வணக்கம்.
12,000 வருடங்கள் மனிதர்கள் புழங்கிய இடம். கி.பி 600ல் எழுப்பப்பட்டு 14 நூற்றாண்டுகள் தொழப்பட்டசிவனாலயம்.இப்படியொரு நிலை வரும் என்று பல்லவ மன்னன் மகந்திரவர்மன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டான்!தமிழகத்தின் மிகவும் புராதனமான தொன்மை ஆலயங்களில் ஒன்று
wix.to/j0DvBxQ
12,000 வருடங்கள்-2/20
இது சமணம் தழுவிய முதலாம் மகேந்திரவர்மன் தாய் மதம் திரும்பிய உடன் எழுப்பிய குடவரை சிவனாலயம்.
தாம்பரத்துக்கும் சென்னைக்கும் இடையில் சென்னையிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் பல்லாவரம்.
பல்லாவரத்துக்கு கிழக்கே மலைப்பகுதியில் இந்த குடைவரை கோயில்.(இது,பழைய படம்)
12,000 வருடங்கள்-3/20
சென்னையிலிருந்து GST சாலையிலிருந்து, பல்லாவரத்தில் இடதுபுறம் தர்கா சாலைப்பிரிவில் பிரிந்தால், ஒரு கிலோ மீட்டரில் ஆலயத்தை அடையலாம்.இது குடவரை குகைக்கோவில். பல்லவபுரம் என்ற சொல் மருவி தற்போது பல்லாவரம் என்றழைக்கப்படும் பகுதியை 7-ஆம் நூற்றாண்டில் முதலாம்..
12,000 வருடங்கள்-4/20
மகேந்திரவர்மன் நல்லாட்சி செய்திருக்கிறார்.தென்னிந்தியக் கட்டிடக்கலையில் ஆகக்கூடிய பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் முதலாம் மகேந்திரவர்மன்.குடைவரை கோயில்களை தென்னிந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.

பல்லவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அல்லர்.
12,000 வருடங்கள்-5/20
இவர்களது பூர்வீகம் பற்றியோ, தமிழகத்துக்கு வந்து சேர்ந்த விதம் பற்றியோ சரியான தகவல்கள் இல்லை.(பல்லவர்கள் பற்றி விரிவான பதிவு விரைவில்)
முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் தமிழ் நாட்டில் இந்து சமயம் மறுமலர்ச்சி அடைந்தது.

wix.to/j0DvBxQ
12,000 வருடங்கள்-6/20
ஆலயங்களுடன் சிற்பம், ஓவியம், கட்டிடக்கலை முதலியவையும் உச்ச நிலையடைந்தன. சித்திரகாரப் புலி என்ற பெயரை பள்ளிப்பாடங்களில் படித்திருப்போம். அந்த பெயருக்குரியவர் இவரே.

மகேந்திரவர்மன் இடையில் சமண மதத்தைத் தழுவியவர். அப்பரால் மீண்டும் சைவ சமயத்திற்கு மாறியவர்.
12,000 வருடங்கள்-7/20
பல்லவ மரபில் மகேந்திரவர்மர் என்ற பெயரில் மூன்று மன்னர்கள். அந்தப் பெயரைக் கேட்டாலே நினைவில் மலர்பவர் முதலாம் மகேந்திரவர்மர்தான்.சோழப் பரம்பரையில் முதலாம் இராஜராஜ சோழனுக்கு மட்டுமே இந்தப் பெருமை.பல்லாவரம் தவிர மண்டகப்பட்டு, மாமண்டூர், மகேந்திரவாடி, சீயமங்கலம்
12,000 வருடங்கள்-8/20
தளவானூர், சிராப்பள்ளி ஆகிய ஆறு இடங்களில் குடைவரைகளை அமைத்தவர் மகேந்திரர்.ஒவ்வோர் இடத்திலும் புதுமைகளைப் புகுத்தியுள்ளார்.மூன்று கருவறைகளை கொண்ட மற்ற ஆலயங்களில் போலில்லாமல் ஐந்து கருவறைகளையும், அர்த்த மண்டபக் கூரையையும் பெற்றுத் சிறக்கிறது பல்லாவரம் ஆலயம்.
12,000 வருடங்கள்-9/20
கருவறைக்கு முன்னால், தூண்களுடன் கூடிய சிறிய மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.இந்த அமைப்பால் குடைவரையின் உட்புறம் அர்த்த மண்டபம், மகாமண்டபம் என இரு பகுதிகளாகப் இருக்கிறது.
பல்லவர் ஆலய வடிவங்கள்
மகேந்திரன் அமைத்த ஆலயங்கள் அனைத்துமே மலைப்பாறைகளை குடைந்து
12,000வருடங்கள்-10/20
அழகிய தூண்கள் கொண்ட மண்டபங்களுடன் அமைந்திருக்கும்.மாமல்லபுர குடைவரைக் கோவில்களை அமைத்ததும் மகேந்திரவர்மன்தான். முடித்தது மகன் மாமல்லன்.நம்மில் பலர் இவற்றில் பல ஆலயங்களுக்கும் சென்று தரிசனம் செய்திருக்கலாம்.

