வணக்கம்.
800 ஆண்டுகள் முந்தையது... அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்!
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு தலமையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி ஜமீன்தார் அரண்மனை எதிரில் பழைமையான மண்டபம் போன்ற அமைப்பில் இருந்த...

wix.to/8UB_BxQ
800 ஆண்டுகள்-2/15
அங்காள ஈஸ்வரி கோயில் விதானத்தில் 6 அடி நீளமுள்ள இரு கல்லில் கல்வெட்டுகள் இருந்ததைக் கண்டறிந்தனர். புதுக்கோயில் கட்ட அம்மண்டபத்தைப் பிரித்தபோது 3 அடி உயரமுள்ள மேலும் ஒரு கல்லில் கல்வெட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டை படி எடுத்து ஆய்வு செய்தபோது
800 ஆண்டுகள்-3/15
இது கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தெரியவந்தது. இக்கல்வெட்டில்சொல்லப்பட்டுள்ள அனைவரின் பெயர்களும் அழகிய தமிழ்ப் பெயர்களாக உள்ளன. இந்த கல்வெட்டுகள் குறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு,

wix.to/8UB_BxQ
800 ஆண்டுகள்-4/15
"இது மூன்று கற்களில் இருந்தும், ஒன்றுக்கொன்று தொடர்புடைய 55 வரிகள் கொண்ட ஒரே கல்வெட்டு ஆகும்". நிச்சி நாயகனான மேல்கீரை நாடாள்வான், மாணிக்கன் உய்யவந்தானான குளதையாதயன் ஆகிய இருவரும் தங்களுக்குச் சொந்தமான நிலத்தை சாயல்குடி சொக்கனார் கோயிலுக்கு விற்று,
800 ஆண்டுகள்-5/15
அதை சிவன் கோயில்களின் பொறுப்பாளராகக் கருதப்படும் சண்டேஸ்வரதேவர் பெயருக்கு மாற்றிக் கொடுத்து அதற்கு ஈடாக பணம் பெற்றுள்ளதையும், இதற்கு சாட்சியாக பலர் கையொப்பம் இட்டுள்ளதையும் இக்கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது.தற்போது நிலம் விற்பனை செய்யும்போது வாங்குபவர்,
800 ஆண்டுகள்-6/15
விற்பவர், சாட்சிகள் ஆகியோர் பத்திரத்தில் கையொப்பம் இடுவது போல அக்காலத்தில் ஓலைச் சுவடியில் அவர்களின் கையொப்பம் பெற்று அதை கல்வெட்டில் வெட்டி வைப்பார்கள். கையொப்பம் இடத் தெரியாதவர்களை தற்குறி எனவும், அவர்களுக்கு மற்றவர்கள் சான்று இடுதலை தற்குறி மாட்டெறிதல் எனவும்
800 ஆண்டுகள்-7/15
இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இதில் தற்குறியான மூவருக்கு பிள்ளையார் அழகிய விடங்கர் கோயிலில் இருக்கும் முத்தன் சிவலங்கனான இமையே தருவான், சாத்தனிரட்டையான் அஞ்சாத காடத்தட்டான்,தச்சன் சீராமன் மூவானான இளமை ஆசாரியன் ஆகியோர் சான்று இட்டுள்ளனர்.
wix.to/8UB_BxQ
800 ஆண்டுகள்-8/15
மேலும் கூத்தன் சோழனான செம்பிலராயன், கொற்றன் முத்தனான செம்பில் வளநாடன், சொல் நாணலையான் வழுதி சிங்கராயன், சிறுமுத்தனாளுடையானான வீரபாண்டியராயன், மங்கல வனப்பனாலன் கங்காராயன், சிறந்தான் தொண்டையன், பேரருங்கோவேளான் உடையான் பாலன், வதுலங்கன் கெங்கையான் விரதமிட்ட ராயன்
800 ஆண்டுகள்-9/15
ஆகியோரும் இதில் கையொப்பம் இட்டுள்ளனர்.இக்கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ள அனைவரின் பெயர்களும் அழகிய தமிழ்ப் பெயர்களாக உள்ளன. இதன் மூலம் 800 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களின் பெயர் வைக்கும் வழக்கத்தை அறிந்து கொள்ளமுடிகிறது.

