வணக்கம்.
இலங்கையின் பூர்வ குடிகள் தமிழர்களே;வெளிப்பட்டது மற்றொரு ஆதாரம்!இலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

wix.to/BUBwBxY
இலங்கையின்-2/25
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை, தொல்லியல் துறையின் மூத்த பேராசிரியர் புஷ்பரட்ணம் இதனை கண்டுபிடித்துள்ளார்.
இந்த நிலையில், நாக பாம்பை பானையில் வைத்து வழிபாடுகளை செய்தமைக்கான ஆதரங்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக பேராசிரியர் புஷ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.
இலங்கையின்-3/25
வட இலங்கை மக்களிடையே நாகத்தை பானைகளில் வைத்து வழிபாடு செய்த தொன்மையான வரலாறு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
தெற்காசியாவில் தொன்மையான நாட்டுப்புற வழிபாடுகளில் ஒன்றாக நாக வழிபாடு காணப்படுகின்றது.

wix.to/BUBwBxY
இலங்கையின்-4/25
நாகங்கள் பூமிக்குள் இருந்து வந்து, மீண்டும் பூமிக்குள் மறைந்து போவதனால், ஆதி காலத்து மக்கள் அவற்றை மண் புற்றுக்குள் வைத்து வழிபாடுகளை நடத்தியுள்ளமைக்கான சான்றுகளும் காணப்படுவதாக அவர் கூறுகின்றார்.
கட்டுக்கரை மற்றும் நாகபடுவான் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட...
இலங்கையின்-5/25
தொல்லியல் ஆகழ்வாய்வுகளின் போதே இந்த விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இந்த ஆதாரங்களின் ஊடாக வட இலங்கை மக்கள், நாக வழிபாட்டை குல வழிபாடாக கொண்டிருந்தமை உறுதிப்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.

wix.to/BUBwBxY
இலங்கையின்-6/25
கிளிநொச்சி – பூநகரி பகுதியிலுள்ள முழங்காவில் நகருக்கு அண்மையிலேயே இந்த பகுதிகளில் அமையப் பெற்றுள்ளன.
நாகபடுவான் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நாக வழிபாட்டு சான்றுகளில் சில, தெற்காசிய நாடுகளில் இதுவரை கிடைக்கவில்லை என பேராசிரியர் கூறுகின்றார்.
wix.to/BUBwBxY
இலங்கையின்-7/25
நாகபடுவான் என்ற பெயரில் நாகம் இருப்பதுடன், படுவம், படுவான் என்றால் ஆழமான குளம் அல்லது பெரிய குளம் என பொருட்படுகின்றது என கூறப்படுகின்றது.
இதன்படி, நாககுளம் என்ற பொருளை கொண்ட இந்த ஊரின் பெயர் மாற்றம் பெறாது, பண்டைய தமிழ்ச் சொல்லிலேயே நாகபடுவான் என அழைக்கப்படுவதாக..
இலங்கையின்-8/25
பேராசிரியர் விளக்கமளிக்கின்றார்.
குறித்த இடத்திலிருந்து ஆதிகால பண்பாட்டுச் சின்னங்கள், சுடுமண்ணிலான நாகச் சின்னங்கள், பீடத்துடன் கூடிய நாகம், நாகினி சிலைகள், சிற்பங்கள், நாக கற்கள் உள்ளிட்ட பழமை வாய்ந்த அடையாள சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின்-9/25
இந்த ஆதாரங்கள்,ஆதிகால மக்கள் நாகத்தை தமது குலமரபுச் சின்னமாகக் கொண்டிருந்தார்கள் என்பதுஉறுதிப்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
அத்துடன்,நாகச் சிற்பத்தை பானையில் வைத்து வழிபட்டமைக்கான சான்றுகள் தொல்லியல் அறிஞர்களுக்கு புதிய விடயங்களாக உள்ளது.
இலங்கையின்-10/25
குறித்த அகழ்வு குழியொன்றிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட, அரைவட்ட வடிவில் செய்யப்பட்ட பெரிய பானை, மண்ணில் புதைக்கப்பட்டு, அதன் மேற்பகுதியில் பாம்பு வந்து போவதற்கான வாய்ப் பகுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

