🌺எனது சிறு கதையில் ஒன்று... உங்கள் விருப்பம் கண்டால் நன்று...🌺

🌿பாரிஜாதம்....🌿

மெல்லிய மார்கழிக் குளிர் ஓஸோனை நன்கு கீழே இறக்கி விட்டிருந்தது…. வாசல் பெருக்கிச் சானம் தெளிப்பதற்குள் பனித்துளிகள் படர்ந்து ஆடை அணைத்தன….
"பயித்தமாவும், சிகைக்காய் வாசமும், ஜொலிக்கும் மஞ்சளும் உனையும் ஈர்த்ததோ?"

மெல்லிய உதட்டுப் படரலுடன் அதை எண்ணிக்கொண்டே கோலமிட்டேன். லேசான தொண்டைக் கனைப்புக் கேட்டது. வந்துவிட்டார் என்னவர் தின்னையில், கையில் செய்தித்தாளுடன்...
நமுட்டுச் சிரிப்புடன் விரைந்து கூடம் நுழைந்து, கையலம்பியதும் அடுக்களையில் புகுந்துவிட்டேன். அகல் விளக்கை முதலில் இறையடியில் ஏற்றி, அதிலிருந்து தீபமெடுத்துக் கொடுத்ததும், நன்கு பற்றியது விறகடுப்பு.

நாசி துளைக்கும் காஃபிப் பொடியிட்டு, வெந்நீர் ஊற்றினேன். அவர் கையில் நீட்டும் வரை,
சுட்டால் கூட தெரியாது எனக்கு. கோப்பையில் நுரையாய் எட்டிப்பார்க்கும் கொட்டை வடிநீர்க் குழம்பியின் மணம்… காலையில் தனி சுகம். தின்னையில் இருந்தவரிடம் நீட்டிய காஃபியை, அவர் வாங்கையிலே

"கண்டுகொண்டால் கைவிலக்கி
ஓடுவளென் தாரமென்றோ…
கண்நிமிரா கையுரசி
நாணவிட்டான் என்னையிவன்…"
எனப்பாடி உள்ளம் துள்ளுகிறது... மாமியார் குளித்து, மடிச்சேலையுடன் இறையறையில் கோலமிட்டு, பூக்கள் வைத்து, ஊதுபத்தி ஏற்றி,

"சுஜா, நீ இங்க வாம்மா.... நான் அடுப்பைப் பாத்துக்கறேன்" என அழைக்கையிலேயே

"முதாகராத மோதகம் ஸதாவி முக்தி ஸாதகம்"

என என் பக்திப் பாடல்கள் ஆரம்பித்து விட்டன.
எல்லா பெண்களும் போல் என் மாமியாருக்கும், கண்ணன் மேல் அபரிமித பக்தியுண்டு.

"விஷமக்காரக் கண்ணன்....."

என்று என் மாமியார் ஆரம்பிக்கையில் என்னவரும் சேர்ந்திடுவார் விஷமத்தோடே... என் மாமனார் மிருதங்கம் இசைக்க, நாற்றுஅன்னார் புஷ்கலா வீணை மீட்ட,
நானும் மாமியாரும், பலமுறை இறை பாடல்களைப் பாடியுள்ளோம். மாமனாரின் லயித்த வாசிப்பில், மெய்மறந்து அமர்ந்த நாட்கள் எத்தனையோ.....

இறை பாடல்களும், ஸ்லோகங்களும் சொல்லி முடிப்பதற்கும், உள் வேலைகளை மாமியாரும், வெளி வேலைகளை நானும் முடிக்கவும், நேரம் சரியாக இருக்கும்.
கணவரும் மாமனாரும் வந்து, அன்று சமைத்ததை எடுத்து, பகவானுக்கு நிவேதனமாகப் படைத்து, திருத்துலா தீர்த்தம் அனைவருக்கும் தந்து, பிரஸாதமும் தருவார்கள். என் அவர்…

சாஷ்டாங்கமாய் விழுந்து கைகூப்பி, ஒன்றே ஒன்றுதான் பிரார்த்திப்பார்,

"முருகா, கந்தா, க்ருஷணா....
என்றென் மடிமேல் விளையாட வருவாய்” என.

