இரவு வார்ட் ரவுண்ட்ஸ்.
கர்ப்பப்பை பிரச்சினைக்காக அனுமதியாகியிருந்த அந்த 50 வயதுப் பெண்மணியுடன் அவரது மகளும், 4 வயதுப் பேரனும் அதே அறையில் இருக்க,
"ஏம்மா குழந்தையை ஹாஸ்பிடலுக்கெல்லாம் அழைச்சுட்டு வர்றீங்க?
அதுவும் இந்த சமயத்தில!" என்று கடிந்து கொண்டேன். 1/n
"சாரி மேடம்...
இவங்கப்பாவுக்கு நைட் ஷிஃப்ட்..
வீட்டில வேற யாரும் இல்ல மேடம்..
நாளைக்கு காலைல வந்து, இவனை கூப்ட்டுட்டு போயிருவாரு.."
என்று மன்னிப்பு கேட்கும் குரலுடன் அவரது மகள் கூற, அனைத்தையும் துறுதுறுக் கண்களோடு கவனித்துக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை.. 2/n
இரவு வேளையில் கூட தூங்காமல், அதிலும் மாஸ்க் வேறு அணிந்து நின்றிருந்த அந்தக் குழந்தையிடம்,
"உன் பேர் என்ன குட்டிம்மா..?" என்று நான் கேட்க, "ராகுல் கிஷோர்" என்று என்னிடம் பதிலளித்துவிட்டு, மறுபுறம் திரும்பி,
"சிஸ்டர்.. மாஸ்க்கை சரியாப் போடுங்க..." என்றது.. 3/n
லேசாக இறங்கியிருந்த மாஸ்க்கை உடனடியாக சரி செய்த வார்ட் சிஸ்டர்,
"ஏன் மாஸ்க் போடணும்னு சொல்லு கிஷோர்..?"
என்று கேட்க..
"இல்லேன்னா கொரோனா வந்துடும்..." என்று கண்களை விரித்துக் கூறியது அந்த சுட்டிக் குழந்தை.. 4/n
ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்து,
"கொரோனா வராம இருக்க என்ன செய்யனும் கிஷோர்.?" என்று நான் கேட்க..
"கையை நல்லா சோப் போட்டு கழுவணும்.." என்றபடி தனது சின்னஞ்சிறு கைகளை அழகாக, முறையாக அழுத்தித் தேய்த்தும், விரலடுக்குகளைத் தேய்த்தும் காட்டியது.. 5/n
"கையை நல்லா கழுவிட்டு பின்ன மாஸ்க் போடணும்.." என்று சிரித்தது.
"உனக்கு யாரு இதெல்லாம் சொல்லித் தந்தாங்க?" என்று அவனிடம் நான் கேட்க,
"நீங்களும் இந்த சிஸ்டரும் தான்.
அன்னிக்கு டிவில நீங்க பேசினதை அம்மா எனக்கு யூ-ட்யூப்ல காமிச்சாங்களே.
நான் நிறைய தரம் பாத்தேன்..." என்றது.. 6/n
"மேடம், பயபுள்ள நம்ம வீடியோவைப் பாத்துட்டு தான் இவ்வளவும் பேசுது." என்று சந்தோஷமாக சிஸ்டர் சொல்ல,
"கொரோனா வராம இருக்கணும்னா மாஸ்க் போடணும், கையைக் கழுவணும்..
அதோட நல்லா சாப்ட்டு, நல்லாத் தூங்கணும். முதல்ல தூங்கு." என்று அவனைத் தட்டிக் கொடுத்துவிட்டு, அடுத்த அறைக்கு நகர்ந்தேன்.
புதியதொரு விஷயத்தை குழந்தைகளுக்கு புரியவைக்க நாம் எத்தனையோ முயற்சிகளைச் செய்யும்போது, அனைத்தையும் நொடிப்பொழுதில் உள்வாங்கி நமக்கும் புதியதொரு பாடத்தைப் புகட்டிவிடுகின்றனர் குழந்தைகள்.