wix.to/8UB_BxQ
800 ஆண்டுகள்-10/15
கல்வெட்டின் சில பகுதிகள் அழிந்துவிட்டதால் கோயிலுக்கு விற்கப்பட்ட நிலம் பற்றி முழுமையாக அறிய இயலவில்லை. அதன் எல்லைகளாக இரு பெருவழிகள், போளம், சிறுகுளம் ஆகியவை கூறப்பட்டுள்ளன. இதில் சொல்லப்படும் பெருவழிகள் (நெடுஞ்சாலைகள்) பெரியபட்டணம், கன்னியாகுமரி செல்லும்..
800 ஆண்டுகள்-11/15
பெருவழிகளாக இருக்கலாம். போளம் என்பது பிசின் போன்ற நறுமணப்பண்டங்கள் ஆகும். வணிகர்களின் விற்பனைப் பண்டமான போளம் வைக்கப்பட்டிருந்த இடமும் கல்வெட்டில் ஒரு எல்லையாக கூறப்பட்டுள்ளது. சாயல்குடி இரு வணிகப் பெருவழிகள் சந்திக்கும் இடத்தில் அமைந்த ஒரு முக்கிய வணிக நகரமாக
800 ஆண்டுகள்-12/15
பழங்காலம் முதல் இருந்திருப்பதை இக்கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது. கல்வெட்டுள்ள இடம் தற்போது அங்காள ஈஸ்வரி கோயில் என அழைக்கப்பட்டாலும், கல்வெட்டில் பிடாரி கோயில் எனப்படுகிறது. நிலம் விற்கப்பட்டது அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு என்றாலும்,
wix.to/8UB_BxQ
800 ஆண்டுகள்-13/15
அதன் கல்வெட்டை பிடாரி கோயிலின் கிழக்குப் பகுதியில் வைத்துள்ளதாக கல்வெட்டில் சொல்லப்படுகிறது. சாயல்குடி சிவன் கோயிலில் உள்ள கி.பி.10-ம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டில் இவ்வூர் உலகு சிந்தாமணி வளநாட்டு சாகியில்குடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது" என்றார்.

நன்றி.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mathavan Venugopal

Mathavan Venugopal Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MVenukopal

