#thread
ஆளுநர் என்பருக்கான உரிமை என்ன? தேவை என்ன?
அரசியலமைப்புச் சட்டத்தின் படி மாநில அரசின் தலைமை ஆளுநரும், மத்திய அரசின் தலைமை குடியரசுத் தலைவரும் ஆவார்கள். இது பிரிட்டிஷ் அரசின் கவர்னர் ஜெனரல், அவர் பிரதிநிதியான மாகாண மாகாண ஆளுநர் எனும் முறையின் நீட்சி. இந்தியா குடியரசாக ஆன
பிறகு இந்தப் பதவிகள் ஜனாதிபதி, ஆளுநர் என அலங்காரப் பதவியாக ஆகிவிட்டன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எடுக்கும் முடிவுகளுக்கான அரசாணையை, சட்டத்தை அங்கீகரிக்கும் வேலை இவர்களுடையது. இது போக பெரும்பான்மையை முடிவு செய்வது, ஆட்சியமைக்க அழைப்பது போன்ற தேர்தல் முடிவுகளும் இவர்களிடம்
உண்டு. அரசால் வெளியிடப்படும் எந்தவொரு ஆணையும், சட்டமும், ஏன் டெண்டரும் கூட "ஆளுநரின் பேரில்" என்றே வெளிவரும். அதுவும் ஒரு சம்பிரதாயம்தான். சரி! இப்போது சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள "அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5%
இட ஒதுக்கீடு" சட்ட மசோதாவை ஆளுநர் ஏற்க மறுத்தால் என்ன செய்ய வேண்டும். அவர் மசோதாவை திருப்பி அனுப்பிய காரணங்களை அரசு மீண்டும் ஆராய வேண்டும். காரணங்கள் பொருத்தமாக இல்லையெனில் மீண்டும் அதே மசோதாவை எந்தவிதத் திருத்தமும் இன்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம். அப்படி இரண்டாம் முறையும்
அனுப்பப்பட்ட மசோதாவை நிராகரிக்கும் அதிகாரம் அரசியலமைப்புச் சட்டப்படி ஜனாதிபதிக்கோ, ஆளுநருக்கோ இல்லை. எனவேதான், இந்த காலம் கடத்தி இழுத்தடிக்கும் நாடகம்.
ஜனநாயக நாட்டில் மக்கள் மன்றமே சட்டமியற்றும் அதிகாரம் கொண்டது. அவை அரசியலமைப்புச் சட்ட வடிவுக்குள் உள்ளனவா என மேற்பார்வையிடும்
அதிகாரம் நீதிமன்றத்துக்கு உண்டு. மற்றபடி ஜனாதிபதி, ஆளுநர் எல்லாம் நம் நாட்டில் தேவையில்லாத ஓர் அலங்காரம்தான். ஆடம்பரமும் கூட!
ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகள் தனி இறையாண்மை கொண்ட சுதந்திர நாடுகள் என்றாலும் கூட இன்றளவும் அவைகள் பழைய சம்பிரதாயப்படி இன்னமும் பிரிட்டிஷ்
மகாராணியின் பேரால்தான் அனைத்துச் சட்டங்களும் இயற்றுகின்றனர். அந்த மக்களின் பெரும்பாலோனோர் பிரிட்டிஷ் பூர்வகுடிகள் என்பதால், தங்களது வேர் விடுபடக் கூடாது என்பதால் இப்படியொரு ஏற்பாட்டை பின்பற்றி வருகின்றனர்.
நாம யாரும் பிரிட்டனின் வாரிசுகள் அல்ல! அவர்களின் பழைய அடிமைகள்தான்.
வால் வெட்டுபட்டாலும், அவை இருப்பதாக கருதி நாய் வாலாட்டுமாம்! அப்படியே நாமும் பழைய வழக்கப்படி ஆட்டிக் கொண்டிருக்கிறோம். எனவேதான் "ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லாத ஒன்று" என அன்றே சொன்னார் பேரறிஞர் அண்ணா.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SKP KARUNA

SKP KARUNA Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @skpkaruna

14 Oct
வரி விதிப்பின் அடிப்படை குறித்த ஒரு திரி இது.,
வரிகளின் (Taxation) வகைகள்.,
சொத்து வரி : இது உள்ளாட்சிக்கு சொத்து வைத்திருப்பவர்கள் செலுத்த வேண்டிய வரி.
வாகன வரி : வாகனங்கள் சாலையைப் பயன்படுத்த செலுத்த வேண்டிய வரி.
எக்சைஸ் வரி : ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் செலுத்தும் வரி.
