🔥 கடன் அட்டை யை Receive செய்த உடனேயே அவர்கள் சொல்லும் Procedures படி PIN நம்பர் Generate பண்ணிவிடுங்கள்..! அல்லது அவங்களே Default ஆ ஒரு PIN நம்பர் கொடுத்திருந்தால், உடனே அந்த PIN நம்பர் ஐ மாற்றிவிடுங்கள்.
இது முக்கியமான Security Issue, எனவே தாமதம் வேண்டாம்.
🔥Card Packing உடன் வரும் Welcome Letter மற்றும் T&C Booklet ஐ பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். முடிந்தால் Scan செய்து Soft Copy ஆக கூட சேமித்து வைப்பது நலம்.
CreditCard-(Bank Name) என Folder ல் இட்டு வைத்திருந்தால் Easy யாக Retrieve செய்து கொள்ளலாம்.!😊
🔥 உங்களுக்கு எவ்வளவு Credit Limit கொடுக்கப்பட்டு இருக்கிறது என பாருங்கள்..!
அதிகமா இருந்தால் உங்கள் மாத வருமானத்தில் பாதியாகவோ அல்லது மூன்றில் ஒரு பங்காகவோ குறைத்து விடுங்கள்..! இது நம் செலவுகளை கட்டுப்படுத்தும். அதுமட்டுமல்ல யாராவது தவறாக பயன்படுத்தினாலும்,
அதனால் ஏற்படும் இழப்புகளை.. நம்மால் சமாளித்துக் கொள்ள முடியும்..!
🔥இந்த Credit Limitஐ கடன் அட்டையின் மொபைல் App மூலமாகவே நம்மால் எளிதாக குறைத்துக் கொள்ள இயலும். சில வங்கிகள் இந்த சேவையை எஸ்எம்எஸ் வாயிலாகவும் வழங்குகிறது..!😊
🔥இந்த கடன் அட்டையை நிர்வகிக்கும் Visa,Master நிறுவனங்கள் தங்கள் பங்கிற்கும் ஒரு Security Layerஐ வழங்குகிறார்கள்.இதற்கு நாம், அவர்களின் வலை தளத்திற்கு சென்று பதிவுசெய்ய வேண்டும். அதில் ஒரு Personal Message வாசகம் கேட்பார்கள்.உங்களுக்கு பிடித்த ஒரு வாசகத்தை கொடுங்கள்.That's all😊
நம் Transaction - Secure ஆனது எனில்,அதில் நாம் பதிவு செய்து வைத்த நமது Message அந்த Transaction Page லேயே நமக்கு டிஸ்பிளே ஆகும்..! இந்த மெசேஜ் வரவில்லை எனில் Transaction, ஆனது "Unsecure" என உணர்க.!
(இது நமது Debit Card க்கும் பொருந்தும். எனவே பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.!)
🔥அவர்கள் சொன்ன Welcome Bonusஐ பெற கடன் அட்டையை பெற்றுக்கொண்ட நாளிலிருந்து சில நாட்களுக்குள் நீங்கள் இத்தனை ரூபாய் செலவு செய்து இருக்க வேண்டும். உங்களுக்கு அது தேவை இல்லை என்றால் ஒரு குறைந்தபட்ச தொகைக்காவது ஏதாவது ஒரு Minimum Transaction செய்துகொள்ளுங்கள்.
(இது கட்டாயம் அல்ல)
🔥எப்போதும் Monthly Statement வந்தவுடன் உங்கள் செலவீனங்கள் அதில் சரியாக குறிப்பிட பட்டுள்ளதா என நிதானமாக சரிபாருங்கள்..!
🔥Failed Transactions ஏதும் இருந்தால் அதற்கான பணம் Refund ஆகியுள்ளதா என உறுதி செய்து கொள்ளுங்கள்..!
🔥Reward Points க்கு Expiry Date குறிப்பிட்டிருந்தால்
அதற்கு முன் அதை Redeem செய்து கொள்ளுங்கள்.
🔥மாதா மாதம் வரும் Monthly Statements களையும் அந்த Credit Card - Folder ல் போட்டு Save செய்து கொள்ளுங்கள்..! இது நமக்கு எப்போழுதுமே பயன் தரக்கூடியது😊
🔥 Credit Card களை நம்பிக்கைக்குரிய வலைதளங்களில் மட்டுமே பயன்படுத்துங்கள்..!