அன்பும் நன்றியும் கிஷோருக்கும், கிஷோர் போன்ற குழந்தைகள் அனைவருக்கும்.!
💖💖 #CatchThemYoung
n/n
சாலையில் தூரத்தில் பயணிக்கும்போதே வெண்ணிறக் கட்டிடமாக "சவிதா" நீலநிற LED விளக்குகள் ஒளிர, மருத்துவமனையாக சவிதா இயங்கத் துவங்கி இன்றோடு நான்கு வருடங்கள் முடிந்துவிட்டன.. 1/n
ஆறு வருடங்களுக்கு முன்பு, வெற்றிடமாக இருந்த ஒரு சிறிய இடம்.. இன்று மூன்று மாடிக் கட்டிடமாக உயர்ந்து நிற்க..
அதன் முகப்பில் ஒளிரும் "சவிதா மருத்துவமனை" பெயர்ப் பலகை, பல நினைவலைகளை அள்ளி வீசுகிறது.. 2/n
அப்போது இதே முகப்பில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஓலைக் குடிசை ஒன்றில், ஒரு சிறிய மேஜையின் முன்னால், கைகளில் பெரிய வரைபடத்தோடும், கண்களில் பெருங்கனவோடும் அமர்ந்திருப்பார் ஆர்க்கிடெக்ட் மனோகரன் சார்..
அவருடன் எலெக்ட்ரிக்கல் இஞ்சினீயர் சகாயராஜ் மற்றும் கட்டிட கட்டுமானி பாரதி.. 3/n
#வாமனனா? #மகாபலியா?
"செத்த மகாபலியையும் கொண்டாடறாங்க, அவனைக் கொன்ன வாமனனையும் கும்பிடறாங்க."
நண்பர் @minimeensன் ஸ்டேட்டஸ் இது..!
உடன் கன்னத்தில் கைவைத்த ஸ்மைலி வேறு.!
...ஆக இவர்களில் நல்லவர் யார்.?
ஏன்..?
ஒரு சிறிய விவாத மேடை இது..! 1/n
மகாபலி..
அசுர அரசர்களிலேயே வலிமை மிகுந்த அரசர். சிவபக்தர். அறிவார்ந்த ஞானி. அன்பானவர். தர்மத்தின் அடையாளச் சின்னமாக விளங்கியவர். தன்னிடம் பிச்சை கேட்டுவந்த வாமனன் என்ற ஏழை பிராமண வேடம் தரித்த கடவுளுக்கு, கொடுத்த வாக்கிலிருந்து தவறாததால், தனது சாம்ராஜ்யம் முழுவதையும் இழந்தவர். 2/n
அனைத்தையும் இழந்தபின்னும், தனது மக்கள் நலமும், வளமும் பெற்று வாழ்ந்திட வரம் கேட்டதோடு, அவர்களை ஆண்டிற்கு ஒருமுறை காண வருபவர் மகாபலி.
அவர் வருகை தரும் நாளான ஓணத்தையும், அன்பு நிறைந்த அந்த மகாபலியையும், மக்கள் கொண்டாட வேறு காரணங்கள் எதுவும் தேவையில்லை என்றே தோன்றுகிறது..!! 3/n
"என்னது..
பிரசவ வலியில்லாம இருக்கற ஊசியா..?
அதெல்லாம் வேணாம்..!"
என்று மறுத்துக் கூறிய புவனேஸ்வரியின் பாட்டிக்கு வயது எண்பதைத் தாண்டியிருக்கும்..
கூன் விழுந்த உடல்..
சுருக்கங்கள் நிறைந்த முகம்..
ஆனால் குரலில் மட்டும் அத்தனை தெளிவு.. 1/n
"பாட்டிம்மா..
உங்க பேத்தி வலி தாங்க மாட்டேங்கறா..
பனிக்குடம் வேற உடைஞ்சிடுச்சிருக்கு..
இந்த ஊசியைப் போட்டுட்டா, அவளுக்கு கொஞ்சம் சுலபமா இருக்கும்..