wix.to/j0DvBxQ
12,000 வருடங்கள்-11/20
பல்லாவரம் குடைவரை கோயிலை பலரும் தரிசித்திருக்க முடியாது. காரணம் இறுதியில்.பல்லாவரம் ஆலயம் சிவன்,பிரம்மா,விஷ்ணு மும்முர்த்திகள் எழுந்தருளிய திருத்தலம்.ஆங்கிலேயின் சர்வே:இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிகளில் பல்லாவரம் முக்கிய இடம் வகிப்பது பலருக்கும் தெரியும்.
12,000 வருடங்கள்-12/20
1851ல் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் “ஜியோலஜிகல் சர்வே”வை துவங்கினர் .
1863ல் பல்லாவரத்தில் பழைய கற்கால மனிதர்கள் (Palaeolithic age) உபயோகித்த கல் கோடாரியும், அர்த்தம் விளங்கா மர்மப் பொருட்களும் தோண்டியெடுக்கப்பட்டன.
தென்னிந்தியாவிலேயே பல்லாவரம்தான் மனிதர்கள்
12,000 வருடங்கள்-13/20
வசித்த பழமைவாய்ந்த இடமென்று அப்போது கண்டுபிடிக்கப்பட்டது.இந்தக்கண்டுபிடிப்பு தென்னிந்திய வரலாற்றை மாற்றி அமைத்தது!
நாம் செல்லும் ஆலயத்தின் இருப்பிடம் இந்த கண்டுபிடிப்பின்படி 12,000 வருடம் பழமை வாய்ந்த இடம்!பல்லாவரத்தில் முக்கிய புராதன விடயங்கள் பல..
12,000 வருடங்கள்14/20
புதையுண்டிருப்பதை 2010-ல் மத்திய அரசின் தொல்லியல் ஆய்வுத்துறை (ASI) உணர்ந்தது.
ஆராய்ச்சி செய்ய ஏதுவாக இங்குள்ள 6 வார்டுகளில் புதிதாக கட்டிடங்கள் எழுப்ப தடையிருக்கிறது. இங்கே The Ancient Monuments and Archaeological Sites and Remains Act, (AMASR) ...
12,000 வருடங்கள்-15/20
அமலில் உள்ளது. புதிதாக கட்டிடங்கள் வாங்க, விற்க முடியாது.ஆராய்ச்சியை முன்னெடுக்க 10,000க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்படவேண்டும் என்பதே இதன் சிக்கல்.

சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசின் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆலயத்தையும், சுற்றுப்புறங்களையும் ஆய்வுசெய்ய
12,000 வருங்கள்-16/20
முனைந்தபோது ஆயிரக்கணக்கில் மக்கள் கூடித்தடுத்து விட்டனர். ஆலயத்தின் விசேடங்கள்
இன்று மலையின் அடிவாரம் வரை குடியிருப்புகள். குடியிருப்பு பகுதியினுள்ளேயே ஆலயத்தின் பாதை பிரிந்து மேடேறி செல்கிறது. ஒரு மாலைவேளையில் இந்த இடத்துக்கு மற்றோரு நண்பருடன் போனோம்.
12,000 வருடங்கள்-17/20
உயரமான இடத்தில் அமைந்தாலும் படிகளும் அமைக்கப்பட்டுள்ளன. எந்த சிரமும் இல்லாமல் அந்த இடத்தை அடைந்தோம். அந்த நிமிடமே வியப்பில் உறைந்தோம். நீங்களும் வாயடைத்து போகக்கூடும்.
ஆலயம் தற்போது ஒரு தர்காவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

