#NEET தேர்வு பற்றி முனைவர் டி. பெரியசாமி (IIT சென்னை) அவர்களின் தெளிவான கருத்துகள்:-
1.தமிழ்நாட்டின் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் சுமார் 28000 கோடி. அதில் 60% க்கும் மேல் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்படுகிறது.
2. நுழைவு தேர்வு ரத்துசெய்யப்பட்ட பிறகு நீட் தேர்வு வருவதற்கு
முன்னால் 2006 முதல் 2016 வரை தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு கல்லூரி மருத்துவ இடங்கள்(MBBS) -29925.
3. இந்த29925 இடங்களில் அரசுப்பள்ளிகளில் படித்து MBBS இடங்கள் வாங்கியவர்கள் 213. சராசரியாக ஆண்டிற்கு 19 மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளியில் இருந்து மருத்துவ படிப்பிற்கு
தேர்வானார்கள். இது 0.7% சதவிகிதத்திற்கும் குறைவானதாகும்.
4. NCERT எனப்படும் 1961 ம் ஆண்டு மத்திய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு மத்திய மாநில அரசாங்கங்களுக்கு பாடத்திட்டத்தில் உதவி செய்வதற்காக மாதிரி பாடப்புத்தகங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த பாடப்புத்தகத்தில் இருந்து
Medical council of India (MCI) நீட் தேர்விற்க்கான syllabus ஐ வடிவமைத்துள்ளார்கள்.
5. NCERT பாடப்புத்தகங்களை CBSE அப்படியே எடுத்துக்கொண்டுள்ளார்கள். ஆந்திரா போன்ற சில மாநிலங்கள் NCERT பாடப்புத்தகத்தை மேலும் மெருகேற்றி அவர்களின் மாநில பாடப்புத்தகங்களை வடிவமைத்தார்கள் தமிழ்நாடு
போன்ற மாநிலங்கள் அதை எவ்வ்ளவு முடியுமோ அவ்வளவு குறைத்தார்கள்.
6. எனவே நீட் தேர்வு பாடத்திட்டம் NCERT படத்திட்டத்திலிருந்து MCI ஆல் எடுக்கப்பட்ட பாடத்திட்டமாகும். நீட் தேர்வு CBSE பாடத்திட்டத்தில் நடத்தப்படுவதில்லை.
7. நீட் தேர்வில் 11 மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து
கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் அறிவாற்றல் திறனின் (Cognitive skills) முதல் மூன்று திறன்களை (Remembering, understanding & Application) சோதிக்கும் விதத்தில் இருக்கும்.
8. இந்த மூன்று திறன்கள் பள்ளிக்கல்வியில் வளர்ந்தால்தான் மீதமுள்ள திறன்களை (Analysis, synthesis and creativity)
கல்லூரி கல்வியில் வளர்க்க முடியும் இந்த அறிவாற்றல் திறனின் மேல்திறன் (creativity) புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் திறனாகும்.
9. தமிழ்நாட்டில் Blue print எனப்படும் எந்த கேள்விக்கு எந்த பாடத்தில் எந்த பக்கத்தில் இருந்து கேள்வி கேட்க வேண்டும் என்ற தேர்வுமுறை 2017 வரை அமலில்
இருந்தது. இந்த தேர்வுமுறை மாணவர்களின் அறிவாற்றலை சோதிக்காமல் மனப்பாடம் செய்யும் முறையை ஊக்குவிக்கும் விதத்தில் இருந்தது. இது கிட்டத்தட்ட தேர்விற்கு முன்னரே Question paper ஐ out செய்வதற்கு ஒப்பானதாகும். இந்த தேர்வுமுறையில் மாணவர்கள் சில பாடங்களை படிக்காமலேயே முழுமதிப்பெண் எடுக்க
முடியும். இதுகூட 12ம் வகுப்பு பாடம் மட்டும்தான். 11ம் வகுப்பு பாடங்கள் 99% பள்ளிகளில் நடத்தப்படவே இல்லை.
10. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதவாறு தமிழ்நாட்டில்தான் ஆசிரியர்கள் பாடத்திட்டதை குறைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள்.