🔥Credit Card மூலம் Purchase செய்தால் அதிக தள்ளுபடிகள், சலுகைகள் என ஏதாவது ஒரு Link வாட்சாப், SMS, Mail முலமாக வந்தால் அதை தவிர்த்து விடுங்கள்..! சில சமயம் பொய்களும் உண்மையை போலவே இருக்கும்..!
🔥 நண்பர்களுக்கு உதவும் பொருட்டு அவர்களின் ஏதாவது தேவைக்கு உங்கள்
கடன் அட்டை தேவைப்பட்டால் நீங்களே நேரில் எடுத்துச்சென்று அதை பயன்படுத்துங்கள்..!
(நம் நண்பர்கள் நல்லவர்கள் தான், ஆனால் நண்பர்கள் உடன் இருக்கும் பிற நபர்கள் பற்றி நமக்கு தெரியாது. தவறுகள் நடந்தால் நமக்குதான் பாதிப்பு 😕)
🔥எக்காரணம் கொண்டும் கடன் அட்டையை புகைப்படம் எடுத்து யாருக்கும் (WhatsApp, Mail) அனுப்பாதீர்கள்.
புகைப்படம் எடுப்பதை தவிர்க்கவும்.! அதில் உள்ள விபரங்களான,
📜கடன் அட்டை எண்
📜காலாவதி காலம்
📜உங்கள் பெயர்
📜CVV எண்
இது இருந்தால் போதும்.
இதைக்கொண்டே எளிதில் பண மோசடி நிகழத்தலாம்.!🙄
🔥பெரும்பாலான வணிக தளங்கள் நீங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது அதன் விவரங்களை சேமித்துக் கொள்ள அனுமதி கேட்கும்.
நீங்கள் அந்தத் வணிக தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவீர்கள் எனில், தேவை இருந்தால் மட்டுமே சேமிக்க அனுமதி கொடுங்கள்.!
(இது போல அனுமதி தராமால் இருப்பது நல்லது தான்)😊
🔥அதிக தொகைக்கு ஏதாவது Purchase செய்ய வேண்டும் எனில் Billing Cycle ன் முதல் வாரத்திலேயே செய்து விடுங்கள். அப்போது தான் உங்களுக்கு பணத்தை திருப்பி செலுத்த அதிக நாட்கள் அவகாசம் கிடைக்கும்..!
🔥நமது Cibil Score சரியாக இல்லாதபட்சத்தில் நாம் பயன்படுத்தும் கடன் அட்டைக்கான
Monthly Bill ஐ முறையாக கட்டிவர நமது Cibil Score உயர வாய்ப்புகள் அதிகம்.
🔥 கடன் அட்டைக்கு Cash Limitம் கொடுத்திருப்பார்கள். இதை பயன்படுத்தி நம்மால் ATM மூலம் பணம் எடுக்க முடியும்.இதற்கான வட்டி விகிதமும் மற்ற Chargesம் மிக அதிகம் எனவே முடிந்த அளவுக்கு தவிர்த்து விடுங்கள், நல்லது.
🔥முக்கியமான ஒன்று.
கடன் அட்டைக்கு Apply செய்யும் போது Valid Mobile நம்பர் மற்றும் Email ID ஐ கொடுங்கள். ஏனெனில் இது தான் நமக்கும் அவர்களுக்கும் இடையே யான Communication Bridge..! 😊 தேவை இருந்தால் இதை பிறகு மாற்றிக்கொள்ளவும் முடியும்.!
🔥இலவசமாகத் தானே கிடைக்கிறது என Add On Cards வாங்க விரும்பினால், அதை நம்பிக்கைக்கு உரியவர்களுக்கு மட்டுமே வாங்கி கொடுங்கள். அவர்கள் செய்யும் தவறுகள் மற்றும் அவர்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் எல்லாமே நம்மை தான் வந்தடையும். ஏனெனில் Primary Card Holder நாம் தான்..!🙄
🔥Show Room களில் பொருட்களை Credit மூலம் வாங்கும் போது EMI ஆக மாற்றிக்கொள்ள முடியும். இதற்கு Documents தேவைப்படாது. ஆனால் Processing fees & Service charges உண்டு.!😊
🔥மேலும் பாதுகாப்பான Online Transactions பற்றி மேலும் அறிய கீழே உள்ள Link ஐ Clickகவும்.