wix.to/BUBwBxY
இலங்கையின்-11/25
அத்துடன், அந்த பானையைச் சுற்றி மூடிய நிலையில் பாம்பு புற்றை அடையாளப்படுத்தும் 4 சிறு கலசங்களும் காணப்படவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
பானையிலிருந்து மண் அகற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்ட போது, நாக பாம்பின் சிலை பானையால் மூடப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையின் -12/25
இந்த பானையின் மூன்று திசைகளிலும் தெய்வங்கள் அமர்ந்திருக்கும் பீடங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
அவற்றில் அமர்ந்துள்ள தெய்வங்களின் இடது கால் பானையை முட்டியவாறு உள்ளது.
நான்காவது திசையில் மண் சட்டிகளின் விளிப்புப் பகுதியில் நான்கு திசைகளை..
இலங்கையின்-13/25
நோக்கியவாறு நாகபாம்பு படமெடுத்த நிலையில் இருக்க, அவற்றின் வால் பகுதிகள் சட்டிக்குள் இணைந்து சட்டியின் நடுமையத்தில் ஒரு வட்டமாகக் காணப்படுகின்றது.
இந்த ஆதாரங்கள் பாம்பு புற்று வழிபாடு தோன்றுவதற்கு முன்னோடியாக ஆதியிரும்புக்காலப் பண்பாட்டுடன் தோன்றிய தொன்மையான..
இலங்கையின்-14/25
வழிபாட்டு மரபு எனக் கூறலாம் என பேராசிரியர் குறிப்பிடுகின்றார்.
அத்துடன், ஒன்று மேற்பட்ட நாக வடிவங்கள், மண் சட்டிகளில் வைக்கப்பட்டமைக்கான ஆதாரங்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
wix.to/BUBwBxY
இலங்கையின்-15/25
நாக வழிபாட்டு ஆலயங்களில் நாகதோஷம் நீங்க செப்பு அல்லது மண் பாத்திரங்களில் நாக பாம்பை வைத்து ஆலயங்களுக்கு கொடுக்கும் மரபு ஆதிகாலத்திலிருந்து தோன்றியிருக்கலாம் என பேராசிரியர் கருதுகிறார்.
திருகோணமலை உள்ளிட்ட அநுராதபுரம் நகருக்கு வட பகுதியிலுள்ள பிராந்தியம்,
இலங்கையின்-16/25
நாகதீப(ம்), நாகநாடு என வரலாற்று மூலங்களில் தனித்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த பெயர்கள் கி.பி.13ஆம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தில் வன்னி, வன்னிப்பற்று என்ற பெயர்களும், 15ஆம் நூற்றாண்டில் யாழ்பாணம், பட்டினம் என்ற பெயரும்..
இலங்கையின்-17/25
தோன்றும்வரை தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் இருந்து வந்ததற்கான ஆதாரங்கள் காணப்படுவதாக அவர் கூறுகின்றார்.
பண்டைய இலங்கையில் நாக இனமக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் பல பிராந்தியங்களில் காணப்பட்டாலும், அது இலங்கையில் ஒரு பிராந்தியத்தின் பெயராக அடையாளப்படுத்திக்..
இலங்கையின்-18/25
கூறப்பட்டு வந்ததற்கு தற்காலத்தில் வடஇலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பூர்வீக வரலாறு ஆதியிரும்புக்காலப் பண்பாட்டை அறிமுகப்படுத்திய நாக இனக்குழுவோடு தோன்றி வளர்ந்ததையே கட்டுக்கரை, நாகபடுவான் அகழ்வாய்வுகள் உறுதிப்படுத்துகின்றது எனலாம்..
இலங்கையின்-19/25

என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை, தொல்லியல் பேராசிரியர் புஷ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.