19 Oct
வணக்கம்.
12,000 வருடங்கள் மனிதர்கள் புழங்கிய இடம். கி.பி 600ல் எழுப்பப்பட்டு 14 நூற்றாண்டுகள் தொழப்பட்டசிவனாலயம்.இப்படியொரு நிலை வரும் என்று பல்லவ மன்னன் மகந்திரவர்மன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டான்!தமிழகத்தின் மிகவும் புராதனமான தொன்மை ஆலயங்களில் ஒன்று
wix.to/j0DvBxQ ImageImageImageImage
12,000 வருடங்கள்-2/20
இது சமணம் தழுவிய முதலாம் மகேந்திரவர்மன் தாய் மதம் திரும்பிய உடன் எழுப்பிய குடவரை சிவனாலயம்.
தாம்பரத்துக்கும் சென்னைக்கும் இடையில் சென்னையிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் பல்லாவரம்.
பல்லாவரத்துக்கு கிழக்கே மலைப்பகுதியில் இந்த குடைவரை கோயில்.(இது,பழைய படம்) ImageImage
12,000 வருடங்கள்-3/20
சென்னையிலிருந்து GST சாலையிலிருந்து, பல்லாவரத்தில் இடதுபுறம் தர்கா சாலைப்பிரிவில் பிரிந்தால், ஒரு கிலோ மீட்டரில் ஆலயத்தை அடையலாம்.இது குடவரை குகைக்கோவில். பல்லவபுரம் என்ற சொல் மருவி தற்போது பல்லாவரம் என்றழைக்கப்படும் பகுதியை 7-ஆம் நூற்றாண்டில் முதலாம்.. Image
Read 23 tweets
16 Oct
வணக்கம்.
ஈழத்தின் திருகோணமலை மாவடிச்சேனையில் உள்ள தமிழி கல்வெட்டுக்கள்!நான் இரண்டு நாட்களிற்குமுன் இணையத்தில் திருமலை பற்றிய இடவாய்வுகளைத் தேடிக்கொண்டிருந்தபோது எனக்கு 2005 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு அரிய மாதயிதழ் ஒன்று தென்பட்டது.அது கொம்பனிக்குச்சொந்தமாது.
wix.to/mUAfBxA ImageImageImageImage
ஈழத்தின்-2/5
அதன் பெயர் "எரிமலை".
அதைப் பதிவிறக்கி வாசித்த போது அங்குதான் இந்த அரிய தகவல் இருந்தது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
அதிலுள்ள தகவலாவது,
"திருமலையின் வெருகல் பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாவடிச்சேனையில் உள்ள கல்லடிமலையின் மேற்புறப் பாறையில்.. ImageImageImageImage
ஈழத்தின்-3/5
2 மீ நீள அகலத்தில் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இதுவரை எவரும் இக்கலவெட்டு தொடர்பாக எவரும் ஆய்வுகள் எதையும் மேற்கொள்ளவில்லை. அதில் உள்ள எழுத்துக்கள் 'தமிழி' எழுத்துகள் ஆகும். மேலும் மாலையின் உச்சியில் கட்டுமானத்திற்கான அடித்தளம் ஒன்று காணப்படுகிறது. ImageImageImageImage
Read 5 tweets
9 Oct
வணக்கம்

அசுணம் பற்றிய சங்ககால ஈழத்துப் புலவரின் பாடல்!அசுணமா? மாசுணமா? விலங்கினமா? பறவையினமா? பாம்பினமா?
சங்கத் தமிழ் இலக்கியத்தில் ஒரு அதிசய விடயம் இருக்கிறது. அசுணம் என்னும் ஒரு அதிசய மிருகம் பற்றிய தகவலே அது.நீண்ட பதிவு!Link பயன்படுத்தவும்....