கைப்பற்றிப் பல வருடம் ஓடிவிட்டது. குழந்தை இல்லாக் குறை ஒன்றுதான் எங்களுக்கு. ஆனால், இதனால் என்மேல் எள்ளளவும் பாசம் குறையவில்லை அங்கு யாருக்கும்.

"என்ன கவி பாடினாலும்
உந்தன் உள்ளம் இறங்கவில்லை..."
என்று முருகனைப் பாடுகையில் மட்டும், அவரின் விழி இரண்டும் கடலாகும். சிற்றுண்டி முடித்து, அவரவர் வேலை அவரவருக்கு அடுத்தடுத்து.

புஷ்கலா சிட்டுப்போல் கல்லூரிக்குக் கிளம்பிடுவாள். தோட்ட வேலைகள் செய்ய, மாமனார் தானும் தயாராகிவிடுவார்.
பெரிய இயந்திர உற்பத்தி நிறுவனம் ஒன்றில், இயந்திரம் பொருத்துபவராக வேலையில் சேர்ந்து, பணியின் இறுதியில் பெரிய அதிகாரியாய் பதவி உயர்ந்து, ஓய்வு பெற்றவர்.

சிறிதும் ஆடம்பரமில்லை. எப்போதும் பருத்தி வேட்டியில் பஞ்சகச்சமணிந்து, திருமண் ஸ்ரீசூர்ணம் எனத் தன் நெற்றி நிறைத்து,
வெள்ளை வெளேரென்ற உடையில், நிமிர்ந்த நடையில் தான் வலம் வருவார். என் மாமியார் இன்றும் நாணுவார், அவர் கண்டு சில நேரம்...

பின், மற்றவர் பார்த்திடுவரோ எனச் சட்டென இயல்பாவார். இது பெண்மையின் மெல்லிலக்கனம் போலும்... எனக்கும் சபையில் இது போன்ற பல அனுபவமுண்டு…
அலுவலகம் கிளம்பும் என்னவருக்கு, சாப்பாடு கட்டி எடுக்கையில், ஒரு நாளும் முடித்தேன் என்ற பாடில்லை... அடிக்கடி அழைப்புகள் அவரிடமிருந்து...

"சுஜா, கோப்புகளைச் சற்று மேலே கொண்டு வாம்மா..."

"சுஜா, என் கைக்கடிகாரம் பாத்தியா??"

"சுஜா, இஸ்திரி செய்த வெளிர் நீலச்சட்டை எங்கே?"....
அப்பப்பா... மேலும் கீழும் ஓடியே இளைத்திட்டேன் போலும். இதில் மாமியாரின் கள்ளச்சிரிப்பு வேறு சிலசமயம் மொத்தமாய் என்னைக் கொல்லும்.

"சாப்பாட்டை நான் கட்டறேன்.... அம்மாடி சுஜா, அவன் போகும் வரைதான் கொஞ்சம் உன் அறையை குத்தகைக்கு எடுத்துக்கப் படாதா??" என்று சிரிப்பார்.
இவரது அன்பின் குறும்புகள்... மாமியார் வார்த்தையில் இன்னும் என்னழகைக் கூட்டுகின்றது என்று அடிக்கடி சொல்வார். பெண்ணுக்குத்தான் அதில் எத்தனை கஷ்டமப்பா...

சேலை கலையக்கூடாது…
யாருக்கும் சத்தம் கேட்கக் கூடாது…
அதிக நேரம் நிற்க முடியாது…
இவரும் சந்தோஷமாக கிளம்ப வேண்டும்...
ஒருவழியாக வெட்கம் பிடுங்கிதின்ன... இவரை இயல்பாயிருப்பது போல் அனுப்பி வைப்பதற்குள்… ஸாவித்ரியிடம் தான் நடிக்கக் கற்க வேண்டும் நான்.

"சுஜா எங்கள் குடும்பத்தில் அணையா தீபமப்பா. அவளை "சுஜா" னு அழைக்கும் குரலிலேயே தேவை தெரிஞ்சு, அடுத்த நேரக் காஃபியோட வர்றா.
என் மனைவிக்கும், அவள் அழைக்கறதுக்கு முன்னாடியே தைலத்தோட வந்து, தன் மடிமேல அவள் காலை எடுத்து வச்சு அவளுக்குக் கால்நீவி விடறா.”

