஆகிய திருமாலை தன் அன்பினால் கட்டியமையால் “பராங்குசன்” என்றும், தலைவியாக தன்னை வரித்துக் கொண்டு பாடும்போது “பராங்குசநாயகி” என்றும் அழைக்கப்படுகிறார்.
கண்ணி நுண் சிறுத்தாம்பு - "குருகூர் நம்பி. பாவின் இன்னிசை பாடித்திரிவனே"
8. பொருநல்துறைவன் - தாமிரபரணி ஆற்றிற்கு பொருநல் என்ற பெயரும் உண்டு. திருக்குருகூர் பொருநல் ஆற்றின் கரையோரத்தில் அமைந்தமையால்
9. குமரி துறைவன் - பெயர்க்காரணம் தெரியவில்லை
10. பவரோக பண்டிதன் - பவரோக என்றால் பிறவிப் பெரும்பிணியைப் போக்கவல்லவன். ப்ரபந்த அமுதை தந்து, நம் பிறவிப் பிணியைப் போக்கி,"வைகுண்டம் புகுவது மன்னவர் விதியே" என்று நமக்கு உரைத்தமையால்
11. முனி வேந்து - வேந்தன் என்றால் அரசன், வேந்து என்பது மருவியிருக்கலாம், முனிகளுக்கெல்லாம் அரசன்
12. பரப்ரஹ்ம யோகி - பரப்ரஹ்மத்தை நோக்கி யோகம் செய்து நமக்கு ப்ரபந்தம் என்னும் வேத சாரத்தை அளித்தமையால்
14. ஞான தேசிகன், ஞானப்பிரான் - தேசிகன் என்றால் ஆச்சார்யன், ஞானத்தை நமக்கு ஊட்டிய ஆச்சார்யன்
அடிஆர்த்த வையம்உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல்குழ விப்படி எந்தை பிரான்தனக்கு
அடியார் அடியார் தம்மடி யார்அடி யார்தமக்கு
அடியார் அடியார் தம்மடி யார்அடி யோங்களே (திருவாய்மொழி: 3.7.10)
17. உதயபாஸ்கரர், வகுள பூஷண பாஸ்கரர் - பாஸ்கரர் - என்பது சூரியனுக்கு மற்றொரு பெயர். அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்கும் சூரியனாதலால் இந்த பெயர்கள்
19. பாவலர் தம்பிரான் - பாவலர் என்றால் கவிஞர், பாடல் இயற்றுபவர்
20. வினவாது உணர்ந்த விரகர் - விரகர் என்றால் நலனை
21. குழந்தை முனி - பிறந்ததிலிருந்து பதினாறு வருடம் உணவு இல்லை, உறக்கம் இல்லை, பேசவில்லை புளியமரத்தடியில் யோக நிலையில் இருந்தவர்,
22. ஸ்ரீ வைஷ்ணவ குலபதி - ஸ்ரீ வைஷ்ணவ குருபரம்பரையில் விஸ்வக்சேனருக்கு அடுத்தபடியாக, நான்காவது ஸ்தானத்தில் இருந்து, நம்மை நாராயணனிடம் கொண்டு சேர்க்க வழி காட்டும் குலபதி
23. ப்ரபன்ன ஜன கூடஸ்தர் - ஆச்சர்யனிடம் ஆத்ம சமர்ப்பணம் செய்தவன் ப்ரபன்னன் (சரணாகதன்),
இந்த பதிவில் ஏதாவது பிழை இருப்பின் க்ஷமிக்கவும். அடியேனை திருத்திப் பணி கொள்ளவும்.
ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளே சரணம் 🙏
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: 🙏
ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேசிகாய நம: 🙏
ஆச்சார்யன் திருவடிகளே சரணம் 🙏