“கவலைப் படாதீங்கோ… யாரும் செய்யத் துணியாததை தைரியாமாச் செய்யறேள்… என் ஸ்டூடண்ட்டும் இதுக்கு முழுசா ஒத்துழைக்கறாங்கறப்போ,
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அவ மெச்சூரிட்டியைப் பாத்து… நான் அவளுக்கு ஃபுல் அட்டண்டன்ஸ் போட்டுடறேன்… ஒருவேளை பரீட்சை எழுத முடியலைன்னா… அதை அரியர் மாதிரி எழுதிக்கலாம்.
நான் கடைசி ஆறு மாசத்துக்கான பாடம் நடத்தும்போது, ஃபீஸ் இல்லாம இவளை காலேஜுக்கு அழைச்சுக்கறேன்…
இல்லை… என் மகனைக் கூட பாடம் சொல்லித்தரச் சொல்றேன்… போதுமா… இது தான் என்னால முடியற உதவி…”
அப்படின்னு சொல்லிட்டார்டி சுஜா…”
“அம்மாடி, இந்தாத்துல அப்பாவுக்கடுத்து, இன்னொரு பிஞ்சுக்கை அந்த மிருதங்கத்தைத் தட்டவும், அப்பா தோள் மேல ஏறிப் படுத்தவும்,
அவர் நெஞ்சுமேல ஏறிப் படுத்துத் தூங்கவும், அவர் பின்னாடியே தோட்ட வேலையப்போ ஓடிப்போய் அவரை வம்பிழுக்கவும்…
அதைப் பாத்து நான் ரஸிச்சு ரஸிச்சு சிரிக்கவும்… எங்களுக்கு வேணாமா…
க்ருஷ்ண ஜெயந்திக்கு, அவன் காலையே அகமெல்லாம் பதிச்சு அழகு பாக்க வேணாமா?
அவனைப் பாக்கும் போதெல்லாந்தான் உன் ஆத்துக்காரன் சின்ன வயசுல பண்ணின விஷமமெல்லாம் எங்களுக்கும் நினைவுக்கு வரும்…
அதையெல்லாம் நாங்க சொல்லிச் சிரிச்சு… நீ கேட்டு ரஸிச்சு… அவன் வெக்கப்படறைதைப் பாக்க உனக்கு ஆசை இல்லையா??
அதே பெண் குழந்தையானா… பட்டுப் பாவாடை, அலங்காரம், பூஜடை,
கால் நிறைக்க சதங்கையோட கொலுசு, கை வளை, ஒட்டியானம்… வாசல்ல அவளுக்காகவே பூந்தோட்டம், தலை நிறைக்க பூ…
அப்படின்னு எல்லா செலவும் வேலையும் எங்களுக்கு வைக்க வேணாமா? இந்த ஆத்துல மஹாலக்ஷ்மி கால்பதிச்சு ஓடற அழகை நாம ரஸிக்க வேணாமா?
”இவளைப் போலத்தானே என்னையும் அண்ணா, அம்மாப்பா எல்லோரும் பாத்துண்டிருப்பா?” அப்படின்னு அவ நினைச்சு... நினைச்சு... சந்தோஷப்பட ஒரு சந்தர்ப்பம் வேணாமா?
இது எல்லாராத்துலயும் எல்லாருக்கும் இருக்கற ஆசை தானேடிம்மா…
உள்ள பாரு… மரப்பாச்சி பொம்மைகளும், கிலுகிலுப்பையும், நடை வண்டியும்,
குட்டி தங்க வளையல்கள், செப்புக் காப்பு, தங்கக் காப்பு, வெள்ளிக் காப்பு, வசம்பு வளை, வெள்ளி அரைஞான் கொடி, சைனா பொம்மை, பந்து… எல்லாம் தூங்கறது…
அத்தனையும் உன் ஆம்படையானும் புஷ்கலாவும் விளையாடினது… அவாளுக்குப் போட்டது… பரம்பரைச் சொத்து நகை எல்லாம்…
நன்னா இன்னும் ரெண்டு தலை முறைக்குப் போடற அளவுக்கு கனம்மா இருக்கும். அதெல்லாம் ஏங்காதா… எத்தனை நாள் உள்ளயே தூங்கறதுன்னு?