🔥கடன் அட்டை ஒருவேளை தொலைந்து போய்விட்டால், வங்கி சேவை மையத்திற்கு அலைபேசி வாயிலாக உடனே தெரிவித்து கடன் அட்டையை முடக்கி விடுங்கள்.
இதை Mobile App மூலமாக உடனே செய்து விடலாம்..!
சரி,
நமக்கு பொருத்தமான கடன் அட்டையை தேர்வு செய்வது என்பது மிக எளிதே..!
வங்கிகள் கடன் அட்டைகளை அதன்
பல்வேறு பயன்பாடுகளை பொறுத்து பல்வேறு வகையாக பிரித்து வைத்துள்ளார்கள்..!
ஆனால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது ,
📜Basic
📜Premium
📜Elite
#Basic
பெயருக்கு ஏற்றார் போல் இது அடிப்படையானது. இதில் Annual Fees, மிகவும் குறைவாகவே இருக்கும் அல்லது இருக்காது.
Rewards, Offers என்று
பெரிதாக எதுவும் இருக்காது. பயன்படுத்துவதும் புரிந்து கொள்வதும் எளிது. புதிதாக வாங்குபவர்கள் இதிலிருந்தே தொடங்கலாம்.!😊
#Premium
Annual Charges 500 முதல்1500 வரை. Rewards,Cashback,Offers,Patner Sites, Airport Lounge Access,Spl Discount என பல்வேறு Attractive அம்சங்களை இருக்கும்.
பெரும்பாலும்
📜Reward Cards
📜Petro Cards
📜Dining Cards
📜Shopping Cards
📜Cash Back Cards
எல்லாம் இதிலேயே அடங்கும்.
தேவையானதை தேர்ந்தெடுத்து சரியாக பயன்படுத்தினால் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்😊
#Elite
Annual Charges 1500 and Above.
இது தேவைதானா என யோசித்து முடிவு செய்யுங்கள்.!
இவற்றில் நான் குறிப்பிட்டுள்ள எல்லா தரவுகளும் எளிமையான புரிதலுக்கானது மட்டுமே.!😊
(பொறுப்பு துறப்பு)😂
மேலும், இது எல்லாமே என் அனுபவ பகிர்வு மட்டுமே. நடைமுறையில் வங்கிக்கு வங்கி கடன் அட்டை சம்பந்தமான அனைத்து Parametersம் (Intrest, Charges, Fees, Offers etc..!) மாறுபடும்..!
நீங்கள் கடன்அட்டை வாங்கும் முன் அதை பற்றிய முழு விபரங்களையும்,
எந்த வங்கி/நிதி நிறுவனங்களிடம் இருந்து..
வாங்குகிறீர்களோ அவர்களிடம் அதன் முழு T&C விபரங்களை கேட்டுதெரிந்து கொள்ளுங்கள். அதை Mailஆக அவர்களது Official Mail IDல் இருந்து அனுப்ப சொல்லுங்கள்.சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கேட்டு தெளிவுபெறுங்கள்.
முடிவு உங்களுடையதாகவே இருக்கட்டும்..!😊
Mobile Phone வாங்க போறீங்களா..!
4G or 5G எது வாங்கலாம் ங்கற குழப்பம் நம்மில் நிறைய பேருக்கு இருக்கும்...!
நான்காம் தலைமுறை (4G) அலைக்கற்றை சேவையிலிருந்து ஐந்தாம் தலைமுறை (5G) அலைக்கற்றை சேவைக்கு நம்முடைய அலைபேசியை மாற்றுவதற்கு முன்பு அதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை சற்று பார்க்கலாம்..!
#Network_Availability
இந்தியாவில் 2012 ம் ஆண்டில் Airtel நிறுவனம் 4G சேவைகளை சில குறிப்பிட்ட நகரங்களில் துவங்கியது. அது 2015-2016 களில் Jio வின் வருகைக்கு பிறகு தான் தான் ஓரளவு எல்ல முழுமையாக நகரங்களையும் சென்றடைந்தது. பின்பு அது கிராமங்களை சென்றடைய மேலும் இரு ஆண்டுகள் வரை ஆனது.!
