1949ல் திமுக தொடங்கப்பட்டபோது அறிஞர் #அண்ணா அக்கட்சியின் பொதுச்செயலாளர், 29 வயதேயான நாவலர் நெடுஞ்செழியன்தான் துணைப் பொதுச்செயலாளர்.
1956ல் திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில், அண்ணா, “தம்பி வா, தலைமையேற்க வா“ என்று நாவலர் நெடுஞ்செழியனை அழைத்தார்.
தனது பொதுச்செயலாளர் பதவியை நாவலர் நெடுஞ்செழியனுக்கு விட்டுக்கொடுத்தார் அண்ணா. நெடுஞ்செழியன் திமுக பொதுச்செயலாளராகும்போது அவருக்கு வயது 36. (நான்கு ஆண்டுகள் பொதுச்செயலாளராக இருந்தார்)
திமுக முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்டதும், 15 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றதும்
அண்ணாவின் உழைப்பால் கிடைத்ததாக இருக்கலாம். ஆனால், அப்போதும் திமுகவின் பொதுச்செயலாளர் நாவலர்தான்.
திமுகவுக்கு முதல் மேயர் மெட்ராசில் கிடைத்தபோதும் திமுகவின் பொதுச்செயலாளர் நாவலர் நெடுஞ்செழியனே.
தான் நன்றாக இருக்கும் காலத்திலேயே கட்சியில் அடுத்தடுத்த தலைவர்கள் உருவாக வேண்டும்.
அவர்களுடைய செயல்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் அண்ணா எண்ணியதன் விளைவே நாவலருக்கு வந்த பதவி என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அண்ணா மறைவுக்குப் பிறகு, தற்காலிக முதலமைச்சர் பொறுப்பை 1969 பிப்ரவரி 3 அன்று ஏற்றவரும் நாவலர் #நெடுஞ்செழியன் அவர்கள்தான்.
அப்போது நெடுஞ்செழியன்தான் திமுக பொதுச்செயலாளர் மற்றும் தமிழக முதல்வர்.
அண்ணாவின் அமைச்சரவையில் மூன்றாம் இடத்திலிருந்த கருணாநிதி பெரியார் மற்றும் எம்.ஜி.ஆரின் ஆதரவை பெறுகிறார். இருவரும் கருணாநிதிதான் முதலமைச்சராக வேண்டும் என்கிறார்கள்.
தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து தனது ராமாவரம் தோட்டத்தில் விருந்து வைத்தார் #எம்ஜிஆர் கருணாநிதிக்கு ஆதரவான சூழலை உருவாக்கினார்.
1969 பிப்ரவரி 9
சட்டமன்ற கட்சித் தலைவரைத் (முதல்வரை) தேர்வு செய்வதற்காக அரசினர் தோட்டத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூடினார்கள்.
முதல்வர் பதவிக்கு கருணாநிதியின் பெயரை அமைச்சர் கே.ஏ.மதியழகன் முன்மொழிய, அமைச்சர் சத்தியவாணி முத்து வழிமொழிந்தார்.
அந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய அமைச்சர் ஏ.கோவிந்தசாமி, ''வேறு யாராவது போட்டியிடுகிறீர்களா?'' எனக் கேட்டார்.
நெடுஞ்செழியன் பெயரை அரக்கோணம் சட்டமன்றஉறுப்பினர் எஸ்.ஜே.ராமசாமி முன்மொழிந்தார்.பெரணமல்லூர் எம்.எல்.ஏ வி.டி.அண்ணாமலை வழிமொழிந்தார்.
உடனே நெடுஞ்செழியன் எழுந்து, 'சட்டமன்ற கட்சித்தலைவர் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட வேண்டும் என்பதால் நான் போட்டியிட விரும்பவில்லை. விலகிக்கொள்கிறேன்'
என அறிவித்தார். இதனால், #கருணாநிதி ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டார். 15 நிமிடங்களில் கூட்டம் முடிந்தது. அடுத்த நாள் 10-ம் தேதி கருணாநிதி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது.
கட்சித் தலைமை நெடுஞ்செழியனிடம் இருந்தது. நெடுஞ்செழியன்தான் அப்போதும் திமுக பொதுச்செயலாளர்.
“கட்சிக்கும் ஆட்சிக்கும் ஒரே தலைமையே வேண்டும்; கட்சித் தலைமை ஒருவரிடமும், ஆட்சித் தலைமை இன்னொருவரிடமும் இருந்ததால்தான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி சீர்குலைந்தது. அந்த நிலை திமுகவுக்கு வரக் கூடாது என்பதால்தான் இதைக் கூறுகிறேன்” என்று சொல்லி, நண்பர் கருணாநிதியிடம் கட்சித்
தலைமை பொறுப்பை கொடுக்க சொன்னார் எம்.ஜி.ஆர்.
திமுகவில் தலைவர் என்ற பதவி இப்படித்தான் உருவாக்கப்பட்டது. அதாவது, நெடுஞ்செழியன் பொதுச்செயலாளராகவே நீடித்தார்; ஆனால், அவருக்கு மேல் தலைவர் என்ற பதவி உருவாக்கப்பட்டது. (அவைத்தலைவர் பதவி தலைவர் பதவியாக மாற்றப்பட்டது)
புதிதாக உருவாக்கப்பட்ட தலைவர் பதவியில் கருணாநிதி அமர்ந்தார்.