11. தமிழ்நாட்டின் பாடத்திட்டம் 12
ஆண்டுகளுக்கு பிறகு 2017 ம் ஆண்டுதான் மாற்றப்பட்டது. 2018ம் ஆண்டிலிருந்து Buleprint தேர்வுமுறை ஒழிக்கப்பட்டது. கேள்விகள் சிறிது அறிவாற்றல் திறனை சோதிக்கும் விதத்தில் கேட்கப்பட்டன. 2020ம் ஆண்டில் நம் மாணவர்களின் 12ம் வகுப்பு தேர்ச்சி 93%. ஆனால் அந்த 93% ல் 50% மாணவர்கள் வெறும்
தேர்ச்சி மதிப்பெண்(pass mark) மற்றும்தான் பெற்றுள்ளார்கள்.
12. நீட் தேர்வானது 2013ம் ஆண்டு அப்போதைய மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு நீதிமன்ற தடைகளை கடந்து 2016ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. 2016ம் ஆண்டு மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு 2017ம் ஆண்டு முதல்
இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ இடங்களுக்கும் நீட் மூலமாக மட்டுமே சேர்க்கை நடத்தப்படும் என்று ஒரு ஆண்டிற்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. நீட் தேர்வு வருவதன்முலம் இடஒதுக்கீடோ அல்லது சொந்த மாநிலத்தில் உள்ள எந்த ஒதுக்கீடும் பாதிக்கப்படாது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. மாநில அரசுகள்
அவர்களின் மாநில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை வழக்கம் போல் நடத்தலாம். ஆனால் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதாவது தமிழத்தின் அரசு கல்லூரிகளில் உள்ள 85% சதவிகித இடங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டும் 69% இடஒதுக்கீட்டுடன் கொடுக்கப்பட வேண்டும்
என்று முடிவாகியது. இது நீட் தேர்வு வருவதற்கு முன்னிருந்த அதே நிலையாகும்.
இப்பொழுது மனதில் எழும் சிலகேள்விகளை கேட்க விரும்புகிறேன்
1. தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ இடத்தில் சேர முடியாமல் போனதற்கு நீட் தேர்வு மட்டும்தான் காரணமா? 28000 கோடி பணம் வெறும் 19 மாணவர்களை
மருத்துவ படிப்பில் சேருவதற்குத்தான் உபயோகிக்கப்பட்டதா??
2. திறமைவாய்ந்த ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் உள்ளபொழுது அவர்களை விட திறமை குறைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களால் result எப்படி கொடுக்க முடிந்தது? இது அரசின் தோல்வியா??? அரசு பள்ளி ஆசிரியர்களின் தோல்வியா???
3. வெறும் 19 மாணவர்கள்
மட்டுமே மருத்துவப்படிப்பிற்கு சென்ற பொழுது நடைபெறாத போராட்டங்கள் நீட் தேர்வை எதிர்த்து மட்டும் நடப்பதன் காரணம் என்ன??
4. NCERT பாடத்திட்டத்தை குறைத்து, தகுதி குறைந்த பாடத்திட்டத்தை தமிழ்நாட்டில் வைத்ததற்கு யார் பொறுப்பேற்பது???
5. 12 வருடங்களாக ஏன் பாடத்திட்டம் தமிழ்நாட்டில்
மாற்றப்படவில்லை? Blue print எனப்படும் மோசமான தேர்வுமுறை ஏன் மாற்றப்படவில்லை?
6. ஏன் அரசுப்பள்ளிகளின் தரத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறவில்லை?? 28000 கோடி மக்களின் வரிப்பணம் வீணாக்கப்பட்ட பொழுது ஏன் போராட்டங்கள் நடைபெறவில்லை?