நன்றி: பி.பி.சி

wix.to/BUBwBxY

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mathavan Venugopal

Mathavan Venugopal Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MVenukopal

21 Oct
வணக்கம்.
சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல!
வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்குஉணர்த்தியவர்,தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தின்,கரந்தை புலவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய,மறைந்த மரியாதைக்குரிய ஆய்வறிஞர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள்.

wix.to/sECdBxk ImageImageImageImage
சிலப்பதிகாரம்-2/15
சிலப்பதிகாரத்தைத் திறம்பட கற்றவர், சிலப்பதிகாரத்தில் ஊறித் திளைத்தவர். அவரி்ன் மனதில் நீண்ட நாட்களாகவே ஒர் ஆசை,ஏக்கம்,கனவு.சிலப்பதிகாரத்தில் கண்ணகி பயணம் செய்த பாதை வழியாகவே ஒரு பயணம் செய்தால் என்ன என்ற தணியாத தாகம்.எண்ணி துணிந்து இறங்கினார். Image
சிலப்பதிகாரம்-3/15
1945 ஆண்டில் கண்ணகி பயணித்த பாதை வழியாகவே இவரும் நடந்தே சென்றார்.தன் ஊதியத்தைச் செலவிட்டு நடந்தார்.பின் தன் உடமைகள் ஒவ்வொன்றையும் விற்று காசாக்கிக் கொண்டே 17 ஆண்டுகள் நடந்து முடிவில் சிலப்பதிகாரம் கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதை உலகிற்கு உணர்த்தினார். ImageImage
Read 19 tweets
21 Oct
வணக்கம்.
இங்கிலாந்தில் விடுதலை புலிகளுக்கு எதிரான தடை நீங்குகிறது!விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என்று அந்த நாட்டின் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான சிறப்பு ஆணையம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது.
wix.to/j0BqBxk ImageImageImage
இங்கிலாந்தில்-2/5
இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம்தடை செய்யப்பட்டுள்ளது.இந்த தடைக்கு எதிராக 2018-ல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடிதம் அனுப்பியது.உள்துறை செயலாளர் சஜித் ஜாவித் எம்.பி.க்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டது. இக்கடிதத்தை 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் நிராகரித்தார் Image
இங்கிலாந்தில்-3/5
இதனையடுத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்,விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிராக மேல்முறையீட்டுவழக்கைதொடர்ந்தது. இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையத்தில் -Proscribed Organisations Appeal Commission இந்த மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது ImageImageImageImage
Read 6 tweets
20 Oct
வணக்கம்.
நன்றி-வணக்கம் என்பதற்கு அர்த்தம் இதுதான்;விஜய்சேதுபதி!எல்லாம் முடிந்து விட்டது என்பதை"சிம்பிளிக்கா"கூறிவிட்டார்!இது,அவருக்கு தேவைதானா?!!
முத்தையா முரளிதரன் அறிக்கையை ட்விட்டரில் பகிர்ந்த விஜய் சேதுபதி நன்றி வணக்கம் என ட்வீட் செய்து தனது நிலைப்பாட்டைதெளிவுபடுத்தியுள்ளார். ImageImageImage
நன்றி-வணக்கம்-2/8
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என ரசிகர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.800’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படம் அரசியல் படமல்ல என்று விளக்கமளித்தது. Image
நன்றி-வணக்கம்-3/8
அதேபோல் முத்தையா முரளிதரனும் தன் மீதான சர்ச்சைகளுக்கு விளக்கமளித்திருந்தார்.எனினும் தொடர்ந்தும் எதிர்ப்புக்கள் கிளம்பியவண்ணமே இருந்தது.
