தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப நிறுவனம் தொடர்பாக டாக்டர் கலைஞர் அவர்களின் சட்டமன்ற உரை . (14-03-1997). 1/n
தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப நிறுவனம் அதிவிரைவில் வளர்ச்சி அடைந்து வருகின்ற, வேகமாக மாறுதல் அடைந்து வருகின்ற தகவல் தொழில் நுட்பத் துறையில் நாம் பின்தங்கிவிடாமல் 2/n
21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற தகவல் தொழில் நுட்பத் துறையிலே உலகத்தில் முன்னோடியாக விளங்குவதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளத்தான் இந்தத் தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப நிறுவனம்.
10 கோடி ரூபாய் இந்த ஆண்டிற்கு ஒதுக்கப்பட்டு தொடங்கப்பட இருக்கிறது. இதில் அரசும், இந்தியாவில் உள்ள தனியார் தொழில் நிறுவனங்களும் ஒருங்கிணைந்து உலகளவில் இந்தத் துறையிலே சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களின் உதவியோடு 3/n
தொழில் நுட்பத்திலே வணிகம் பற்றிய செயல்பாடு, நாளும் மாறிக்கொண்டு வரும் தகவல் தொழில் நுட்பத்தில் புதிய முறைகள், புதுமையானதும், காலத்தின் மாற்றத்திற்கு ஒட்டிப்போகும் பாடமுறைகளைக் கொண்ட பட்டப்படிப்பினையும் உருவாக்கும். 4/n
அவ்வளவு வேகமாக, ஆனால் நல்ல வழியிலே விஞ்ஞான வழியிலே பயணம் நடத்திக் கொண்டிருக்கின்ற இந்த உலகத்தினுடைய தொலைவேகூட மிக வேகமாகச் சுருங்கிக் கொண்டிருக்கிறது. 5/n
குளோபல் வில்லேஜ் என்கின்ற அளவிற்கு நம்முடைய கிராமப் பகுதிகள் எதிர்காலத்திலே வரவிருக்கின்றன. உலகத்திலேயே தகவல் துறை தொழில் நுட்பத்தின் மூலம் அன்றாடம் புதுமைகளைத் தோற்றுவித்த நாள் ஒன்றுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் திறமை படைத்த 'பில்கேட்ஸ்' என்பவர் 6/n
அண்மையிலே இந்தியாவிற்கு வந்திருந்தார்.
உங்களுக் கெல்லாம் தெரியும்.
அவருக்கு இந்தியாவிலே எத்தகைய வரவேற்பு அளிக்கப்பட்டது என்பதும் நீங்கள் எல்லாம் அறிந்த ஒன்றாகும் அது அவருக்காகத் தரப்பட்ட வரவேற்பு என்று சொல்லமாட்டேன் தகவல் துறை தொழில் நுட்பத்திற்காகத் தரப்பட்ட வரவேற்பு 7/n
என்று நான் சொன்னால்தான் அது பொருத்தமாக இருக்கும்.
தகவல் தொழில் நுட்பத்தில் நமது தமிழகமும் முன்னேறத் தவறிவிடக்கூடாது. வேகமாக இந்தியாவிலே உள்ள பல பகுதிகள் முன்னேறத் தொடங்குகிற நேரத்தில் நாமும் ஆயத்தமாக இருக்க வேண்டும். 8/n
அவர்கள் எல்லாம் ஓடிய பிறகு நாம் ஓட ஆரம்பிக்கக் கூடாது. முதலிலேயே இந்த ஓட்டத்திற்குத் தயாராக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் தொடங்குகிறோம். 9/n
வருங்காலத்தில் இந்தியாவும் இந்தத் துறையிலே ஒரு வல்லரசு நாடாகத் திகழ வாய்ப்புகள் உருவாகும்போது தமிழகம் அதிலே பின்தங்காமல் இருக்க நாம் இந்த நிறுவனத்தைத் தொடங்குகிறோம் 10/n
அப்படிப்பட்ட தகவல் துறை வல்லரசாக இந்தியா திகழ்கிற நேரத்தில் தமிழகத்தின் பாடி வீட்டிலிருந்து புறப்படுகின்ற சிப்பாய்களாக இளைஞர்கள் உலகம் எங்கும் சென்று புகழ் சேர்க்க வேண்டும் என்ற என்னுடைய தணியாத ஆசையைத் தான் இத் திட்டத்தைத் தொடங்குவதன் மூலமாக வெளிப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.
வாழ்க கலைஞர் !