7. 11ம் வகுப்பு பாடத்தையே கற்று தராமல் மாணவர்களால்
எப்படி நீட் தேர்வு எழுத முடியும்? 11ம் வகுப்பு பாடங்கள் கற்றுத்தரப்படாமல் போனதற்கு நாமும் நமது ஆசிரியர்களும் காரணமாக இருந்துகொண்டு நீட் தேர்வின் மேல் பழி போடுவது எவ்வகையில் நியாயம்? அவ்வாறு கற்றுத்தரப்படாமல் போனதற்கு ஏன் இங்கு யாரும் போராடவில்லை? இங்கு ஆசிரியர்களின் வசதிக்காக
பாடத்திட்டத்தை குறைத்துவிட்டு எங்களுக்கு வேறு பாடத்திட்டத்தில் இருந்து கேள்வி வந்தது என்று கேள்வி எழுப்புவது எந்த வகையில் நியாயம்?
8. ஒவ்வொரு ஆண்டும் மாநில பாடத்திட்ட தேர்வு முடிவுகள் வரும்பொழுது குறைந்தது 5 மாணவர்களின் தற்கொலை செய்தியை கடக்க நேரிடுகிறது. மிகவும் வருத்தமான விஷயம்
ஆனால் நாம் மாணவர்களின் குறைகளை களைந்து அவர்களுக்கு மன உறுதி கொடுக்க வேண்டுமா? அல்லது அவர்களின் தற்கொலையை காரணம் காட்டி தேர்வை ரத்து செய்ய வேண்டுமா?
9. அனிதாவின் மரணம் என்னை மிகவும் பதித்த ஒரு விஷயம் அந்த குழந்தையின் மரணத்தை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது. தெளிவு
பெறுவதற்க்காக சில விஷயங்களை நாம் இதில் விவாதிக்க வேண்டியுள்ளது.
(i) #அனிதா அரசுப்பள்ளியில் படிக்கவில்லை
(ii) பெரம்பலூர் மாவட்டத்தில் மேலமாத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்தார்
(iii) தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான பள்ளிகள் போல் அங்கும் 11ம் வகுப்பு பாடங்கள் நடத்தப்படவில்லை
(iv) 2016ம் ஆண்டே அடுத்த வருடம் நீட் தேர்வின் மூலம்தான் சேர்க்கை நடக்கும் என்று மத்திய அரசாங்கமும் உச்ச நீதிமன்றமும் அறிவித்த நிலையில் அதை சரியாக மாணவர்களுக்கு கொண்டு செல்லாதது யார் தவறு?
(v) அனிதாவுக்கு தவறான நம்பிக்கையை கொடுத்தது யார்? 11ம் வகுப்பில் 50% கேள்விகள் கேட்கப்படும்
நிலையில் 11ம் வகுப்பு பாடத்தையே படிக்காமல் அவரால் எப்படி நீட் தேர்வில் மதிப்பெண் பெற முடியும்? 11ம் வகுப்பு பாடத்தை அவருக்கு கற்றுத்தராமல் போனதற்கு ஆசிரியர்கள் காரணமா? அரசாங்கம் காரணமா?
(vi) நீட் 2017 தேர்விற்கு அவர் 2016ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே விண்ணப்பம் செய்திருக்க
வேண்டும். அந்த விண்ணப்பத்தில் மிகத்தெளிவாக அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நீட் மூலமாகத்தான் நடக்கும் என்று குறிப்பிட்டிருந்த நிலையில் அந்த தகவலை அவருக்கு உறுதியாக தெரிவிக்காதது யார் தவறு?
(vii) அந்த விண்ணப்பத்தில் நீட் தேர்வில் இப்படித்தான் கேள்விகள் கேட்கப்படும்
என்று அறிவித்திருந்த நிலையில் அதை அவருக்கு கற்றுக்கொடுக்காதது யார் தவறு?? நீட் தேர்வை எத்தனை முறை வேண்டுமென்றாலும் 25 வயதிற்குள் எழுதலாம் என்ற வாய்ப்பு உள்ள பொழுது அவருக்கு நம்பிக்கையை கொடுத்து மீண்டும் படிக்க வைக்காதது யார் தவறு? அவரை உச்ச நீதிமன்றம் அழைத்து சென்ற செலவில் 10ல் 1
மடங்கு செலவு செய்திருந்தால் அவரை மீண்டும் படிக்க வைத்து மருத்துவராக்கி இருக்கலாமே? அதை செய்யாதது யார் தவறு?