wix.to/j0DvBxQ
12,000 வருடங்கள்-18/20
1400 வருடங்கள் பாதுகாக்கப்பட்ட இந்த புராதன ஆலயம் கடந்த ஒரு நூற்றாண்டில் தனது தொன்மையை முழுவதுமாக இழந்துவிட்டது .ஆர்.எச் கிருஷ்ணா சாஸ்திரி எழுதிய “எஃபிகிராஃபியா இண்டிகா” (1909) புத்தகத்தில் தர்காவாக மாற்றப்படுவதற்கு முன்புள்ள புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது.
12,000 வருடங்கள்-19/20
முதல் படமாக பார்த்தோம்.
கோவிலின் சிறப்புகள், அந்த நூலையும், பிற சான்றுகளையும் தொற்றி எழுதியவை."ஆஸ்தானா – இ- மௌலா அலி” தர்கா என்றழைக்கப்படும் இந்த தர்காவை இஸ்லாமிய சகோதரர்கள் நூறு வருடங்களுக்கு மேல் பழமையானதென்று நம்புகிறார்கள்.
wix.to/j0DvBxQ
12,000 வருடங்கள்-20/20
தென்னிந்தியாவின் மிகப் புராதனமான இந்தக் கோவிலை மாற்றியமைத்து இந்த கட்டமைப்பை எழுப்பிய குறிப்புகள் பற்றி அதிகம் தெரியவில்லை.
பல இடங்களில் புதிய கட்டுமானங்கள் எழுப்பப் பட்டுள்ளன. குடைவரையின் வெளிக்கட்டமைப்பு முற்றிலும் அடையாளம் தெரியவில்லை.
12,000 வருடங்கள்-21/20
உச்சியில் ஒரு பகுதி மட்டுமே ஆலயத்தின் பாறை எச்சங்கள் தெரிகின்றன.
வெளிப்புறமும், உட்புறமும் முற்றிலுமாக பூசப்பட்டிருப்பதால் இந்த ஆலயத்தின் பழமையை இனி மறுபடியும் காண முடியாது…
இந்து சமயத்தினருக்கும் இங்கே அனுமதியுண்டு. எம்மதமும் சம்மதமே.
12,000 வருடங்கள்-22/20
அந்தி நேரம் அஸ்தமனத்தை நினைவூட்டியத வீடு திரும்பும் தருணம்.அங்கே உறைந்து போக செய்யும் ஒரு மௌனம்.அதனால் என்ன,இறைவன் எல்லா இடத்திலும் தான்உறைந்திருக்கிறான்.
12,000 வருடங்கள்-23/20

இந்த ஆலயத்தை கற்களால்தான் பல்லாயிரம் வருடங்கள் நிலைநிறுத்த முடியும் என மகேந்திர வர்மர் நினைத்திருப்பார்..

இன்னமும் அது உண்மைதான்.

நன்றி..

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mathavan Venugopal

Mathavan Venugopal Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MVenukopal

19 Oct
வணக்கம்.
800 ஆண்டுகள் முந்தையது... அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்!
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு தலமையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி ஜமீன்தார் அரண்மனை எதிரில் பழைமையான மண்டபம் போன்ற அமைப்பில் இருந்த...

