#எண்ணங்களில்_மாற்றம் 🙋

என்னுடைய மிக நெருங்கிய நண்பர்ன்னு சொல்றத விட அண்ணன்னு சொல்லலாம்.!

அவருடைய வீடுக்கு ஒரு வேலை விஷயமா கூப்பிட்டிருந்தாரு.!
ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் அதே ஏரியால வேற வீடு மாத்தியிருந்தாரு.!
அதனால அவரு அட்ரஸ் சொன்ன அந்த சந்து வரைக்கும் போய்ட்டேன்.
அதுல தான் வீடுன்னும் தெரியும்..!, ஆனா, அதுக்குள்ள எந்த வீடுன்னு கண்டுபிடிக்க முடியல..! ஃபோன் பண்ணா 'நாட் ரீச்சபிள்' . சரி நம்மளால முடியாதா..!
விசாரிச்சு கேட்டு போகவேண்டியது தான்னு முடிவு பண்ணி விசாரிக்க ஆரம்பிச்சேன்.
அவர் பேரை சொல்லி விசாரிச்சா பக்கத்துல தெரியாதுன்னு சொல்லிட்டாங்க..!
அப்புறம் அவரு வேலை பார்க்குற இடத்தை பற்றி சொல்லி கேட்டுபார்த்தேன் அப்பவும் தெரியலன்னு சொல்லிட்டாங்க..!
அவரை பத்தி மேலும் சில விபரங்களை சொல்லி கேட்டேன்..!
யாருக்கும் சரியா தெரியலை..!
என்னடான்னு நினைக்கும் போது,
அப்போ அங்க நின்னுகிட்டு இருந்த ஒருத்தர் "அந்த கால் நொண்டியா இருப்பாரே அவரு வீடுங்களா" ன்னு கேட்டப்போ மனசு ரொம்பவே சங்கடமாயிடுச்சு.!
ஆமாங்கற மாதிரி தலைய மட்டும் ஆட்டினேன்..!

உடனே அவரு "கால் நொண்டியா இருப்பாரு.. Scooty ல போவாருன்னு முதல்லையே கேட்க வேண்டியது தானே..! அது விட்டுட்டு
அவரோட மத்த ஜாதகமெல்லாம் சொல்றீயே"ன்னு ரொம்பவே சலிச்சுக்கிட்டாரு.!

"ஒருத்தரை அவருடைய ஊனத்தை வைத்து அடையாளப்படுத்த கூடாதேன்னு தான்.. இவ்வளவு துரம் கேட்டேன்.நெசமாவே அவரு நல்லா இருந்திருந்தா
'அவரின் மத்த ஜாதக விபரங்களை'
வச்சு தானே விசாரிச்சிருப்போம் ன்னு கொஞ்சம் காட்டமே கேட்டுட்டேன்
"உன்ட்ட இருந்து இந்த அட்வைஸ் கிட்வைஸ் லாம் வேற கேட்கனுமா.. இனிமே நான் எவனுக்கும்..அட்ரஸ்சே சொல்றதில்ல" ன்னு, கடுப்புல சொல்லிட்டு அந்த மனிதர் அங்கிருந்து என்னை முறைத்த படியே நகரும் போது..
"சொல்றதும் சொல்லாததும் உங்க விருப்பங்க..!" என அந்த உரையாடலுக்கு முற்றிப்புள்ளி வைத்தேன்..!
"அவருதான் வேகமா பேசுறாருன்னா, நீயும் யேன் தம்பி பதிலுக்கு பதில் பேசுற.. விடு" என முடிந்து போன விஷயத்திற்கு சுபம் எழுதி நிறைவு செய்தார் ஒரு வயதில் பெரியவர். பிறகு வீட்டையும் காண்பித்து விட்டு சென்றார்..!

ஆனால், அந்த நபரின் பேச்சு பல நாட்களாக என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது..!
இந்த சம்பவம் நடந்து ஒரு ஆறு மாசத்துல ஒரு பெரிய சமூக மாற்றம் நடந்தது..!
அப்போ முதல்வராக இருந்த கலைஞர்
"உடல் ஊனமுற்ற அனைவரும், மாற்றுத் திறனாளிகள் என அழைக்கப்படுவார்கள், இனி அரசின் அனைத்து துறைகளிலும் இது முழுமையாக செயல்படுத்தப்படும்"
என சட்டம் இயற்றினார்.!😊
ஏதோ நம்ம வேண்டுதல் நிறைவேறின மாதிரி ஒரு உணர்வு..!