(viii) இப்படி அனைத்து தரப்பிலும் தவறு உள்ள பொழுது நீட் தேர்வின் மீது மட்டும் பழிபோட்டு மாணவர்களுக்கு அந்த தேர்வின் மீது வெறுப்பு வருமாறு செய்வது எந்த வகையில் நியாயம்?
10. நீட் வந்த பிறகும் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் மட்டுமே சேரமுடியும் என்ற நிலை மட்டுமே உள்ளது. நான் தமிழ்நாட்டை சார்ந்தவன் என்று தமிழ்நாட்டு அதிகாரிகளின் உதவியுடன் சான்றிதழ் பொய்யாக வாங்கி வந்தால் ஒருவேளை அடுத்தமாநில மாணவர்கள் சேரலாம்.
11. “நீயா நானா கோபிநாத்” முதல் “கரு பழனியப்பன்” வரை அனைவரும் நீட் தேர்வு எங்கள் தமிழ்நாட்டு மாணவர்களை மருத்துவ படிப்பு படிக்க விடாமல் செய்வதற்காக கொண்டுவரப்பட்டது என்று பொய் பிரச்சாரம் செய்வது நியாமா? ஏன் பொய்யான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறீர்கள்? இப்படி பொய்யான தகவல்களை
கூறினால் மக்கள் இந்த தேர்வை எழுதாமல் போனால் யாருக்கு பாதிப்பு?
12. அடுத்ததாக நீட் மூலம் சமூகநீதி மறுக்கப்பட்டதாக அனைவரும் மேடைக்கு மேடை ஏன் பொய் பேசுகிறார்கள்? இங்கு சென்ற வருட (2019) தமிழ்நாட்டு MBBS மாணவர் சேர்க்கை தரவுகளை தோராயமாக கொடுத்துள்ளேன்.
a) மொத்த தமிழ்நாட்டு அரசு
கல்லூரி மாநில இடங்கள் -3050
b) பொது பிரிவிற்கு (open category) ஒதுக்கப்பட்ட இடங்கள் -945
(i) பொதுப்பிரிவில் BC மாணவர்கள் எடுத்த இடங்கள்- 679
(ii) பொதுப்பிரிவில் MBC மாணவர்கள் எடுத்த இடங்கள்- 110
(iii) பொதுப்பிரிவில் SC மாணவர்கள் எடுத்த இடங்கள் -20
(iv) பொதுப்பிரிவில் FC (Forward
caste) மாணவர்கள் எடுத்த இடங்கள் வெறும் 136 மட்டுமே. (இந்த 136 இடங்களில் பிராமணரை தவிர வேறு சாதிகளும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.)
c) பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு (Backward Caste) ஒதுக்கப்பட்ட இடங்கள் -915
(பொதுப்பிரிவில் எடுத்த இடங்களுடன் பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு
கிடைத்த இடங்கள் -1594)
d) மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு (Most Backward Caste) ஒதுக்கப்பட்ட இடங்கள் -610
(பொதுப்பிரிவில் எடுத்த இடங்களுடன் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு கிடைத்த இடங்கள் -720)
e) பட்டியலின பிரிவிற்கு (Scheduled caste) ஒதுக்கப்பட்ட இடங்கள் -579
(பொதுப்
பிரிவில் எடுத்த இடங்களுடன் தாழ்த்தப்பட்ட பிரிவிற்கு கிடைத்த இடங்கள் -600)
f) சென்ற வருடம் சமூக வாரியாக தமிழ்நாட்டில் கிடைக்கப்பட்ட MBBS இடங்கள்
(i) FC-136
(ii) BC-1594
(iii) MBC-720
(iv) SC/ST-600
நீட் வந்ததால் எந்த சமூகம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று இதன் மூலம் தெளிவாக
தெரிந்து கொள்ளலாம். உண்மை இவ்வாறு இருக்க ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறி வைத்து பொய் பிரச்சாரம் செய்து நவீன தீண்டாமை செய்வது ஏன்? (நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவன். இதை இங்கு நான் கூறாவிட்டால் என் சாதி வேறாக பார்க்கப்படும் என்பதால் குறிப்பிடுகிறேன்)
13. அடுத்த விவாதம் நீட்
வந்ததால் பணக்காரர்களுக்கு மட்டும் சீட் கிடைக்கிறது என்பது. நீட் வருவதற்கு முன்னாலும் தனியார் பள்ளிகளில் படித்த பணக்கார மாணவர்கள்தான் சீட் வாங்கினர். நீட்டை ஒழிப்பதன் மூலம் அதை சரிசெய்ய முடியமா? அதை சரிசெய்ய வேண்டுமென்றால் ஒரு சமூகத்தில் மீண்டும் மீண்டும் இடஒதுக்கீட்டின் மூலம்
பலனடைந்து வரும் பணக்காரர்களை விடுத்து பலனடையாத மக்களுக்கு இடஒதுக்கீடு சென்று சேருமாறு இடஒதுக்கீட்டு முறையை மாற்றவேண்டுமா? அல்லது நீட் தேர்வை ஒழிக்க வேண்டுமா?