இந்த ஊசியால, அம்மாவுக்கும், குழந்தைக்கும் பாதிப்பு எதுவும் இல்ல.."
என்று நான் கூறியதை அவர் காதில் வாங்கிக் கொண்டதாக தெரியவில்லை. 2/n
"எனக்கு நாலு புள்ளைங்க. எல்லாம் வீட்டில தான் பிரசவம். இவ அப்பன் பொறந்தப்ப உதவிக்கு கூட யாருமில்ல"
என்றார் அவர்.
"ம்மா, உங்க காலம் வேற. இப்ப நிலமை வேற. அப்ப வீட்டில நீங்க எத்தனை வேலை பாத்திருப்பீங்க?
ஆனா உங்க பேத்திக்கு மெஷின்தானே வேலை செஞ்சு தருது?" என்று நான் சொன்னதை ஏற்கவில்லை
மருத்துவருக்கும், செவிலியருக்கும் இடையே ஓர் உரையாடல்..
"மேம்.. பாப்பாக்கு காய்ச்சல் கொதிக்குது..
எதுவுமே சாப்பிட மாட்டேங்கறா..
காய்ச்சல் மருந்து தந்தவுடனே அப்படியே துப்பிடறா..
யூரின் போகவே இல்ல..
விடாம அழுதுட்டே இருக்கா..
என்ன பண்றதுன்னே தெரியல மேம்.." 1/n
"குழந்தைக்கு ஒரு கப் வெண்ணிலா ஐஸ்கிரீம்ல கொஞ்சம் ஆரஞ்சு இல்லே ஆப்பிள் சேர்த்துக் குடும்மா..
சரியாயிடும்.."
"மேம்.. பாப்பாக்கு காய்ச்சல் இருக்கும்போது ஐஸ்கிரீமா..?
அதிகமாயிடாதா..?"
"நீ முதல்ல சாப்பிடக் குடுடா..
அப்பறமா வந்து சொல்லு.." 2/n
"மேம்.. நிஜம்மாவே பாப்பாக்கு காய்ச்சல் குறைஞ்சிருக்கு..
விளையாட ஆரம்பிச்சுட்டா..
ஆனா எப்படின்னு சொல்லுங்க..?"
"சிம்பிள்டா.. காய்ச்சல், சளி இருக்கும்போது குழந்தைங்க சாப்பிடவும் செய்யாது, வெறும் தண்ணி இல்ல கஞ்சி இது எதையும் முழுங்காது.. 3/n
திடீரென ரோட்டில் மயக்கமுற்று கீழே விழுந்த அந்தப் பெரியவரை அவசர சிகிச்சைக்கு தூக்கிக் கொண்டு ஓடிவந்தனர் அருகிலிருந்தவர்கள்.
விழுந்தவருக்கு அறுபது வயதிருக்கும். மயக்கமான நிலையில் தர்ஷன் எனும் பெயரைச் சொல்லி சொல்லிக் கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்...
1/n
ஈ.சி.ஜி.யில், மாரடைப்பு தெரியவர
"Tab. Aspirin (2) 300mg,
Tab. Clopidogrel (4) 300mg,
Tab. Atrovastatin (4) 80mg,
என மாத்திரைகள் அனைத்தையும் விழுங்கச் செய்து,
Tab. Sorbitrate 5mg நாக்கின் அடியில் வைத்து, அவரை இருதய அவசர சிகிச்சைப் பிரிவுக்கு உடனடியாக அனுப்பி வைத்தோம்.. 2/n
இரண்டு மணிநேரம் கழித்து,
அங்கிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட இருதய சிகிச்சை வல்லுநர்,
"Timely referral. அவருக்கு Angioplasty செய்தாகிவிட்டது.
நலமாக இருக்கிறார். தனது பேரன் தர்ஷனுடன் மீண்டும் விளையாட உதவி புரிந்ததற்கு, உங்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்தார்"
என்றார்... 3/n