பாட்டரிகள் - இதற்கும் மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கும் இடையே ஒரு நெடிய தொடர்பு உள்ளது. நாம் காலையில் எழுந்தவுடன் பார்க்கும் கைபேசி முதல் அலுவலகம் செல்லும் வாகனங்கள்,
வாட்ச்,
ப்ளுடூத் ஹெட் செட்,
ரிமோட்கள்,
சேவிங் ரேசர்,
இன்வெர்ட்டர்,
கேமிரா,
டார்ச் லைட் 😊
என பெரும்பாலான மின்/மின்னணு மற்றும் பல இயந்திரவியல் சாதனங்களில் நீக்கமற நிறைந்திருப்பவை இந்த பாட்டரிகள்.
(Photo credit : Electrical 4 U)
சரி, நம்ம கதைக்கு வருவோம்:
உலகை பயமுறுத்தும் அணுகழிவுகளை என்ன செய்யலாம் என ஆளாளுக்கு தலையினை பிய்த்து கொண்டிருந்த நிலையில் விஞ்ஞானம் அதற்கான தீர்வை அநேகமாக எட்டிவிட்டது எனலாம்.!
எனக்கும் நண்பருக்கும் சில எலக்ட்ரானிக்ஸ் & வீட்டு உபயோக பொருட்கள் வாங்க வேண்டி இருந்ததால், தற்சமயம் #Amazon & #Flipkart இவற்றில் Offer களை அள்ளி கொடுக்கிறார்களே..
எனவே, Online ல் Order செய்யலாமா அல்லது கடைகளிலேயே சென்று வாங்கலாமா என்பதை அறிய ஒரு Mini Market Survey செய்தோம்.!😊
திருச்சியில்,
🔥Home Appliances கடைகள் உள்ள சாலை ரோடு,
🔥பர்னிச்சர் & எலக்ட்ரிக்கல் கடைகள் உள்ள மதுரை ரோடு,
🔥திருச்சியின் Commercial Hubஆன NSB Road & Super Bazarல் உள்ள கடைகள்
🔥 மொபைல் ஷோரூம்கள்,
என, இவற்றில் அவர்கள் தரும் ஆஃபர்கள் மற்றும் விலை நிலவரங்களை கேட்டறிந்தோம்..!😊
#Sales
இதுல முக்கியமான இன்னொரு விஷயம்..! 😊
பொதுவா எல்லா பொண்ணுங்களுக்குமே அண்ணன் அல்லது அண்ணன் முறையில ஒருத்தரு இருப்பாரு. அவரு அந்த பொண்ணு மேல ஏகத்துக்கும் பாசம் வச்சிருப்பாரு..!
நமது ஆண்ட்ராய்டு சாதனங்களில கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள்..!🤔
அது பற்றிய #Thread#இழை
வாங்க ஜாலியா Secure பண்ணலாம்..!🧞
உதாரணத்துக்கு "நாம ஒரு வெளியூர் Trip போறோம். ஒரு 10 நாள் ஊருல இருக்க மாட்டோம்..!"
வீட்ல என்னெல்லாம் பண்ணுவோம்..!🙋
🔥வெறுமனே Main Doorஐயும், Gate ஐயும் பூட்டிட்டு பொய்டுவோமா, இல்ல,
🔥தண்ணி எல்லாம் Pipe எல்லாம் Closeல இருக்கா,
🔥Gas Regulatorஅ Off பண்ணிட்டோமா,
🔥எல்லா Electrical சாதனங்களையும் Switch off பண்ணியாச்சா,
🔥ஜன்னல் எல்லாம் சாத்தியாச்சா,
🔥Back Door அ சரியா Lock பண்ணிட்டோமா,
🔥பீரோ key எல்லாம் பத்திரப்படுத்திட்டமா
இப்படி எல்லாம் முடிச்சு கடைசியாக தானே Main Doorஐயும் Gateஐயும் பூட்டுவோம்.!🔐
ஒரு 10 நாள் ஊருக்கு போறதுக்கே இந்த அக்கப்போர்ன்னா,😂
Minimum ரெண்டு மூனு வருஷமாச்சும் Use பண்ற Mobileக்கு என்ன பண்ணனும்.!