14. அடுத்ததாக நாங்கள் ஏற்கனவே முன்னேறிவிட்டோம், எங்கள் GER Ratio 49% உள்ளது, உத்திரபிரதேசத்தில் 20% தான் உள்ளது, எனவே
எங்களுக்கெல்லாம் நீட் போன்ற தேர்வுகள் தேவையில்லை என்கிறார்கள் சிலர். அனைவரையும் படிக்காமலே pass செய்வித்தால் ஒரு பத்திரிக்கை வெளியிட்ட பொய் செய்தியை போல் GER Ratio வில் நாம் அமெரிக்காவை கூட மீறலாம். ஆனால் பலன் என்ன? மேலும் ஒரு தகவல் தமிழ்நாட்டில் 49% GER Ratio உடன் உயர் கல்வி
படிக்கும் மக்கள் 3.5 கோடி (total population-7cr) என்றால் உத்திரபிரதேசத்தில் 20% GER ratio உடன் உயர் கல்வி படிக்கும் மக்களின் எண்ணிக்கை 4.6 கோடி (total population-23cr). நம்மை விட அதிகம் மக்கள் எண்ணிக்கையில் உயர்கல்வி படிக்கிறார்கள். அவர்களும் நம்முடன் போட்டிக்கு வருவார்கள். எனவே
யாரையும் குறைவாக மதிப்பிட வேண்டாம்.
15. GER Ratio பெருமை பேசுவதை விடுத்தது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 93% மாணவர்களில் 50% மாணவர்கள் ஏன் Just pass செய்தார்கள் என்று ஆராய்வது பயனளிக்குமா? அல்லது நாங்கள் 93% pass என்று பெருமை பேசுவது பயனளிக்குமா? இதுவரையில் நம் பள்ளிக்கல்வி பாடத்
திட்டத்தில் என்ன குறை என்று யாராவது விவாதித்திருக்கிறோமா? அதை மேம்படுத்தவேண்டும் என்று போராடியிருக்கிறோமா? முதலில் நம் கல்வித்தரத்தை உயர்த்துவோம். நம் மாணவர்களுக்கு அபரிதமான ஆற்றல் உள்ளது. அவர்களுக்கு முறையான கல்வி கொடுத்தால் அவர்கள் நீட் என்ன எந்த தேர்வையும் ஊதி தள்ளிவிடுவார்கள்
16. நீட் தேர்வு வருவதற்கு முன்னால் தமிழ்நாடு மருத்துவ கல்லூரிகளில் 50% முதலாண்டு MBBS மாணவர்கள் Human Physiology, Anatomy and Biochemistry என்ற மூன்று பாடங்களில் ஏன் தேர்ச்சி பெறவில்லை?? நீட் தேர்வு மூலம் சென்ற மாணவர்கள் 2017ம் ஆண்டிலிருந்து எப்படி 80% க்கும் மேல் அந்த மூன்று
படங்களில் தேர்ச்சி பெறுகிறார்கள்?