உடனே அப்போ எல்லா பஸ்லையும்
"ஊனமுற்றவர்களுக்கான இருக்கை" அப்படிங்கறதை அழிச்சிட்டு "மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கை"
அப்படின்னு மாற்றினாங்க..!
பார்க்கவும், படிக்கவும் ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு..!
They Are Not Disabled,
They Are Differently Abled ..! 😊

அவர்களுக்குத் தேவை நமது அனுதாபமோ அல்லது பரிதாப பார்வையோ அல்ல..
தேவை நமது
அன்பும்,
ஆதரவும்,
அரவணைப்பும்..!😊

#NivaThreads

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with நிவா 🦋

நிவா 🦋 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @theroyalindian

9 Oct
#வந்தாரை_வாழவைக்கும்_தமிழகம்😊
சுமார் 50 வருடங்களுக்கு முன்பு இருக்கும்,
ராஜஸ்தானில் இருந்து தமிழகத்துக்கு வந்த சில குடும்பங்கள் சிறியதாக அவங்க வசதிக்கு ஏற்ப பைனான்ஸ் தொழிலை ஆரம்பிக்கிறாங்க.!

அப்போ அதைபத்தி இங்க இருந்தா யாரும் பெருசா கவலைப்படவும் இல்லை அலட்டிக்கவும் இல்லை.🙄
அவங்களுக்கு அந்த தொழிலை நடத்த ஒரு அமைதியான நிலப்பரப்பும் அதை சார்ந்த எளிமையான மக்களும் தேவை.!

நம்ம மக்களோட
🔥நேர்மை,
🔥சரியான படி பணத்தை திருப்பி செலுத்துதல்
🔥காசு விஷயத்தில் கரெக்டா நடந்து கொள்வது,
அப்புறம் முக்கியமா,
🔥நம்ம வீடுகளில் இருந்த தங்கம்.!🙄
இதெல்லாம் பார்த்த அவங்க ரொம்பவே இம்ப்ரஸ் ஆயிட்டாங்க..!
நம்ம தொழில் நடத்த இதைவிட சிறந்த இடம் வேற எதுவுமே கிடையாதுன்னு முடிவு பண்றாங்க..!

"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்பதற்கு பதிலாக
"யாம் பெற்ற இன்பம் பெருக எம் இனம்" என்பது போல இங்கு உள்ள நிலவரம்,தொழில் வாய்ப்புகள் பற்றி
Read 18 tweets
6 Oct
#காதலின்_வரம்_கண்ணம்மா 😊

"சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்...!

நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ.!

கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ.!

வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்.!"

💃😍💃

இந்த வரிகளில்
அந்த முண்டாசு தலைப்பாகை மற்றும் முறுக்கு மீசைக்குள் Image
ஒளிந்து இருக்கும் காதல் நம்முன் பரிணமித்து நிற்கிறது..!

உவமைகளின் அரசன் என்றுமே பாரதிதான்..!

🔥காதலியின் ஒரு சிறு புன்னகையை அவன் இவ்வாறு வர்ணிக்கிறான்.
சோலை என்பது பூக்களும் பூஞ்செடி கொடிகளும் நிறைந்த மனதிற்கு பிடித்த ரம்மியமான சூழல் நிறைந்த இடம். அந்த ரம்மியமான சூழலில்
நிலவின் ஒளியானது பூக்களின் மீது உள்ள நீர் திவலைகள் வழியே பிரதிபலிக்கும் போது அந்தப் பூக்கள் ஒளிர்வது போல தோற்றமளிக்கும். இதனால் அந்த அழகிய பூக்களின் அழகு இன்னும் மேம்பட்டு மிகவும் மனதை கவரும் படி பேரழகாக தெரியும்.
"நானும் அந்த பூஞ்சோலையில் உன்னுடைய அந்த சிறிய புன்னகையை
Read 10 tweets
28 Sep
#Home_Theatre & #Sound_Bar 😊
(Purchasing Tips)

OTT தளங்களின் பயன்பாடு அதிகமான பிறகு இப்போது நம்மில் பலர் நமது TV ஐ 40" + திரைகொண்ட Full HD அல்லது 4K TV ஆக Update செய்திருப்போம்.!
எல்லாம் ஒரு நல்ல Movie Watching Experience கிடைக்க வேண்டும் என்பதற்காக தான்.!