“இறைவன் அளித்த வரம் தானப்பா.... அதனால் தான் அவாளுக்குப் பிள்ளை இல்லாதது குறை போலவே எங்களுக்குப் படல்லை…. அவளே குழந்தையாயிட்டா எங்களுக்கு…."
என்று மாமனார் கண்ணில் நீர் ததும்பப் பலரிடம் கூறியுள்ளார். இக்குறையைப் பெரிதென மதிக்காத எங்கள் சந்தோஷத்தில், திடுமென இரு இடிகள் வந்து விழுந்தன.

மருத்துவர் முதலாவதாக, என் கர்பப்பை மிகவும் சிறியதென்றும் அதனால்தான் குழந்தை தங்கவில்லை என்றும் சோதனைகள் முடிவில் கூறிவிட்டார்.
அடுத்தது மாமியார்... இருதயவலி என்றவரை சோதித்ததில்… சிலநாள் தான் அவர் வாழ்வு எனத் தெரிய வந்தது. எல்லோரும் உடைந்து போய்விட்டோம்.

முதலில் இதை மாமியாரிடம் சொல்ல வேண்டாம் எனத்தான் நினைத்தோம். ஆனால், நாங்கள் எதையோ மறைப்பது உணர்ந்த அவர், எதையும் மறைக்காமல் சொன்னால்தான்
இனி யாரோடும் பேசுவேன்… என அழ ஆரம்பித்து விட்டார். எதையும் தாங்கிக் கொள்ளக் கூடியவர் தான்… ஆனாலும் நாங்கள் தான் பயந்தோம்.

சிறிது நாட்கள் அமைதியாக இருந்தவர், பின் தானே வேறு ஒரு டாக்டரிடம் போய் எல்லா விஷயமும் தெரிந்து கொண்டு வந்துவிட்டார்.
கிட்டத்தட்ட ஏதோ வெள்ளத்தில் மனுஷாளை இழந்தது போல ஆனது இல்லம். சிரிப்போ, சந்தோஷமோ, பழைய பாடல்களோ, மிருதங்க ஒலியோ எதுவும் கேட்கவில்லை தற்போதெல்லாம்.

மாமனாரின் தோட்டம் கூட அவரைப் போலவே வாடி இருந்தது. என்னவர் அழைக்காமல் முருகப் பெருமானும், க்ருஷ்ணரும் கூட ஏதும் சாப்பிடவில்லை போலும்…
ஸ்வாமி ஸந்நிதியில் நிவேதனங்களே காணவில்லை. மாமியார் மட்டும் அமைதியாக சிறிது நேர த்யானம் செய்வார். மற்றபடி, இடுகாட்டின் அமைதி தான் அங்கும் இருந்தது…

எல்லோரும் இப்படி இடிந்து போயிருக்கையில், மாமியார் மட்டும் என்னை ஒரு நாள் அழைத்துத் தனியாகப் பேசினார்... நான் அழுதேன்…
"மாட்டேன்… வேண்டாம்… நான் உங்க பெண்ணாவே இருந்துட்டுப் போறேன், வேணாம்மா…"

எனத் துடித்தேன். மற்றவர் என்ன சொல்வார் எனைப்பற்றி என்பதைக் கூறித் தவித்தேன்.

"அடி என் செல்லமே சுஜா, இந்த அம்மா சொன்னாக் கேட்க மாட்டியாடி?”

இதுதான்டி கூட்டுக் குடும்பம்ங்கறது. போகப்போறேன். அப்பறமென்ன??”
“டாக்டரோட பேசி, உனக்கு சோதனை பண்ணும் போதே, நீயறியாத, நானும் புஷ்கலாவும் திசு சோதனை செஞ்சுண்டுட்டோம்…”

☘️தொடரும்☘️

🍁வாஸவி நாராயணன்🍁

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vasavi Narayanan

Vasavi Narayanan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VasaviNarayanan

6 Oct
🌺எனது சிறு கதையில் ஒன்று... உங்கள் விருப்பம் கண்டால் நன்று...🌺

🌿பாரிஜாதம்🌿 (2)