17. நம் கல்விமுறை மனப்பாடம் செய்யும் கல்விமுறை என்று பட்டவர்த்தனமாக தெரியும் பொழுது அதைவைத்து மருத்துவ மாணவர்களை தேர்தெடுப்பது சரியா? உண்மையான கல்வியாளர்களை வைத்து ஒரு சிறந்த கல்விமுறையை கொண்டுவரவேண்டியது ஒரு அறிவார்ந்த சமூகத்தின் கடமை அல்லவா?
நீட் தேர்வுமுறை சரியில்லை என்றால் அதில் உள்ள குறைகளை மத்திய அரசிடம் கூறி அதை மாற்றுவதும் நம் கடமை அல்லவா? கல்வியின் தரம் சம்பந்தமாக இதுவரை எந்த தமிழ்நாட்டு அரசியல்வாதியோ அல்லது போராளிகளோ போராட்டம் நடத்தியுள்ளார்களா? அல்லது அதை பற்றியாவது பேசியுள்ளார்களா? தயவுசெய்து யோசியுங்கள்!
18. நம் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு என்ன பிரச்சனை என்று ஒரு சிறிய ஆராய்ச்சி நடத்தி அதை சரிசெய்யும் முறைகளை என் மாணவர்களிடம் செயல்படுத்தி வெற்றியும் கண்டிருக்கிறேன். அதுபோல் நீட் போன்ற திறனறி தேர்வுகள் ஒரு சிறந்த மருத்துவரை உருவாக்குவதில் எப்படி பங்காற்றுகின்றன என்று சில Case
study களையும் மருத்துவ படிப்பு படிக்கும் என் மாணவர்கள் மூலம் செய்துள்ளேன். இந்த பதிவு மிக நீளமாக இருப்பதால் அந்த தகவல்களை வேறொரு பதிவில் பகிர்கிறேன். இந்த பதிவில் உள்ள அனைத்து விசயங்களும் என் அனுபவத்தில் கிடைத்த தகவல்கள் மற்றும் மனதில் இருந்த கேள்விகள். நான் கொடுத்த எண்களில் மிக
சிறிய தவறுகள் இருக்கலாம். இந்த பதிவு உங்களுக்கு நியாயமாக தெரிந்தால் மக்களிடையே தயவுசெய்து பகிருங்கள்.

Dr. T. பெரியசாமி., M. Tech., Ph. D(IIT Madras)
Cc @SaffronDalit @HLKodo @YeskayOfficial @Mahesh10816 Sirs please RT this very useful thread on #NEET for wider reach🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

8 Sep
An open letter to Kanimozhi MP
Madam,
The world just witnessed your campaign against Hindi by distributing T-Shirts printed with “Hindi Theriyadhu Poda”. It is amusing that an elected MP of this Republic of India and the daughter of one of the longest serving CM of TN, promotes
such a sectarian mindset and importantly take pride out of it. Everyone knows you & your party use this Hindi-Hatred to hold fort as a “Savior of Tamil” for political gains. But your hatred politics will soon be irrelevant in these modern times. Do you understand that you never
taught the masses to love Tamil, instead you have only poisoned their mind to “Hate Hindi”. Could you tell us what efforts you have taken to promote the "Ten Idylls" and "Eight Anthologies" of Tamil Sangam literature to the Tamil mass? Would you explain what respect you have
Read 10 tweets
3 Sep
#ஸ்வீடன் ல் நடப்பது என்ன? #Sweeden
இயற்கையழகு, வளங்கள் நிறைந்த அவர்கள் வரலாற்றில் வன்முறையைக் காணாத அமைதியான ஐரோப்பிய நாடு ஸ்வீடன். கிறிஸ்தவ அடிப்படைவாதமும் அற்ற நாடு. தற்போது இஸ்லாமியர்களின் வன்முறையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் மற்ற நாடுகளில் உள்ளது போல்
அதிகாரத்தில் இருக்கும் அந்நாட்டு அரசியல்வாதிகளின் சுயநலமே. ஸ்வீடன் 1930ம் ஆண்டிலிருந்து ஒரே ஒரு கட்சியால் (SDP - Social Democratic Party) ஆளப்பட்டு வருகிறது. 8 எதிர்க்கட்சிகள் இருந்தாலும் அவை சிறிய கட்சிகள். SDP நம் நாட்டு #காங்கிரஸ் #Congress கட்சி மாதிரியானது. 1970-ஆம் வருடம்
வரை ஸ்வீடனில் வாழ்ந்தவர்களில் 99% அந்நாட்டின் பூர்வ குடிகளான வெள்ளையர்கள். 1970 காலகட்டத்தில் ஸ்வீடனுக்கு அதிபரான ஒலாஃப் பால்மே தன்னைக் உலக விஷயம் தெரிந்த, பெரியதொரு லிபரலாக எண்ணிக் கொண்டு செய்த செயல்களே ஸ்வீடனின் இன்றைய துயர நிலை துவங்கக் காரணமானது.