சுஜா… இத்தனை சந்தோஷங்களுக்கு முன்னால, இந்தச் சின்ன வலி எங்களையோ இல்லை உன்னையோ கஷ்டப்படுத்தப் போறதாம்மா?”
எனச் சொல்லிச் சற்று அமைதியாகி எச்சில் விழுங்கியவர்,
* ”நாங்கள் இருவரும் தயாரடி… நீ தாயாராக..." * என்றார் விழியில் சிந்திய நீருடன்…
அவர் என் கையைப் பிடித்திருந்த வலிமை, இது அவரது தீர்க்கமான முடிவு என்பதை எனக்கு நன்கு உணர்த்தியது. மறுக்க முடியாத நிலையில் நான் தலையசைக்க, எங்கள் கணவன்மார்களிடம் புரியவைத்து, டாக்டரிடமும் பேச,
அறுவை சிகிச்சை ஒரே நாளில் மூவருக்கும் அவசரமாக ஒரே நேரத்தில் நடந்தது.
"இப்படிப்பட்ட அறுவை சிகிச்சை நம்ம நாட்டில் இதுவே முதல் முறை… நன்றாக முடிந்தது… மாலைக்குள்ள எல்லாரும் கண் முழிச்சுடுவாங்க… நீங்க இப்ப தாராளமா அவங்களைப் போய் பாக்கலாம்…"
மருத்துவரின் சந்தோஷ வார்த்தையில், எல்லோரும் அமைதி கொண்டனர்... ஒரே வாரத்தில் மூன்று பேரையும் டிஸ்சார்ஜ் செய்தனர்.
புஷ்கலாவுக்கு மட்டும் அதிகம் இரும்புச் சத்துள்ள உணவு நேரிடையாக் கொடுக்கச் சொல்லிச் சொன்னார்கள். இரு ஆண்களும் மாற்றி மாற்றி... எங்கள் மூவரையும் கவனித்துக் கொண்ட விதம்,
வாழ்நாள் முழுதும் நன்றிக்கடன் பட்டுள்ளோம் இப்படியோர் சொந்தம் கிடைக்க…
சொந்தத்தில் இருந்து எப்போதும் ஸ்ரார்த்தம், பண்டிகை, எல்லாத்துக்கும் சமைக்க வரும் தேவகி மாமியை ஆறு மாதத்திற்குச் சமையலுக்கு வைத்தார்கள். அவரும் தனது ஒரே சிறு மகளுடன் வந்து இங்கேயே தங்கிவிட்டார்.
வேளா வேளைக்கு பழரசம், சுண்டக் காய்ச்சிய பசும்பால், ஆரம்பத்தில் கஞ்சிகள், பின் நெய்யோடு பருப்பு சாதம், பின்னர் மெதுவாக கூட்டு, மோர்க்குழம்பு என ஒவ்வொன்றாக சாப்பாடும் ஆரம்பமானது.
என் மாமனாரும் கணவரும் தூங்கினார்களா இல்லையா என்ற கவலையே எனக்கும் மாமியாருக்கும் அடிக்கடி வந்துவிடும்.
புஷ்கலாவை மாமி நன்கு... ஒரு குழந்தை போல பார்த்துக் கொண்டார். அவள் மகளும், “அக்கா… அக்கா…” என்று அவளைச் சுற்றிச் சுற்றி வந்து அவளிடம் விளையாடியதில் அவளுக்கும் நாட்கள் போனதே தெரியவில்லை.