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
In (17/10/2020) yesterday’s debate at @PTTVOnlineNews show named “Naer Pada Pesu”, Dr @sumanthraman , has abruptly recorded as the RTI information provided by the Director of Medical Council as a fake document, when it was presented in a public talk show by @Dr_Ezhilan 1/n
It is a dirty mind game being played by the current government for not making the exact information reach the general public. The information provided by @Dr_Ezhilan was released as a statement by opposition leader @mkstalin , and it had a vide circulation in the social media
Knowing all this, Dr @sumanthraman , being a professional, is trying to create a dark cloud regarding the Medical college admission among the general public.
உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.
பகட்டு என் தங்கையை மிரட்டியது. பயந்து ஓடினாள். பணம் என் தங்கையைத் துரத்தியது. மீண்டும் ஓடினாள். பக்தி என் தங்கையை பயமுறுத்தியது. ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள். அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும்.
திராவிட இயக்கம் இனத்தை முன்னிருத்தி மொழியை காத்தது - மொழியை முன்னிருத்தி இனத்தை காத்தது என்று அண்ணன் ஆ.ராசா அவர்கள் பல முறை சொல்லியுள்ளார்.
அதை வரலாற்று சான்றுகளுடன் நம் பேரறிஞர் அண்ணா விளக்குகிறார் .
1/n
நெடுங்காலமாகவே, ஆரியத்தின் அணைப்பிலிருந்து விடுபட, திராவிடம் பலமுறை முயன்றிருக்கிறது.
சில நேரத்தில் செயலற்று இருந்தது என்ற போதிலும், அடியோடு சரண் புகுந்ததில்லை.
அடிக்கடி தனித்தமிழ், வேளாளர் நாகரிகம், உண்மை சைவம், பண்டைய நாகரிகம், என்று பல்வேறு தலைப்புகளில் கிளம்பிய இயக்கங்கள் யாவும், மூல முயற்சியின் சிறு கிறு பதிப்புகளேயாகும்.
கடமையைச் செய்யக் கலங்காதீர் ( திராவிட நாடு 13-08-1950)
நமது மாகாண சர்க்காரில் 20 வருடகால அமுலில் இருந்து வந்த கம்யூனல் ஜீ.ஓ. ஜொலிக்கும் மணிகளை நமக்கு அளித்தது. 1/n
திராவிட மக்கள், சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கிடைத்தால் எவரையும் மிஞ்சிவிடுவோம் என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டார்கள். இதைப் பார்த்தே, “சதிகார வர்க்கத்தினர்” வெகுகாலமாக திட்டமிட்டு, ஹைகோர்ட் வரை சென்று வழக்காடி வெற்றியும் பெற்றுவிட்டனர்.
உங்களுக்குத் தெரியுமென்று நினைக்கிறேன்; சேலத்தில் பிராமண மாநாடு கூடிய காலத்திலேயே, கம்யூனல் ஜி.ஓ.வை ஒழிக்க அவர்கள் திட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.
#திராவிடப்பெருஞ்சுவர் திராவிடன் என்றால் யார்? தமிழன் என்று கூறாமல் திராவிடன் என்று கூறுவது ஏன் என்று கேட்கிறார்கள். நான் கூட்டங்களிலும், ஏடுகளிலும் எழுதும் போதும், பேசும்போதும் மொழியால் நாம் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள், நாட்டால் இந்தியர்கள், உலகத்தால் மனிதர்கள் என்று 1/n
குறிப்பிடுவேன். தமிழனை, தமிழ் மொழியை நாங்கள் மறந்து விடவில்லை. நாம் பட்ட பாட்டால், நாம் நடத்திய போராட்டங்களால், நாம் உருவாக்கிய கிளர்ச்சிகளால், நாம் அடிபட்டு, உதைபட்டு சிறைச்சாலைகளுக்குச் சென்று பெரியாரும், அண்ணாவும், சமூகநீதிக் காவலர்களும் தங்களை இந்த இயக்கத்திலே மாத்திரமல்ல,
இந்த இனத்திற்காக, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களினுடைய உயர்வுக்காக பாடுபட்டு பணியாற்றியதன் காரணமாகத்தான் இன்றைய தினம் ஓரளவு நாம் நிமிர்ந்திருக்க முடிகிறது.
திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்ற கழகமும் இரு திக்குகளிலிருந்தும் வட நாட்டு ஏகாதிபத்தியத்தை ஒழித்து, வைதீகக் காட்டை அழித்துச் சமதர்மப் பூங்காவை திராவிடத்தைச் செழிக்கச் செய்தல் வேண்டும். #திராவிடப்பெருஞ்சுவர் 1/n
அதிலே எந்தக் கழகம் பூங்காவை அமைத்தாலும் அதில் பூக்கும் பூக்கள், காய்கள், கனிகள் திராவிடத்தின் எழுச்சியை, மலர்ச்சியைத்தான் குறிக்கும்.
பழமையும், பாசிசமும் முறியடிக்கப்படும்வரை ஓயமாட்டோம். உழைப்போம். உருவான பலனைக் காண்போம்.