ஸ்வீடனில் எல்லோரும் ஒரே
Read 25 tweets
30 Aug
‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி…’ என்று ஆண்டாள் போற்றும் வாமன மூர்த்தியின் அவதாரம், ஆவணி மாத வளர்பிறை துவாதசி திதியும் ஸ்ரவண நக்ஷத்ரமும் கூடிய நாளில் ஏற்பட்டதால், ஒவ்வொரு வருடமும் அந்த நாள் #வாமன_ஜயந்தி என்று கொண்டாடப்படுகிறது. மகாபலி பிரகலாதனனின் பேரன். 100 அசுவமேத யாகங்கள்
செய்தால் இந்திரப் பதவியை அடையலாம் என்று முடிவு செய்து யாகங்களைச் செய்யத் தொடங்கினான். அவ்வாறு அவன் யாகம் செய்துமுடித்துவிட்டால் தேவலோகம் முழுமையும் நிரந்தரமாக அவன் வசமாகிவிடும் என்பதால் தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் சரண் அடைந்து தங்களைக் காக்குமாறு வேண்டினர்.அதற்கு மகாவிஷ்ணு,
மகாபலி முறைப்படி யாகம் செய்கிறான். மேலும், அவனுக்கு குருவின் பரிபூரண அனுக்கிரகம் உள்ளது. அவன் எப்போது அவன் குருவால் சபிக்கப்படுகிறானோ அப்போதே அவனை என்னால் வெல்ல முடியும் என்று கூறினார். மகாவிஷ்ணுவின் பதிலைக் கேட்ட தேவர்களின் தாயான அதிதி பயோவ் விரதத்தை மேற்கொள்ள, பூஜைக்கு மகிழ்ந்த
Read 15 tweets
29 Aug
பலராம ரெட்டி M.A (1908-95) ஆந்திராவில் ஆன்மிக சூழலுள்ள ஒரு கிராமத்தில் வளர்ந்தார். 1931ல் ஸ்ரீ அரபிந்தோ ஆஸ்ரமம் சென்ற இவர் 1937ல் ஸ்ரீ ரமணரின் பக்தராக ஆனார். My Reminiscences என்ற புத்தகம் ஸ்ரீரமணாஸ்ரமத்தில் இவரது வாழ்வு மற்றும் சாதனை ஆகியவைப் பற்றி விளக்குகிறது.
