1886 லிருந்து 2004 வரைக்கும்
விதைப்பாதுகாப்பு சட்டம் இருந்தது.
அதாவது ஒரு மாநிலத்தின் விதையை வேறு மாநிலத்திற்கோ,
அயல்நாடுகளுக்கோ அரசின் அனுமதியின்றி கொண்டு செல்லக்கூடாது.
ஆனால் 2014க்கு பிறகு விதையை #விவசாயி பதுக்கி வைப்பது குற்றம்.
அதாவது அடுத்த வருடம் நெல் விதைப்பதற்கு இந்த வருடமே
அதற்கான விதையை அவர்
வைத்திருக்கக்கூடாது னு சொன்னீங்க!!
இப்போதைய 2020 மசோதா விவசாய நிலத்தை விவசாயி சத்தமில்லாமல் அரசுக்கு கொடுக்க வேண்டும்.
அரசிடமிருந்து தனியார் முதலாளிகள் நேரடியாக குத்தகை முறையில் ஏலம் எடுத்து நிலத்தை கைப்பற்றி விவசாயிகளை கூலிகளாக மாற்றி #விவசாயம் செய்து அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள்.
இப்போதைக்கு விவசாயிடமிருந்து
விவசாயப்பொருளை கார்ப்ரேட் கையில் சிக்க வைப்பது.
அடேய் உங்க அயோக்கியத்தனத்துக்கு
அளவே இல்லாமப் போச்சுடா??
என்னடா நம்ம தானியத்தெல்லாம்
வெளிநாட்டுக்காரன் வந்து காப்பீடு வாங்குதானே!!
என்ன சங்கதினு நோண்டிப் பார்த்தா??
இந்தியர்களை விவசாயக்கூலிகளாக மாற்றி,
இந்திய நிலத்திலே இயற்கை விவசாயம் செய்து,
விளைந்ததை முழுவதுமாக தன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்து!!
தன் நாட்டு உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்திய மக்களின் நிலமும், தானிய விதைகளும் அரசுடமை ஆக்கப்பட்டு ஏற்றுமதி என்றப்பெயரில் அந்நிய தேசத்திற்கு விற்கப் போகிறார்கள்.
இனி விவசாயிகள் நினைத்தாலும் நிலத்தையும்,
நீர் வளத்தையும், மக்களின் உழைப்பையும் கைப்பற்றி
விவசாயம் செய்ய இயலாது.
விவசாயிகளுக்கு #அரசுவேலை
என்றப் பெயரில் மக்களிடமிருந்து நிலத்தைப் பறித்துகொண்டு
விவசாயிகள் நிலமற்றக் கூலிகளாக மாற்றப்பட போவது உறுதி.
இதுவரை நேரடி விவசாயிகளுக்குத்தான் இயற்கையானத் தரமான விவசாயப்பொருட்கள்
கிடைத்தது.
அதாவது #மாடு வைத்திருப்பவனுக்கே!!முதலில் அந்த மாட்டுப்பால் கிடைத்தது.
ஆனால் இனி மாடுகள் கூட்டுப்பண்ணையின் மூலம் அரசுடமை ஆக்கப்பட்டு விவசாயிகள் வெறும் கூலிகளாக மாற்றப்படுவார்கள்.
தன் கையால் விளைந்த எந்தப் பொருளும் விளைவித்தவன் அதை உண்ணக்கூட அனுமதி மறுக்கப்படும்.
அதாவது பணம் வைத்திருப்பவனேக்கே
இயற்கை #உணவு கிடைக்கும்.
ஏழை விவாசாயக் கூலியின் பாடு திண்டாட்டமே.
அதாவது தற்சார்பில் எவனாலும்
வாழவே முடியாது.
விவசாயத்தில் உலகநாடுகள் முதலீடு செய்யப் போகிறது..
முதலில் விவசாய நிலங்களை கைப்பற்றும்.
பிறகு அதில் விவசாயம் செய்து தன்நாட்டின் உணவு தேவைக்காக இந்த நாட்டையும், இந்த மக்களையும் பஞ்சத்தில் ஆழ்த்தப்போவது #உறுதி
தனியார்கம்பெனிகள் முதலீடு உருவெடுக்கப்போகிறது.
இது கண்முன்னே நடக்கும்
நம்மால் ஒன்றுமே செய்யஇயலாது. நாம் கோழிகள் கழுகை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கோம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பிர்லா, கோயங்கா, மித்தல், கன்ஷியாம்தாஸ், ஓஸ்வால், சிங்கானியா, சேத், டால்மியா, பஜாஜ், பொத்தார், பிரமல், ஜுன்ஜுன்வாலா என பல பெயர்களில் உள்ள மார்வாடிகளின் ஆதிக்கத்தில் தான் இந்திய வணிகம் முழுவதும் உள்ளது எனச் சொல்லலாம்.
மார்வார் எனும் கிழக்கு ராஜஸ்தான் பகுதியிலிருந்து வந்தவர்கள் மார்வாரிகள்.
இவர்கள்தான் மார்வாடிகள் என அழைக்கப்படுகின்றனர். வறண்ட பாலைவனப் பகுதியானதால் வளங்களை சிக்கனமாகத் சேமித்து வாழத்தெரிந்த சமூகம் அது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல பஞ்சாப், உத்தரப் பிரதேசம், வங்காளம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா என பரந்து விரிந்து, முதலாம் உலகப்போரின்போது கிட்டத்தட்ட வட இந்தியா முழுவதும் வணிக உலகில் விஸ்வரூபம் எடுத்தவர்கள் மார்வாடிகள்.
1) #குமரித்தமிழன் ஜீவா. ஆம் குமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி என்னும் ஊரில் பிறந்தவர் ஜீவா.
2) தனது 14 வயதில் சுசீந்திரம் கோவில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட பகுத்தறிவுவாதி.
3) 22 வயதில் காந்திக்கு நேராக நின்று "நீங்கள் ஏன் வர்ணாஸ்ரம தர்மத்தை ஆதரிக்கிறீர்கள்" என்று விமர்சித்தவர் பதில் அற்றவராக காந்தி நிற்க!! அன்று தொடங்கி காந்தியை விமர்சிக்கத் தொடங்கியவர்.
3) பகத்சிங்கின் அரும்கொடையான புத்தகம் Why I am a atheist
என்கிற புத்தகத்தை தமிழில் "நான் ஏன் நாத்திகன்" என்று மொழிபெயர்த்து மக்கள் மனதில் விடுதலைக்காக முழக்கமிட வைத்தவர்.
1.லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.
2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.
3. வீடு, மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெறுகின்றவரை தனக்கோ, தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று #கடாபி சபதம் பூண்டிருந்ததால்!!
அவரது பெற்றோர்கள் இறக்கும்வரை வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர்.
4. அந்த நாட்டில் மணம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு 60,000 தினார், அதாவது அமெரிக்க பணம் 50,000 டாலர் அதாவது இந்திய பணம் சுமார் 28,00,000 ரூபாய் பணத்தை இலவசமாக வழங்கியது.