wix.to/vEBSBwM
அசுணம்-2/20
கற்பனை ஓவியங்களில் மட்டுமே காணக்கிடைக்கும் அழிந்துப் போன விலங்குகள் எவ்வளவோ உள்ளன. தொல்விலங்கியல் (Paleontolgy or Paleo zoology) என்னும் துறை இது போன்ற விலங்குகளின் எலும்புக்கூடுகள் ,படிம அச்சுக்கள் (Fossils) ஆகியவற்றை சேகரித்து வைத்துள்ளன. ஆனால் தமிழ் இலக்கியத்தில்..
அசுணம்-3/20
குறிப்பிடப்பட்டுள்ள அசுணம் பற்றிய எந்தவொரு தடயமும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனை பற்றி சங்க இலக்கியங்களில் ஈழத்துப் புலவர் பூதந்தேவனாரும் தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த அதிசய அசுணம் பற்றி சங்க இலக்கியங்கள் கூறும் விபரங்கள்:
Read 22 tweets
8 Oct
வணக்கம்.
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன!!
இதில் முந்நீர் என்பது கடலைக்குறிக்கும் .அதுமட்டுமா தமிழர் கடலுடன் உறவாடிக்குலாவிகொண்டு  இருந்தனர் என்பதற்கு கடலுக்கு தமிழில் இருக்கும் அதிகப்படியான சொற்களே சான்று ! .அவைகள்..
wix.to/lkDqBwI
முந்நீர் பழந்தீவு-2/10
நீர், புணரி, நேமி, பரவை, வேலாவலயம், ஆர்கலி, அத்தி, திரை, நரலை, வாரிதி, பாராவாரம், பௌவம், வேலை, முந்நீர், உவரி, கார், ஆழி, வாரி, கடல்,இவைகளும், மற்றும் சலராசி, தோயநிதி, அம்பரம், உப்பு, சலநிதி, உததி, சிந்து, சலதி, வெள்ளம், நதிபதி, வீரை, அளக்கர், சமுத்திரம்...
முந்நீர் பழந்தீவு-3/10
போன்ற  இவைகளில் பல தமிழ்ச் சொற்கள் அல்ல. கடல் மூன்று வழி நீரால் ஆனது என்பதாலேயே முந்நீர் எனப்பட்டது. கடலில், அதனடியில் சுரக்கும் ஊற்று நீர், மலைகளில் பொழிந்த மழை நீர் வழிந்தோடி ஆறாக உருவாகி ஓடி வந்து கலக்கும் ஆற்று நீர் மேகங்கள் கருவுற்று நேரடியாகக்..
Read 10 tweets
8 Oct
வணக்கம்.
தலைமைத்துவத்திற்காக நீங்கள் யாரை மிகவும் மதிக்கிறீர்கள், ஏன் (குறிப்பிட்டு கூறுங்கள்)?
இதை பார்க்கும் பொழுது என்ன தோன்றுகிறது? ஓநாய் பொதிகளாக நகர்கிறது. ஆம் நானும் அப்படி தான் நினைத்தேன். ஆனால் அதற்கு பின்னால் ஒரு மிக பெரும் தலைமை பண்பு ஒளிந்திருக்கிறதென்று.
தலைமைத்துவம்-2/5
இந்த பொதிகளில் செல்லும் முதல் மூன்று ஓநாய்கள் அந்த கூட்டத்திலேயே வயது முதிர்ந்தவைகள். அதை பின்னால் விட்டால் பின் தங்கிவிடும் எனவே அதன் வேகத்திற்கு தான் அனைத்து ஓநாய்களும் நகரும். வயது முதிர்ந்தவர்களை விட யார் சிறப்பாக வழிநடத்திட முடியும்?
தலைமைத்துவம்-3/5
அடுத்து செல்லும் 5 ஓநாய்கள் மிகவும் பலசாலிகள்.அது முன் வரிசை பலசாலிகள்.அது முன்னாள் செல்லும் முதியவர்களை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் விதத்தில் செல்கிறது.நடுவில் வருபவர்கள் குட்டிகள்,பெண்கள்,பலம் குன்றியவர்கள்.
அதன் பின் வரும் 5 ஓநாய்களும் பின் வரிசை பலசாலிகள்.
Read 6 tweets
7 Oct
வணக்கம்.

திருப்பூர் அருகே அஸ்திவாரம் இல்லாமல் தரையில் நிற்கும் கல்மண்டபம் தமிழர்களின் பாரம்பரிய கட்டிட கலை பாதுகாக்கப்படுமா?
திருப்பூர் அருகே அஸ்திவாரம் இல்லாமல் தரையில் நிற்கும் கற்தூண்கள் கொண்ட சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.
wix.to/v0CkBv8 Image
திருப்பூர்-2/15
தமிழர்களின் பாரம்பரியமிக்க இந்த கட்டிட கலை பாதுகாக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.எந்திரத்தனமாக மாறிப்போன மனித வாழ்க்கையில் இன்றைய நாகரிக உலகில் அக்கம் பக்கத்தினரை கூட நாம் அறிந்து வைத்திருக்கவில்லை. முன்னோர் வகுத்த வாழ்வியல் முறைகளை.. Image
திருப்பூர்-3/15
அலட்சியம் செய்வது வருந்தத்தக்க விஷயம் தான். நம் முன்னோர் கூட்டு வாழ்க்கை, உணவே மருந்து, ஒழுக்கம், சுயகட்டுப்பாடு உள்ளிட்ட நற்பண்புகளை நமக்காக விட்டுச்சென்றனர்.அதுமட்டுமின்றி காலத்தால் அழியாத பல கட்டுமானங்களையும் விட்டுச் சென்றுள்ளனர்.

wix.to/v0CkBv8 Image
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!