இந்தியாஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம். கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எல்லாம் இருக்கிறது என்று நம்புவர்களின் சிந்தனைக்கு சில வினாக்கள்.
இந்தியாவில் யாருக்கு இருக்கிறது சுதந்திரம்?+
• தாங்கள் வாழும் காட்டை அழிக்க வேண்டாம் எனக் கோரிய மலைவாழ் மக்களை எந்தவித விசாரணையும் இன்றி சுட்டுக்கொல்வதற்கு பொலிசாருக்கு சுதந்திரம் உண்டு.
• கருப்பு சட்டத்தை நீக்கு எனக் கோரும் மணிப்பூர் பெண்களை கற்பழிக்க இந்திய ராணுவத்திற்கு சுதந்திரம் உண்டு. +
• காஸ்மீரில் அப்பாவி முஸ்லிம்களை கொல்வதற்கு இந்தியபடையினருக்கு சுதந்திரம் உண்டு.
• தமிழக மீனவர்களைக் கொல்வதற்கு இலங்கை கடற்படையினருக்கு சுதந்திரம் உண்டு. அந்த கடற்படையினருக்கு பயிற்சி வழங்க இந்திய ஆட்சியாளர்களுக்கு சுதந்திரம் உண்டு. +
• தமிழர்களுக்கு எதிராக குரல் கொடுக்க சுப்பிரமணியசுவாமிக்கு சுதந்திரம் உண்டு. அவருக்கு போலிஸ் காவலும் உண்டு. ஆனால் அவருக்கு எதிராக இளைஞர்கள் குரல் கொடுத்தால் அவர்களை பிடித்து அடைக்க தமிழக போலிசுக்கு சுதந்திரம் உண்டு. +
• கூலிப்படையை ஏவி கொலை செய்ய காஞ்சி சங்கராச்சாரிக்கு சுதந்திரம் உண்டு. அவரை விடுதலை செய்யவும், அப்பாவி பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதிக்கவும் இந்திய நீதிதுறைக்கு சுதந்திரம் உண்டு.
• கோடிக்கணக்கில் ஊழல் செய்யவும் வெளியில் சுதந்திரமாக திரியவும் ராசா, கனிமொழி வகையறாக்களுக்கு +
சுதந்திரம் உண்டு. ஆனால் பலவருடங்களாக சிறையில் வாடும் அப்பாவிகளுக்கு விடுதலை இல்லை.
• திபெத் அகதிகள் இந்தியாவில் நடமாடலாம். ஆனால் தமிழீழ உறவுகளை மட்டும் முகாமில் அடைத்து வைக்க தமிழகஅரசுக்கு முழு சுதந்திரம் உண்டு.
பிர்லா, கோயங்கா, மித்தல், கன்ஷியாம்தாஸ், ஓஸ்வால், சிங்கானியா, சேத், டால்மியா, பஜாஜ், பொத்தார், பிரமல், ஜுன்ஜுன்வாலா என பல பெயர்களில் உள்ள மார்வாடிகளின் ஆதிக்கத்தில் தான் இந்திய வணிகம் முழுவதும் உள்ளது எனச் சொல்லலாம்.
மார்வார் எனும் கிழக்கு ராஜஸ்தான் பகுதியிலிருந்து வந்தவர்கள் மார்வாரிகள்.
இவர்கள்தான் மார்வாடிகள் என அழைக்கப்படுகின்றனர். வறண்ட பாலைவனப் பகுதியானதால் வளங்களை சிக்கனமாகத் சேமித்து வாழத்தெரிந்த சமூகம் அது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல பஞ்சாப், உத்தரப் பிரதேசம், வங்காளம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா என பரந்து விரிந்து, முதலாம் உலகப்போரின்போது கிட்டத்தட்ட வட இந்தியா முழுவதும் வணிக உலகில் விஸ்வரூபம் எடுத்தவர்கள் மார்வாடிகள்.
1) #குமரித்தமிழன் ஜீவா. ஆம் குமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி என்னும் ஊரில் பிறந்தவர் ஜீவா.
2) தனது 14 வயதில் சுசீந்திரம் கோவில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட பகுத்தறிவுவாதி.
3) 22 வயதில் காந்திக்கு நேராக நின்று "நீங்கள் ஏன் வர்ணாஸ்ரம தர்மத்தை ஆதரிக்கிறீர்கள்" என்று விமர்சித்தவர் பதில் அற்றவராக காந்தி நிற்க!! அன்று தொடங்கி காந்தியை விமர்சிக்கத் தொடங்கியவர்.
3) பகத்சிங்கின் அரும்கொடையான புத்தகம் Why I am a atheist
என்கிற புத்தகத்தை தமிழில் "நான் ஏன் நாத்திகன்" என்று மொழிபெயர்த்து மக்கள் மனதில் விடுதலைக்காக முழக்கமிட வைத்தவர்.
1.லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.
2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.
3. வீடு, மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெறுகின்றவரை தனக்கோ, தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று #கடாபி சபதம் பூண்டிருந்ததால்!!
அவரது பெற்றோர்கள் இறக்கும்வரை வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர்.
4. அந்த நாட்டில் மணம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு 60,000 தினார், அதாவது அமெரிக்க பணம் 50,000 டாலர் அதாவது இந்திய பணம் சுமார் 28,00,000 ரூபாய் பணத்தை இலவசமாக வழங்கியது.