wix.to/8UB_BxQ
800 ஆண்டுகள்-2/15
அங்காள ஈஸ்வரி கோயில் விதானத்தில் 6 அடி நீளமுள்ள இரு கல்லில் கல்வெட்டுகள் இருந்ததைக் கண்டறிந்தனர். புதுக்கோயில் கட்ட அம்மண்டபத்தைப் பிரித்தபோது 3 அடி உயரமுள்ள மேலும் ஒரு கல்லில் கல்வெட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டை படி எடுத்து ஆய்வு செய்தபோது
800 ஆண்டுகள்-3/15
இது கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தெரியவந்தது. இக்கல்வெட்டில்சொல்லப்பட்டுள்ள அனைவரின் பெயர்களும் அழகிய தமிழ்ப் பெயர்களாக உள்ளன. இந்த கல்வெட்டுகள் குறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு,

wix.to/8UB_BxQ
Read 13 tweets
16 Oct
வணக்கம்.
ஈழத்தின் திருகோணமலை மாவடிச்சேனையில் உள்ள தமிழி கல்வெட்டுக்கள்!நான் இரண்டு நாட்களிற்குமுன் இணையத்தில் திருமலை பற்றிய இடவாய்வுகளைத் தேடிக்கொண்டிருந்தபோது எனக்கு 2005 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு அரிய மாதயிதழ் ஒன்று தென்பட்டது.அது கொம்பனிக்குச்சொந்தமாது.
wix.to/mUAfBxA ImageImageImageImage
ஈழத்தின்-2/5
அதன் பெயர் "எரிமலை".
அதைப் பதிவிறக்கி வாசித்த போது அங்குதான் இந்த அரிய தகவல் இருந்தது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
அதிலுள்ள தகவலாவது,
"திருமலையின் வெருகல் பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாவடிச்சேனையில் உள்ள கல்லடிமலையின் மேற்புறப் பாறையில்.. ImageImageImageImage
ஈழத்தின்-3/5
2 மீ நீள அகலத்தில் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இதுவரை எவரும் இக்கலவெட்டு தொடர்பாக எவரும் ஆய்வுகள் எதையும் மேற்கொள்ளவில்லை. அதில் உள்ள எழுத்துக்கள் 'தமிழி' எழுத்துகள் ஆகும். மேலும் மாலையின் உச்சியில் கட்டுமானத்திற்கான அடித்தளம் ஒன்று காணப்படுகிறது. ImageImageImageImage
Read 5 tweets
9 Oct
வணக்கம்

அசுணம் பற்றிய சங்ககால ஈழத்துப் புலவரின் பாடல்!அசுணமா? மாசுணமா? விலங்கினமா? பறவையினமா? பாம்பினமா?
சங்கத் தமிழ் இலக்கியத்தில் ஒரு அதிசய விடயம் இருக்கிறது. அசுணம் என்னும் ஒரு அதிசய மிருகம் பற்றிய தகவலே அது.நீண்ட பதிவு!Link பயன்படுத்தவும்....