“அவள் கருப்பை உனக்குப் பொருந்துமாம்… என்னுடையது பெண் வாரிசுங்கறதால, அவளுக்குப் பொருந்துமாம்…

அவளுக்கு இதனால பிற்காலத்துல உறவிலயோ, பிள்ளைப் பேற்றுலயோ ப்ரச்சனையே வராதுன்னு
டாக்டர் திட்டவட்டமாச் சொல்லிட்டார் எங்களாண்ட…”

“அம்மா… அவ படிக்கற குழந்தை… இன்னும் ஒரு செமஸ்டர் தான் இருக்கு அவளுக்கு… இந்த நேரத்துல பாடம் போயிடும்… அவ வாழ்க்கையே போயிடும்மா படிப்பு போனாக்கா… வேணாம்மா ப்ளீஸ்…”

“அடி அசடு… இத்தனை யோசிச்சவ அதை யோசிக்க மாட்டேனா??
அவளோட காலேஜ் சேர்மேனப் பார்த்து, நானே விஷயத்தைச் சொல்லிட்டேன். ’அப்படி இருந்தாக்கா எப்போ வேணா இவளை ஆபரேஷனுக்கு அழைச்சுண்டு போகணும்’னு… அவரும்,

“கவலைப் படாதீங்கோ… யாரும் செய்யத் துணியாததை தைரியாமாச் செய்யறேள்… என் ஸ்டூடண்ட்டும் இதுக்கு முழுசா ஒத்துழைக்கறாங்கறப்போ,
Read 19 tweets
4 Oct
🌺பல நோய்களை தீர்க்கும் துளசி🌺

'துளசி இலை நல்லது அதை சாப்பிட்டா சளிப் போயிடும்' என்பது மட்டும்தான் நமக்கு தெரியும். ஆனால் துளசி, கட்டுப்படுத்தும் நோய்களின் எண்ணிக்கை ஓராயிரம்.

அதனால் தான் இதனை ‘மூலிகைகளின் அரசி’ என்கிறார்கள்.
நோய் வருமுன் காத்து, வந்த நோயை விரட்டி, எதிர்காலத்திலும் நோய் வராத அளவுக்கு எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும் அற்புத ஆற்றல் வாய்ந்தது.

நாம் நினைப்பது போல நோய் நிவாரணி மட்டுமல்ல. சுற்றுச்சூழலிலும் இதன் பங்கு மகத்தானது. காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடை கிரகித்து ஆக்சிஜனாக வெளியேற்றும்
அற்புத பணியை செய்கிறது. இந்த பணியை பெரும்பாலான தாவரங்கள் செய்தாலும், துளசிக்கும் மற்ற தாவரங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

துளசியிலுள்ள மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களால் வளிமண்டலத்திலுள்ள புகைக் கிருமிகள் போன்ற மாசுக்கள் சுத்திகரிக்கப்படுகின்றன.
Read 22 tweets
2 Oct
🌺மெட்ராஸ் பீச்சில் இன்று மாலை தர்ணா....🌺

#நாட்டுமக்களுக்கோர்எச்சரிக்கை...

அஸ்வினி குமாரர்களான நகுலன், சஹதேவன் இருவரும் வானில் பேசிக்கொண்டே உலவுகையில், நகுலன் பூமியில் எதையோ உற்றுப் பார்த்தான். இதைக் கண்ட சஹதேவன் என்னென்று விசாரிக்க, நகுலன்....
“தம்பி... புவியில் ஜம்புத்வீபத்தில், நாம் வாழ்ந்த பரத கண்டத்தின் தெற்குத் திசை இறுதியில் இருக்கும் சிறு பகுதியில் ஓரிடத்தில் பெரிய கூட்டம்... அதைத்தான் பார்க்கிறேன்... வா... நாமும் சென்று என்னவென்று பார்க்கலாம்...” என்றான்.