“ஸ்ரீபகவானின்
அவதாரம் இந்தப் பூமியை ஆசீர்வதிப்பதற்காக நிகழ்ந்தது. “அவரது கால்தடம் பட்டதும் பூமி தான் ஆசீர்வதிக்கப்பட்டதை உணர்ந்தாள்” என்று பாகவதத்தில் ஒரு வரி வரும். என்னைப் பொருத்தவரையில் இந்த பூமிக்கு விஜயம் செய்த அற்புதமான பிறவிகளில் பகவான் ஒருவர். அவருடன் சேர்ந்து வசிக்கும் போது பூர்வ
ஜென்மத்தில் நாம் செய்த புண்ணியத்தினால்தான் இப்பிறவியில் பகவானின் சேர்க்கை கிடைத்திருக்கிறது என்பதை உணரலாம். அவருடன் இருப்பது என்பது ஆகாயத்தில் இருப்பது போன்றது. அவருடன் பேச வேண்டாம். பேசி அவரிடமிருந்து எதையும் தெரிந்து கொள்ள முயலவேண்டாம். சூரியக் கதிர்கள் போல நிறுத்தாமல் அவர்
Read 23 tweets
27 Aug
பாத்திரம் அறிந்து பிச்சையிட வேண்டும் என்பதற்கு நம் கலாச்சாரப் பெருமையான நாளந்தா பல்கலைக்கழகம் எப்படி அழிக்கப்பட்டது என்ற வரலாற்று சான்று நமக்கு சொலிறது. உலகியே மிகத் தொன்மையானதும் மிகப் பெரியதுமான நாளந்தா பல்கலைக்கழகம் ஐந்தாம் நூற்றாண்டில் மகதத்தின் மன்னனான மகேந்திராதித்யா
குப்தரால் எனப்படும் முதலாம் குமார குப்தரால் நிறுவப்பட்டது என்று நம்பப்படுகிறது. ஆனால் தொல்லியல் துறை நாளந்தா பல்கலைக்கழகம் கி.மு 1200லேயே நிறுவப்பட்டிருக்கலாம் என்கிறது. நாளந்தா பல்கலைக்கழகம் 30 ஏக்கரில் அமைந்த எட்டு வளாகத்துடன் கூடிய கட்டமைப்பைக் கொண்டது. பல அடுக்குகளைக் கொண்ட
மூன்று கட்டடங்களை உடையது. முக்கியமான ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்து வைத்திருந்த ஒரு கட்டடம் ஒன்பது அடுக்குகளைக் கொண்டது. வளாகத்தில் ஏரி, பூங்காக்கள், மற்றும் ஆறு கோவில்கள் இருந்தன. ஒரே சமயத்தில் 10,000 மாணவர்கள் அங்கு தங்கிப் படித்தனர். அவர்களுக்கு 2000 ஆசிரியர்கள் இருந்தனர். இவர்கள்
Read 14 tweets
27 Aug
பகவான் #ஸ்ரீகிருஷ்ண #SriKrishna அவதாரங்கள் என்னென்ன என ஸ்ரீமத் பாகவத புராணம் கூறுகிறது. பகவான் கிருஷ்ணர் அவதாரி. அவதாரி என்றால் அனைத்து அவதாரத்திற்கும் மூலம்.
ஸ்ரீமத் பாகவதத்தில் 1.3.5 ல் தெரிந்து கொள்வோம்
1. நான்கு குமார்கள்(சனக, சனாதன, சனந்தன, சனத்குமார-பிரம்மதேவரின் மகன்கள் )
2. வராஹ அவதாரம் (பூமிதேவியை கர்போதக கடலிலிருந்து மீட்டு அசுர ஹிரண்யாக்ஷனை அழித்தவர்)
3. நாரதரிஷி (சக்தியளிக்கப்பட்ட பக்த அவதாரம்-பிரம்மதேவரின் மகன்)
4. நரநாராயணர் (தர்மராஜனின் மகன். தவம் எப்படி செய்யவேண்டும் என கூறியவர்கள்)
5. கபிலர் (தேவஹூதியின் மகன் -சாங்கிய (பௌதிக)
தத்துவத்தை விளக்கியவர்)
6.தத்தாத்ரேயர் (அத்ரி-அனஸுயா தேவியின் மகன்)
7. யக்ஞர் (பிரஜாபதி ருசி-ஆஹூதியின் மகன்)
8. ரிஷப் தேவர் (நபிமஹராஜன்-மேருதேவியின் மகன், பரத மஹராஜரின் தந்தை & ஜைனரின் முதல் தீர்த்தங்கர்)
9. ப்ருதுமஹராஜ் (பாவியான வேனனின் மகன், பூமியிடமிருந்து வவளத்தை கறந்து
Read 19 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!