#Shopping #Gadgets
ஒரு முழுமையான Movie Watching Experience என்பது பெரிய திரையில் படம் பார்ப்பது மட்டும் அல்ல அதை நல்லஒலி அனுபவத்துடன் கேட்டு ரசிப்பதும் ஆகும்.
இந்த நல்லஒலி அனுபவத்தை நமக்கு தரவல்லது தான்,
🔥 Sound Bar
🔥 Home Theater
சரி இந்த ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்ன்னு முதல்ல பார்ப்போம்.😊
#Sound_Experience #ஒலி_அனுபவம்
சின்ன பிசிறு கூட இல்லாத முழுமையான ஒலி.!
#இசைஞானி யின் பாடல்களில் தவழும் Bass Guitar,
#ARR ன் பாடல்களில் இழையோடும் Beats இப்படி குண்டுசி விழும் சத்தம் முதல் டைனோசர் கத்தும் அலறல் வரை எல்லாம் அதன் அளவுகளில் மிகச்சரியாக தெளிவாக இருக்கவேண்டும்.😊
Read 26 tweets
27 Sep
🎬 #Aapla_Manus #ஆப்லா_மனுஸ்
🎙️: Marathi
🍿 : Triller & Family Drama
❤️ : 91% Google User Rating
⭐ : 4
📺 : Netflix
📜 : ஒரு வயசானவர் அப்பார்ட்மென்ட் பால்கனியில் இருந்து கீழே விழுகிறார்..! அதில் இருந்து ஆரம்பிக்கிறது கதை. அவரது மகன் ஒரு வழக்கறிஞர். மருமகள் ஆசிரியை.
இது தற்கொலை அல்ல கொலை தான் என விசாரணை செய்யும் காவல் துறை அதிகாரி. வேலைக்கு செல்லும் மருமகள், அன்பிற்காக ஏங்கும் வயதான அப்பா, அவர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள்.. சமாளிக்க முடியாமல் தவிக்கும் மகன்... என ஃப்ளாஷ் பேக். இந்த நான்கு கதாபாத்திரங்கள் தான் படமே..!
இது கொலை தான் என காவல்துறை அதிகாரி நிறுவ முயறிச்சிக்கும் இடங்கள், விசாரனை காட்சிகள் எல்லாம் விறுவிறுப்பான திருப்பங்கள் நிறைந்தது..! யூகிக்க முடியாத ஒரு திருப்பம், ஒரு சோசியல் மெசேஜ் என நிறைவு பெறுகிறது படம்.
வயதான அப்பாவாகவும், விசாரனை அதிகாரியாகவும் இருவேறு வேடங்களில்
Read 5 tweets
25 Sep
#கொடுமை 🤔

இதைப் பார்த்தவுடனேயே சில ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகை செய்தியாக படித்த ஒரு சமூக அவலம் என் மனதுக்குள் உடனே வந்தது..!😏

அதன் சுருக்கம்

மத்திய பிரதேசம் மற்றும் அந்த மாநிலத்தின் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பழங்குடியின மக்களிடம் உள்ள
ஒரு வினோத பழக்கம் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகைகளில் செய்தியாக வந்தது..!

அதாவது ஒருவருக்கு கல்யாணம் ஆகல அல்லது பெண் கிடைக்கல அப்படின்னா ரொம்ப எல்லாம் பெருசா வருத்தப்பட வேண்டாம்.
இவங்கள அணுகினால் போதும் அவருக்கு ஒரு பெண் மனைவியாக வாடகைக்கு கிடைப்பாள்.
இதை ஏற்பாடு செய்வதற்கென்று பிரத்யேகமான ஆட்கள் அங்கு உள்ளார்கள்.
அதுல சில கண்டீசன்ஸ் உண்டு.!
(எதுக்கும் Quoted Tweet ஐ ஒரு முறை முழுமையாக படிச்சுட்டு வந்துருங்க..!)😂

1.ஒரு பெண்ணை திருமணம் செய்யாமல் அவளை மனைவி மாதிரி வைத்தக்கொள்வது

2.இதை செய்து கொடுப்பதற்கென்றே
Read 16 tweets
23 Sep
#வங்கி_அனுபவம் 😊
ஏற்கெனவே இப்படித்தான் திருச்சி ல 'மாநில' வங்கி Main Branch ல ஒரு Asst.Manager, தமிழ் ல பேசுனா, சரியா பதில் சொல்லல , English ஹிந்தி , தெரியாதான்னு எனக்கு முன்னாடி Line ல நின்றிருந்த ஒரு வயசான அம்மா கிட்ட ரொம்ப நக்கலா பேசினார். அவங்க ரொம்ப சிரமப்பட்டாங்க..!😕
என் Turn வரவும், அவர்கிட்ட என்னுடைய எல்லா கேள்விகளையும் தூய தமிழிலே கேட்டேன்..!
அவருக்கு செம கடுப்பு..!
உடனே என்ட்டையும் கத்த ஆரம்பிச்சிட்டார். அப்பவும் நா அசரல,
அதே பொறுமையுடன்,
"வங்கியில் வாடிக்கையாளரிடம் நாகரீகமான முறையில் பேசுங்கள். அவ்வாறு பேசுமாறு உங்களுக்கு உங்கள்
நிர்வாகம் கற்று கொடுக்கவில்லையா..!" ன்னு கேட்கவும் பின்னாடி இருந்தவங்களும் + கூட பக்கத்தில் உட்கார்ந்து இருந்த ஒரு Lady யும் எல்லாம் சிரிச்சிட்டாங்க..!😂

அதுக்குள்ள அவரு Seat ல இருந்து எழுந்திட்டாரு.. நானும் விடல.. பொறுமையா கேள்விகளை கேட்டேன் அதுவும் தூய தமிழ்ல..!
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!