வருமான வரி : தனிநபர், நிறுவனங்களின் ஆண்டு வருமானத்துக்கான வரி.,
கலால் வரி : மதுபான உற்பத்தி, வியாபாரத்துக்கான வரி.
ஜி.எஸ்.டி : இது பொருட்களின் உற்பத்தி, விற்பனை, சர்வீஸ்களுக்கான வரி.,
இவை போக professional tax, capital gain tax, gift tax, entertainment tax, library tax, நில வரி,
ஆயத்தீர்வை வரி, என நம்மைச் சுற்றி வரிக் குதிரைகள் போல வரிகள் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. (பிச்சைக்காரர்கள் மட்டும்தான் இதுவரை எஸ்கேப் ஆனவர்கள். விரைவில் அவர்களையும் நிர்மலா மேடம் வரி வலைக்குள் கொண்டு வருவார் என நம்புவோம்.)
சரி! இன்றைக்கு சூப்பர் ஸ்டார் விலக்கு கேட்ட
Read 9 tweets
25 Sep
#SPbalasubramanyam
அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவுக்கு வருகிறார்! ஒபாமா என நினைவு. குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து. அதற்கு அழைக்கப்பட்ட எஸ்பிபியை நமது குடியரசுத்தலைவர் அமெரிக்க ஜனாதிபதிக்கு அறிமுகப்படுத்துகிறார்..
“இவர் எஸ்பிபி., எங்க நாட்டின் புகழ் வாய்ந்த பாடகர்.,
35000 பாடல்கள் பாடியிருக்கார்”
அமெரிக்க பிரசிடெண்ட் தலையாட்டி கை குலுக்கிட்டு நகர்ந்து விடுகிறார். பிறகு நடந்தது எஸ்பிபி இப்படி சொன்னார்..,
“அந்த அறிமுகத்தின் பிறகு, பிரசிடெண்ட் யாரையோ தேடிக் கொண்டே இருந்ததைப் பார்த்தேன்., என் பக்கம் வரும்போதெல்லாம் நான் விலகிக் கொண்டே இருந்தேன்.
இறுதியாக என்னை அவர் தோள் பிடித்து நிறுத்திவிட்டார். என்னைத்தான் தேடினார் என்பதையே அப்போதுதான் நான் உணர்ந்தேன். என் கையில் இருந்த காலிக் கோப்பையை எங்கே வைப்பது என தடுமாறிய அந்தக் கணத்தில் அவரே அதை வாங்கி, அருகிருந்த ஒரு டிரேயில் வைத்து விட்டு, Mister Singer! Is that true?
Read 6 tweets
19 Sep
Post Covid Care : thread.,
உயர் பொறுப்பில் உள்ள ஓர் அரசு மருத்துவரிடம் நேற்று பேசினேன். நுரையீரல் துறை நிபுணர் அவர். அவர் சொன்ன சில எச்சரிக்கைகளை இங்கே பகிர்கிறேன்.
1. முதலில் நமது சுகாதாரத் துறைச் செயலாளர் பெண்மணி குறிப்பிட்டதைப் போல கோவிட் வைரஸ் ஒரு எளிய ஃப்ளூ ஜுரம் அல்ல.
2. மிக வேகமாக தனது தன்மையை மாற்றிக் கொள்ளும் வகையாக உள்ளது. எனவே, தடுப்பூசி வந்தாலும் அதிலும் எல்லோருக்குமான நிரந்தர தீர்வாக அமையுமா என்பது ஐயமே!
3. ஒரு முறை கரோனா பாசிட்டிவ் வந்து குணமாகி கரோனா நெகட்டிவ் ஆனவுடன், அந்த நோய் 'முற்றிலுமாக' நீங்கி, இனி அபாயமில்லை என பொருள் அல்ல.
4. கரோனா வைரஸ் விலகும்போது சிலருக்கு அவரவர் உடல்தன்மையை வைத்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திச் செல்கின்றன. இதை கவனித்து முன்கூட்டியே கண்டுபிடிக்க நம்மிடம் வழிமுறையும் இல்லை. அதற்கான வசதிகளும் இல்லை.