சீக்கிரமே மனம் கசந்தார் நெடுஞ்செழியன்.
#மதிமுக - மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார்.
திமுகவில் இருந்தபோது, எம்ஜிஆர் நீக்கத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களில் ஒருவர் நெடுஞ்செழியன்.
நகைமுரணாக, எம்ஜிஆரின் அதிமுகவிலேயே பின்னர் தன்னை இணைத்துக்கொண்டார்.
திமுகவில் கருணாநிதி தலைவராக முயன்றதில் தவறே இல்லை. அந்த இயக்கத்திற்கு 'உழைத்த' தகுதியில் யாரும் தலைவராக முயற்சி செய்யலாம். அதில் தவறே இல்லை.
அதேதான் தற்போது அதிமுகவில் இரண்டாம் முறையும் நடக்கிறது.
கட்சிக்கு உழைத்த எடப்பாடி பழனிச்சாமியோ, பன்னீர் செல்வமோ, சி.வி.சண்முகமோ, விஜயபாஸ்கரோ இன்னும் யார் வேண்டுமானாலும் முயற்சி செய்யட்டும். அதில் தவறே இல்லை. ஜனநாயகத்தின் ஓர் அங்கமும் அதுதான். யார் வேண்டுமானாலும் மன்னராகலாம் என்பதே #ஜனநாயகம்.
மன்னரின் வாரிசுதான் மன்னராகும் தகுதி படைத்தவர்கள். நாம் எல்லாம் அவருக்கு சேவகம் செய்யவே படைக்கப்பட்டவர்கள் என நம்புவதும், அதை ஏற்றுக்கொள்வதும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத செய்கை.
அதனால் இரண்டாம் கருணாநிதி மு.க.ஸ்டாலின், மூன்றாம் கருணாநிதி உதயநிதி ஸ்டாலின், நான்காம் கருணாநிதி இன்பநிதி
பிறப்பின் அடிப்படையில் சாதிய ஏற்றத்தாழ்வு எவ்வளவு தவறானதோ அதே அளவு தவறானதுதான் பிறப்பின் அடிப்படையில் தலைவனை தேர்வு செய்வதும்.
இந்த 21ஆம் நூற்றாண்டிலும் இன்னும் பழமையான #மன்னராட்சி பாணி மூடப்பழக்கத்தை கொண்டிருக்கும் #திமுக தன்னை முதலில் சுயபரிசோதனை செய்து கொண்டு பிறகு மற்றவர்களை விமர்சிக்கலாம்.
அதை விடுத்து கண்ணாடி முன் நின்றுகொண்டு 'அந்த கொரங்கு பொம்மை என்ன விலை' என கேட்கக் கூடாது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பிர்லா, கோயங்கா, மித்தல், கன்ஷியாம்தாஸ், ஓஸ்வால், சிங்கானியா, சேத், டால்மியா, பஜாஜ், பொத்தார், பிரமல், ஜுன்ஜுன்வாலா என பல பெயர்களில் உள்ள மார்வாடிகளின் ஆதிக்கத்தில் தான் இந்திய வணிகம் முழுவதும் உள்ளது எனச் சொல்லலாம்.
மார்வார் எனும் கிழக்கு ராஜஸ்தான் பகுதியிலிருந்து வந்தவர்கள் மார்வாரிகள்.
இவர்கள்தான் மார்வாடிகள் என அழைக்கப்படுகின்றனர். வறண்ட பாலைவனப் பகுதியானதால் வளங்களை சிக்கனமாகத் சேமித்து வாழத்தெரிந்த சமூகம் அது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல பஞ்சாப், உத்தரப் பிரதேசம், வங்காளம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா என பரந்து விரிந்து, முதலாம் உலகப்போரின்போது கிட்டத்தட்ட வட இந்தியா முழுவதும் வணிக உலகில் விஸ்வரூபம் எடுத்தவர்கள் மார்வாடிகள்.
1) #குமரித்தமிழன் ஜீவா. ஆம் குமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி என்னும் ஊரில் பிறந்தவர் ஜீவா.
2) தனது 14 வயதில் சுசீந்திரம் கோவில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட பகுத்தறிவுவாதி.
3) 22 வயதில் காந்திக்கு நேராக நின்று "நீங்கள் ஏன் வர்ணாஸ்ரம தர்மத்தை ஆதரிக்கிறீர்கள்" என்று விமர்சித்தவர் பதில் அற்றவராக காந்தி நிற்க!! அன்று தொடங்கி காந்தியை விமர்சிக்கத் தொடங்கியவர்.
3) பகத்சிங்கின் அரும்கொடையான புத்தகம் Why I am a atheist
என்கிற புத்தகத்தை தமிழில் "நான் ஏன் நாத்திகன்" என்று மொழிபெயர்த்து மக்கள் மனதில் விடுதலைக்காக முழக்கமிட வைத்தவர்.
1.லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.
2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.
3. வீடு, மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெறுகின்றவரை தனக்கோ, தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று #கடாபி சபதம் பூண்டிருந்ததால்!!
அவரது பெற்றோர்கள் இறக்கும்வரை வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர்.
4. அந்த நாட்டில் மணம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு 60,000 தினார், அதாவது அமெரிக்க பணம் 50,000 டாலர் அதாவது இந்திய பணம் சுமார் 28,00,000 ரூபாய் பணத்தை இலவசமாக வழங்கியது.