wix.to/vEBSBwM
அசுணம்-2/20
கற்பனை ஓவியங்களில் மட்டுமே காணக்கிடைக்கும் அழிந்துப் போன விலங்குகள் எவ்வளவோ உள்ளன. தொல்விலங்கியல் (Paleontolgy or Paleo zoology) என்னும் துறை இது போன்ற விலங்குகளின் எலும்புக்கூடுகள் ,படிம அச்சுக்கள் (Fossils) ஆகியவற்றை சேகரித்து வைத்துள்ளன. ஆனால் தமிழ் இலக்கியத்தில்..
அசுணம்-3/20
குறிப்பிடப்பட்டுள்ள அசுணம் பற்றிய எந்தவொரு தடயமும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனை பற்றி சங்க இலக்கியங்களில் ஈழத்துப் புலவர் பூதந்தேவனாரும் தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த அதிசய அசுணம் பற்றி சங்க இலக்கியங்கள் கூறும் விபரங்கள்:
Read 22 tweets
8 Oct
வணக்கம்.
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன!!
இதில் முந்நீர் என்பது கடலைக்குறிக்கும் .அதுமட்டுமா தமிழர் கடலுடன் உறவாடிக்குலாவிகொண்டு  இருந்தனர் என்பதற்கு கடலுக்கு தமிழில் இருக்கும் அதிகப்படியான சொற்களே சான்று ! .அவைகள்..
wix.to/lkDqBwI
முந்நீர் பழந்தீவு-2/10
நீர், புணரி, நேமி, பரவை, வேலாவலயம், ஆர்கலி, அத்தி, திரை, நரலை, வாரிதி, பாராவாரம், பௌவம், வேலை, முந்நீர், உவரி, கார், ஆழி, வாரி, கடல்,இவைகளும், மற்றும் சலராசி, தோயநிதி, அம்பரம், உப்பு, சலநிதி, உததி, சிந்து, சலதி, வெள்ளம், நதிபதி, வீரை, அளக்கர், சமுத்திரம்...
முந்நீர் பழந்தீவு-3/10
போன்ற  இவைகளில் பல தமிழ்ச் சொற்கள் அல்ல. கடல் மூன்று வழி நீரால் ஆனது என்பதாலேயே முந்நீர் எனப்பட்டது. கடலில், அதனடியில் சுரக்கும் ஊற்று நீர், மலைகளில் பொழிந்த மழை நீர் வழிந்தோடி ஆறாக உருவாகி ஓடி வந்து கலக்கும் ஆற்று நீர் மேகங்கள் கருவுற்று நேரடியாகக்..
Read 10 tweets
8 Oct
வணக்கம்.
தலைமைத்துவத்திற்காக நீங்கள் யாரை மிகவும் மதிக்கிறீர்கள், ஏன் (குறிப்பிட்டு கூறுங்கள்)?
இதை பார்க்கும் பொழுது என்ன தோன்றுகிறது? ஓநாய் பொதிகளாக நகர்கிறது. ஆம் நானும் அப்படி தான் நினைத்தேன். ஆனால் அதற்கு பின்னால் ஒரு மிக பெரும் தலைமை பண்பு ஒளிந்திருக்கிறதென்று.
தலைமைத்துவம்-2/5
இந்த பொதிகளில் செல்லும் முதல் மூன்று ஓநாய்கள் அந்த கூட்டத்திலேயே வயது முதிர்ந்தவைகள். அதை பின்னால் விட்டால் பின் தங்கிவிடும் எனவே அதன் வேகத்திற்கு தான் அனைத்து ஓநாய்களும் நகரும். வயது முதிர்ந்தவர்களை விட யார் சிறப்பாக வழிநடத்திட முடியும்?
தலைமைத்துவம்-3/5
அடுத்து செல்லும் 5 ஓநாய்கள் மிகவும் பலசாலிகள்.அது முன் வரிசை பலசாலிகள்.அது முன்னாள் செல்லும் முதியவர்களை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் விதத்தில் செல்கிறது.நடுவில் வருபவர்கள் குட்டிகள்,பெண்கள்,பலம் குன்றியவர்கள்.
அதன் பின் வரும் 5 ஓநாய்களும் பின் வரிசை பலசாலிகள்.
Read 6 tweets
7 Oct
வணக்கம்.

திருப்பூர் அருகே அஸ்திவாரம் இல்லாமல் தரையில் நிற்கும் கல்மண்டபம் தமிழர்களின் பாரம்பரிய கட்டிட கலை பாதுகாக்கப்படுமா?
திருப்பூர் அருகே அஸ்திவாரம் இல்லாமல் தரையில் நிற்கும் கற்தூண்கள் கொண்ட சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.
wix.to/v0CkBv8 Image
திருப்பூர்-2/15
தமிழர்களின் பாரம்பரியமிக்க இந்த கட்டிட கலை பாதுகாக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.எந்திரத்தனமாக மாறிப்போன மனித வாழ்க்கையில் இன்றைய நாகரிக உலகில் அக்கம் பக்கத்தினரை கூட நாம் அறிந்து வைத்திருக்கவில்லை. முன்னோர் வகுத்த வாழ்வியல் முறைகளை.. Image
திருப்பூர்-3/15
அலட்சியம் செய்வது வருந்தத்தக்க விஷயம் தான். நம் முன்னோர் கூட்டு வாழ்க்கை, உணவே மருந்து, ஒழுக்கம், சுயகட்டுப்பாடு உள்ளிட்ட நற்பண்புகளை நமக்காக விட்டுச்சென்றனர்.அதுமட்டுமின்றி காலத்தால் அழியாத பல கட்டுமானங்களையும் விட்டுச் சென்றுள்ளனர்.

wix.to/v0CkBv8 Image
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!