உடல் தேறி, நாங்கள் இயல்பு வாழ்க்கை ஆரம்பிப்பதற்குள்,
மாமியார் என் கரம் பிடித்தபடி இறைவனடி இணைந்திட்டார். புஷ்கலாவின் இறுதி ஆண்டுப் படிப்பும் தடங்கல் இல்லாமல் முடிந்தது. மூன்றே மாதத்தில், புஷ்கலாவிற்குத் தன் மகனைப் பெண் கேட்டு வந்தார் அவள் கல்லூரி சேர்மேன் சேஷாசலம்…
அழுகையின் கறைகள் மறைய, அழகிய அந்தப் பையனின் கரங்களில்
புஷ்கலாவைக் கொடுத்து, அவள் மனம் மகிழ… மகிழ… பார்த்துப் பார்த்து எல்லாம் செய்து அவளது திருமணமும் முடித்திட்டோம்.
அதுவும் ஒன்றரை வருடம் ஆகிவிட்டது. எங்களுக்கு, நிற்க நேரமில்லை தற்போதெல்லாம்…
☘️தொடரும்...☘️
🍁வாஸவி நாராயணன்🍁
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மெல்லிய உதட்டுப் படரலுடன் அதை எண்ணிக்கொண்டே கோலமிட்டேன். லேசான தொண்டைக் கனைப்புக் கேட்டது. வந்துவிட்டார் என்னவர் தின்னையில், கையில் செய்தித்தாளுடன்...
நமுட்டுச் சிரிப்புடன் விரைந்து கூடம் நுழைந்து, கையலம்பியதும் அடுக்களையில் புகுந்துவிட்டேன். அகல் விளக்கை முதலில் இறையடியில் ஏற்றி, அதிலிருந்து தீபமெடுத்துக் கொடுத்ததும், நன்கு பற்றியது விறகடுப்பு.
நாசி துளைக்கும் காஃபிப் பொடியிட்டு, வெந்நீர் ஊற்றினேன். அவர் கையில் நீட்டும் வரை,
அஸ்வினி குமாரர்களான நகுலன், சஹதேவன் இருவரும் வானில் பேசிக்கொண்டே உலவுகையில், நகுலன் பூமியில் எதையோ உற்றுப் பார்த்தான். இதைக் கண்ட சஹதேவன் என்னென்று விசாரிக்க, நகுலன்....
“தம்பி... புவியில் ஜம்புத்வீபத்தில், நாம் வாழ்ந்த பரத கண்டத்தின் தெற்குத் திசை இறுதியில் இருக்கும் சிறு பகுதியில் ஓரிடத்தில் பெரிய கூட்டம்... அதைத்தான் பார்க்கிறேன்... வா... நாமும் சென்று என்னவென்று பார்க்கலாம்...” என்றான்.
அது அடையாறு ஏரியா... அங்கே ஒரு வனப்பகுதி...
அதிசயமாக, அதிக மனிதர்களின்றி இருக்கிறது. அங்கே ஆயிரக்கணக்கான நாய்களின் கூட்டம்... அவற்றின் தலைவர் ஒரு பெரிய கல்லில் ஏறி நின்று பேசிக் கொண்டிருக்கிறார்.
அருகில் ஏரியா தலைவர்களும், எதிரில் தொண்டர்களும். சஹதேவனுக்கு அவற்றின் பேச்சை நகுலன் அப்படியே மொழிபெயர்ப்பு செய்கிறான்...
Very Interesting conversation between a *BJP Supporter* and a *DMK Supporter* in Tamilnadu.
👍How I won the hearts of a hardcore DMK Man👍
Me :Vanakkam sir, I am coming from Modi ji's BJP Party...
He : my entire family is a DMK family for generations.
Me : That's why I have come to talk to you
He : You can't change me or any one in my family
Me : I have not come to change
He : Then
Me : I have come to understand your problems and your concerns.
He : That's interesting, please come in let's talk.
Me : Thank you.
He : We don't like BJP, its fascist, authoritarian and against interests of Tamil Nadu.
Me : OK sir I will note it down.
He : Your party can never set its foot in TN. We won't allow your party to take roots.