இந்நிலையில் இன்று அறிக்கை வெளியிட்ட முத்தையா முரளிதரன், “என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என்று Image
Read 7 tweets
20 Oct
வணக்கம்
தனுஷ்கோடியில் இருந்து பார்த்தால் இலங்கை தெரியுமா அல்லது இலங்கையில் இருந்து பார்த்தால் தனுஷ்கோடி தெரியுமா?தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தெரியாது ஏனெனில் நமது பார்வைக்கு புலப்படும் அதிகபட்ச தொலைவு 4-4.5 கிலோமீட்டர்.
wix.to/jkDjBxY ImageImageImageImage
தனுஷ்கோடி-2/5
பூமி வட்ட வடிவில் இருப்பதால் அதற்கு மேல் உள்ள தொலைவு நமது பார்வையில் இருந்து மறைக்கப்படும்.ஆனால் ஒரு 5-10 அடுக்கு மாடி கட்டிடத்தில்இருந்து கண்டிப்பாக ஒரு பகுதி இலங்கையை காண முடியும். தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல் முனை (இந்தியாவின் கடைசி மேற்கு எல்லை) பகுதியில் இருந்து Image
தனுஷ்கோடி-3/5
காண முடியாது, ஆனால், இலங்கை விமானப் பயணம் செய்தால் ஆகாய விமானத்தில் இருந்து இரண்டு நாட்டின் ஓரங்களையும் காண முடியும். அது வியப்பூட்டும் அனுபவமாக இருக்கும்.
ஒருவேளை அரிச்சல் முனையில் ஒரு காட்சி கோபுரம் அமைக்கப்பட்டால் அதன் உயரம் 30-40 மீட்டர் இருந்தால்.. ImageImageImageImage
Read 5 tweets
19 Oct
வணக்கம்.
12,000 வருடங்கள் மனிதர்கள் புழங்கிய இடம். கி.பி 600ல் எழுப்பப்பட்டு 14 நூற்றாண்டுகள் தொழப்பட்டசிவனாலயம்.இப்படியொரு நிலை வரும் என்று பல்லவ மன்னன் மகந்திரவர்மன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டான்!தமிழகத்தின் மிகவும் புராதனமான தொன்மை ஆலயங்களில் ஒன்று
wix.to/j0DvBxQ
12,000 வருடங்கள்-2/20
இது சமணம் தழுவிய முதலாம் மகேந்திரவர்மன் தாய் மதம் திரும்பிய உடன் எழுப்பிய குடவரை சிவனாலயம்.
தாம்பரத்துக்கும் சென்னைக்கும் இடையில் சென்னையிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் பல்லாவரம்.
பல்லாவரத்துக்கு கிழக்கே மலைப்பகுதியில் இந்த குடைவரை கோயில்.(இது,பழைய படம்)
12,000 வருடங்கள்-3/20
சென்னையிலிருந்து GST சாலையிலிருந்து, பல்லாவரத்தில் இடதுபுறம் தர்கா சாலைப்பிரிவில் பிரிந்தால், ஒரு கிலோ மீட்டரில் ஆலயத்தை அடையலாம்.இது குடவரை குகைக்கோவில். பல்லவபுரம் என்ற சொல் மருவி தற்போது பல்லாவரம் என்றழைக்கப்படும் பகுதியை 7-ஆம் நூற்றாண்டில் முதலாம்..
Read 23 tweets
19 Oct
வணக்கம்.
800 ஆண்டுகள் முந்தையது... அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்!
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு தலமையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி ஜமீன்தார் அரண்மனை எதிரில் பழைமையான மண்டபம் போன்ற அமைப்பில் இருந்த...

wix.to/8UB_BxQ
800 ஆண்டுகள்-2/15
அங்காள ஈஸ்வரி கோயில் விதானத்தில் 6 அடி நீளமுள்ள இரு கல்லில் கல்வெட்டுகள் இருந்ததைக் கண்டறிந்தனர். புதுக்கோயில் கட்ட அம்மண்டபத்தைப் பிரித்தபோது 3 அடி உயரமுள்ள மேலும் ஒரு கல்லில் கல்வெட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டை படி எடுத்து ஆய்வு செய்தபோது
800 ஆண்டுகள்-3/15
இது கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தெரியவந்தது. இக்கல்வெட்டில்சொல்லப்பட்டுள்ள அனைவரின் பெயர்களும் அழகிய தமிழ்ப் பெயர்களாக உள்ளன. இந்த கல்வெட்டுகள் குறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு,

wix.to/8UB_BxQ
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!