அது அடையாறு ஏரியா... அங்கே ஒரு வனப்பகுதி...
அதிசயமாக, அதிக மனிதர்களின்றி இருக்கிறது. அங்கே ஆயிரக்கணக்கான நாய்களின் கூட்டம்... அவற்றின் தலைவர் ஒரு பெரிய கல்லில் ஏறி நின்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அருகில் ஏரியா தலைவர்களும், எதிரில் தொண்டர்களும். சஹதேவனுக்கு அவற்றின் பேச்சை நகுலன் அப்படியே மொழிபெயர்ப்பு செய்கிறான்...
Read 27 tweets
30 Sep
🌺நீட்டு இல்லாம மெடிக்கல் சீட்டு...
பரீட்சை இல்லாம டாக்டர் கோட்டு...
🌺

திருப்பூர் அருகே சஞ்சய் எனும் 10ம் வகுப்பு மாணவன், பள்ளி திறக்கப்போகிறது என்று சொன்னதும் தற்கொலை செய்து கொண்டானாம்....

இதைக் கேட்டதும் மனம் துடித்தது...
நம் நாட்டில் மாணவர்கள் இந்த அளவிற்கு சீர்கெட்டுப் போக யார் காரணம்??

மக்களைச் சந்தித்துப் பேசியதில் அவர்கள் எண்ணங்கள் இதுதான்...

பள்ளிப் பருவத்தில் இருந்த நல்ல அறங்களைக் கூறிப் புரியவைக்கும் கதைகள்...

இப்போது இல்லை...

இறை நம்பிக்கை தரும் ஆன்மீகக் கதைகள்...

இப்போது இல்லை...
தேசபக்திக் கதைகள்...

இப்போது இல்லை...

தேச பக்தர்களின் வரலாறு...

இப்போது இல்லை...

இந்திய வீரர்களின் சரித்திரம்...

இப்போது இல்லை...

மொழி வளர்க்க உண்மையாகப் பாடுபட்டவர்கள் பற்றி...

ம்ம்ம்... அது யாரு?

பள்ளியில் காலை இறை வணக்கப் பாடல்கள்...

இப்போது இல்லை...
Read 15 tweets
26 Sep
🌺மகளே... நான் போதாதோ...🌺

🥀என் மகள்…🥀

செவியில் பாயுஞ் செந்தேனது
புவியிற் பிறந்து புதிரானது;
அன்னை என்றனுக் கன்பானது
என்னைப் படுத்தும் என்மானது!

கம்பனே சற்றே கண்மூடிடு...
செம்பென மிளிரும் செவ்வழகை
கண்விட மறுக்கும் கலையழகை...
எண்ணி எண்ணியே கவிபாடிடு!
கண்ண தாசனே கேளடா
எண்ண வீணையை மீட்டுடா....
சில்லென வீசும் சாரலை
சிறுநெருஞ்சி இடையைப் பாடடா!

வாலி சற்றிங்கே வாநீ
கேலிச் சொல்லதிலே தான்நீ...
கீதமது பாடிடவுங் கூடும்
தேகமதுந் துவண்டிடும் போதும்!

வைர முத்துவே வாடா
வைர வரிகளைத் தாடா...
கிராமத்து நளினமதைக் காட்டி
பாடவளின் அழகுக்குப் போட்டி!

ஔவைக் கிழவியே வாடி
சங்கக் கவிதைகள் தாடி...
துள்ளிடு மானினைப் பாடி
வர்ணித்து மயங்குவை யோடி!

காள மேகமே எங்கே
கண்கள் தேடுதே இங்கே...
சிலேடைச் சொல்லதுவும் வாழக்
கவிபாடு பாரிவளைத் தேட!
Read 5 tweets
24 Sep
🌺Just... I told the fact Ji... Nothing more...🌺

🕸️Caught in the net...🕸️

Very Interesting conversation between a *BJP Supporter* and a *DMK Supporter* in Tamilnadu.

👍How I won the hearts of a hardcore DMK Man👍

Me :Vanakkam sir, I am coming from Modi ji's BJP Party...
He : my entire family is a DMK family for generations.

Me : That's why I have come to talk to you
He : You can't change me or any one in my family

Me : I have not come to change
He : Then

Me : I have come to understand your problems and your concerns.
He : That's interesting, please come in let's talk.
Me : Thank you.

He : We don't like BJP, its fascist, authoritarian and against interests of Tamil Nadu.
Me : OK sir I will note it down.
He : Your party can never set its foot in TN. We won't allow your party to take roots.
Read 23 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!