5. கடந்த வாரத்தில் அவரிடம் வந்த நுரையீரல் தொற்று கேஸ்களில் 7ல் 5 கரோனா குணம்
Read 5 tweets
8 Sep
ஆன்லைன் வகுப்பு : துவக்கத்தில் இது புதிய முறையாக இருந்ததால், ஆசிரியர்கள், மாணவர்கள் இருவருமே சுவாரஸ்யமாக பங்கெடுத்தனர். சில நாட்களிலேயே, லாக் இன் பண்ணிட்டு டிவிட்டர்லே குடும்பம் நடத்தும் டெக்னிக் போல சிலதை மாணவர்களுக்கும் கத்துகிட்டாங்க. அதை முறியடிக்கும் விதமாக ஆசிரியர்கள்
ஸ்பாட் கேள்விகள், உடனடி பதில்கள் என புதிய யுத்தியை கையாண்டனர். இப்படியான திருடன் - போலீஸ் விளையாட்டின் போதுதான், முதல்வரின் அந்த ‘ஆல் பாஸ்’ அறிவிப்பு வந்து மாணவர்கள் வாயில் ஐஸ்கிரீமாகவும், ஆசிரியர்கள் தலையில் கேஸ் சிலிண்டர் விலையாகவும் வந்து இறங்கியது. அந்தக் கணம் முதல் நாமும்
ஆல் பாஸ்தான் என்பதை பசங்க ஹெவியா நம்ப ஆரம்பிச்சுட்டாங்க. மனிதக் கடவுள் எடப்பாடியார் நம்மைக் கைவிட மாட்டார்னும், அப்படியே கைவிட்டாலும் ஸ்டாலின் அங்கிளுக்கு குரூப் மெஸேஜ் போட்டா போதும்னு வாட்ஸ்சப்லே பேசிகிட்டு உற்சாகமா இருந்தாங்க. இந்தக் கதையில் திடீர் திருப்பமா ஏ.ஐ.சி.டி மெயில்
Read 4 tweets
21 Aug
#திரெட்
2025 ல் வாழ்க்கை எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை.
யாருக்கும் சம்பளம் பணமா தர மாட்டாங்க. பதிலா மாசத்துக்கு ரெண்டு கார்டு தந்துடுவாங்க. ஒண்ணு அம்பானி கார்டு. அதை வச்சு ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்லே மளிகை, காய்கறி, பால், முட்டை, கறி எல்லாம் வாங்கிக்கலாம். ரேஷன் கடைகள் இருந்த
இடங்களில் எல்லாம் ரிலையன்ஸ் ஃப்ரஷ் இருக்கும். ஜியோ Jio Net லே WFH பண்ணிக்கலாம். பிள்ளைங்க Jio TV, Tab லே ஆன்லைன் க்ளாஸ் படிச்சுக்குவாங்க. Jio Tutorials மாலை நேரத்துலே ஹோம்வொர்க் சொல்லித் தருவாங்க. சமையல் ரொம்ப ஈஸி ஆகிடும். சமையலறையில் Jio TV இருக்கும். அதிலே என்ன தேவைன்னு சொன்னா
அமிதாப் பச்சன் குடும்பம் போல வி.ஐ.பிங்க சமைக்க சொல்லித் தரும் சானல் ஓடும். மேல்படிப்புக்கு Jio university இருக்கும். அதாவது இருக்கும்., ஆனா இருக்காது. பட் ஃபீஸ்லாம் அந்த அம்பானி படம் போட்ட கார்டுலே கட்டிக்கலாம். மருத்துவம் தேவைன்னா ரிலையன்ஸ் ஹாஸ்பிடல் இருக்கும். அங்கேயும் அம்பானி
Read 9 tweets
15 Aug
#இருவர் திரைப்படம் மீண்டும் பார்த்தேன். 23 ஆண்டு இடைவெளியில் பற்பல புரிதல் மாற்றங்களைத் தாண்டி அந்தப் படத்தின் திரைமொழியும், உடை,கலை, நிறம் போன்ற டெக்னிகல் மெனக்கெடல்களும் பிரமிக்க வைத்தன. ஓர் இயக்குநராக மணிரத்னம் வானுயர்ந்து நிற்கிறார். மோகன்லால், ப்ரகாஷ்ராஜ் இருவருமே
மகா கலைஞர்கள் என்பது தெளிவு. படத்தின் கதையை முன்னகர்த்தி செல்வதில் பாடல்களுக்கு மிக முக்கிய பங்குண்டு. ஏ.ஆர்.ரஹமான் பின்னியெடுத்துள்ளார். ‘நறுமுகையே’ பாடல் காலம் தாண்டி நிற்கும். பின்னணி இசையில்தான், காட்சிகளின் கனம் தாளாமல் சில நேரம் திகைத்துப் போய் நின்றதாகக் கருதுகிறேன்.
இத்தனை இருந்தும், திரைப்படமாக முழுமை பெறாமல் போனது கதையின் நிறைவின்மைதான் என கருதுகிறேன். கலைஞர்-எம்ஜிஆர் கதைதான் இது எனக் கொண்டால், அபாரமான துவக்கம் காணும் எம்ஜிஆரின் கதாப்பாத்திரம் போகப் போக தட்டையாக ஆகிவிடுகிறது. முதல்வர் ஆனவுடனே தன்னை ஒரு
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!