#அடேய்_லகுட_பாண்டிகளா 🤦
மகுட நாட்டு அரசன் மயூரன் வருத்தத்தில் இருந்தான். தன்னுடைய சந்தேகப் புத்தியால் தான் இவ்வாறு நடந்து விட்டது என பெரும் கவலையுற்றான். அவையில் எல்லோர் முன்னிலையிலும் தலைமை அமைச்சரைப் பற்றி தவறாக பேசியதால் தலைமை அமைச்சர் சாம்பு
இத்தனை ஆண்டு காலம் நல்ல விசுவாசமாக இருந்த திறமையான அமைச்சர்.
🔥அரசு நிர்வாகம்,
🔥நிதி,
🔥நீதி
என அனைத்தையுமே அவரே இத்தனையாண்டு காலம் கவனித்து வந்தார். அவர் சென்று விட்டதால் அரசவையில் தினசரி அலுவல்களே நடைபெற திணறியது.!
சில வருடங்கள் உருண்டோடின.!
🏃🚶🧎
மக்கள் நலப்பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் தொடர்ந்து குவிந்தன.
அதனால் அமைச்சர்களான,
🔥 மதிமாறன்
🔥 கண்ணப்பன்
🔥 சுவாமிநாதன்
ஆகிய மூவரையும் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன்.
மன்னன் அவர்களை அனுப்பிவிட்டான். ஆனால் ஒரே குழப்பம்🤔
"செய்யும் ஊழலை மிகவும் திறமையாகச் செய்திருக்கிறார்கள். அதனால் ஆதாரங்கள் எதுவுமே இல்லை...!
📜இல்லை மூவரும் கூட்டு களவாணிகளா..!
📜அல்லது இவர்களில் விதிவிலக்குகள் யாராவது இருக்கின்றனரா..!
என்பதை அறிய வேண்டும்''
என்று நினைத்தான் மன்னன் ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்தான்.
""மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்கு பரீட்சை வைக்கப் போகிறேன்.
உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும். அதை எடுத்துக்கொண்டு நம் நாட்டின் எல்லைகளில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்லுங்கள்.
அப்படி நீங்கள் நிரப்பும் பொருட்களை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் இரண்டு வாரம் சாப்பிட வேண்டும்.
அதை அப்படியே நம் பாதாள சிறையில் உள்ள மூன்று கைதிகளிடம் கொடுத்து விடுவோம்.
அவர்கள் அதை உண்டு உங்களை வாழ்த்த வேண்டும். இந்த போட்டியில் யார் வெற்றி பெறுகிறுர்களோ அவர்களே தலைமை அமைச்சராக நியமிக்கபடுவர்.
காடுகளில் காய் கனி கிழங்குகளுக்குப் பஞ்சமில்லைதான். .ஆனால், அவற்றை அலைந்து திரிந்து சேகரிக்க வேண்டியிருந்தது.
மேலும் அதை சேகரிக்கும் வரை அமைச்சர்களுக்கு காட்டில் கிடைக்கும் காய் கனிகள்தான் உணவு.
அதனால் அவர்களுக்கு அந்த வேலை மிகவும் கடினமாக இருந்தது.
இதில் சுவாமிநாதன் நல்ல பொருட்களைச் சேகரித்தான்
சாக்குப்பையை நிரப்ப அவனுக்கு மூன்று நாட்கள் முழுமையாக தேவைப்பட்டது.
ஆனால், உள்ளே இருந்தவை எல்லாம் தரமான பொருட்கள்.
பையை யாரும் சோதிக்க மாட்டார்கள் என்று மன்னரே சொல்லிவிட்டார்.
சோதித்தாலும் மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள்.
அதனால் மேலே நல்ல தரமான பொருட்களை வைத்துவிட்டு, கீழே அழுகிய பழங்கள், கொட்டைகள், என்று வைத்து பையை மூடிவிட்டான்
மூன்றாவது அமைச்சரான மதிமாறன் அந்த அளவிற்குக்கூடச் சிரமப்படவில்லை.
நான்காம் நாள் காலை மன்னன் மூன்று அமைச்சர்களையும் அழைத்தான்.
அவர்கள் முன்னிலையில் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான்.
அவரவருடைய சாக்குப் பைகளை அவரவரிடம் வைத்துவிடுங்கள்.
சிறைத்தண்டனை இரண்டு வாரங்கள் தொடரும்.
அந்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் வழங்க வேண்டாம்..
இரண்டு வாரம் கழித்து பார்ப்போம். அதில் யார் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறாரோ அவரே வெற்றி பெற்றவர்...!"
என உத்தரவிட்டு சென்றுவிட்டார்..!😂
🔥 காய்ந்த இலைகளையும் சருகுகளையும் உண்டு உயிர் வாழ முடியாததால் மதிமாறன் மிகவும் நலிவடைந்து மயங்கிய நிலையில் மீட்க்கப்பட்டான்
🔥அழுகிய கனிகளையும் நல்ல கனிகளையும் கலந்து உண்டு எப்படியோ இரண்டு வாரங்கள் உயிர் வாழ்ந்துவிட்டான் கண்ணப்பன்..!
மன்னன் அவர்கள் இருவரையும் பதவியிலிருந்து நீக்கிவிட்டான், சிகிச்சைக்கு பிறகு அவர்களை பாதாள சிறையில் அடைக்க ஆணையிட்டான்.
🔥 சுவாமிநாதன் இரண்டு வாரங்களையும் தனிமைச்சிறையில் மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வெளியே வந்தான்.
மன்னன் அவனுக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவனை தலைமை அமைச்சராக ஆக்கிக் கொண்டான்...!😂
சுவாமிநாதனை கண்ட இருவருமே
"துரோகி, இத்தனை நாளும் ஒன்றாகவே இருந்தோம், ஒன்றாகவே ஊழல் செய்து சம்பாதித்தோம், நன்றாக சொத்தும் சேர்த்தோம்..!
அதோடு மட்டும் இல்லாமல் எங்களை இப்படி யாரும் பார்க்க முடியாத தனிமை சிறைக்கு வேறு மாற்றி விட்டாய்... உன்னை..!"
என்று கோபமாக கத்தினார்கள்..!
"வாய்ப்புக்கள் எளிதில் அமைந்து விடாது.. அவ்வாறு கிடைக்கும் போது சரியாக பயன்படுத்த தெரிய வேண்டும். இல்லையெனில் இப்படித்தான் உங்களை போல் காலம் முழுவதும் வருந்த வேண்டும். இதற்கு பெயர் தான் அரசியல்" என கூறிவிட்டு நகர்கையில்..,